வெள்ளி, 1 நவம்பர், 2019

வாழ்க்கையில் இப்படியும் சில மனிதர்கள் உள்ளார்கள் என நினைத்ததுண்டா?

கோவையில் எங்கள் வீட்டில் வேலை செய்யும்   அக்கா பழைய செய்தி தாள்களை கிழித்துக் கொண்டிருந்தார். நமக்கும் வேற அந்த நேரம் வேலை இல்லை. சரி அக்கா கூட உட்கார்ந்து நியூஸ் பேப்பர் கிழிச்சி குடுப்போம்னு போனா எனக்கு ஒரு விசயம் சற்று வித்தியாசமாக பட்டது.

ஒவ்வொரு தாளாக முன்னும் பின்னும் பார்த்து கிழித்து கொண்டிருந்தார் அக்கா.

கெக்க புக்கனு சிரிச்சிட்டேன். அட அக்கா குடுங்க நான் கிழிச்சி குடுக்குறேன் பாருங்க. சர் சர்னு கிழிக்கிறது விட்டுட்டு அழகு பார்த்து கிழிச்சிட்டு இருக்கீங்க அய்யோ அய்யோ. ஒரு நிமிடத்தில் முடிக்க வேண்டிய வேலைக்கு ஒரு மணி நேரம் ஆக்குறீங்க. இப்ப பாருங்க எபன் எப்படி கிழிக்கிறானு என்று சொல்லிக் கொண்டே அந்த பேப்பரை எடுத்தேன்.

அக்கா சட்டுனு கையில இருந்து புடுங்கிட்டாங்க. எனக்கு ஒன்னும் புரியல.

ஏன்க்கா என்னாச்சு என்று கேட்கவும்,

விடு இது என் வேலை நான் தான் பண்ணுவேன் போ போய் உன் வேலைய பாரு என்றார்.

ஷாக் ஆகிட்டேன். இது நம்ம அக்காவானு.

நீ போ என்று என்னை விரட்டி விடுவதிலே குறியாக இருந்தார்.

சரி அந்த சீக்ரெட் மட்டும் என்னனு சொல்லுங்க. ஏன் ஒவ்வொரு பக்கமா பார்த்து பார்த்து கிழிக்கிறீங்க? சொல்லுங்க என்ன மர்மம் இருக்கு? சொல்லுங்க  சொல்லுங்க என்று வற்புறுத்தி கேட்கவும் அவர் சொன்ன ஒரு விசயம் ரொம்ப மனசை தொட்டுவிட்டது.

என்ன தெரியுமா சொன்னாங்க. இதை வாசித்த பிறகு நீங்களே வியப்படைவீர்கள் இப்படியும் டெடிகேட்டடா வொர்க் பண்ணுறவங்க இருக்காங்களா என்று.

இது ரெஸ்ட் ரூம்ல யூஸ் பண்ணுற பேப்பர்மா (நாப்கின் ரேப் செய்ய பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டும் செய்தி தாள்) அதுக்கு சாமி படம் போட்ட பேப்பர் எல்லாம் வைக்க வேண்டாம் தாயி. நமக்கு இல்லனாலும் நம்புறவங்களுக்கு அது சாமிதானத்தா. அதான் சாமி படம் இருக்குறத எல்லாம் பார்த்து கிழிச்சி சாமி படம் இல்லாத பேப்பரா வச்சிட்டு இருக்கேன். (சாமி படம் போட்ட பேப்பர் வைக்க கூடாது என்று எந்த கட்டுபாடும் இல்லை. இது அவராகவே எடுத்த முடிவு)

இது என் வேலை இதுக்கு சம்பளம் நான் தான் வாங்குறேன் அதுனால நீ செய்ய கூடாது கண்ணு. போ நீ போய் புள்ளைங்களுக்கு பாடம் சொல்லிக் குடு என்று அனுப்பிவிட்டார்.

அவ்வளவு அடிதட்டு மக்கள். ஆனால் என்ன ஒரு உயர்ந்த எண்ணம் பாருங்களேன். சொற்ப சம்பளம் தான் அவர்களுக்கு எல்லாம் ஆனாலும் அவங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியில் எத்தனை உண்மை.

Royal salute to you அக்கா.

கடைசியாக ஒரு சின்ன விசயம் மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 1000 குழந்தைகள் பயன்படுத்தியும், குழந்தைகள் எந்த தொற்றும் இல்லாமல் ஆரோக்கியமாக வீட்டிற்கு திரும்பி வருகிறார்கள் என்றால் அதற்கு காரணம் ஆசிரியகளாகிய நாங்கள் இல்லை. தங்கள் பணியை திறம்பட செய்யும் ஆயாம்மாக்களும், அக்காக்களும் தான். அதனால் இனி, பிறந்த நாள் இனிப்பை ஆயாம்மாக்களுக்கும் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்று உங்கள் குழந்தைகளிடம் சொல்லி அனுப்புங்கள்.

நிறைய குழந்தைகள் எனக்கு இனிப்பு கொடுத்துவிட்டு அருகில் இருக்கும் அக்காவிற்கு கொடுக்காமல் செல்வது மிக வருத்தமாக இருக்கிறது.

பெற்றோர் ஆசிரியர் கூடுகைக்கு பள்ளிக்கு சென்றால் ஒரு முறையேனும் உங்கள் குழந்தைகள் ஆரோக்கியத்தில் பங்கு கொள்ளும் அவர்களுக்கு உங்கள் நன்றிகளை தெரிவியுங்கள்.

நாங்கள் கற்று மட்டும் கொடுக்கிறோம். அவர்கள் தான் ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம் அளிக்கிறார்கள்.

கேள்வி : வாழ்க்கையில் இப்படியும் சில மனிதர்கள் உள்ளார்கள் என நினைத்ததுண்டா?

இதுக்கு மேல என்ன வேணும்?

நன்றி

அத்தனை அக்காக்களுக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக