சேமிப்பதற்கு பதிலாக ஏன் அதிக பணத்தை செலவழிக்க வேண்டும்?
பின்வரும் சில சந்தர்ப்ப, சூழ்நிலைகளை, தருணங்களை நீங்கள் வாழ்வில் சந்திக்க விரும்பினால், சேமிப்பதற்கு பதிலாக நீங்கள் அதிக பணத்தை செலவழிக்கலாம்.
ஓய்வுகாலத்திற்கு போதிய நிதி ஆதாரம் இல்லாதபடியால், ஓய்வுகாலம் என்பதே இன்றி, கடைசி வரை, வாழ்வின் பணத்தேவைகளுக்காக, வேலை செய்யும் தருணம். அமெரிக்காவில், சரியாக ஓய்வு காலத்திற்காக சேமிக்காத பலர், தங்களது 65, 70 வயதுகளிலும் வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாகின்றனர்.
ஓய்வு காலத்திற்கு போதிய நிதி ஆதாரமின்றி, பிள்ளைகள்தான் உங்களை காப்பாற்ற வேண்டுமென்று, அவர்களிடம் கையேந்தும் தருணம்.
அவசர காலத் தேவைகளுக்கு, உங்களிடம் சேமிப்பு இல்லாத படியால், பிறரிடம் கையேந்த நேரும் தருணம். சுயமதிப்பினை இழந்து வாடும் தருணம்.
அவசரத் தேவைகளுக்கு, கடன் வாங்கி, கடனின் வட்டி, அசல் சேர்ந்துக் கொண்டு, கடன் என்னும் படு குழியில் சிக்கி, மாதாமாதம் சம்பாதிக்கும் பெரும் பகுதி கடனைச் செலுத்தி, பணம் விரயமாவதைக் கண்டு, தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று கையாலாமல் நிற்கும் தருணம்.
அவசர காலத் தேவைகளுக்கு, பணம் போய்விட, மேலும் பணத்தேவையினால் , வீட்டின் அத்தியாவசிய பொருட்களை விற்று, உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை தேவைகளுக்கு கூட, பணம் இன்றி தவிக்கும் தருணம்.
கடன் என்னும் கொடிய அரக்கனிடம், ஆற்று சுழியில் மாட்டிக் கொண்டு, மேலும் மேலும் தன்னை இழுத்து, தன் வாழ்வினை முடித்து விடுமோ, என்று அச்சப்படும் தருணம்.
அக்கம்பக்கத்து வீடுகளின் முன்பு, கடன்காரர்களின் வருகையினால், தன்மானம் இழந்து, சுயகௌரவத்தை இழந்து, தவிக்கும் தருணம்.
அலுவலகத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு வேலை இழந்து விட்டால், சேமிப்பு இன்றி எவ்வாறு வாழ்க்கையே நடத்தப் போகிறோம் என்று மனதில் ஒருவித படபடப்புடன் தினமும் அலுவலகம் செல்லும் தருணம்.
தன் உடல் நிலைக்கு ஏதேனும் குறை ஏற்பட்டால், ஒரு மாதம் அலுவலகம் செல்லாவிட்டால் கூட, குடும்பத்தை நடத்த முடியாதே என்று, உடல் நலக் குறைவுடனும் அலுவலகம் செல்லும் தருணம்.
பழுது பார்க்க போதிய சேமிப்பு இல்லாதபடியால், வாகனத்தில் ஏற்படும் சிறு பழுதுகளுடன் வாகனத்தை ஓட்டும் தருணம். மனதில் பயத்துடன் வாகனத்தை ஓட்டும் தருணம்.
பெட்ரோல் போடுவதற்கு மாதக் கடைசியில் பணம் இல்லாதபடியால், இருக்கின்ற கொஞ்ச பெட்ரோலுடன் நீண்ட தூரம் பயணிக்க அஞ்சும் தருணம்.
மனைவி, பிள்ளைகள் திடீரென்று கேட்கும் பள்ளிச் சுற்றுலா, பிடித்த நகை போன்ற ஆசைப்பட்ட பொருட்களை, பணச் சேமிப்பு இல்லாத படியால், வாங்கித் தர இயலாமல், கையை பிசையும் தருணம்.
பண சேமிப்பு இல்லாத படியால், கடைசி வரை, வாடகை வீட்டினில், ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்கு மாற வேண்டிய தருணம்.
வாடகை வீட்டின் உரிமையாளரிடம், ஏதாவது காரணத்தினால், தன்னை வீடு காலி செய்ய விட்டு விடுவாரோ, வீட்டின் வாடகையை அதிகரித்து விடுவாரோ என்று, கூனிக் குறுகும் தருணம்.
பணவீக்கித்திற்கு ஏற்றவாறு உங்களது வருமானம் கூடாதபடியால், சேமிப்பு இன்றி, ஊரை விட்டு வெளியே, குறைந்த வாடகைக்கு குடிபெயரும் தருணம்.
உறவினர்களின் திருமணம், சுப நிகழ்ச்சிகளில் போதிய மொய் பணம் எழுத முடியாமல், உறவினர், நட்பு நலம் கெட்டு, தனித்து விடப்படும் தருணம்.
பிள்ளைகளின் எதிர்கால மேல்படிப்பிற்கு போதிய நிதி ஆதாரம் இல்லாதபடியால், பிள்ளைகளை அவர்கள் விரும்பிய படிப்பில் சேர்க்காமல், ஏதோ ஒரு மேல்படிப்பில் அவர்களை சேர்த்து படிக்குமாறு நிர்பந்திக்கும் தருணம்.
பிள்ளைகளின் திருமணத்திற்கு போதிய நிதி ஆதாரம் இல்லாமல், கடன் வாங்கியோ அல்லது அடிப்படையான செலவுள்ள திருமணம் கூட நடத்த முடியாமல், பிள்ளைகளுக்கான கடமையை சரிவர செய்யாமல், பிள்ளைகள் முன்பு தலைகுனியும் தருணம்.
பேரப் பிள்ளைகள் ஆசைப்படும் விலையுயர்ந்தப் பொருளை வாங்க முடியாமல், தன்னை தானே நொந்துக் கொள்ளும் தருணம்.
வாரன் பபெட் சொன்னபடி,
உங்களுக்கு தேவையில்லாத பொருட்களை வாங்கத் துவங்கினால், கூடிய சீக்கரம் தேவையான பொருட்களை விற்க நேரிடும்.
மேலே பார்த்தவை சில உதாரணங்கள்தான். சேமிப்பு இல்லையேல், படும் துயரங்கள் கொஞ்ச நஞ்சமில்லை.
தயவு செய்து, உங்களது முதல் மாத சம்பளத்திலிருந்தே, சேமிக்கத் தொடங்குங்கள். டேவ் ராம்சே கூறியபடி,
குறைந்தபட்சம் ரூபாய். 10000 அவசர கால நிதி ஒதுக்குங்கள்.
எல்லா கடன்களையும் அடைத்து விடுங்கள். வீட்டுக் கடன் மட்டும் விதிவிலக்கு.
3 முதல் 6 மாத த்திற்கான அவசர நிதி ஒதுக்குங்கள்
குறைந்தபட்சம், உங்களது வருமானத்தில் 15% சேமித்து, ஓய்வு காலத்திற்கு முதலீட்டினைத் தொடங்குங்கள். அதிகம் முதலீடு, அதிக பணப் பெருக்கம். அதிக ஓய்வுகால நிம்மதி.
வீட்டுக் கடனை அடைத்து விடுங்கள்.
குழந்தைகளின் படிப்பு, எதிர்காலத் தேவைக்கு பணம் முதலீடு செய்யுங்கள்.
தனி மனித நிதி சுதந்திரத்தை அடையுங்கள். பாரம்பரியத்தை விட்டுச் செல்லுங்கள்.
சேமிப்பு இல்லையேல், எதிர்காலம் கேள்விக்குறி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக