வெள்ளி, 29 நவம்பர், 2019

வீட்டை வாங்கும் போது, ஔவை பாட்டி ஆத்திச்சூடியில் சொன்னதை நினைவில் வைத்திருங்கள்
இடம்பட வீடு எடேல் - ஆத்திச்சூடி
தேவைக்கு உபயோகப்படாதபடி அதிகமான இடத்தினைக் கொண்ட வீடு எடுக்க வேண்டாம். உங்களுக்கு தேவைக்கேற்ப வீட்டினை தேர்ந்தெடுங்கள்.
சாதாரணமாக, வீட்டின் பணத் திட்டமிடலுக்கு காரணங்கள்  கூறுவார்கள்.

1. உங்களுடைய ஆண்டு வருமானத்தைப் போல், 3 மடங்குக்கு மேல் வீடு வாங்க வேண்டாம்.
உதாரணமாக, உங்களது ஆண்டு வருமானம் ரூபாய். 12 லட்சம் எனில், 36 லட்சத்திற்கு மேலாக வீடு வாங்க வேண்டாம்.

2. உங்களுடைய மாத வருமானத்தின் 25% மேல் கடன் தவணை செலுத்த வேண்டாம்.
உதாரணமாக, உங்களது மாத வருமானம் 1 லட்சம் எனில் 25 ஆயிரத்திற்கு அதிகமாக, கடன் தவணை செலுத்த வேண்டாம்.
குறிப்பு;
  • எந்த ஒரு பொருளையும் கடன் வாங்காமல் வாங்குவது நல்லது. ஆனால், வீடு போன்ற பெரிய விஷயங்களில், கடன் வாங்கத்தான் நேரிடுகிறது. ஆனாலும், எவ்வளவு தூரம் பணம் சேமித்து வாங்க முடியுமோ, அவ்வளவு தூரம் பணம் சேமித்துவிட்டு வாங்குங்கள். கடன் சுமையை எவ்வளவு தூரம் குறைக்க முடியுமோ, குறைக்கப் பாருங்கள்.

உதாரணமாக, உங்களுடைய 36 லட்சம் வீட்டிற்கு, நீங்கள் ஏற்கனவே நீங்கள் 20 லட்சம் சேமித்து வைத்திருந்தால், உங்களுடைய கடன் சுமை 16 லட்சம் மட்டுமே. எவ்வளவு குறைவாக கடன் வாங்கியிருந்தாலும், அதனை சீக்கிரம் அடைப்பதன் மூலம், பணத்தை வட்டியின் மூலம் அதிகமாக இழப்பதை தவிர்க்கலாம்.


  • குறைந்த வருட கடன் அடைக்கும் திட்டத்தை தேர்ந்தெடுங்கள். அது உங்களை அதிகமாக பணம் சேர்த்து, கடனை சீக்கிரமாக அடைக்க முயல வைக்கும். அதிக வருடங்களை நீங்கள் தேர்ந்தெடுத்தாலும், கடன் தவணையைப் போல், பல மடங்குகளை , மாதாமாதம் கட்டி வருவதன் மூலம், சீக்கிரமாக கடனை அடைக்கலாம்.


  • உங்களுடைய தேவை இரண்டு படுக்கையறை வீடு என்றால், மூன்று படுக்கையறை வீட்டினை வாங்க வேண்டாம். தேவைக்கேற்ப வீடு வாங்குங்கள். பெரிய வீடு, அதிக கடன் சுமை. சிறிய வீட்டினால், உங்களுடைய திட்டமிட்ட பணத்தில் இன்னும் நல்ல ஒரு தோதான இடத்தில், போக்குவரத்து வசதிகள், அடிப்படை தேவைகள் நிறைந்த இடத்தில், வீட்டினை வாங்க முடியும். பெரிய வீட்டினால், போக்குவரத்துப் பகுதிகளிலிருந்து, வெகு தூரம் தள்ளித்தான் உங்களுடைய திட்டமிட்ட பணத்தில் வாங்க முடியும்.

  • கடன் வட்டி விகதம் , மாறாத தாக இருக்கும் பட்சத்தில் நலம். மாறும் பட்சத்தில், அதிக அளவில் மாறாத திட்டத்தை தேர்ந்தெடுங்கள்.....

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681..(கனவு இல்லம் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக