செவ்வாய், 26 நவம்பர், 2019

உங்கள் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையிலான சிறந்த இரண்டு வரி உரையாடல் எது?

நான் பல சந்தர்ப்பங்களில் கேட்ட என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையிலான சில உரையாடல்களை இங்கு குறிப்பிட்டுள்ளேன்.

(1)பணம் சம்மந்தப்பட்ட ஏதோ பிரச்சனை அப்பாவுக்கு எல்லா இடத்திலேயும் முயற்சி செய்து விட்டு சமாளிக்க முடியாமல் கடைசியாக அம்மாவிடம் சொல்லுவார்.

அப்பா:என்ன பண்றதுனே தெரியலமா ஒரே குழப்பமா இருக்கு.

அம்மா:இதுக்கு போய் ஏன் இப்படி சோகமா மூச்சிய வச்சுக்கிட்டு இருக்கீங்க.சமாளிச்சுக்கலாம்.நான் பாத்துக்கிறேன்.

(அப்பாவின் குழப்பம் குறைய ஆரம்பிக்கிறது )

(2)புடவை மற்றும் துணிகள் எடுக்க போகும் போது

அப்பா:(மழுப்பலாக)இதுக்கெல்லாம் நான் வரணுமா?நீ குழந்தைகளை கூட்டிட்டு போயிட்டு வாம்மா.

அம்மா:நீங்க அங்க வந்து என் கூட நின்னா போதும்.மத்ததெல்லாம் நான் பாத்துக்கிறேன்.

(சிரித்துக்கொண்டே அப்பாவும் கிளம்புகிறார்)

(3)உறவினர்களுடன் சண்டை வந்த சமயத்தில்.

அப்பா:பாத்தியா விசேஷ வீட்டுல உன் ஆளுங்க வேணும்னே நம்மள அவமானப்படுத்திட்டாங்க.அந்த ஆளுகள என்ன பண்றேன் பாரு.

அம்மா:இதுக்கு போய் ஏன் இப்படி கோவப்படுறீங்க.நமக்கும் ஒரு நேரம் வரும்.அப்ப வைச்சுக்கலாம்.நான் பாத்துக்கிறேன்.டென்ஷன் ஆகாதீங்க.

(அப்பாவின் கோவம் குறைய ஆரம்பிக்கிறது)

(4)1 வருடங்களுக்கு முன்பு (அப்பா இறந்து 20 நாள் கழித்து)

உறவினர்:ஆலமரம் போல குடும்பத்த பாத்துகிட்டு இருந்த மனுஷனை ஆண்டவன் இப்படி கொண்டு போய்ட்டானே இனி என்ன பண்ண போறியோ?

அம்மா: அத நான் பாத்துக்கிறேன்.அவர் நினைச்ச மாதிரி பிள்ளைகல நான் கொண்டுவரேன்.

பல சந்தர்பங்கள் பல சூழ்நிலைகள் பல மாற்றங்கள் ஆனால் அம்மாவின் அல்டிமேட் தன்னம்பிக்கை வசனம் ஒன்று தான்.

"நான் பாத்துக்கிறேன்"

நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக