உடுமலையின் மண்ணின் மைந்தர் ..லிங்கமநாயக்கன்புதூர் ...அய்யா புவியரசு ...உடுமலை வரலாறு ....
என் ஆளுமை 3: கவிஞர் புவியரசு
நேர் நேர் தேமா தெரியாமல்...
எனது அரைக்கால் டிரவுசர் போட்ட பருவத்தில் கோபம், தீட்சண்யமாகி, அக்னி குழம்பாய் கொப்பளிக்க மேடைகளில் புவியரசு கவி வார்த்தைகள் முழங்கிட கண்டிருக்கிறேன். முக்கால் தொடை காட்டி ஆடும் கவர்ச்சி நடிகைகள் ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா, அனுராதா போன்றவர்களையும், அவர்களை அப்படி ஆட வைக்கும் சினிமா வல்லமைகளையும் தாக்கு தாக்கென்று பகிரங்கமாக அவர் சாடும் போது அரங்கமே துள்ளிக்குதிக்கும். அதிரடி கைதட்டல்கள் அவையை பிளக்கும்.
வானம்பாடி கவிஞராமே. இப்படியானவரை நெருங்கி கையை குலுக்கி பாராட்டு தெரிவிக்கவாவது நமக்கு தகுதியிருக்கிறதா என ஏங்கி நின்ற காலம் அது. அப்படியே கிட்டத்தில் போய், ‘நேர் நேர் தேமாவே’ தெரியாமல் தத்துப் பித்தென்று ஏதாவது உளறிக் கொட்டி, அவர் நெற்றிக்கண்ணை திறந்து விட்டாரென்றால் நம் கதி என்னாவது? என்ற அச்சத்திலோ என்னவோ அவரை கிட்ட நெருங்கியதில்லை.
இப்படியான சூழலில் அவர் இலக்கியக்கூட்டங்களில் திடீர் என காணாமல் போய்விட்டார். நடிகர் கமல்ஹாசனிடம் அஸிஸ்டெண்டாகவோ, வசனகர்த்தாவாகவோ சென்று விட்டார் என்றும் கேள்விப்பட்டேன். 1994ல் எதிரொலி விருது எனக்கு சென்னைத் தொலைக்காட்சி நிலையம் அளித்த நேரம். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் நடிகர் கமலஹாசனிடம் விருது பெறல் நிகழ்வு. ஹாசனை சந்திக்கும் முன்பு அவர் வீட்டு ஹாலில் குறுக்கும் நெடுக்குமாய் ஒரு கறுப்பு உருவம். எங்கியோ பார்த்த மாதிரி இருக்கிறாரே எனப் பார்த்தால், ‘அட, நம்ம கவிஞர் புவியரசு!’ அப்போதும் கூட நான் கோயமுத்தூர்காரன், உங்கள் கவிதைக்கு விசிறி என்று அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. அது என் இயல்பான கூச்ச நிலை.
கல்கி, குமுதம் என பத்திரிகைகளில் வந்த பிறகு பல இடங்களில் புவியரசுவைப் பார்க்க நேர்ந்தது. அதன் உச்சமாக 2000 ஆம் ஆண்டில் தடம் புரண்ட இலக்கியவாதிகள் தலைப்பில் ஒரு கட்டுரை. அந்த வரிசையில் புவியரசுவை பேட்டி காண சொல்லி எம் ஆசிரியர் குழுவின் ஏவல். தொலைபேசியில் அவரே பேசினார். என் எழுத்துக்களை படித்திருப்பதை அவர் அப்போதே வெளிப்படுத்தின போது நிறைந்தது பரவசம். அப்போதுதான் எனது பொழுதுக்கால் மின்னல் நாவல் வெளிவந்திருந்தது. கேமராவுடன் அதையும் எடுத்துக் கொண்டேன். புத்தகத்தை அவருக்கு கொடுத்து விட்டு பேட்டியும் முடித்துக் கொண்டேன். அவரின் பேட்டி குமுதத்தில் ஒரு பக்கம் வந்தாலும் செம அடர்த்தி.
‘ எனக்கு சமூக உணர்வு அதிகம். சமூகத்தின் பிரச்சனைகளை மையப்படுத்தாமல் எதுவுமே செய்யக்கூடாது. அதுக்கு கோடம்பாக்கம் தயாராயில்லை. கும்பல் டான்ஸ், தொப்புள்ல பம்பரம் விடறது, தொப்புள்ள ஆம்லெட் போடறது, தொப்புள்ள ஐஸ்கிரீம் தடவிக்கூட ஒரு படம் வந்திருப்பதா கேள்விப் பட்டேன். இவ்வளவு கேடு கெட்டத்தனமா சினிமா போயிட்டிருப்பதானால நான் தமிழ் சினிமாவோடு 12 வருஷ காலம் சமரசம் செய்து கொள்ளவேயில்லை. பகிரங்கமா எதிர்த்துட்டுத்தான் இருந்தேன். ஆனா, இங்கே இலக்கியவாதிகள் மட்டும் எப்படி இருக்காங்க? ஜாதிக்கும்பல் போல இங்கேயும் பல குழுக்கள், விவாத பேதங்கள், பல பேர், ‘ஏன் எழுதறதில்லை? சினிமாவுக்குப் போனதாலா?’ எனக் கேட்கிறார்கள். உண்மையை சொன்னா சினிமாவுக்குப் போன பின்தான் நிறைய எழுதியிருக்கேன். பிழைப்புக்காக எதையெதையோ எதுிர்பார்த்து, ஏமாந்து, ஏமாற்றப்பட்டு, தடம் புரண்டு போய் விட்டோம் என்று எப்போதும் எனக்குத் தோன்றியதேயில்லை. தடமே இல்லை. எப்படி இங்கே புரண்டு விடமுடியும்?’
அவர் பேட்டி அடுத்த குமுதத்தில் வருவதற்கு முன்பே அவரிடமிருந்து ஃபோன். ‘யோவ் வேலாயுதம். எங்கேய்யா இருந்தே இவ்வளவு நாளா? உன் நாவல் படிச்சிட்டேன்யா. கோயமுத்தூர் மண் மணக்குறது மட்டுமில்லைய்யா, தலித்தியம், பெண்ணியம், வர்க்கம் எல்லாமே கலக்கி யதார்த்தமான இப்படி ஒரு நாவலை நான் படிச்சதேயில்லைய்யா. நிறைய எழுதுய்யா!’ என்றாரே பார்க்கலாம்.
அப்போதும் கூட நான் ஒரு நிருபர். குமுதம் பத்திரிகையில் பேட்டியெடுத்தவன் என்ற முறையில்தான் இப்படி பேசுகிறார் என்று இறுமாந்திருந்து விட்டேன். ஆனால் அதற்குப் பின்பு இளையராஜாவுக்கும், அவருக்கும் கோவை இலக்கிய மேடை ஒன்றில் சர்ச்சை ஏற்பட்டு, அதைப் பற்றி பெரிய அளவில் செய்தியை குமுதம் ரிப்போர்ட்டரில் அச்சிலேற்றிய பின்பும் கூட அவர் எனது அந்த நாவலைப் பற்றி நிறைய பேசினார். தி இந்துவில் பணியில் சேர்ந்த பிறகு அவரை அடிக்கடி பார்க்க நேர்ந்தது. ‘யோவ் வேலாயுதம். அந்த பொழுதுக்கால் மின்னல் நாவல் என்னாச்சுய்யா? எங்கேயோ ஓடி ஓளிஞ்சிடுச்சே. பேசப்படவேண்டிய நாவல்ய்யா அது. என்கிட்ட அந்த ஸ்கிரிப்ட்டை கொடு, நான் ஏதாவது ஒரு பதிப்பகத்தில பேசி மறுபதிப்பு போடச் சொல்றேன்!’ என சொல்லாத நாளில்லை.
சப்னா புக்ஸ் பதிப்பாசிரியராக வந்த பின்போ, ‘யோவ் உன் நாவலை நீ கொடுக்கறே. நான் சப்னாவுல போடறேன்!’ ஒரு தடவை இல்லை. பல முறை. ஒரு கட்டத்தில், ‘நீ அந்த நாவலைக் கொடுக்கலைன்னா இனிமே எங்கூட பேசாதே!’ என்றும் கண்டிப்பாக சொல்லி விட்டார். சில நிகழ்வுகளில் நேருக்கு நேராக சந்தித்தபோதும் கூட, ‘பேசாதே’ என முகம் திருப்பிக் கொண்டார். அதன் பிறகு அந்த நாவலையும் கொடுத்தேன். பிறகு நொய்யல் இன்று கட்டுரை நூலும் கொடுத்தேன். இரண்டுமே சப்னாவின் அச்சில் வந்ததும், வாசகர்கள் மத்தியிலும் போய்ச் சேர்ந்ததுமான அனுபவங்கள் எல்லாம் நீண்ட் ஒரு தனிக்கதை.
இதோ, இப்போதும் கூட விஜயா பதிப்பகம் வாசகர் திருவிழா. நடிகர் சிவக்குமார் மேடையில் அவர். கீழிறங்கி வந்த பிறகு என்னுடனே ஒரு மணி நேரத்திற்கும் மேல் அவரின் அளவளாவல். படிக்கட்டில் இறங்கி வரும் போது கூட அவருக்கு தோள் கொடுத்து நடக்கும் தோழனாய்... கவிஞர் புவியரசுவிடம் நெருங்குவதற்கு நேர், நேர் தேமா தேவையில்லை. நேர்மையும், அஞ்சாத நெஞ்சுரமும், அதில் மித மிஞ்சி நிறைந்து நிற்கும் அன்பு மட்டுமே போதுமானது என்பதை சொல்லாமல் சொல்கிறது அந்த ஆளுமையுடனான அனுபவப் பகிர்வுகள்.
கா.சு. வேலாயுதன், முகநூல் பதிவு: August 22, 2018 ·

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக