பெற்றோரின் விவாகரத்து பிள்ளைகளின் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன ?
ஒரு குடும்பம் என்பது அன்பு, பாசம், நேசம், கரிசனம், விருந்தோம்பல், அனுசரித்தல் இப்படியாக பல்வேறு பரிநாமங்களை கொண்டது. தாய், தந்நை, பிள்ளைகள், கூடவே பெற்றோர்கள் இப்படி கூடி இருந்து வாழ்வது , கோடி நன்மை என்று நம்முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள். இன்றைய நாகரீக உலகில் இதன் தாக்கம் வேறுவிதமாக பரிணாமிக்கின்றது.
அன்று கூடி வாழந்த சமூகம் இன்று பிரிந்து , சந்தோசம் என்ற பெயரில் தனிமை படுத்தப் படுகிறார்கள். இன்று பிள்ளைகளுக்கு மொபைல், லேப்டாப் என்று வாழ்க்கை ஓடுகின்றது. அவர்களுக்கு நல்லது, கெட்டதை சொல்லி கொடுக்க பெற்றோர்கள் எப்பொழுதும் பக்கத்தில் இல்லை.
அப்படி என்றால், அவரகளுடைய பெற்றோர்களும் பக்கத்தில் இல்லை. அவர்கள் ஒன்று தூரத்தில் இருப்பார்கள் இல்லையென்றால் முதியோர் இல்லத்தில் அடைக்கலமாகி இருப்பார்கள். நான் முதியோர் இல்லம் சென்று பார்க்கும் பொழுது, என் கண்கள் கலங்கி விட்டன. அந்த வயதில் அவர்கள் படும்பாடு, சங்கடங்கள், மனக்கஷடங்கள், தன் பிள்ளைகளை தேடி ஏக்கத்தில் இருக்கும் வயதான பெற்றோர்கள், நம்மை வந்து பார்க்க மாட்டார்களா, ஆறுதல் சொல்ல மாட்டார்களா, நம் அறிவுறைகளை அவர்களுக்கு எடுத்து சொல்ல மாட்டோமா? இப்படி எண்ணும் கோடானுகோடி இதயங்களைத் தான் நாம் காண முடிகிறது.
கவிஞர கண்ணதாசன் எழுதிய வரிகள்தான் ஞாபகத்திற்கு வருகிறது:
”உன்னை சொல்லி குற்றமில்லை, என்னைச் சொல்லி குற்றமில்லை, காலம் செய்த கோலமடி, கடவுள் செய்த குற்றமில்லை….’ ”
ஆக, பெற்றோர்கள் இல்லாமல் வாழும் குடும்பங்களில், தன் பிள்ளைகளுக்கு அறநெறியை சொல்லி கொடுப்பது யார்? கணவன் - மனைவி இடையே விரிசல் ஏற்படும்போது, அதை நிவர்த்தி செய்ய அவர்களின் பெற்றோர்கள் பக்கத்தில் இருந்தால், இப்படி ஒரு நிலை வருமா? அவர்கள் நல்ல உபதேசங்களை சொல்லுவார்கள் இல்லையா? இதனால், இன்று கணவன் - மனைவி இடையே வெகு சுலபமாக பிரச்சினைகள் உருவாகின்றன.
இதனால், பிள்ளைகள் வெகுவாகவே பாதிக்கப் படுகிறார்கள். அவர்களை நல்லமுறையில் வளர்க்கும் பருவத்தில், அவர்கள் அந்த தாய்-தந்தை பாசம், அரவணைப்பு இப்படி ஏதும் கிடைக்கப் பெறாத சூழ்நிலைக்கு தள்ளப் படுகின்றார்கள். இதை நாம் கண்கூடாக பார்க்கின்றோம். இதனை கணவன் - மனைவி சற்று சிந்தனைக்கு எடுத்து கொள்ள வேண்டும். நீங்கள இதனால் உங்கள் இளந்தளிர்களை தத்தளிக்க விட்டு விடுகிறீர்கள்.
அனைவரும் சேர்ந்து வெளியில் செல்வது? ஒரு இன்பமல்லவா?
இப்படி எத்தனை குடும்பங்கள் இருக்கின்றன? இப்படி இருப்பது பேரினபம் அல்லவா?
ஒரு கதையை படியுங்கள் இங்கே: கதையல்ல, நிஜம்:
ஒரு கணவன் மனைவி, ஒரு மகன் என்று ஒரு குடும்பம் சந்நோசமாக வாழ்கின்றார்கள். மகனுக்கு சிறிய வயதுதான். பள்ளிக்கூடம் செல்கின்றான். கணவன் கம்பெனியில் வேலை செய்துக் கொண்டு இருக்கின்றார். அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்படுகின்றது. இது காதலாக மாறி, தினசரி இருவரும் பேசும் அளவிற்கு போகிறது. இவர் வீட்டற்கு தினசரி வருவதும் தாமதமாகின்றது. கம்மெனி வேலையை காரணம் சொல்கின்றார்.
கணவனுக்கு மனைவி மேல் வெறுப்பு படிப்படியாக வளர்ந்து வருகின்றது. இந்த வேறுபாட்டை மனைவியால் காலப்போக்கில் உணர முடிகிறது. இதற்கு பிறகு, அவரகளிடையே சலசலப்புக்கள் அதிகமாகின்றன. நாலடைவில் கணவன் மனைவியிடம் நான் உன்னை விவாகரத்து செய்து கொள்ள முடிவு பண்ணியுள்ளேன். ஆதலால், இன்று முதல் நீ எனக்கு பணிவிடை செய்ய வேண்டாம். இதுவரை செய்ததற்கு மிகவும் நன்றி என்று சொல்லி விட்டு கம்பெனிக்கு சென்று விட்டான்.
மனைவி இதை எதிர்பார்க்க வில்லை. மற்றொறு பெண்ணுடன் உள்ள தொடர்பும் இதுவரை தெரிய வில்லை. செய்வதறியாது திகைக்கின்றாள். கண்ணீர் கரைபுரண்டு வருகின்றன. ஆறுதல் சொல்ல, இந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்த்து வைக்க யாரும் இல்லை.
இரவு வீட்டிற்கு வருகின்றான். மனைவியை பார்க்கின்றான். பரிதாபம் இருந்தாலும், அதனை பொருட்படுத்தவில்லை.
மனைவியின் ஒரு அன்பான வேண்டுகோள். என்ன என்று கேட்கின்றான். அவள் தொடர்கின்றாள். நான் ஒன்று சொல்வேன், அதை செய்வீர்களா? என்று பரிவோடும், பரிதவிப்போடும் கேட்கின்றாள். கணவன் சற்று யோசிக்கின்றான். சரி என்கின்றான். அவன் மனதில் இனி நாம் பிரியப்போகின்றோம். இதனால் என்ன? என்று தன்சிந்தனை ஓட்டத்தின் இடையே சொல்லிக் கொள்கின்றான்.
அவள் சொல்ல ஆரம்பிக்கின்றாள்:
நாம் பிரிவது நம் பையனுக்கு தெரியக்கூடாது. இன்று நாம் சந்நோசமாக இருப்பது போல் நடிக்க வேண்டும். ஏனென்றால், நாளை அவனுக்கு பரீட்சை இருக்கின்றது. ஆதலால், அவன் சந்தோசமாக படித்து, நாளை நன்றாக பரீட்சை எழுதட்டும். நாளையுடன் அவனுக்கு பரீட்சை முடிகிறது, என்று சொல்லி, நாளையும் ஒரு அன்பான வேண்டுகோள் இருக்கின்றது. அதனை நாளை காலை சொலகின்றேன் என்று சொல்லி விட்டு, இருவரும் தூங்க சென்று விட்டார்கள்.
மறுநாள் காலை. அனைத்து வேளைகளையும் முடித்து விட்டு, பையன் பள்ளிக்கூடம் செல்ல நேரம் வந்துவிட்டநு. கணவன், மனைவி என்ன சொல்லப் போகின்றாளோ என்று ஒரு விதமான சலனத்துடன் இருக்கின்றான்.
மனைவி, தன் கணவனை அழைத்து, என்னை கொஞ்சம் தூக்கிக் கொண்டு செல்லுங்கள். நாம் பையனிடம் டாடா சொல்லவதற்கு என்று. ஏனென்றால் அவன் நம்மை பார்த்து சிரித்துக் கொண்டு, சந்தோசமாக பள்ளி சென்று, பரீட்டை எழுதி வரட்டும். அந்த சந்நோசத்தை மகனுக்கு கொடுப்பதற்கு அவள் முடிவு பண்ணி விட்டாள்.
ஒரு தாயின் பரிதவிப்பை பாருங்கள். தன் சோகத்தை தன்னுள் புதைத்து, தன் கணவணிடமே அகங்காரம் (ego) ஏதும் இல்லாமல், ஒரு மனைவி என்ற அந்தஷ்த்தில் (அது பரிபோக போகின்றது என்று தெரிந்தும்) , கெஞ்சி அவனை இசைய வைத்து, மகனுக்கு சந்நோசத்தை கொடுக்க கூடிய பக்குவம் உள்ளவள் தான் தாய்.
இங்கு தான் ட்டுவிஷ்ட்:
இந்த மாதிரி இருவருக்கும் மனகசப்பு ஆரம்பித்த பிறகு, அவளுக்கு உடம்பிற்கும், மனதிற்கும் சரியில்லாமல் போக ஆரம்பித்து விட்டது. அதனுடைய விஷயங்களை தன் கணவணிடம் பகிர்ந்து கொள்ளவில்லை. தானாக மருத்துவரிடம் காண்பித்து, மருந்துகள் உட்கொள்கின்றாள். அவள் கேன்சரில் அவதிப்பட்டு கொண்டு இருக்கின்றாள். அது கணவனுக்குத் தெரியாது. தன்னிலமையை ஒரு லட்டரில் அவள் எழுதி விடுகின்றாள்.
இதனிடையே, அவன், அவள் காதலியிடம் தன் கருத்துகளை பரிமாறி, கல்யானம் பண்ணிக்கொள்ள தீர்மானித்து, நாட்கள் குறிக்கப் பட்டு விட்டது. அன்று, மாலை வீட்டிற்கு வருகின்றான். அவன் உள்ரூம்பிற்கு நுழையும் முன்பு, மேஜையில் அந்த கடிதம் இருப்பதை பார்த்து படிக்கின்றான். அவனையும் அறியாத சோகம்.
மனைவியை பார்க்க உள்ளே செல்கின்றான். அதோ பரிதாபம்…..
மனைவி தன் கட்டிலில் இறந்து கிடக்கின்றாள். அழுது புலம்புகிறான். தான பண்ணிய தப்பை நினைத்து, நினைத்து புலம்புகிறான். என்ன செய்வது என்னு அறியாது, தவிக்கஇன்றான்.
தன அன்பு மனைவியை இழந்த துக்கம். வாழ்க்கையின் விரக்திக்கே சென்னு விட்டான். ஓடோடி சென்று, தன் காதலியிடம், கல்யாணத்தில் இஷ்டம் இல்லை என்றும், நடந்த விஷயங்களை சொல்லி புலம்பி விட்டு, இனி தன் மகனை கவனிக்க யாரும் இல்லையே என்ற ஏக்கத்துடன், வீடு திரும்பி, மகனை கட்டிபிடித்து, முத்தமிட்டு, அழுது, வாழ்க்கையின் எதார்தத்தை புரிந்து கொண்டு, தன் வாழ்க்கை பயணத்தை தொடர்கின்றான் தன் மகனுடன்.
இதனை படிக்கும் நீங்கள கண்கலங்கலாம். இது வாழ்க்கையின் எதார்த்தம். நம்மில் இருக்கும் தேவையற்ற எண்ணங்கள் ( evil thoughts), காம இச்சை (sexual desire), அகங்காரம் (ego) இவற்றையல்லாம் விட்டு விட்டு, கணவன்- மனைவி இடையே ஒரு பரஸ்பர உறவை உண்டாக்கலாமே! இதனால், நாம் வாழ்க்கையில் நியைய சாதிக்கலாம். நீங்கள் இதனையெல்லாம் இரண்டர கலந்து பேசினாலே, உங்களுக்கு அனைத்து இன்பங்களும் கிடைக்கும்.
நாம் விட்டு கொடுப்பதால், கெட்டு போவது ஒன்றும் இல்லை. வாழ்வது ஒரே ஒரு முறை தான். அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ அனைவரும் முயலுவோம்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக