செவ்வாய், 5 நவம்பர், 2019

நீங்கள் உங்கள் பலவீனத்தை உணரத் தெரிந்து இருக்க வேண்டும்..... 

காரணம் உங்கள் மகன், மகள், பேரன், பேத்தி போன்றவர்கள் முழுமையான தொழில் நுட்ப உலகில் தான் வாழப் போகின்றார்கள். அவர்களுடன் உங்களுக்கு நல்ல உறவு இருக்க வேண்டும் என்றால், அவர்கள் உங்களுடன் பேச ஆர்வமாக உங்களை நோக்கி வர வேண்டும் என்றால் உங்களின் பழமைவாத சிந்தனைகள் மாற வேண்டும். உங்களை நீங்களே மாற்றிக் கொள்ள வேண்டும்.  உங்களைச் சுற்றிலும் என்ன நடக்கின்றது? என்ன மாற்றங்கள்? என்ன மாறுதல்கள் என்பதனை உணர்ந்து கொள்ளத் தெரிந்து இருக்க வேண்டும்.

இவையெல்லாம் தெரியாவிட்டால் குடி முழுகிப் போய்விடுமா? என்று உங்களிடம் ஒரு கேள்வி வரும். உண்மை தான். ஒன்றும் ஆகிவிடாது. 

என் உறவினர் ஒருவர் இன்னமும் வானொலி தான் கேட்டுக் கொண்டு இருக்கின்றார். இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி அப்படியே உடைக்காமல் இருக்கின்றது.  ஆனால் அவரின் மகன் பொறியியல் படித்து முடித்து விட்டு மெடிக்கல் வேலையில் சேர்ந்து 5000 ரூபாய் வாங்கிக் கொண்டு உள்ளூரில் இருக்கின்றார்.

எனக்குப் பட்டன் தொலைப்பேசி போதும் என்ற நண்பர் ஒருவர் இருக்கின்றார்.  

அவர் செய்வது எல்ஐசி ஏஜெண்ட் தொழில். இப்போது எல்ஜசி ஆன் லைன் மூலமாக முக்கால்வாசி நிர்வாகத்தை மாற்றிவிட்டது. அவரும் பிடிவாதமாக அந்த தொலைப்பேசி என்னை உளவு பார்க்கும் என்று புது வியாக்கியானம் சொல்லிக் கொண்டிருந்தார்.  அவருக்குப் பின்னால் வந்தவர்கள் மாதம் ஒரு லட்சம் சம்பாரிக்கின்றார்கள். இவர் கடந்த ஐந்து வருடமாக அதே 50 000 யைத் கடந்து வராமல் அப்படியே இருக்கின்றார். 

நான் திட்டி புரியவைத்தேன்.  இப்போது வாங்கி விட்டார். 

இப்போது வருத்தப்படுகின்றார்.

இதை எழுதுவதற்குக் காரணம் உங்கள் எழுத்துப் பயணம் அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டும். வேறு வாகனத்தில் பயணிக்க வேண்டும். அதற்கு உங்களுக்கு மனமாற்றம் தேவை. 

ஓசைப்படாமல் வெகுளி போல இருந்து கொண்டு இங்கே இணையத்தில் மாதம் பெருந்தொகை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் ஏராளமான பேர்கள் இங்கே இருக்கின்றார்கள்.  அவர்கள் யாரிடமும் எதையும் பகிர்ந்து கொள்வதில்லை.  

நீங்கள் மாங்கு மாங்கென்று எழுதிய நான்கு விமர்சனம் வந்து விடுமா? என்ற மொகஞ்சதாரோ ஹரப்பா காலத்தில் இருக்காதீர்கள்.

மின்னூல் பக்கம் வாங்க. 

அமேசான் பக்கம் வாங்க. 

உங்கள் வாகனத்தை மாற்றுங்கள்.

கிண்டில் என்பது ஒரு கருவி.  7000 முதல் 20 000 வரை வசதிகள் பொறுத்து உள்ளது.  ஆயிரக்கணக்கான புத்தகங்களை உள்ளே அடக்க முடியும். உங்கள் வீடு புத்தமாக நிறைந்து இருக்க வாய்ப்பில்லாமல் பயணத்தின் போது கையில் தூக்கிச் சென்று உங்களின் வாசிப்பின் ருசியை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

அவ்வளவு பணம் இல்லைங்கோ?

பரவாயில்லை. வீட்டில் லேப்டாப், டெக்ஸ்டாப் உள்ளதா?  அதில் கிண்டில் ஆப் தரவிறக்கம் செய்யுங்கள்.  அதில் உங்கள் பயனர் அக்கவுண்ட் திறந்து கொள்ளுங்கள்.  தினமும் ஏராளமான இலவச புத்தகங்கள் அமேசான் முதலாளி தந்து கொண்டே இருக்கின்றார்.  

ஒவ்வொரு நாளும் தருகின்றார்.  

பெரியவர்கள் சொல்வது போல படி. படி. படி. என்று சொல்லிக் கொண்டேயிருக்கின்றார்.

வீட்டில் இதுவும் இல்லைங்கோ?

பரவாயில்லை. கடன் வாங்கியாவது நீங்கள் உங்கள் மகனுக்கு மகளுக்கு நவீன ரக அலைபேசியை வாங்கிக் கொடுத்து அவனைப் படிக்க விடாமல் செய்யும் மோசக்கார பெற்றோர்களின் வரிசையில் நீங்களும் கட்டாயம் இருக்கத்தான் செய்வீர்கள்.  அல்லது உங்களின் தேவையின் பொருட்டு நீங்களே அதனை வாங்கியும் வைத்திருக்கக்கூடும்.

அதில் அமேசான் கிண்டில் ஆப் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். அதன் மூலமாகவும் படிக்க முடியும்.

இல்லைங்க எனக்குப் படிக்கத் தொடங்கினால் ஐந்து நிமிடத்தில் தூக்கம் வந்து என்று சொல்லக்கூடியவரா? 

பரவாயில்லை.  யூ டியுப் பக்கம் வாங்க. அதில் எப்படி சம்பாரிக்கின்றார்கள்? யார் சம்பாரிக்கின்றார்கள்? எதைச் சொல்லி சம்பாரிக்கின்றார்கள்? என்பதனை ஒரு மாதம் ஒவ்வொன்றாகப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்.

ஏதாவது ஒரு வழியில் இணையத்தைத் தெளிவாகப் பயன்படுத்தக் கற்றுக் கொள்ளுங்கள்.

குலப்பெருமை, இனப்பெருமை, மொழிப் பெருமை எல்லாம் விரைவில் அழிந்து விடும். ஆனால் உங்கள் பணப் பெருமை உங்களை, உங்களின் தலைமுறையை வாழ வைக்கும் என்பதனை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.



நிர்வாகவியல், வணிகவியல், தத்துவ இயல், தொழிலாளர் நலம், முதலாளி நலம், பொருளாதார பலம், மாறும் சூழல், மாறாத மனிதர்கள், பலவீனம் உள்ள மனிதர்கள் அடையும் துன்பங்கள், சந்திக்கும் பிரச்சனைகள் என்று ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்துச் செதுக்கி உள்ளேன்.



தினமும் மதியம் மூன்று மணிக்கு அமேசான் எந்தப் புத்தகங்களை இலவசமாகத் தருகின்றார்கள் என்பதனை அறிவதற்கு  சென்று அறிந்து கொள்ளுங்கள்.

ராசா நான் பொழுது போவதற்கு இங்கு வந்து எதையாவது எழுதி என் நேரத்தைப் போக்கிக் கொள்ள விரும்புகிறேன். என்னை ஏன் தொந்தரவு செய்கின்றாய் என்று கேட்பவரா?

பரவாயில்லை.

உங்கள் தலைமுறை உங்களுக்குப் பாடம் கற்றுக் கொடுப்பார்கள். உங்களின் மனோதிடம் உங்களை அப்போது காப்பாற்ற வேண்டும். இதையெல்லாம் படித்த சுயநலத்தோடு இருக்கும் மேன்மக்கள் சொல்லி தரமாற்றார்கள் ...எனக்கு தெரிந்ததை உடனே எந்த பிரதிபலன் பாராமல் செய்திகளாக ..பதிவுகளாக ..பகிர்ந்துவிடுவேன் ...நம்மால் நாலு பேருக்கு உபயோகமாக இருக்கவேண்டும் ..போகும்பொழுது எதையும் எடுத்துக்கொண்டு போவதில்லை ...நம் பகிர்ந்த செய்திகள் ..ஆவணங்கள் ..தான் மலரும் நினைவுகளாக இருக்கும் ....நன்றி 

நல்வாழ்த்துகள்.

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 
9944066681...

















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக