பசுமை மலரும் நினைவுகளாக ... நீங்கள் எதற்காக சிரித்தீர்கள்?
அன்று அலுவலகத்தில் அதிக வேலை, மிகவும் சோர்வுடன் வீட்டை அடைந்தேன், உடைகளை கழற்றிவிட்டு கைலிக்கு மாறினேன். கை, கால், முகத்தினை கழுவிய பின்பு என் அறைக்கு சென்றேன். என் மனைவி முன்கூட்டியே ஏசியை ஆன் செய்து வைத்து இருந்ததால் ஹாயாக கட்டிலில் சாய்ந்தேன்.
சற்று நேரத்தில் யாரோ கதவை திறக்கும் சத்தம் கேட்டு என் பார்வையை கதவின் பக்கம் செலுத்தினேன். அங்கே என் ஐந்து வயது ஷியாம் கையில் சிற்றுண்டியுடன் என்னை பார்த்து சிரித்தான் .
அம்மா கொடுக்க சொன்னங்க! என்று கூறினான் என் ஷியாம் .
நீ சாப்பிட்டியா? என்றேன் நான்.
ம். என்றான் அவன்.
பிறகு அவன் கதவை மூடாமல் என் அறையை விட்டு வெளியே சென்றான்.
டேய் கதவ சாத்து… ஏசி வெளிய போகுது இல்ல! என்று சத்தமாக கத்தினேன் நான்.
உடனே அவன் அறைக்குள் வந்து திறந்து இருந்த கதவை தன் கைகளால் பிடித்துகொண்டு தலையை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு.
ஏய் ஏசி உள்ள வா…ஏய் ஏசி உள்ள வா…ஏய் ஏசி உள்ள வா… அப்பா சொல்றாரு இல்ல! என்றானே பார்க்கலாம்.
நான் சாப்பிட்ட சிற்றுண்டி புரை ஏற விழுந்து விழுந்து சிரித்தேன்.
புரிஞ்சா நீங்களும் சிரிங்க.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக