2001 வருஷம் எனக்கு ப்ருனேல வேலை கிடைச்சது... ஆனா பாஸ்போர்ட், விசா, மற்றும் சில பிரச்சனைகள் காரணமா போகமுடியலை... குறிப்பா பாஸ்போர்ட் வாங்க அப்போ பட்ட அவஸ்தைகள் ரொம்ப அதிகம்... கஷ்டப்பட்டு பாஸ்போர்ட் வாங்கி கடைசில, பார்த்துகிட்டு இருந்த வேலையும்,ப்ருனே போறதும் கேன்சலாகி போயி வீட்ல சுமார் ஆறு மாசம் வெட்டியா இருந்தேன்... வழக்கம் போல திட்டு...தண்டசோறுன்னு திட்டு வாங்கினாலும் நான் உருப்பட திட்டின வார்த்தைகள்... அப்போ ஒரு நாள் என் கசின் அமெரிக்கா போகும் போது சொல்லிட்டுப் போக வீட்டுக்கு வந்திட்டு போனாங்க... அப்போ நான் தூங்கிட்டேன்னு நினைச்சு அம்மா கிட்ட அப்பா ஆசையா, ஏக்கமா சொன்னது, என் பசங்களும் இப்படி வெளிநாடு போய் நல்லா சம்பாதிக்கணும்... நல்ல நிலைமையில இருக்கணும்... எனக்கு ரொம்ப ஆசைன்னு... அப்போ கேட்ட அந்த குரல்ல இருந்த ஏக்கம் என்னை ரொம்ப பாதிச்சது... எப்படி எப்படியோ போராடினாலும் பலன் பூஜ்யம்...
வந்தாரை வாழவைக்கும் சென்னைக்கு வந்து படிச்சுகிட்டே பார்ட் டைம் வேலை பார்த்த அண்ணாவுடன் சேர்ந்தாச்சு... அத்தோட அப்பாகிட்ட செலவுக்கு பணம் வாங்குவது நின்னிடுச்சு... வேலை தேடும் படலம்... கஷ்டப்பட்டு ஒரு வேலை கிடைச்சது... ஆனா வேலைல சேர வண்டி கண்டிப்பா வேணும்ன்னு கண்டிஷன்... அப்பா கிட்ட இருந்தது டிவிஸ் 50. சொன்னவுடனே யோசிக்காம ரயில்ல அனுப்பிவிட்டாங்க... அதே வண்டியில ஒருநாளைக்கு எண்பது கிலோ மீட்டர் ஓட்டுவேன்...கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் சர்வீஸ்... திருவண்ணாமலை கோவில் போன அப்பா அங்கயே திடீர்ன்னு மறைவு... நிலைகுலைஞ்சு போனோம்...
அப்படி, இப்படின்னு கொஞ்ச நஞ்ச கஷ்டத்தில மனசுல ஒன்னே ஒண்ணு மட்டும் உறுத்திகிட்டே இருந்துச்சு... வெளிநாடுல போய் வேலை செய்யணும்ங்கிற அப்பாவோட ஆசை... ஒரு நாளைக்கு ரெண்டு மூணு மணிநேரம் தான் தூங்குவேன்... எப்படி எல்லாம், எதெல்லாம் படிச்சா நல்ல சம்பளம், பெரிய கம்பெனி போலாம், எப்படி வெளிநாடு போலாம்ன்னே மனசுல எண்ணம்... சுமார் நாலு வருடம் ஆச்சு... 2007 ல ஆகஸ்ட் 27ல முதன்முறையா அமெரிக்கா கிளம்பினேன்... கிளம்பின அன்னிக்கு காலைல டிவில ஒரு பாட்டு "கனவெல்லாம் பலித்ததே"ன்னு... பாத்ரூம் போய் ஷவர் ஆன் பண்ணிட்டு வெடிச்சு அழுதேன்... எங்கப்பா ஆசீர்வாதம் பண்ணின மாதிரி ஒரு திருப்தி... அப்புறம் இந்தியா வந்தாச்சு... கல்யாணமா...? அமெரிக்காவா..?ன்னு வந்தப்போ உறுதியா சொன்னேன் எங்கப்பாவோட ஆசைப்படி அமெரிக்கா தான்னு சொல்லி திரும்பி ட்ரை பண்ணி கிட்டத்தட்ட போராடி இங்க வேலை கிடைச்சு வந்தேன்...
எனக்கு தெரிஞ்சு எங்கப்பா சிகரெட் குடிச்சோ, தண்ணி அடிச்சோ, அசைவம் சாப்பிட்டோ நான் கேள்வி பட்டது கூட இல்லை... இங்க வந்தாலும் நானும் அப்படியே...
எனக்கு தெரிஞ்சு எங்கப்பா சிகரெட் குடிச்சோ, தண்ணி அடிச்சோ, அசைவம் சாப்பிட்டோ நான் கேள்வி பட்டது கூட இல்லை... இங்க வந்தாலும் நானும் அப்படியே...
அப்பா ஐ லவ் யூ, ஹாப்பி பாதர்ஸ் டே, அப்படின்னு ஒரு நாள் மட்டும் சொல்லாம உங்கப்பாவோட நியாயமான, உங்கனால முடியும்ன்னு நடைமுறைக்கு சாத்தியமான எந்த ஆசையை நிறைவேத்தி வைச்சு, அப்பா பேரை கெடுக்காம இருக்கிற ஒவ்வொரு நாளும் #தந்தையர்_தினம் தான்... இது ஒரு நாள் மட்டும் இல்லை... வாழ்நாள் முழுதும்... இருக்கும் போது விட்டுட்டு போன பின்னாடி பிடிச்சதெல்லாம் வாங்கி படத்துக்கு வைக்கிரதுல அர்த்தமே இல்லை..! அப்பா, அம்மா மனசு நிறைஞ்சு "நல்லா இரு"ன்னு சொன்னாலே போதும்...
நெஞ்சில், தோள்களில் பிள்ளைகளை பிறந்ததிலிருந்து சுமந்து வாழும் அனைத்து தகப்பன்சாமிகளுக்கும் பாதம் தொட்டு வாழ்த்துக்கள்..! அப்பாவாக ஆகப்போகும் அனைவருக்கும் "உங்க பிள்ளைங்களுக்கு" நீங்க தான் வழிகாட்டி, கதாநாயகன்... நல்லனவற்றை வாழ்ந்து காட்டி வாழ்க்கையை புரியவைக்கும் உங்கள் கடமையை செவ்வனவே செய்ய வாழ்த்துக்கள்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக