திங்கள், 11 நவம்பர், 2019

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையிலான சிறந்த இரண்டு வரி உரையாடல் எது?

மேசையில் எல்லோரும் சாப்பிடுவதற்கு அமர்ந்துள்ளோம்.. என் அம்மா பரிமாறி கொண்டே என் அப்பாவிடம்..

ஏங்க, இந்த பிஞ்சு போன செயின மாத்திட்டு, கொஞ்சம் கூட போட்டு ஒரு ஆரம் எடுத்தா என்ன, இப்பவே வாங்கி போட்டா தான் உண்டு..

அவரோ.. இன்னும் கொஞ்சம் சாதம் போடு…

அவ்வளவு தான், அவ்வளவே தான்.. என் அம்மாவும் புன்முறுவலுடன் அவருக்கும் வைத்து விட்டு எல்லாருக்கும் பரிமாறுகிறார்…

நான் இதை சரியாக கூட கவனிக்கவில்லை.. அப்படி கவனிக்க ஏதும் இருப்பது போலவும் தெரியவில்லை..

அன்று மாலையே, ஷியாம்  இன்னைக்கு டியூஷன் போக வேணாம், நாம வெளிய போறோம் , என்று அம்மா சொல்ல.. எங்க போறோம் என்று கேட்டால்.. நகைகடைக்கு!!!..

அந்த வயதில் நாமும் அதற்கு மேல் கேட்கவும் முடியாது, அவர்கள் சொல்லவும் மாட்டார்கள்..

ஆனால் அதுவே புரிந்துணர்வு.. நம் தலைமுறையில் கணவன் மனைவி உறவில் எவ்வளவோ விடயங்கள் இருந்தாலும் புதிதாய் முளைத்திருந்தாலும்.. இல்லாதது அல்லது குறைவாக உள்ளது இது ஒன்றே..

நன்றி .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக