புதன், 27 நவம்பர், 2019

விவசாயிகள் ஏன் அதிகாலையிலேயே வேலை செய்யத் தொடங்குகிறார்கள்?

இதற்கான பதிலை எங்கள் ஊர் பேச்சு வழக்கில் கூற விரும்புகிறேன். பிழையாக இருந்தால் மன்னிக்கவும்.

அது ஒன்னுமில்லீங்க வெடியால நேரம 5 மணிக்கு போய் மாட்ட புடுச்சு வெளிய அவுத்து கட்டுலீனா மண்டு சாலை நாறிரும்ங்க. அப்புற கறவ நேரமே போடோனும்ங்க பால் வண்டி வர்ரதுக்குள்ள கறவை போடோனும்ங்க. அப்புறம் ஆளுக நேரம வந்துருவாங்க காய் பொரிச்சு டவுனுக்கு சந்தைக்கு கொண்டுபோகனும்ங்க.பழைய சோத்துக்குள்ள போய்ட்டு வந்துட்டா,வந்து கள வெட்ற ஆளுகள பாக்கோனும் அப்புறம் தண்ணி பாய்க்கிறது வேற பாக்கி இருக்கு 3 பேஸ் கரண்டு 12 மணிக்கு போறதுக்குள்ள பாய்க்கோனும். அப்புறம் மாட்ட சித்தே மேச்சு கட்டீட்டு தீவணம் அறுத்து வெக்கோனும்.மருந்து அடிக்குறதுக்கு வேற சாய்ந்தரம் ஆள் வரும்.அதுக்கு தண்ணி செமக்கோனும்.அப்புறம் சாய்ந்தரம் மறுபடியும் கறவை போடோனும்.ஊட்டுக்கு போய் காப்பி குடுச்சுட்டு நாளக்கு எத்தன ஆள் தேவையோ அதுக்கு ஆளுக்கு சொல்லோனும்.வெதப்பு கொஞ்சம் பாக்கி இருந்தா ஏருக்கோ டிராக்டருக்கோ சொல்லோனும்.

இராத்திரி மருபடியும் காட்டுக்கு போய் பண்ணிக்கு காவல் காக்கனும்.காலைல இப்போ கூடுதலா மயில் முடுக்கோனும்.அத சொல்ல மறந்துட்டன்.இதுகளுக்கு நடுவுல பேங்க்கு லோனுக்கு அலையனும்,மகனுக்கோ மகளுக்கோ பள்ளிகொடத்துக்கு பீஸ் கட்ட போகனும்.அந்த சான்றிதல் இந்த சான்றிதல்னு வாங்க அலையனும்.வாய்க்காத் தண்ணி வர்ர காலம்னா அது வேற லெவல்.இப்புடி அடுக்கீட்டே போலாம்.நான் சொன்னதெல்லாம் சொற்பம்.இப்படி நேரமே கிடைக்காத விவசாயி அதிகாலையில் எளுவதைத் தவிற வேறு வழி இல்லை.விவசாயிக்கு ஞாயிறு திங்கள் எல்லாம் ஒன்றுதான்.விடுமுறையே கிடையாது.


எங்கள் ஊர் பெரியவர்கள் "சாகும் வரை நமக்கு ஓய்வில்லை " எனக்கூறுவதுண்டு.இது உண்மையே. விரக்தியினால் கூறுகிறார்கள் என எளிமையாகக் கடந்துவிடமுடியாது.வாழ்ந்து பார்த்தால் தான் புரியும்.👍🐂🐐

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக