இன்றைய ஒரு நாள்" என்பது தான் எனக்கு மிகவும் முக்கியம்.
இந்தக் கொள்கை தான் என்னை இன்று வரையிலும் இயக்கிக் கொண்டிருக்கின்றது. அதனால் இன்று நான் செய்ய வேண்டிய வேலைகள், இன்றைய நிலையில் நான் யாருக்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டும்? யாரெல்லாம் எனக்கு உதவி உள்ளனர் என்பதனை அவ்வப்போது பதிவு செய்துவிடுவது வாடிக்கை. அதன் பொருட்டு இந்தப் பதிவு.
மகாகவி பாரதி முதல் நேற்று நீங்கள் பார்த்து வருத்தப்பட்ட பக்கத்து வீட்டுத் தாத்தா மரணம் வரைக்கும் யோசித்துப் பாருங்கள். தன் குடும்பம், தன் பெண்டிர் என்று வாழாமல் அதற்கு மேலாகத் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கும் சேர்ந்து வாழ்ந்த, வாழும் மனிதர்களை நம் சமூகம் எளிதில் அங்கீகரிக்க விரும்புவதில்லை.
காரணம் மனிதர்களின் தோற்றமும் வளர்ச்சியும் நாகரிகத்தின் அடிப்படையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக் கொண்டே வந்தாலும் அவனுக்குள் இருக்கும் பொறாமையும், வன்மமும் காலத்திற்கேற்ப மாறிக் கொண்டே, வெவ்வேறு விதமாக வளர்நது கொண்டே தான் வருகிறதே ஒழிய அது முற்றிலும் அவனை விட்டு மறைந்து விடுவதில்லை.
மனிதர்களைக் கவனிப்பது ஒரு கலை. எப்போதும் மகன்களிடம் நான் சொல்வதுண்டு.
கவனி.
கண்காணித்துக் கொள்.
கற்றுக் கொள்.
இந்த மூன்றையும் இறப்பு வரும் வரைக்கும் தொடர்ந்து கடைபிடி.
இது தான் வாழ்க்கை முழுக்க பயன்படும் என்று சொல்வதுண்டு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக