"கடமையைச் செய் பலனில் பற்று வைக்காதே"
வாழ்க்கை ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான பாடங்கள் நடத்திக் கொண்டே இருக்கிறது. அதன் மூலம் வித்தியாசமான அனுபவங்களும் கிடைத்துக் கொண்டேயிருக்கிறது.
பார்வையாளர் போலவே பார்த்துக் கொண்டேயிருக்கிறேன். கூடவே அதனை இங்கே பதிவு செய்து விட வேண்டும் என்பதனை கடமையாகவும் வைத்துள்ளேன்.
"கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே" என்பதன் உண்மையான அர்த்தம் "கடமையைச் செய் பலனில் பற்று வைக்காதே" என்பார்.
இதனை உணர நமக்கு வாழ்க்கையின் பிற்பகுதி தான் சரியாக இருக்குமோ? என்று தோன்றுகின்றது.
எது எவர்களுக்குத் தேவையோ அது அவர்களுக்கு ஏதோவொரு சமயத்தில் கிடைத்தே தீரும். வாங்குபவர்கள், வாங்க வேண்டியவர்கள், தேடிக் கொண்டிருப்பவர்கள் அவர்களின் தரம் பொறுத்து தகுதியான தரமான விசயங்கள் அவர்களைச் சென்று அடைந்தே தீரும் என்று நம்புபவன் நான்.
இப்போதைய விளம்பர உலகில் உங்கள் கொள்ளை எந்த அளவுக்கு ஏற்புடையதாக இருக்கும்? என்ற கேள்வி உங்களிடமிருந்து வரக்கூடும். உண்மை தான். ஆனால் என்னதான் நீங்கள் உங்களை ஒவ்வொரு இடத்திலும் முன்னிலைப்படுத்திக் கொண்டேயிருந்தாலும் அது எத்தனை காலம் நிலைத்து நிற்கும்?
எதிலும் நான் இல்லை. எவருடனும் சேர்வதும் இல்லை.
பலருக்கும் என் மேல் வருத்தம் இன்னமும் உண்டு.
காரணம் எழுத்து என்பது என் பொழுது போக்கு. வாசிப்பவர்களுக்கு சில நிமிடங்கள் மகிழ்ச்சியைத் தந்தால் போதும்.
மேலும் நான் உனக்கு சந்தனத்தைத் தடவுகிறேன். நீ மறக்காமல் எனக்குத் தடவு போன்ற கொள்கைகளை எல்லாம் கடந்து வந்து நாளாகிவிட்டது.
அப்படித் தடவிக் கொண்டிருப்பவர்கள் தங்கள் திறமைகளை மறந்து இன்னமும் பரஸ்பரம் தடவிக் கொள்ளும் வேலையைத்தான் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். சமீப காலமாக வலைபதிவிலும் இந்த தடவுதல் வேலை நடந்து கொண்டிருக்கின்றது. வாட்ஸ் அப் அரட்டை போல வலைபதிவு பின்னூட்டங்களை நண்பர்கள் பயன்படுத்துவதைப் பார்த்து அவர்கள் வயதினை ஒரு கணம் மனதிற்குள் கொண்டு வந்து பார்த்தேன். அற்புதமான தொழில் நுட்பத்தை நாசமாக்குவதில் நம்மவர்களைத் தவிர வேறு எவரையும் என்னால் உதாரணமாகச் சொல்லத் தெரியவில்லை.
வயதாகிவிட்டது என்று ஒருவரைப் பார்த்து மதிப்பளிக்க வேண்டும் என்று கருதாதீர்கள். அவர்கள் வாழ்க்கையில் கடந்து வந்த அனுபவங்கள் அவர்களை எப்படிச் செதுக்கியுள்ளது? என்பதனை வைத்து முடிவு செய்யுங்கள். சில மிருகங்கள் கூட 50 வயது வாழ்கின்றது. அதற்காக அதனை வீட்டில் படுக்கையில் கொண்டு வந்து அருகே படுக்க வைக்க முடியாது என்பதனையும் கவனத்தில் வைத்திருங்கள்.
எனக்கு குடும்பம், தொழில், எழுத்து இந்த மூன்றும் போதுமானது. அங்கீகாரம் எதுவும் தேவையில்லை. அது தேவையெனில் தேவையான இடத்தில் ஏதாவது ஒரு நாள் வந்தே தீரும். அல்லது நான் இறந்த பிறகு வரக்கூடும்.
பாரதி செய்த காரியங்களை நாம் செய்து உள்ளோமோ? தன்னை தீப்பந்தம் போல மாற்றி உலகத்தீரே இதனைக் கேட்பீர் என்று தன் குடும்பம், மகிழ்ச்சியான வாழ்க்கை என்று அனைத்தையும் இழந்து குறுகிய காலத்தில் வாழ்ந்து முடித்து இறந்த போன அவரை ஒப்பிடும் போது நாமெல்லாம் சிறு தூசி. இதற்கு ஏனிந்த இத்தனை ஆர்ப்பாட்டம்? என்று நினைத்துக் கொள்வதுண்டு.
பலரும் உங்களால் எப்படி தொழில், குடும்பம் கடந்து இவ்வளவு எழுத முடிகின்றது? அதுவும் பெரிது பெரிதாக எழுத முடிகின்றது என்று கேட்கும் போது இது தான் காரணம் என்று இங்கே இந்த சமயத்தில் எழுதி வைத்திடத் தோன்றுகின்றது. எது (மட்டும்) நமக்குத் தேவை? என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். அது போதும். உங்களின் வளர்ச்சி இயல்பாக ஒரு நாள் உங்களை வந்தே தீரும். இது எனக்கு நானே சொல்லிக் கொள்ளும், கடைப்பிடிக்கும் கொள்கை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக