திங்கள், 4 நவம்பர், 2019

உங்கள் வாழ்க்கையில் இருந்து நீங்கள் கற்றுக்கொண்ட 10 விஷயங்கள் யாவை?


1.பணம் ரொம்பவே முக்கியம் .ஆனால் அதை மதித்தல் ஆகாது.


2.என்னத்தான் மற்றவர்கள் நம்மை ஊக்கப்படுத்தினாலும்,அது சில மணித்துளிகள் மட்டுமே நீடிக்கும்.உண்மையில் மாற்றம் நமக்குள் இருந்தே வர வேண்டும்.திடீரென்றுநமக்குள் எழும் ஊக்கம் கூட மறைந்து போகும்.ஆனால் நாம் தான் நம்மை நகர்த்தி செல்ல வேண்டும்.


3.மதிப்பெண்கள் முக்கியம் இல்லை.எப்போதெனில்,வேலை கிடைத்து விட்டது என்றால்.ஆனால் வேலை கிடைப்பதற்கு ஒரு நுழைவுச் சீட்டைப் போன்றது மதிப்பெண்கள்.ஆதலால் மதிப்பெண்கள் முக்கியம்.

4.நண்பர்கள்,உறவுகள் எல்லாம் சில காலத்திற்கு தான்.வெகு சிலர் தான் அனைத்தையும் தாண்டி நம்முடன் நிற்பர்.அது அபூர்வம்.

5.நமக்கு பிடித்ததை நாம் செய்ய வேண்டும்.அதற்கு மற்றவர்களுக்கு பிடிக்குமா என்று ஆராய கூடாது.

6.வாழ்க்கையில் சிலர் மட்டுமே நம்பத் தகுந்தவர்கள்.நமக்காக நேரம் ஒதுக்கும் அந்த நபர்களுக்கு நாம் பல ஜென்மங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருப்போம்.

7.உடல் ஆரோக்கியத்தைக் காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்தது ஏதும் இல்லை .

8.வாழ்க்கையில் சில விஷயங்கள் மறைவாகத் தான் இருக்க வேண்டும் .அவைகளில் ஒன்று "நம்முடைய அடுத்த இலக்கு".

9.தோற்றம் மிக முக்கியம்.கருப்போ,சிவப்போ நம்மை நாம் எவ்வாறு காண்பிக்கிறோம் என்பது மிக முக்கியம்.சிறப்பாக உடை அணிதல் சிறப்பு.சிறப்பாக உடை அணிந்து,மன உறுதி இல்லாமல் செல்வோமாயின் எல்லாமே வீண் தான்.ஆக,இரண்டும் கலந்த கலவையாக இருக்க வேண்டும்.

10.வாழ்க்கையில் நமக்கு நாமே உதவி செய்ய வேண்டும்.நாம் ஒரு அடி எடுத்து வைத்தால்,தெய்வம் இரண்டு,மூன்று அடிகள் சேர்த்து நம்முடன் எடுத்து வைக்கும்.

Extra:இந்த அகன்ற,விரிந்த பேரண்டமானது,மன உறுதியுடன் இருக்கும் திடமான இதயத்தின் மீதே காதல் வயப்படும் .
-Paulo Coelho.
நன்றி !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக