செவ்வாய், 31 அக்டோபர், 2017


எனக்கு பிடித்த பெண் அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர் ...இவர்கூட ..நம் உடுமலை விசாலாட்சி பெண்கள் கல்லூரியில் பயின்ற மாணவியும் கூட

கொஞ்சம் பேராசை தான்:) ஆனாலும் மக்களை அதிகாரப்படுத்துவதை நோக்கியே எனது பயணம்!
நமது கம்பள சமுதாயத்தில் இருந்து இப்படி ஒரு பெண்மணி வரமாட்டாரா ...என் நீண்ட நாள் கனவு ...இப்படி யாரவது இருக்கிறார்களா ...?????????????...என்னால் முடிந்தது ...காலசூழ்நிலையால் விடுபட்டுவிட்டது மனதில் கொஞ்சம் வருத்தம் தான் ...வருங்காலத்தில் பார்க்கலாம் ...நம்பிக்கையுடன் ...
அடடா...இன்றய தலைப்பு ....இடம் ...பொருள் ..ஏவல் ....இப்போது இருக்கும் சுழலுக்கு ....சரியான தலைப்பு ....

எனது அருமை மாமன் ...சுக்காம் பட்டி ...நிலக்கோட்டை ...ராஜபாண்டியன் மாமாவின் அட்டகாசமான [பதிவு ........இடம் ..பொருள் ..ஏவல் ...


Raja Pandian........

இடம், பொருள், ஏவல் அறிந்து பேசத் தெரியாதவன், செயல் படத் தெரியாதவன், நடந்து கொள்ளத் தெரியாதவன், புரிந்து கொள்ள தெரியாதவன்.
ஜாடை அறியாதவன் சர்வ முட்டாள். இதை அன்றே சொல்லிவைத்தார்கள் நம் முன்னோர்கள். அன்றைய மக்கள் இதை சரிவர அறிந்து கொண்டு ஒருத்தரை ஒருத்தர் முழுமையாக புரிந்து கொண்டு நடந்து கொண்டதால், அவர்களால் சந்தோஷமாக, நிம்மதியாக வாழ முடிந்தது, மேலும் பல குடும்பங்கள் கூட்டு குடும்பலாக ஒரே கூரையின் கீழ் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்துள்ளதாகவும், இதுக்கு மேலே அரசர்களும் அரசபை தலைவர்களும் தேசத்தின் மக்களும் ஒருத்தருக் கொருத்தர் புரிதலில் மேலோங்கி இருந்து சீரும் சிறப்போடும் வாழ்ந்துள்ளதாக சரித்திரம் நம்மைப் பார்த்து பறைசாற்றுகிறது.
பள்ளிப் பருவ வாழ்க்கையிலும் சரி, குடும்ப வாழ்க்கையிலும் சரி, பொது வாழ்க்கையிலும் சரி, தொழில் வாழ்க்கையிலும் சரி, மற்ற பழக்க வழக்கங்களிலும் சரி ஜாடை அறியாமல் செயல் பட்டால் அதை விட ஒரு முட்டாள்தனம் வேறு ஒன்றும் இல்லை.
பல மாணவர்களுக்கு பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியனாக இருப்பான் ஆனால் ஜாடை அறியாத சர்வ முட்டாளாக இருப்பான். பெரிய பட்டப்படிப்பு படித்து இருப்பான் ஆனால் ஜாடை அறியாத சர்வ முட்டாளாக இருப்பான். கம்பெனிகளில் பல நூறு வேலை ஆட்களுக்கு மேனேஜராக இருப்பான் ஆனால் ஜாடை அறியாத சர்வ முட்டாளாக இருப்பான். பெரிய செல்வந்தனாக இருப்பான் ஆனால் ஜாடை அறியாத சர்வ முட்டாளாக இருப்பான். வெள்ளையும் சள்ளையுமாக இருப்பான் ஆனால் ஜாடை அறியாத சர்வ முட்டாளாக இருப்பான். தன்னைச் சுற்றி இவ்வளவு கூட்டங்களா என்று பிரமிப்பு அடைவான் ஆனால் ஜாடை அறியாத சர்வ முட்டாளாக இருப்பான். . இதுக்கு மேலே எத்தனையோ ஜாடை அறியாத சர்வ முட்டாள்களை நாம் பார்கின்றோமா இல்லையா?
நாம் தினம் தினம் சாலையில் நடந்து போகும் போதும், பிரயாணத்தில் இருக்கும் போதும் எத்தனையோ பேர்களை சந்திக்கின்றோம் உரையாடுகின்றோம் அத்துனைபேரும் நமக்கு நன்பர்காளா? அவர்கள் வந்து போகின்றவர்கள். அதாவது ஓடுகின்ற தண்ணீரைப் போன்றவர்கள்.
நாம் தினம் தினம் வசிக்கின்ற இடத்திலேயே எத்துணையோ பேர்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றோம், உரையாடிக் கொண்டிருக்கின்றோம், அவர்கள் அத்துனைபேரும் தெரிந்தவர்களாக, நண்பர்களாக இருகின்றார்கள், அவர்கள் அதே இடத்தில் நிலையானவர்கள், அதாவது தேங்கி கிடக்கின்ற தண்ணீரைப் போன்றவர்கள்.
ஓடுகின்ற தண்ணீர் ஒருபோதும் அழுக்காகுவது கிடையாது, அது சுத்தமாக இருக்கும். ஆனால் தேங்கி கிடக்கின்ற தண்ணீரோ அழுக்காகி விடும், கெட்டுவிடும், அதன் தன்மை அறிந்து சுத்தப்படுத்திக் கொண்டே இருக்கணும். அந்த தண்ணீர் நமக்கு கட்டுப்படவில்லையா? அந்த தண்ணீரை விட்டு விலகி இருக்கணும், தள்ளி இருக்கணும்.
அதுபோலவேதான் இந்த ஜனங்களும். நம் மத்தியில் வந்து போகின்றவர்களுக்கும், நம் மத்தியில் நிலையாக இருக்கின்றவர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றது. இந்த வித்தியாசத்தை ஜாடையில் அறிந்து நடந்து கொள்ளாதவன் சர்வ முட்டாள்.

திங்கள், 30 அக்டோபர், 2017

உறவுகள் ...என்றவுடன் ...என் நீண்டகாலபெங்களூரு கிருத்திகா தரன்  நண்பரின் பதிவுகள் என் நினைவில் நிழலாடும் ..என் பதிவுகள் பார்த்து ..கொஞ்சம் உயிரோட்டத்துடன் எழுதவேண்டும் என்பார் ...இன்னும் என் பதிவுகளில் தடுமாற்றம் இருக்கிறது .....உறவுகள் என்ற தலைப்புக்கு இந்த பதிவு சரியாக இருக்கும் என்று நினைக்கிறன் ...

ஒரு தாயை எங்கே தாயாக காண்போம்?
ஆம் என் தாயை நான் தரிசித்த இடமெல்லாம் நாங்கள் கஷ்டபட்ட சமயத்தில்.
வீட்டில் ஒரு மருத்துவ அவசரம். இரவு ஒரு மணி, போன் வருகிறது, போய் பார்த்தால் அம்மா தனியே ஆட்டோவில் இருந்து இறங்குகிறார். மொழியும் தெரியாது. வீடும் கண்டுபிடிக்க முடியவில்லை. 
அந்த துணிவை அம்மாவின் பாசம் கொடுத்தது.
அப்பா மருத்துவமனையில் அனுமதி. பல சமயங்களில் தன் நிலை மறப்பார். யாராலும் சமாளிக்க முடியாது. கிட்டதட்ட ஒரு மாதம் தவம் போல் கூட இருப்பது பெரிதல்ல, அந்த அமைதி, அனுசரனை அத்தனை எளிதில்லை. அங்கே தாயை பிரமாண்டமாய் தரிசித்தேன்.
பிரசவம் முடிந்தது. கிட்டத்தட்ட ஒரு மாதம். இரவு இல்லை, பகல் இல்லை. குழந்தையும் நானும் தான் உலகம். பத்திய உணவில் இருந்து குழந்தை தோளில் வைத்து ஏப்பம் விடும் வரை அவர்தான் பொறுப்பு. அங்கு தாயின் இன்னொரு பிரமாண்டத்தை தரிசித்தேன்.
அக்காக்கு ஒரு ஆக்சிடண்ட். பதறி அடித்துக் கொண்டு வருகிறார். சைக்கிளில் கேரியரில். எப்படியோ, யாரையோ பிடித்து பதறி பதறி ஓடி வருகிறார் உயிரை மக்களிடம் ஒப்படைத்த தாயின் பிரமாண்டத்தை தரிசித்தேன்.
இன்றும் பேரனுக்கு ஜூரம் என்றால் கை கால் ஓடாது தவிக்கும் பாசத்தின் பிரமாண்டம்.
தாயாக பார்த்து இருப்பினும் அவர் தந்தையை தேடி மருத்துவமனைக்கு ஓடிய காட்சியில் நானாக மகளாக தரிசித்தேன்.
தியாகம் செய்ய சிலர் இருப்பார்கள் என சுயநலமாய் அம்மாவை டேக் இட் கிராண்டாட் ஆக எடுத்துக் கொண்டோம் என்று நினைவு வந்தாலும்..அம்மாவை பார்த்தவுடன் எல்லாம் மறந்து அம்மா உன் கையால் காபி என மாறுவதன் மர்மம் புரிபடவில்லை. அக்காபியின் சுவையில் அம்மாவையும் கலந்து கொடுப்பதுப் போல் தனி சுவை
அந்த தயிர்சாதம், மாவடு, மிக்சர், சீடை, முறுக்கு, மாங்காய் தொக்கு, சேனை வறுவல், மலாய் கோப்தா, கட்லெட் என நீளும் அம்மாவின் ருசியின் காட்சிகள் மற்றுமொறு தாயழகு. ஊருக்கே உணவு அளிக்கும் அன்பு மற்றுமொரு அழகு.
பரிதவிக்கையில் படரும் பாசக்கொடிகள் பலமானவை. நன்றாக இருக்கும் பொழுது அம்மா நினைவுக்கே வருவதில்லை. துளி கஷ்டம் என்றாலும் ஆடு மடி தேடும். எத்தனை நோகடிப்பினும் அம்மாவால் எல்லாவற்றையும் மறந்து குழந்தைக்கு வேளா வேளைக்கு நேரத்துக்கு பிசைந்து ஊட்டு , பசி அடக்கினா எல்லாம் அடங்கும் என எளிதாய் சொல்லி விட முடிகிறது.
தாயான கணத்தில் உணர்ந்தேன்
தாய் என்பது ஒரு வலி
ஒரு இன்பம்
உண்மை
அழகு
பாசம்
இனிமை
ஒரு சுவை
ரசனை
ஈர்ப்பு
அத்தனையும் விட கண் துஞ்சா
தியாகம்..
தாய்மையை அளவீட்டால் மட்டுமே அதன் தியாகமும், நியாயமும் புரிபடும். அளவிட முடியா அளவுக்கு தாய் உறவை எளிதாய் எடுத்தாள்கிறோம்.
என்ன செய்து சரி செய்ய இயலும்?
எனினும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா என்று முடித்துக் கொள்கிறேன். Girija Manian.......
சென்ற ஆண்டு ...இதே நாளில் அறக்கட்டளையின் கூட்டம் நடந்தது ..இன்று தொல்லியல் துறை .. பார்வையிட்டது ...இதுதான் அறக்கட்டளையின் செயல்பாடுகள் .....அக்டோபர் 30...திங்கள் ...2017....வருடம்


இன்றைய சந்திப்பு நிகழ்வு .....
நம் வரும் தலைமுறையினருக்கு கல்வி...கல்விக்கான ஊக்கதொகை ,அவர்களுக்கான வழிகாட்டுதல் முறைகள் ..வேலைவாய்ப்பு முறைகளை எப்படி தேர்ந்தெடுப்பது ,நம் வரலாறுகளை எப்படி கொண்டுபோய் சேர்ப்பது ,
நம் தம்பி நந்தகோபாலின் தொலைநோக்கு பார்வை ...அதற்கான செயல்திட்டங்கள் நம்மிடம் பகிர்ந்து,நம் நிகழ்வுக்கு நம்பிக்கையளித்தது..ஆசிரியர் மாரிமுத்து அவர்கள் அரசுப்பணிக்கு தேர்வுகள் பயிற்சி எப்படி அளிப்பது என்பதை நம்மிடம் பகிர்ந்தது ,ராஜேந்திரன் டிஜிட்டல் ஸ்டூடியோ அவர்கள் பொது சமுதாய பணிகளை எப்படி நம் சமுதாய மக்களிடம் எப்படி கொண்டுபோய்சேர்ப்பது பகிர்வுகள் இந்நிகழ்வு ஒரு அருமையான சந்திப்பாக இருந்தது.
அறக்கட்டளை குழுவில் இங்கே என்ன நடக்குது ...என்று ஆதங்கத்துடன் சில நாட்களுக்கு முன் அறக்கட்டளையின் மேல் பாசம் கொண்ட நம் சொந்தம் ஒருவர் கேட்டு இருந்தார் .. நம் சொந்தங்களுக்கு ...அறக்கட்டளையின் பணிகள் மிகுந்த பொறுப்புடன் ..சரியான வழியில் சென்றுகொண்டு இருக்கிறது ...நம் உறுப்பினர்கள் அனைவரும் ..அவர்களால் முடிந்த உதவிகளை செய்து கொண்டு தான் உள்ளனர் ...மாற்றம் நம் இளைய தலைமுறையின் ஒத்துழைப்புடன் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது  என்பதை அறக்கட்டளை தெரிவித்துக்கொள்கிறது ..

கார்த்தி SR ..மாப்பிள்ளைக்கு உங்களின் பணிகளுக்கும் இடையிலும் ...நம் சமுதாய ஆர்வம் ..அக்கறை ..நமது அறக்கட்டளைக்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் ஒரு நாள் செலவிட்டதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ..

ஞாயிறு, 29 அக்டோபர், 2017

இன்றய எதிர்கால குழந்தைசெல்வங்களுக்காக  ...கதைகள் ..பாடல்கள் ..புத்தகமாகவும் ...முகநூல் .பகிரளி மூலமும் ...கதைகள் பேசும் ...

வாசிப்பு என்றுமே மகிழ்வான செயல். ஒவ்வொரு குழந்தையின் கையிலும் புதிய புத்தகம் ஒன்றினை இன்றே தவழச்செய்வோம். அவர்களை புதிய உலகினில் பறக்க விடுவோம்.

என் செல்ல ஷியாம் சுதிர் சிவகுமாருக்குக்கூட ...அப்பா ..விழியினன் புது புத்தகம் வந்துவிட்டதா என்று கேட்பார் ..படித்து தெரிந்த கொள்வதற்கு அப்படி ஆர்வம் ..

என் இனிய நண்பர் ..உமாநாத் செல்வன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ...

இன்று பனிபடர்ந்த அருமையான ..உடுமலைப்பேட்டை மண்ணின் மைந்தர் டாக்டர் .மோகன் பிரசாத் MBBS,M.D., D.M(GASTRO) (Chairman V.G.M.Hospital coimbatore)அவர்களின் தலைமையேற்க ...ரோட்டரி தலைவர் திரு.நாகராஜ் அவர்களின் முன்னிலையில் அருமையான விருது (VOCATIONAL EXCELLENCE AWARD)வழங்கும் விழா ...

வரவேட்புரை..திரு ஆனந்த அவர்களின் பேச்சுடன் ஆரம்பித்தது ..
விருது பெற்றவர்களை அறிமுகப்படுத்திய தம்பி திரு .சுல்தான் அவர்கள் ..
திரு .வீ.கணேசன் -இரண்டாம் நிலை நூலகர் அவர்கள்
திரு .எஸ் .தாஸ் ராஜன்  -உடற்கல்வி ஆசிரியர் அவர்கள்
திரு .எஸ் .சரவணன் -ஆசிரியர் அவர்கள்
Ms .ஸ்ரீதேவி -பரத நாட்டிய கலைஞர்
இவர்களின் மதிப்புக்குரிய இன்றைய எதிர்கால தலைமுறையினர்க்கு வழிகாட்டிகளாக உள்ளவர்களுக்கு இந்த விருதை அளித்ததுக்கு உடுமலைப்பேட்டை தேஜஸ் ரோட்டரி சங்கத்திற்கு உடுமலை மக்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் ..

டாக்டர் .மோகன் பிரசாத் அவர்களின் ..நேர மேலாண்மை எப்படி கையாளுகிறார்கள் என்பதை ஒரு புத்தகமே எழுதலாம் ...அந்த அளவுக்கு அவருடைய நேரம் ஓவுவொரு மணித்துளியும் பொன் போன்றது ..மருத்தவ உலகில் இருப்பவர்களுக்கு இது நன்கு தெரியும்...இந்த விழாவிற்கு டாக்டர் அவர்களின் தலைமை என்றவுடன் எனக்கு மாற்றட்ட மகிழ்ச்சி ..எனது நண்பர் நூலகர் கணேசன் அவர்களுக்கு அவர் பொற்கரங்களால் வழங்கியது மிகவும் மகிழ்ச்சி ..

டாக்டர் அவர்களை முதன் முதலில் பார்த்தது கோவையில் நான் உலக பாரம்பரிய மிக்க எனது நிறுவனம் மூலம் 2001 ம் வருடம்   ..என் குருநாதர் ..என் வழிகாட்டி ..திரு .எஸ் .ஜெய்ஷ்ங்கர் சுகுமாரன் அவர்களின் மூலம் தான்..என் குருநாதருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..
டாக்டர் அவர்களை விழாவில் சந்தித்தது வாழ்க்கையில் மறக்க முடியா நிகழ்வு ..டாக்டர் அவர்களின் கடுமையான நேர பணி சூழலில் அவரை நான்கு முறைதான் சந்தித்து உள்ளேன் .இனி தொடரும் நட்புகளுடன் வழிகாட்டிகளாக ..

பணி அர்ப்பணிப்பு :
டாக்டர் என்று சொல்வதை விட ..இவர் எல்லாத்துறைகளிலும் நிகழ்வுகளை தெரிந்து ஆழந்த அறிவாற்றலுடன் விழாவில் பேசியது செவிக்கு உணவாக அமைந்தது ...அவரின் உடுமலையின் நகர்புறத்தில் அமைந்து உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் படித்த மாணவன் ..அவர் பள்ளியில் மாணவராக இருந்தபோது  ரெட் கிராஸ் -அமைப்பில்  ஆசிரியர் செந்தில் ஆறுமுகம் அவர்களின் மகன் திரு .எஸ் .மூர்த்தி அவர்களோடு இணைந்து ..செய்த தண்ணீர் தொட்டி ,கழிவறை ,சுத்தம் செய்தது .. பற்றி பேசியயது ..எந்த வேலை என்றாலும் அதற்கு மதிப்பு கொடுத்து பணியாற்றியது இன்றைய இளைய தலைமுறை குழந்தைகளுக்கு நல்ல ஊக்சக்தியாக அமைந்தது ..

ஆன்மிகம்
:டாக்டர் அவர்கள் ஆன்மிகம் பற்றி பேசும்பொழுது .முருகக்கடவுள் தெய்வமாக வணங்கும் .கிருபானந்த வாரியார் அவர்களின் சொற்பொழிவை அரசு மேல்நிலை பள்ளியில் அவர் ஆற்றிய உரைகளை நினைவுகூர்ந்தார் .டாக்டர் அவர்களின் வீட்டில் தங்கியபோதுஅவரிடம் நோட்டு புத்தகங்களில் அவரின் கையெப்பம் இட்டதை மலரும் நினைவுகளாக பேசியது அருமை .

டாக்டர் அப்துல் கலாம் அய்யா யாவை சந்தித்தபோது ..அவரை ...நீங்கள் தமிழ் புலவர என்று கேட்டதை நினைவுகூரந்தது மகிழ்ச்சி ..டாக்டர் அப்துல் கலாம் அய்யா அவர்கள் ..உங்களின் மருத்தவ நூல்கள் எல்லாம் படித்து உள்ளேன் ..எப்படி புலவராக பிரதிபளிக்க முடிகிறது என்று ஆச்சரியத்துடன் கேட்டது வியப்பில்லை ..இன்று பேசிய நிகழ்வுகள் உடுமலை மக்களுக்கு.இன்றைய மாணவர்கள்,கிடைத்த வரப்பிரசாதம் .

நாட்டியம் ..பாடல்கள் :

டாக்டர் அவர்களின் இரண்டு பெண்  குழந்தைகள் நாட்டியம் பழகிய விதம் ..சென்னையில் ,மதுரை தமிழ் சங்கத்தில் ,அமெரிக்காவில் ..பரதநாட்டியம் அரங்கேற்றிய விதம் குறித்த தகவல் ...நாட்டியத்தின் மீது அவர் பற்று கொண்டிருந்தது ..இன்றைய காலங்களில் மறைந்து வரும் ,ஈடுபாடு இல்லாமல் இருக்கும் குழந்தை செல்வங்களுக்கு உணர்த்தியது வெகு அருமை ...

மருத்துவம் : டாக்டர் அவர்கள்  இரைப்பை குடல் மருத்துவம் படித்து ..உடுமலையில் பணியாற்றியபோது ..அவரின் குருநாதர் வேண்டுகோளுக்கு இணங்க ..தினம் தோறும் கோவை சென்று மருத்தவ பணிசெய்தது..அருமை ..உடுமலையின் மண்ணின் மைந்தரை இப்போது மருத்தவ செல்ல பிள்ளையாக கோவை தத்து எடுத்துக்கொண்டது..இருந்தாலும் உடுமலையில்   பிறந்த பாசம் என்றும் அவர் விடுவதில்லை ..உடுமலை மக்களும் கண்டிப்பாக ஏதாவது ஒரு நிகழ்வுக்கு அழைத்து வந்துவிடுவார்கள்..இன்னும் அவர்களின் மதிப்பு மிக்க பேச்சுக்கு ஏங்கி இருக்கும் .;எதிர்கால குழந்தைகளுக்கு அவர் வழிகாட்டியாக இருப்பார் .

 Dr.பிரிசில்லா சுந்தர்ராஜன்.Regionalcordinato-விழா விருந்தினர்களை ரோட்டரி விருதின் அருமைகளை தன் பேச்சால் உணர்த்தியது வெகு அருமை ..விருதின் தேர்நதெடுத்தமுறை அவர்களின் செயல்பாடுகளை வைத்து மதிப்பை கூட்டுவதாக இருந்தது ..கடமையை யார் செய்தாலும் உடுமலைமக்களுக்கு செய்த பணிகள் வாழ்க்கையில் பயனுள்ளதாக இருந்துள்ளது .
 நன்றியுரை :

 திரு.முத்துராமலிங்கம்-Assistant Governer-

திரு போத்திராஜ் -செயலாளர்
 திரு.சம்பத்குமார் -ChairmanVocationalservice
ஆகியோர் வழங்கி விழாவை சிறப்பு  உடுமலையின் வடகிழக்கு பருவ மழைக்கான அறிகுறியாகவே இந்த விழா அமைந்தது ..இன்றய ஞாயிறு அருமையான பயனுள்ள நாளாக அமைந்தது மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது ..


.









































































சனி, 28 அக்டோபர், 2017

நம் சமுதாய சொந்தம் ...உடுமலைப்பேட்டை ..லிங்கம்மவூர் ..திரு .பெருமாள்சாமி அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...தற்பொழுது திருப்பூர் ...தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் ..சிறப்பு மின்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார் ..விளம்பரம் இல்லாமல் ...நம் சொந்தங்களின் உயர்நத பதவிகளில் இருப்பவர்களின் தகவல்களை அளித்து எனக்கு அறிமுகப்படுத்தி உள்ளார் ..கம்பளவிருட்சம் அறக்கட்டளைக்கு ..அனைத்து ஆலோசனைகளையும் ,முன்னேற்ற கருத்துக்களை அளித்து..நம் சமுதாய வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது ...எங்களுக்கு மிக்கமகிழ்ச்சி அளிக்கிறது ...கம்பளவிருட்சம் அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்கள் ... 

வெள்ளி, 27 அக்டோபர், 2017

திரு .வீ.கணேசன்... இரண்டாம் நிலை நூலகர்..உடுமலைப்பேட்டை

15 வாரமாக பொதுமக்களுக்கு ஞாயிறு தோறும் நிலவேம்பு கசாயம்  ஏழு நாட்கள்  டெங்கு விழிப்புணர்வு வாரம்  பப்பாளி இலைச்சாறு வழங்கியது.

இன்றைய காலகட்டத்தில்,குழந்தைகளுக்கு ,பள்ளிகளில் இதுபோன்ற வகுப்புகள் நடத்துவது அரிதாக உள்ளது. குழந்தைகளின் கற்பனைத் திறனை மேம்படுத்தும் பல்வேறு கதைகளை சொல்வதற்குக்கூட இன்றைய பெற்றோருக்கு நேரமில்லாமல் போய்விட்டது. வாசிப்பு, பழக்கம் என்பது இக்கால குழந்தைகளிடம் குறைவாகவே உள்ளது. சிறந்த நுால்கள், சிறந்த மனிதர்களின் கருத்துக்களை மனதில் விதைத்து வாழ்க்கையின் வழிகாட்டிகளாக மாறுகின்றன. 

பள்ளி மாணவ மாணவியர்க்கு தொடர் ந்துகடந்த வாரம்வரை இலவச ஒவியப்பயிற்சி பள்ளிகளில் கருத்தாளர்களை கொண்டு வாசிப்பை நேசிப்போம்நிகழ்ச்சி குழந்தைகளுக்கு கதை சொல்லி நிகழ்ச்சி  மகாத்மா காந்தி உறைவிடப்பள்ளி மாணவர்களுக்குஇலவச வாசிப்பு பயிற்சி  இயற்கை மூலிகைகள் கண்டறிய மூலிகைகள் முகாம். நூலக வாசகர்கள் பயன்பாட்டிற்கு கணிணி நன்கொடையாக பெற்றது. இரண்டாம்நிலை நூலகராக பொறுப்பேற்று நான்கு மாதம்ஆகிறது மாவட்ட நூலக அலுவலர் மற்றும் சக பணியாளர்கள்ஒத்துழைப்புடன் இது சாத்தியமாயிற்று. வீ.கணேசன் இரண்டாம் நிலை நூலகர் கிளை நுலகம் எண் 2 உழவாரசந்தை எதிர்புறம் உடுமலை..

ROTARY CLUB OF UDAMALPET  TEJAS.....VOCATIONAL EXCELLENCE AWARDS...

விருது பெரும் திரு .வீ .கணேசன் -நூலகர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...கடமையை செய் ...பலனை எதிர்பாராதே ...என்ற பொன்மொழி ..நினைவில் வருகிறது ....


வியாழன், 26 அக்டோபர், 2017

இன்று நம்ம புது  மாப்பிள்ளை T .சண்முகவடிவேல் -K கௌசல்யாதேவி ...அவர்களின் திருமண வரவேற்புவிழா -

இடம் :உடுமலைப்பேட்டை ..வாணி மஹால் .
நாள் :. 26-10-2017 வியாழக்கிழமை ...

கம்பள விருட்சத்தின் அறக்கட்டளை உறுப்பினர் ...திருமண விழா அருமையான ..நம் இளையசொந்தங்களுடன் கலந்துகொண்டது மிக்க மகிழ்ச்சி ...மணமக்களுடன் சேர்ந்து கேக் வெட்டி திருமண நிகழ்வுக்கு வந்திருந்த அனைவர்க்கும் வழங்கி  கொண்டாடியது புதுமையாகவும் இருந்தது ..திருமண நிகழவிற்கு வரும்போது யார் தெரிந்த நபர்கள் வருவர்களாக ..அறிமுகமாகி இருந்தால் பரவாயில்லை என்று ..கொஞ்சம் தயக்கத்துடன் வந்தேன் ..திருமண மஹாலில் முதலில் சந்தித்தது நம்ம மாப்பிள பெருமாள்சாமி யை தான் அடுத்த திருமணம் அனேகமாக உங்களுடையது தான் என்று நினைக்கிறன் வாழ்த்துக்கள் அடுத்தது நம்ம தூத்துக்குடி சிங்கக்குட்டி கார்த்தி ஸ்மார்ட் தான் ...தம்பி எப்பவும் ஸ்மார்ட் தான்  ,முதல் முறையாக இளையசொந்தங்களுடன் சேர்ந்து அறிமுகப்படுத்திக்கொண்டது இளைய சொந்தங்களுக்கு புது உற்சாகத்தையும் தந்தது வெகுஅருமை .வந்திருந்த புது இளையசொந்தகளுக்கு .அவர்க்ளின் பணி ,வேலைவாய்ப்பு ,எந்த ஊர் என்று தெரிந்துகொள்வதற்கு நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது ..கம்பள விருட்சம் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் ,முதல் முறையாக கொடுங்கியம் செந்தில் குமார் கன்ணுசாமி அவர்களின் திருமணவிழாவில் ஆரம்பித்தது ..கம்பள விருச்சம் விதைகளாக விழுந்து செடிகளை வளர்ந்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது ..கம்பள விருட்சம் அறக்கட்டளை   மணமக்களுக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது ...

புதன், 25 அக்டோபர், 2017

பாறை எண்ணெய் அல்லது பெற்றோலியம்

என்பது புவியில் சில பகுதிகளில் நிலத்தடியில் இயற்கையாகக் காணப்படும் ஒரு வகை எண்ணெய். இவ்வெண்ணெய் நீர்ம நிலையில் உள்ள பல ஐதரோகார்பன்களின் கலவை ஆகும். இந்த ஐதரோகார்பன் மூலக்கூறுகள் வெவ்வேறு நீளங்கள் கொண்டவையாக உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை, ஆல்க்கேன்கள் ஆகும். இவற்றின் நீளம் C5H12 இல் இருந்து C18H38 வரை பொதுவாகக் காணப்படுகிறது. இதனினும் குறைந்த நீளமுடையவை எரிவளி அல்லது எரிவளி நீர்மமாக் கருதப்படுகின்றன. நீளமான ஐதரோகார்பன் தொடர்கள், திண்ம நிலையில் உள்ளன. மிக நீளமான ஐதரோகார்பன்கள் நிலக்கரி ஆகும்.

இயற்கையில் கிடைக்கும் பாறை எண்ணெயில் உலோகமற்ற தனிமங்களான கந்தகம், ஆக்ஸிஜன், நைட்ரஜன் போன்றவையும் காணப்படலாம். பொதுவாக இது கறுப்பு அல்லது கரும்பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது.

வரலாறு
பாறை எண்ணெயை முதன் முதலாக 1556 இல் ஜெர்மன் கனிமவியலாளர் ஜியார்ஜியஸ் அகிரிகோலா (Georgius Agricola) என்று அறியப்பட்ட, "கியார்கு பௌவர்" (Georg Bauer) என்பவர் பயன்படுத்தியதாக அவருடைய ஆய்வுநூல் தெரிவிக்கின்றது[1]. ஆனால் 100 ஆண்டுகளுக்கும் முன்னர், மே 26, 1908 ஆம் நாள் பெர்சியாவில், ஒரு பிரித்தானியக் கும்பினி எண்ணெய்க் கிணறு ஒன்றை வெட்டி எண்ணெய் எடுத்ததே[2] இன்றைய பாறை எண்ணெய்ப் பயன்பாட்டுக்கு வழிவகுத்த முதல் நிகழ்வு. "டார்சி” (D'Arcy) என்பவர் 1901 ஆம் ஆண்டு பெர்சிய அரசிடம் இருந்து பெற்ற உரிமத்தின்படி, ஈரானில் எண்ணெய் இருக்கும் இடத்தைத் தேடினர். பணமின்றி அவரது கும்பினி முழுகும் தருவாயில் இருந்தபொழுது, கும்பினியைச் சேர்ந்த ஜியார்ஜ் ரேய்னால்ட்ஸ் (George Reynolds) என்பவர் மஸ்ஜித்-இ-சுலைமான் (Masjid-i-Suleiman) என்னும் இடத்தில் 1,180 அடி ஆழத்தில் தோண்டிய பொழுது, எண்ணெய் குபுக்கென்று மேல் பரப்புக்கு மேலே, 75 அடி உயரமாய் பீய்ச்சி அடித்தது. இக் கண்டுபிடிப்பின் பயனாய் ஆங்கிலோ-பெர்சிய எண்ணெய் நிறுவனம் (Anglo-Persian Oil Co) உருவாகியது. பின்னர் அது பற்பல வடிவங்களில் உருமாறிப் பின் 1954 இல் பிரித்தானியப் பாறை எண்ணெயாகவும் (British Petroleum), அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டு ”பி.பி” (BP) ஆகவும் உருப்பெற்றது.

உருவாகும் முறை
பாறை எண்ணெயைக் கச்சா எண்ணெய் அல்லது பாறைநெய் என்றும் கூறலாம். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கடல்வாழ் உயிரிகள் மடிந்து (மரித்துப்) போன பின், கடல் அடியில் மண்ணுள் புதையுண்டு, அங்கு ஏற்பட்ட அழுத்தத்திலும் வெப்பத்திலும் அழுகி, கோலுரு நுண்ணுயிர்களால் (பாக்டீரியாக்களால்) சில மாற்றங்கள் அடைந்து, சுற்றி இருந்த மண்ணோடும், உப்புக்களோடும் சில வேதிவினைகளின்பாற்பட்டும் இப்படிக் கச்சா எண்ணெயாகவும் நிலத்தடி வளிமமாகவும் மாறுகின்றன. பிறகு உயர் அழுத்தங்களால் புவியின் பாறை வெடிப்புக்களுக்குள் சென்று எண்ணெய் வளங்களாக மாறுகின்றன. அதனாலேயே இன்றும் பல எண்ணெய்க் கிணறுகள் கடல்களின் மீது அமைந்திருக்கின்றன.


பாறை எண்ணெயில் காணப்படும் ஆக்டேன் என்னும் ஐதரோகார்பன் எட்டு கரிம அணுக்கள் கொண்டது. கறுப்பு நிற உருண்டைகள் கரிமத்தைக் காட்டுகின்றன, வெள்ளைநிற உருண்டைகள் ஹைட்ரஜன் அணுக்களைக் காட்டுகின்றன, கோடுகள் ஒற்றைப் பிணைப்புகளைக் காட்டுகின்றன.
மண்ணடியில் இருந்து எடுக்கும் எண்ணெயில் அடங்கி இருக்கும் வேதிப்பொருட்களின் அளவுகள் உருவான சூழலுக்கு ஏற்றாற்போல இடத்துக்கு இடம் வெகுவாக மாறும்

உற்பத்தியும் உச்சமும்

உலகில் பாறை எண்ணெய் பயன்படுத்தும் நாடுகள். நிறத்தின் அடர்த்திக்கு ஏறார்போல பாறை எண்ணெயின் பயன்பாடு இருக்குமாறு வரையப்பட்டுள்ளது.

உலகில் பாறை எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள்

இற்றையாண்டுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் முன்னணியில் இருப்பது சவுதி அரேபியா தான். ஆனால் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவே எண்ணெய் உற்பத்தியில் முதலிடம் வகித்தது. இதன் அடிப்படையில் ஏற்பட்ட தொழில்கள் சிறந்து விளங்கின. இந்த வளமும் போகமும் தொடர்ந்து நிலைக்கும் என்று பலரும் நினைத்திருந்தனர். ஆனால் இந்த வளமான நிலை எப்போதும் நிலைக்காது என்று 1950 வாக்கில் ஒரு எண்ணெய் வள ஆய்வு நிபுணர் கணித்துக் கூறியிருந்தார். அவர் பெயர் மேரியான் கிங் ஹப்பர்ட் (Marion King Hubbert). பொதுவாக எண்ணெய் கண்டுபிடிப்பு, பயன்பாடு, இவற்றையெல்லாம் வைத்து ஆய்ந்து உருவகப் படுத்தி, ஒரு கணிப்பைச் சொல்லி இருந்தார். ஒரு மணி-வளைவு (bell curve) போல எண்ணெய் வளம் உச்சத்தை (ஹப்பெர்ட் உச்சம், Hubbert Peak) அடைந்து பிறகு குறைந்து விடும் என்று அவர் கணித்தபடியே எழுபதுகளில் எண்ணெய் உற்பத்தி அமெரிக்காவில் குறைந்து போனது.


மணி-வளைவைப் பின்பற்றும் எண்ணெய் உற்பத்தி, 1956இல் மேரியான் கிங் ஹப்பர்ட் முன்வைத்தது.
அமெரிக்க எண்ணெய் உற்பத்தியைப் போலவே உலக எண்ணெய் உற்பத்தியும் (உற்பத்தி என்பதே தவறான சொல்லாடல் என்று சிலர் கருதுகின்றனர் - கண்டுபிடிப்பு என்பதே சரி) அதே மணி-வளைவைத் தழுவி இருக்கிறது என்றும், தற்போது அந்த வளைவின் உச்சத்தில் இருக்கிறோம் என்றும் சில ஆய்வாளர்களும் அறிஞர்களும் கருதுகின்றனர் (The End of the Age of Oil). ஆனால் இத்தகைய கணிப்புக்கள் எல்லாம் தோராயமானது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். மொத்தத்தில் இயற்கையில் இருந்தது அல்லது இப்போது இருப்பது எவ்வளவு என்று கணக்கிட்டதும் ஒரு குத்துமதிப்பான கணக்குத் தான். இருப்பினும் எந்த இயற்கை வளத்திற்கும் ஒரு அளவு இருக்கிறது என்பதன் அடிப்படையிலும், கண்டுபிடித்து வெளியெடுக்கும் வேகத்தைவிட பயன்படுத்தும் வேகம் அதிகமாய் இருப்பதாலும், இந்த ஹப்பெர்ட் உச்சம் உலக எண்ணெய் வளத்திற்கும் உண்டு என்பது ஒரு வாதம்.

விலை

ஒரு பேரலுக்கு நூற்றிப் பதினேழு டாலர் அளவிற்கு உயர்ந்திருக்கிறது. ஒரு பேரல் என்பது 42 அமெரிக்க கேலன்கள், ஒரு கேலன் சுமார் மூணே முக்கால் லிட்டர். ஆக, ஒரு பேரல் என்பது சுமார் 160 லிட்டர்கள்.

சில ஆண்டுகளுக்குள்ளாகவே விலை இவ்வளவு தூரம் கூடியும் எண்ணெய் நிறுவனங்கள் உற்பத்தியைப் பெருக்கும் வழிகளைக் கையாளவில்லை. எண்ணெய்ப் போக்குவரத்துக்குப் பயன்படும் கப்பல்கள் புதிதாய் நிர்மாணிக்கப் படவில்லை. எண்ணெய் பிரித்தெடுக்கும் ஆலைகள் (refineries) புதிதாகக் கட்டப்படவும் இல்லை. இவை எல்லாமே இந்த எண்ணெய் வளம் குறைந்து வருகிறது என்பதற்குச் சான்றுகள் என்று தங்கள் வாதத்திற்கு வலுச் சேர்க்கிறார்கள் ஹப்பர்ட் உச்சக் கோட்பாட்டுக்காரர்கள். நிலத்தடியில் இருந்தால் தானே எண்ணெய் உற்பத்தியைக் கூட்ட முடியும். அதனால் தான் விலை உயர்வடைந்தாலும் உற்பத்தி கூடவில்லை என்கின்றனர்.

எதிர்காலம்

எண்ணெய் வளம் குறையக் குறையப் பிற மூலங்களில் இருந்து ஆற்றலைப் பெறும் முறைகள் அதிகரிக்கலாம். வருங்காலத்தில், மக்கட்தொகை அதிகம் உள்ள இந்தியா, சீனா முதலிய நாடுகளில் எண்ணெய் உபயோகம் இன்னும் அதிகரிக்கும்.

இன்னும் நுட்பியல் வளர்ச்சிகள் கூடிய எண்ணெய் கண்டுபிடிப்புக்கும் உற்பத்திக்கும் உதவலாம். மீண்டும், ஆற்றல் தேவைகளுக்கு உலகம் கரிக்கும் அணுச்சக்திக்கும் அதிக முக்கியத்துவம் தரக் கூடும். கரிவழி ஆற்றல் மாசு நிறைய உண்டு பண்ணுவது. ஆனால் கரி வளம் இன்னும் நிறைய இருக்கிறது என்று கருதுகின்றனர். இவை தவிரப் பிற புதிய மூலங்கள் மூலமும் ஆற்றாலை உருவாக்கலாம் என்று ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. கனடாவின் எண்ணெய்கலந்த மணல்வெளிகள், காற்று, கதிரொளி, கடல் பேரலைகள், ஹைட்ரொஜன் இவற்றில் இருந்தெல்லாம் ஆற்றலை உருவாக்கும் முறைகள் வளரலாம்.

நம்முடைய ஆடம்பரத்தை காட்டுகின்ற உடைகளை விட ஆளுமையை காட்டுகின்ற உடையே தனித்துவத்தை காட்டும்.வருடம் முழுவதும் ஜீன்ஸில் சுத்தினாலும் எப்போதாவது ஒருநாள் மட்டுமே கட்டுகின்ற வேட்டியின் போது பெருமையும் மேன்மையான உணர்வையும் உணர்ந்துள்ளேன்.ஆம் வேட்டி என்பது என் கம்பீரம் ! 
🌴நம்ம ஊர் உடுமலையைப் பற்றி

⚫கிட்டத்தட்ட 1960 களிலேயே நகராட்சி அந்தஸ்து பெற்றது உடுமலைப்பேட்டை.

⚫திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரே ஒரு தேர்வுநிலை அந்தஸ்து பெற்ற நகராட்சி உடுமலை மட்டுமே.
⚫தாலூக்காக்களிலேயே அதிக கிராம ஊராட்சிகளைக் கொண்ட தாலூக்கா உடுமலை மட்டுமே.

⚫கோவைக்கு அடுத்தபடியாக உடுமலை மின்பகிர்மான வட்டமே மிகப் பெரியது ஆகும்.

⚫தென்னிந்தியாவில் சைனிக் எனும் இராணுவப் பயிற்சிப் பள்ளி உடுமலையில்(அமராவதி) மட்டுமே அமைந்துள்ளது.

⚫திருப்பூர் மாவட்டத்தில் அமைந்த ஒரே ஒரு அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் உடுமலையில்(திருமூர்த்திநகர்) மட்டுமே உள்ளது.

⚫திருப்பூர் மாவட்டத்தின் வனவளம் கொண்ட ஒரே பகுதி உடுமலை மட்டுமே..

⚫அமராவதி,திருமூர்த்தி என இரு அணைக்கட்டுகளை அருகருகே பெற்றிருப்பதோடு செங்குளம்,ஒட்டுக்குளம் என நீர்வளம் கொண்டது உடுமலைப்பேட்டை.

⚫சமமட்டக்கால்வாய் எனப்படும் காண்டூர் கால்வாய் மூலமாகவும்,அமராவதி ஆற்றின் மூலமும் அதிக பாசன வசதி பெறுவது உடுமலை பகுதி மட்டுமே..

⚫தென்னைக்கு அடுத்தபடியாக பட்டுப்புழு வளர்ப்பிலும்,வெல்லம் தயாரிப்பிலும் சாதனை படைப்பது உடுமலைப் பகுதியே..

⚫கரிசலில் பருத்தி அதிகம் விளைவதும் கொண்டைக்கடலை அதிகம் விளைவதும் உடுமலைப் பகுதியே..

⚫கரும்பு ,வாழை அதிகம் விளைவதும் உடுமலைப் பகுதியில் மட்டுமே..

⚫காற்று அதிகமாக வீசுவதும்,காற்றாலைகளுக்குட் பெயர் பெற்றதும் உடுமலைபேட்டையே.

⚫திருப்பூர் மாவட்டத்தில் செழிப்பான விவசாயப்பகுதி உடுமலை மட்டுமே..

⚫திருமூர்த்தி அருவி,தூவானம் அருவி,லக்கோம் அருவி (மறையூர்)எனப் பல அருவிகளைக் கொண்டது உடுமலை

⚫நடுவீட்டில் மழை பொழியும் தொட்டிக்கட்டு வீடுகளைக்🏡 கொண்டதும் உடுமலைப் பகுதி மட்டுமே..

⚫பகுத்தறிவுக் கவிராயர் உடுமலை நாராயணகவி பிறந்ததும் உடுமலையே.

⚫நகைச்சுவை நடிகர் கவுண்டமணி பிறந்ததும் உடுமலையே.

⚫பெரும்பாலான ஹிட் படங்கள் ,பாடல்களும் எடுக்கப் பட்டதும், எடுக்கப் படுவதும் உடுமலையிலே..

⚫முன்னணி நடிகர்களை வளர்த்துவிட்டதும் உடுமலையே..

⚫அண்ணன்மார் பாட்டுபுகழ் பூளவாடி பொன்னுசாமி தோன்றியதும் உடுமலையே.

⚫திருப்பூர் மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை அதிகம் பொழிவதும் உடுமலையே..

⚫நூற்றுக்கணக்கான முதலைகளைக் கொண்ட முதலைப் பண்ணை இருப்பதும் உடுமலையே..

⚫மூம்மூர்த்திகளின் சங்கமமாகிய திருமூர்த்திக் கடவுள் கோவில்,கோடந்தூர் கட்டளை மாரியம்மன் கோவில்,புரட்டாசிக்குப் புகழ்பெற்ற ஏழுமலையான் கோவில்,தைப் பொங்கலுக்குப் புகழ்பெற்ற ஆல்கொண்டமால் கோவில்
(மாலகோவில்),கரட்டுப் பெருமாள் கோவில் கரட்டுமடம்,கொழுமம் கோட்டை மாரியம்மன்கோவில்,கொழுமம் ஈஸ்வரன் கோவில்,உடுமலை நகர பிரசன்ன விநாயகர், மாரியம்மன் கோவில்,மானுப்பட்டி மலை மாசாணியம்மன் கோவில் ,தென்சேரிமலை ஸ்ரீமந்திரகிரி ஆண்டவர் கோவில் என பல்வேறு ஆன்மிகத்தலங்களைப் பெற்றதும் உடுமலைப்பகுதியே.

செவ்வாய், 24 அக்டோபர், 2017

கார்த்திக்குமார் ....(கார்த்தி SR )

படித்தது மின்னணுவியல் ...SM  HIGH TECH SOLUTION அவர் நடத்தும் மின்னணுவியல் தொழில் துறையில் கடுமையான உழைப்பாளி ...வருங்கால வளரும் பன்முக எழுத்தாளர் ,கவிதையாளன் ...
எந்த சூழ்நிலையிலும் விவசாயத்தை மறவாத மண்ணின் மைந்தன் ..
இந்த சிறு வயதில் வரலாற்று தகவல்களை தேடி ...தேடி ...படிக்கும் ஆர்வம்....
எந்த ஒரு சிறு  செய்தியை சொன்னவுடன் ஆழந்த சிந்தனையுடன்  அதை அப்படியே கண்முன்னே நிறுத்தும் திறமை ..
.வருங்கால கட்டபொம்மன் பண்பாட்டு கழக பேச்சாளர்...



கம்பளவிருட்சத்தின் அறக்கட்டளையின் களப்பணியாளனாக 
தன் திறமைகளை வெளிகொண்டுவருபவர் ...
பொதுத்தளத்தில் நல்ல சமூக சேவையாளனாக ,
தன் பெற்றோர்களின்  செல்ல பிள்ளையாக ....
நம் சமுதாயசொந்தங்களின் முகம் அறிந்த நண்பனாக இருப்பவர் ...நண்பர்களின் வட்டத்தில் எப்போதும் கலகலப்பாக சுற்றியிருக்கும் இடம் எல்லாம் புன்னகை சிதறும் முத்துக்களாக ..
என் அருமை மாப்பிளைக்கு 
என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...
‘குழந்தையைத் திட்டவே மாட்டேன்’ என்று சொல்கிறவரா நீங்கள்? 

அப்படியெனில் நீங்கள்தான் வாசிக்க வேண்டும்.

என் கோவை நண்பரை போனவாரம் சந்தித்தேன் ...

நம் உடுமலை   பேருந்து நிலையத்திற்கு அருகாமையிலேயே உள்ள . காந்திநகரில் எனக்கு பிடித்த உணவகம். ‘அங்க வர முடியுமா?’ என்றேன்.  என் கோவை  நண்பர் இப்பொழுது ஆஸதிரேலியாவில் மனோவியல் ஆலோசகராக இருக்கிறார். வயது ஐம்பதைத் தாண்டியிருக்கும். திருமணம் செய்து கொள்ளவில்லை. தனிக்கட்டை. ‘நீங்க உடுமலை வரும்போது தகவல் சொல்லுங்க’ என்று  குறுஞ்செய்தி அனுப்பியிருந்தேன். பேருந்து நிலையத்தில் அவரின் வருகைக்காக காத்துஇருந்தேன் . இரவு ஏழு  மணிவாக்கில் சந்தித்துப் பேசினோம். கையில் கத்தையாக செய்தித்தாள்களின் கத்தரிப்புகள். வழக்கமான குசல விசாரிப்புகளுக்குப் பிறகு அந்தக் கோப்பினைக் கையில் கொடுத்தார். குழந்தைகளின் தற்கொலை பற்றிய செய்தித் துண்டுகள் அவை.

எப்பொழுதாவது இந்தியா வந்து போகிறார். ‘தற்கால இந்தியக் குழந்தைகளின் மனநிலை’ குறித்து ஓர் ஆராய்ச்சியைச் செய்து கொண்டிருக்கிறாராம். அதற்கு தோதாகக் கடந்த சில நாட்களாகச் சேகரித்த செய்திகள் அவை. நீலத் திமிங்கல விளையாட்டுத் தற்கொலைகளை அவர் பொருட்படுத்தவில்லை. ‘அது உங்களைத் தற்கொலை செய்ய வைக்கத் திட்டமிட்டு, வற்புறுத்தித் தூண்டுகிறது’ என்று சொல்லி அவற்றைத் தவிர்த்திருக்கிறார். மிகச் சாதாரணமாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஏன் தற்கொலை முடிவெடுக்கிறது என்பதுதான் முக்கியமான கேள்வியாக இருந்தது. கடந்த பதினைந்து நாட்களுக்கு முன்பான செய்தி ஒன்றைக் காட்டினார். டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வுக்காக தெருவைச் சுத்தம் செய்துவிட்டு வீடு திரும்பியிருக்கிறான். பனிரெண்டு வயதுப் பையன். ‘ஏண்டா உனக்கு ஏதாச்சும் காய்ச்சல் வந்துட்டா என்னடா பண்ணுறது?’ என்று ஏதோ சொல்லி அம்மா திட்ட அறைக்குள் தூக்குப் போட்டுக் கொண்டான்.

இப்படி பல செய்திகள் இருந்தன. மனம் பாரமாக இருந்தது. அவற்றை மூடி வைத்துவிட்டு சில வினாடிகள் அமர்ந்திருந்தேன்.

‘என்ன சொல்லுறீங்க?’ என்று கேட்டார். அமைதியாக இருந்தேன். மிக நுணுக்கமான விஷயம் இது. குழந்தைகளின் தற்கொலை என்பது அங்குமிங்குமாக கண்களில் பட்டிருக்கும். பொருட்படுத்தியதாக நினைவில்லை.

பதினைந்து முதல் இருபத்தொன்பது வயது வரையிலானவர்கள் இந்தியாவில்தான் மிக அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கிறார்களாம். தண்ணீரைக் குடித்துவிட்டு ‘இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு தடிச்ச தோல் இல்லை’ என்றார். எதைச் சொன்னாலும் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. பெரியவர்கள்தான் முக்கியக் காரணம் என்றார். வாஸ்தவமான சொல். குழந்தைகளைத் திட்டுவதில்லை என்பதை பல பெற்றோர்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்வதுண்டு. நானும் கூட அப்படித்தான். ஏதேனும் ஒரு காரணத்துக்காகத் திட்டும் போது- திட்டக் கூட வேண்டியதில்லை- கோமாளி, முட்டாள் என்று ஏதேனும் கேளிச் சொல்லைப் பயன்படுத்தினால் கூட பொலபொலவென்று கண்ணீர் வந்துவிடும் மகனுக்கு. ஆனால் ஷ்யாமின் அம்மா திட்டும் போது முகத்தை சீரியசாக வைத்துக்கொண்டு என்னை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு இருப்பான் ...ஷ்யாமின் படிப்பு விசயத்தில் ஷியாம் அம்மா திட்டும்போது ,அடிக்கும்போது ...தடுக்கவும் மாட்டேன் ...இந்த விசயத்தில் ஷியாம் அம்மாவின் பக்கம் 100 சதவிகிதம் என்  ஆதரவு இருக்கும்  ..ஷ்யாமின் முன்னேற்றப்பாதைக்கு சரியானவழி அதுதான்  ...அர்ச்சனைகள் முடிந்து இரண்டு மணிநேரம் கழித்து ..வீட்டுக்கு தேவையான பொருள்வாங்குவதற்கு ஷ்யாமின் மன ஆறுதலுக்காக , ஷியாம் அம்மா கடையில் மளிகை பொருள் வாங்க என்னிடம் சொல்லுவார்கள் அப்போது ஷ்யாமை கடைக்கு கூட்டிட்டு செல்லவா என்று ஷியாம் அம்மாவிடம் அனுமதிபெற்று ஷ்யாமை கூட்டிச்செல்லும்போது ...கேட்பார்ப்பாருங்க ஒரு கேள்வி ...ஏன்டா அப்பா ...நான் திட்டுவாங்கிறேன் ,அடிவாங்கறேன் ..கொஞ்சம்கூட மரம் மாதிரி நிக்கிற தடுக்க மாட்டிய ..அப்படி ஒரு சந்தோசம் உனக்கு என்பான் .டேய் தம்பி,நான் தடுத்த ...உண்ணும் உனக்குதான்டா அடி கொஞ்சம் சேரும் ...நான் பேசாம இருக்கிறதாலதான் ...இதோட தப்பிச்ச ..புரியாத ...சும்மா சமாளிக்கத்தப்ப ..அந்த அடி உன்னக்கு விழுந்துரும் னு ...எஸ்கேப் ஆகிற தானேப்பா ..அப்படி என்பான் ..விடு ..விடு ...இதையெல்லாம் நானே சமாளிக்கிறேன் என்பான் ...எனக்குள் நிம்மதி ...இனி வரும்காலங்களில் பிரச்சனைகளை சமாளித்திக்கொள்வான் ...இதுதான் சரியான பயிற்சி கூட ...

‘இவன் என்ன இப்படி இருக்கான்?’ என்று அவ்வப்போது யோசித்திருக்கிறேன். ஆனால் தீர்வு குறித்துச் சிந்தித்ததில்லை....பாருங்க பேசிட்டே நண்பரின் கலந்துரையாடலை மறந்துட்டேன் பாருங்க ...

கோவை மனோவியல் நிபுணர் ‘உங்க தலைமுறையில் இப்படி இருந்தீங்களா?’ என்று என்னிடம் கேள்வி கேட்டார் . இல்லை. அம்மா கடுமையாகத் திட்டுவார்,அடிப்பார் என் பள்ளி ஆசிரியர் அடிப்பார். அப்பா எப்பொழுதாவதுதான் திட்டுவார் ...அடி என்பது என் நினைவில் இல்லை ..அடித்தால் செமத்தியான வணக்காக இருக்கும். அடி வாங்குவதும் வசைச்சொற்களைக் கேட்பதும் சலித்துப் போய்விடும். எப்படி ஏய்ப்பது, அடி வாங்காமல் தப்பிப்பது எப்படி, வசவுக்கு வாய்தா வாங்குவதற்கான வழிமுறைகள் குறித்தெல்லாம்தான் மனம் கணக்குப் போடும். Too sensitive என்றெல்லாம் இருந்ததேயில்லை. அம்மாவிடம் உண்மையாக அழுததைக் காட்டிலும் அடி வாங்குவதிலிருந்து தப்பிப்பதற்காக பாவனையாக அழுததுதான் அதிகம்.

இன்றைய குழந்தைகள் அப்படியில்லை. மனிதர்களுடன் உரையாடுவதை விடவும் திரைகளுடன்தான் அதிகம் உரையாடுகிறார்கள். கணினித்திரை, அலைபேசித் திரை, தொலைக்காட்சித்திரை எதுவும் குழந்தைகளுக்கு மனிதர்களின் மனங்களைச் சொல்லித் தருவதில்லை. அவை குழந்தைகளை மேலும் மேலும் ரத்தமும் சதையுமான மனிதர்களிடமிருந்து அந்நியப்படுத்துகின்றன. சக குழந்தைகளுடன் விளையாடுவதும் சண்டையிடுவதும் வெகு அரிது. பள்ளிகளிலும் கண்டிப்புகள் இருப்பதில்லை. அம்மா அப்பாவும் செல்லம் என்ற பெயரிலும் தடித்த சொற்களைப் பயன்படுத்துவதில்லை.

நண்பர், தனது செய்திச் சேகரிப்புகளைச் சுட்டிக் காட்டி ‘இந்த மொத்தச் செய்திகளுக்கும் ஆதாரப்புள்ளின்னு இதைத்தான் சொல்வேன்’ என்றார். அவர் மிக இலாகவமாகவும் நிதானமாகவும் பேசினார். என்ன இருந்தாலும் மனோவியல் நிபுணர். அவர் பேசுவதை என்னால் மறுக்க முடியவில்லை. அவர் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. Too sensitive to everything என்பது நல்லதில்லை. கோபமும் வசவும் மனிதர்களுக்குரிய குணங்கள். அதைக் குறைந்தபட்ச அளவிலாவது குழந்தைகளிடம் காட்டுவதும், அவர்களைத் திட்டுவதும், வசவுகளுக்கு அவர்களைப் பழக்குவதும் தவறில்லை என்பது அவரது வாதம். வீட்டில் குழந்தைகளுடன் இருக்கும் போது ஒரு முறை அழைத்துப் பார்த்தால் குழந்தைகளின் கவனம் நம் பக்கம் திரும்பவில்லையெனில் ‘டேய்’ என்று சற்றே அதட்டுவதில் தவறொன்றுமில்லை. நமக்கே அது கடினமாகத்தான் இருக்கும். குழந்தைகளுக்கும் அந்த அதட்டலை ஏற்றுக் கொள்வது கடினம்தான். முதல் ஒன்றிரண்டு முறை அழுவார்கள். சுணங்குவார்கள். அது பிரச்சினையில்லை. இரண்டாம் மற்றும் மூன்றாம் முறை அவர்களுக்குப் பழகிவிடும். நம்முடைய கோபத்தை நாம் மறைத்துக் கொண்டு குழந்தைகளிடம் எப்பொழுதுமே காட்டாமல் இருந்துவிட்டு நம்மையும் மீறி ஏதேனும் தருணத்தில் கொட்டிவிடும் போது அந்தப் பிஞ்சுகளால் அதனைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. விபரீத முடிவுகளை எடுக்கிறார்கள்.

பதின்பருவத்துக் குழந்தைகள்தான்  (Teen age) தற்கொலை என்ற உச்சகட்ட முடிவுகளை அதிகம் எடுக்கிறார்கள். அவர்களது வயது அப்படி. தம்மைப் பெரியவர்களாக நினைத்துக் கொள்கிறார்கள். சென்சிடிவ்வாக வளர்ந்து நிற்கும் அவர்களால் அம்மாவும் அப்பாவும் திட்டுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவசரப்பட்டுவிடுகிறார்கள். ஆரம்பத்திலிருந்தே ‘அம்மா திட்டுவாங்க’ ‘அப்பா திட்டுவாங்க’ என்ற மனநிலையை உருவாக்காமல் விட்டுவிடுவது பெற்றோரின் முக்கியமான தவறாக இருக்கிறது. அப்படிக் குழந்தைகளை உருவாக்குவதும் கூட ஒரு வகையிலான அவர்களின் மன அழுத்த மேலாண்மைதான். 

‘யோசிச்சுப் பாருங்க’ என்றார். 

அவர் சுட்டிக்காட்டியது மிக முக்கியமான விஷயமாகத் தெரிந்தது. இப்படியொரு கோணத்தில் யோசித்ததில்லை. உணவை முடித்துவிட்டு பேருந்தில் ஏறி அமர்ந்த பிறகும் இதுதான் மனதுக்குள் உலாத்திக் கொண்டிருந்தது. 

ஷ்யாமுக்கு என்  செல்லத்தைவிட ...ஷியாம் அம்மாவின் கண்டிப்பு கலந்த அன்பு ...ஒரு நல்ல மனிதனாக ...இந்த சிறுவயதில் ..எந்த சூழ்நிலையிலும் சமாளிக்கும் திறன் ,இக்கட்டான சூழ்நிலைகளில் யோசிக்கும் தன்மை ,அவன் மனதில் தோல்வி ஏற்படும் போது ஒரு திடநம்பிக்கையை உருவாக்கமுடியும் ..என்பது என் எண்ணம் சரிதானே... 

நீங்களும் யோசித்துப் பாருங்கள்.

திங்கள், 23 அக்டோபர், 2017

கோவையிலிருந்து உடுமலைக்கு பேருந்தில்  திரும்பிக் கொண்டிருக்கிறேன்.
பின்வரிசையில் ஏதோ ஒரு இருக்கையிலிருந்து ஒரு குழந்தை தனக்குத் தெரிந்த ரைம்ஸ் மற்றும் வாய்ப்பாடுகளை சொல்லிக் கொண்டே வருகிறாள்.
“பேசாமா தூங்குடீ” என அதட்டும் அம்மாவிடம்,
“ப்ளீஸ்மா ஒரே ஒருவாட்டி கேளும்மா” என்று கெஞ்சுவதும் மீண்டும் தனது ஒப்பித்தலை தொடர்வதுமாய் வருகிறாள்.
பேருந்து முழுக்க அவள் மழலையால் கசிகிறது.
“சீ யாருமே கேட்கமாட்டேங்கறாங்க. பேட் பீபிள்” என்று சொல்லிவிட்டு மீண்டும் தொடரும் அவளுக்குத் தெரியாது,
நான் அவளைக் கூர்ந்து கேட்டுக் கொண்டிருப்பது.
*****************************************************************
எத்தனை உண்மை .. இம்மழலைக் கூறுவது .. எத்தனை பெற்றோர் செவி சாய்க்கிறோம்...குழந்தைகளுடன் பயணத்தில் வரும்போது அவர்கள் கேட்கும் மழலை மொழிகள் ..ஆனந்தம் ...
பல.... (ஆறு வயதிலிருந்து துவங்கி பள்ளி இறுதி வகுப்பை தாண்டிய சிறுவரும்/சிறுமியரும்) பள்ளி முடிந்ததும் ஒன்று எங்கள் வீட்டிற்கு வந்து விடுவார்கள்... சதுரங்கம் பயில .. அல்லது சில நாட்களில் நான் அவர்கள் வீட்டை அடைவேன் ... அந்நேரம் நான் தான் அவர்களை அலுவுலகம்  முடிந்து சந்திக்கும் முதல் ஆளாய் இருப்பேன்... எத்தனையோ கதைகளை கேட்டுள்ளேன்.. அவர்களின் கதை கேட்டு முடித்தபின் தான் மற்ற என் வேலைகளை துவங்குவேன் ... அதில் ஓர் ஆத்ம பந்தமும் .. திருப்தியும் இருந்தது.. என் செல்ல ஷ்யாமுடன் பஸ் பயணத்தில் ,என் காரில் அழைத்துசெல்லும்போதோ ,டூ வீலரில் அழைத்துசெல்லும்போது ..அவரின் சொல்லும் கதைகள் ,வகுப்பில் நடந்த உரையாடல்கள் ஆர்வமுடன் சொல்லும்போது கவனமாக கேட்டு ..தக்க பதில்கள் அளித்துக்கொண்டு அவரின் திறனை அறிந்துகொண்டுள்ளேன் ...அதனால் தானோ என்னவோ .. அவர்களின் மழலைகள் கூறும் கதையைக் கூட என்னால் கேட்கும் பாக்கியம் கிடைத்ததோ? அவர்களிடமிருந்து ஒரு தாய்/தந்தை ஒரு மகனிடம் ஒரு மகளிடம் வாழக்கூடிய இந்த இனிய அனுபவத்தை நான் அனுபவித்ததைக் கணக்கில் எடுத்தால் பல பிறவிகள் ஒரே ஜன்மத்திலே வாழ்ந்ததற்கு ஈடாகும் ..
பள்ளிக்கு கொண்டு சென்று விடுகையிலும் திரும்பக் கூட்டி வருகையிலும், காலையிலும் மாலையிலும் உணவு ஊட்டுகையிலும், அன்றைய பாடத்தைப் பற்றி கேள்வி கேட்டபடியே அதைச் செய்யும் பெற்றோரைக் காண்கையில் .. சிறிதே பழக்கமுடையவராய் இருப்பின் ... பலமுறை நான் அவர்களைக் கடிந்துள்ளேன்... ஆனால் அவர்கள் திருந்தவில்லை ... இன்னமும் ..இனியாவது எதிர்கால குழந்தைகளின் நலனுக்காக சில மணி நேரங்களை செலவிடுவோம் .....

ஞாயிறு, 22 அக்டோபர், 2017

Karthic SR கம்பள விருட்சக் குழுமம்:
கம்பள விருட்சம் அறக்கட்டளையின் அக்டோபர் மாத செயற்குழு கூட்டம் இன்று உடுமலையில் இனிதாக நிறைவுற்றது
கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்வதுடன் அனைத்து உறுப்பினர்களும் அறிந்துகொள்ளும் பொருட்டு இன்றைய கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் பதிவேற்றம் செய்கிறோம்

தீர்மானம்1:-

கடந்த மாத தீர்மாதத்தின் படி
அறக்கட்டளை பெயரில் பிரத்யேக வங்கி கணக்கு எண் தொடங்கப்பட்டது
இனிவரும் காலங்களில் பரிவர்த்தனைகள் அனைத்தும் அறக்கட்டளையின் பெயரில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது
வங்கி கணக்கு குறித்த விவரங்கள் பின்வருமாறு:-

Bank:- The Karur Vysya bank

Name:- Kambala virutcham trust

Accno:- 1203155000210442

Branch :- Udumalipettai

Branch code:- KVBL0001203


தீர்மானம்2:-

நமது பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்கும் கோட்டமங்கலம் வல்லக்கொண்ட நாத சுவாமி கோவில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாகவும் தளி மன்னர் எத்திலப்பநாயக்கர் நினைவுமண்டபம் தொடர்பாகவும் முதலமைச்சர் தனிபிரிவு வரை தகவல் கொண்டுசென்று தக்க நடவடிக்க எடுக்க உதவிபுரிந்த
கௌரவத்தலைவர் திரு. ச. முருகராஜ் B.A.B.L அவர்களுக்கும்
கோட்டமங்கலம் கோவில் பூசாரி திரு.  பொம்முசாமி அண்ணண் அவர்களுக்கும் கம்பளவிருட்சம் அறக்கட்டளை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது

தீர்மானம்:- 3

அறக்கட்டளை உறுப்பினரான நிலக்கோட்டை பகுதியைச்சார்ந்த திரு. பாலகிருஷ்ணண் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும்
அறக்கட்டளையின் வெப்டொமைன் ( www.kambalavirucham.in)
வாங்கிகொடுத்ததுடன் பொருளுதவியும் செய்தமைக்கு நன்றிகளும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது

தீர்மானம்:- 4

கடந்த மாதம் கல்விச்செலவுக்காக நிதியுதவி அளிக்கோரிய அறக்கட்டளை உறுப்பினர் செல்வி நிவேதா அவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து அவருக்கு நிதியுதவி ( வருடத்திற்கு இரு நபர்கள் என்ற வீதம்) அளிக்க தீர்மானிக்கப்பட்டது

தீர்மானம்5:-

அறக்கட்டளை உறுப்பினர்களின் தொழிற்வாய்ப்பை ஊக்குவிக்கும் பொருட்டு தையல் பயிற்ச்சி, மணப்பென் அலங்காரம், சமையல் கலை ஆகிய துறையில் பயிற்ச்சி மற்றும் சுயதொழில் தொடங்க நிதியுதவி அளிக்க தீர்மானிக்கப்பட்டது

தீர்மானம் 6:-

புலனம் குழுவிலிருந்து ஒருநாள் நீக்கிவைக்கப்பட்டதற்காக செயற்குழு உறுப்பினர் திரு.  ராஜேந்திரன் அவர்கள் அளித்த விடுவிடுப்பு கடிதம் அறக்கட்டளை நிர்வாககுழுவின் முடிவின்படி  ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இது தொடர்பான மேலும் விளக்கங்கள் தேவைப்படின் அடுத்த செயற்குழு கூட்டத்தில் நேரில் கலந்துகொண்டு பெற்றுக்கொள்ளலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது

தீர்மானம் 7:-

அறக்கட்டளையின் பெயரில் வங்கயிலுள்ள நிதியை பெருக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அடுத்தடுத்த செயற்கூட்டங்களில் படிப்படியாக செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டது

தீர்மானம் 8:-

வரலாற்று மற்றும் பாரம்பரியம் தொடர்பான படைப்புகள் மற்றும் புதிய படைப்பாளிகளாக உருவாகும் அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு அவர்கள் விரும்பும் பட்சத்தில் அறக்கட்டளை பெயரில் படைப்புகள் வெளியிடவும் அதற்கான பொருட்செலவில் பங்குகொண்டு வெளியிடவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது

மேலும் விருட்சத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டும் அடுத்த தலைமுறையை வளமாக்கும்பொருட்டும்
இதுவரை ஏதாவது மனக்கசப்புகள் இருப்பின் அவற்றை நீக்கி நாளைய சரித்திரத்தை நம்முடையதாக்கும் முயற்ச்சியில் ஆர்வம்காட்டி செயல்பட ஒட்டுமொத்த உறுப்பினர்கள் சார்பாகவும் கேட்டுக்கொள்ளப்படுவதுடன்
மாதாந்திர சந்தா தொகையை தவறாமல் செலுத்துமாரும் கேட்டுக்கொள்ளப்பட்டது

**குறிப்பு:-
அறக்கட்டளையின் சாதனைகள் மற்றும் இலக்குககள் குறித்த தகவல்கள் அடுத்தடுத்த பதிவுகளில் தொடரும் ...
நான் எடுத்த புகைப்படங்களில் மனநிறைவான புகைப்படங்களில் இதுவும் ஒன்று ..என் மருமகளின் ரித்திகா விஜயகுமார் ..இன்று பிறந்தநாள் கொண்டாடிய என் செல்ல மருமகளுக்கு வாழ்த்துக்கள் ..வாழ்க வளமுடன் ..

சனி, 21 அக்டோபர், 2017

அருமையான பதிவு ...வனிதா அவர்களுக்கு ...நன்றி ...நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ...அதனால தான் ...ஆன்லைன் ஆடு வெட்டியவுடன் ,கோழி உரித்தவுடன் ,மீன் .நண்டு சுத்தம் செய்து  ,அப்படியே வீட்டுக்கு வாங்கி வந்து ...நீங்கள் வீட்டில் சுத்தமான எண்ணெய் ,மிளகாய்பொடி ,வாங்கி வைத்துஇருக்கும் ..பொருட்களை கொண்டு சமைத்து ..உண்டு மகிழலாம் ..அதற்கத்தான் ...HURRY 4CURRY ...ஆரம்பித்தது ...நன்றி ..நல்ல விழுப்புணர்வு பதிவு ..
அடடா... டா ...நாளைக்கு ஞாயிற்று கிழமை ...நேரத்தில் எழவேண்டுமா ...கொஞ்சம் நேரம் தூங்கி எழலாம் என்றால் ...முடியாமா போகுதே ...நாளைக்கு வீட்டுக்கு ..மட்டன் ,வேணுமா ,சிக்கன் வேணுமா ..மீன் வேணுமா ..நண்டு வாங்கணுமா ..தெரியல ...சீக்கரம் கடைக்கு போயி அதுவும் கூட்டம் இல்லாம இருக்கனும் ...வாரத்தில் ஒரு நாள் தான் கொஞ்சம் லேட்ட எந்திரிக்கலாம்னு பார்த்த முடியாது போல இருக்கே ..இது எல்லாம் வாங்கறதுக்கு என்ன பண்ணலாம் ...அதுவும் எங்க வீட்டுக்காரம்மா (HOMEMINISTER )..எழுவதுக்குள் ரெடியா இருக்கணுமே ...இப்ப எல்லாம் எது எதுக்கோ ...ஆன்லைன் வருது இதுக்கு யாரும் சேவை கோய்ம்புத்தூருல யாருமே ..இல்லையா ....என் நண்பர்கள் வட்டத்தில் பேசிக்கொண்டது ...ஞாபகம் வர ...HURRY 4 CURRY -9786700721..டயல் பண்ணினேன் ..வீட்டுக்கு வந்துவிட்டது ...அப்பாடா தப்பிச்சேன் ...ஞாயிறு ஓய்வுற்கு..நன்றி ... HURRY 4 CURRY...நம்ம ஊரு கோவைங்க ...எதிலும் முன்னணி ...

புதன், 18 அக்டோபர், 2017

Sivakumar Kumar
மலரும் நினைவுகள் ....
நம்மாழ்வார் வானகம் செல்லும் வழியில் ...அரண்மனை இருக்கிறதே ...நமது சொந்தம் என்று தெரியாது ...பழமையான ,பாரம்பரியம் மிக்க வீடுகள் ,அரண்மனைகள் ..பார்க்கும் ஆர்வம் எல்லாருக்கும் வருவது இயல்புதானே ..அந்தமுறையில் இந்தப்புகைப்படங்களை எடுத்துக்கொண்டோம் ...
 
கடவூர் பாரம்பரியமிக்க வீடு மற்றும் முத்தாலம்மன் கோவில் ....எனது நண்பர் விவசாயி ,மற்றும் எழுத்தாளர் ...சமூக ஆர்வலர் ..சுபாஷ் கிருஷ்ணசாமி அவர்களுடன் ..

தீபாவளி ....2017

தீபாவளி விடுமுறை தான் ...பயனுள்ள வழியில் நேற்று மாலை என்
நண்பர்கள் ...தந்தி தொலைக்காட்சி ...ரகுமான்  தம்பியுடன் ,நியூஸ் 18 பரணிஷங்கர் அண்ணனுடன் ...நம் சமுதாயத்திற்கு எதுலப்ப மன்னரின் வரலாற்றை வெளிக்கொணர காரணமாக இருந்த மறைந்த நம் புலவர் பழனிசாமி மாமாவின் வீட்டுக்கு சென்று ...பழனிசாமி மாமாவின் குடும்பத்தினரை சந்தித்து விட்டு ..மாமாவின் பேரனுக்கு ..தீபாவளி பலகாரமும் ,பட்டாசு பொருள்களும் கொடுத்துவிட்டு வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு வந்தோம் ...அவர் மறைந்தாலும் அவரின் புகழ் மறையவில்லை ..விட்டு சென்றது .வெறும் அன்பு ,நல்ல மனிதர்களை மட்டும் தான் ...அவரின் ஆசீர்வாதங்ககளால் இன்னும் அடையவேண்டிய பாதை இன்னும் உள்ளது ...எனக்கு ஞாயிறு வந்தாலே அவரின் நினைவுகள் தான் தூக்கம் வராமல் செய்கிறது ...இன்று மாலை 107 வயதான தாயம்மாவின் நேர்காணலுக்காக ..ஜில்லெபி நாயக்கன் பாளையம் ..சென்று வந்தது எங்களுக்கு .மகிழ்ச்சி ..வருடம் வருடம் ..திருமூர்த்தி மலையில் இருக்கும் கஞ்சிமலையான் கடவுளுக்கு ..தீப திருநாள் அன்று ...நம் சமுதாய மக்கள் ..உடுக்கம்பாளையம் ஊரு நாயக்கர் ,JN பாளையம் சேர்வை காரர் தீபம் ஏற்றுவதை கூறியது மிக்க மகிழ்ச்சி ...நம் கம்பள சமுதாய மக்களுக்கு எத்தனை பேருக்கு இந்த தகவல் தெரியும் ..நம் திருமூர்த்தி மலையில் கோவில் களில் நமக்கு நம் கம்பள சமுதாய மக்களுக்கு முன்னுரிமை இன்றும் இருக்கிறது ..இந்த வருட தீபாவளி சிறப்பானமுறையில் முடிந்தது மனதிற்கு கொஞ்சம் ஆறுதல் ...

எனக்கு நல்ல நண்பர்களை அறிமுகம் செய்த நம்ம மாப்பிளை செந்தில்ராம் அவர்களுக்கு நன்றிகள் ...
 Karthic SR கம்பள விருட்சக் குழுமம்::

-கற்காலம் தொட்டு இன்றைய காஸ்மிக் காலம் வரை படையெடுத்தலும் அவற்றை எதிர்த்து சமர்புரிதலும் உலகின் ஏதாவது ஒரிடத்தில் நடைபெற்றுக்கொண்டே வருகிறது
பண்டைய தமிழர் போர்க்கலையும் ஆய கலைகளுல் ஒன்றாக வைத்து அவற்றிற்கான இலக்கணம் வகுத்தனர்

போர்க்கலை

மக்களைக் காத்தல் மன்னர்க்குக் கடன். உள்நாட்டுக் கலவரம் முதல் வெளிநாட்டு படையெடுப்பு வரை தம் குடிமக்கள் எதிலும் பாதிப்படையா வண்ணம் பாதுகாக்கும் பொறுப்பை நாடாள்வார் ஏற்க வேண்டும். மண், பெண், பொன் என எக்காரணத்தாலும் போர் எழலாம். அதனைத் தடுக்கவும் தொடுக்கவும் அரசுக்குப் படைபலம் வேண்டும்.

போரினால் உயிர், உடைமை இழப்பு மிகும்; அழிவும் மிகும். தமிழ்ச்சான்றோர் இவற்றை எல்லாம் எண்ணி வருந்தி, போர் இன்றியமையாதவிடத்தும், அது அறத்தின் அடிப்படையிலேயே இருத்தல் வேண்டும் எனச் சில நெறிமுறைகளை வகுத்தனர்.பகை நாட்டின் மீது படையெடுக்கும் முன், அந்நாட்டு அறவோரையும் தன்னாட்டு அறவோரையும் அல்லலின்றி பாதுகாப்பது அரசனின் முதற்கடமை என முறை செய்தனர். அத்தோடு பசு, பசுவின் இயல்புடைய அந்தணர், மகளிர், நோயுற்றோர், சிறார்கள், தம்முன்னோர்க்கு ஆற்ற வேண்டிய கடமைகளைச் செய்ய வல்ல புதல்வரைப் பெற்றிராதோர் ஆகிய அனைவரையும் பாதுகாப்பு நாடி வேற்றிடத்துக்கு செல்வித்தல் வேண்டும்.

இதனை முரசறைந்து தெரிவித்தல் வேண்டும். போர் தொடங்கும் முன் தன் படைவீரர்களை ஏவி எதிரி நாட்டுப் பசுக்களைக் கவர்ந்து வர வேண்டும். அப்பொழுது தம் பசுக்களை மீட்க அவற்றுக்கு உரியவர் வருவர். பசுக்களைக் கவர்தல் “கரந்தை” என்றும் அப்பசுக்களை மீட்டல் “வெட்சி” என்றும் சொல்லப்படும். போரைத் தொடங்கிய மன்னன் பகைவன் நாட்டை எதிர்நின்று தாக்குதலை “வஞ்சி” என்பர். பகைவன் நாடு புறமதிலை முற்றுகை இடலும் முற்றுகையிடப்பட்ட தன் மதிலைக் காத்தலும் “உழிஞை” எனப்படும். இரு மன்னரும் களமிறங்கிக் கடும்போர் புரிதலைக் “தும்பை” என்பர். இதில் வெற்றி பெறுதல் “வாகை” எனப்படும். இவை அனைத்டும் பூக்களின் பெயர்களே! மன்னரும் போர் மறவரும் அப்பூக்களை அணிந்தே போரிடுவர். தேர்ப்படை, யானைப்படை, குதிரைபடை, காலாள்படை என நால்வகைப் படைகளையும் போரில் ஈடுபடுத்துவர்.

போரிடும் வீரர்கள் கண்ணிமைத்தல், புறமுதுகிடுதல் கூடாது. அப்படிச் செய்தவர்களுடன் போரிடவோ போர்க் கருவிகளை எய்தலோ கூடாது. தளர்ந்து விழுந்தவனை, பின் வாங்கியவனை, படைக்கலம் இழந்தோனை, ஒத்த கருவி எடாதோனை கொல்லலாகாது. போர் வீரன் வீரனோடும், தலைவன் தலைவனோடும் போரிடுதல் வெண்டும். பொழுது சாய்ந்த பின் போர் தொடரலாகாது; தத்தம் பாசறைக்குச் சென்றுவிடல் வேண்டும்.

போரில் வென்ற மன்னன், வெற்றிக்கொடி எடுத்து விழாக் கொண்டாடுதல் மரபு. அவ்விழாவில் விழுப்புண்பட்டு மடிந்த வீரர்களுக்கும் விழுப்புண்ணுடன் வெற்றிகொண்டு தன்னுடன் மீண்ட வீர்ர்களுக்கும் முறைப்படி சிறப்புச் செய்து பொருள் குவியல்களைக் கொடுத்தலும் பட்டமளித்துப் பாராட்டலும் மரபு. போர்க்களத்தில் விழுப்புண்பட்டு மடிந்த மறவர்களுக்கு, சிறந்த கல் எடுத்து, அதை நன்னீராட்டி, அவ்வீரனின் படிமம் சமைத்து, அதனடியில் அம்மறவனின் புகழையும் பெயரையும் வெற்றியையும் பொறித்து விழாக் கொண்டாடுதலைக் கல்நாட்டல் என்பர். அக்கல்லைத் தெய்வமாக்கிப் படையலிடுதலும் வழக்கமாயின.

தமிழனின் போர்க்கலை அறத்தை அடிப்படையாக்க் கொண்ட ஓர் அருங்கலை

 [19:07, 10/18/2017] Karthi sr: Karthic SR கம்பள விருட்சக் குழுமம்:

இசைக்கலை

பண்டையத் தமிழர் தம் மொழியை இயல், இசை,நாடகம் என மூவகைப்படுத்தி வளர்த்தனர். எனவே, தமிழ், முத்தமிழ் ஆயிற்று. முத்தமிழுள் இசைத்தமிழ் ஒன்று. இசைத்தமிழ் ஒரு கலையாய்-நுண்கலையாய் இசைக்கலையாய் வளர்ந்தது.

இசைக் கலை ஒலியின் அடிப்படையில் அமையும் கலை; செவி வழி துய்க்கும் கலை. குழல் இசை, பாடல் இசை போன்றவை இனியவை என்றும், பூனை கத்தல், காக்கை கரைதல் போன்றவை சாதாரணமானவை என்றும், புலியின் உறுமல், இடியின் ஓசை போன்றவை கடுமையானவை எனவும் ஒலியை மூவகைப்படுத்துவர். இனிய ஒலிகள் தனித்து இனிப்பவை;இணைந்து இனிப்பவை என இருவகைப்படும். தனித்து ஒருவர் பாடுதல், குழல் மட்டும் இசைத்தல் போன்றவை தனித்து இனிப்பவை. குரல், குழல், யாழ், முழவு, தாளம் ஆகியவை கூட்டாய்ச் சேர்ந்து இசைத்தல் இணைந்து இனிப்பானவை.

இனிய ஒலி செவி வழி புகுந்து, இதய நாடிகளைத் தழுவி உயிரினங்களை இசையவும் பொருந்தவும் வைக்கின்ற பொழுது, அது இசை எனும் பெயரைப் பெறுகின்றது. இசை எனும் சொல் இயைவிப்பது-பொருந்தச் செய்வது, தன்வயப்படுத்துவது எனப் பொருள்படும். இசை கல் மனத்தையும் கரைந்துருகச் செய்யும் ஆற்றல் வாய்ந்தது. கற்றோரும் மற்றோரும் இசை வயப்பட்டு நிற்பர். அன்பைப் பெருக்கி ஆருயிரை வளர்ப்பது இசை. இசை நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. பயிர் வளர்ந்து நிறைந்த பயன் விளையவும், பசு மிகுந்த பால் சுரக்கவும் தூண்டும் அது. இசை உயிரினங்கள் அனைத்தையும் தன்பால் ஈர்த்து உய்விக்கும் தன்மையைப் பெற்றது.

பண்டைய தமிழர் வளர்த்த நுண்கலைகளுள் இசைக்கலை முதன்மையானது; தலை சிறந்தது. முற்காலத்தில் இசைத்தமிழ் நூல்கள் பல இருந்தன. பரிபாடல், முதுநாரை, முதுகுருகு போன்றவை குறிப்பிடத்தக்கவனவையாகும். முத்தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரம் பல்வகைப் பண்கள், இசைக்கருவிகள், இசைக்கலைஞர்கள் தொடர்பான செய்திகளைச் சொல்கின்றது.

தொல்காப்பியர் நிலத்தை நான்கு வகையாகப் பிரித்து அவற்றுக்குரிய கருபொருளைக் கூறும் பொழுது, யாழும் யாழின் பகுதியும் பற்றிக் குறித்துள்ளார். சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார், பதிக உரையில் ஐந்து நிலங்களுக்கும் அவற்றுக்குரிய ஐந்து பெரும்பண்களையும் சுட்டி விரித்துள்ளார். இவை தமிழிசையின் தொன்மையைத் தெள்ளத் தெளிவாய் விளக்குகின்றன.இளங்கோவடிகள் முல்லை யாழ், குறிஞ்சி யாழ், மருத யாழ், எனும் பெரும்பண்களுக்குரிய ஏழ் நரம்புகளைப் பல்வேறு காதைகளில் குறிப்பிட்டு விளக்கியுள்ளார். தமிழர் வளர்த்த மற்றெந்த கலைகளைக் காட்டிலும் இசைக்கலையே மரபு மாறாது தொடர்ந்தும் வழிவழியாக வளர்ந்து வரும் நுண்னிய அருங்கலையாகும்
[19:10, 10/18/2017] Karthi sr: Karthic SR கம்பள விருட்சக் குழுமம்:

சிற்பக்கலை..

மனிதன் படைத்த கலைகளுள் மிகச் சிறந்த்து சிற்பக்கலை என்பர். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இக்கலை வளர்ந்து வருகின்றது. மனித நாகரீகத்தையும் அதன் வளர்ச்சியையும் எடுத்துக்காட்டும் சான்றுகளில் சிற்பக்கலையைவிட சிறந்தது வேறொன்றில்லை. நாடுகளின் தொன்மை வரலாற்றை அம்மக்கள் வளர்த்த சிற்பக்கலை வழியாகவே பெரிதும் அறிய முடிகின்றது.

கண்ணால் கண்ட உருவங்களையோ கற்பனை உருவங்களையோ வடிவமைத்துச் செய்வது சிற்பம் எனப்படும். அதனை வடிபவன் சிற்பி எனப்படுவான். கல், உலோகம், செங்கல், மரம், சுதை, தந்தம், வண்ணம், கண்டசருக்கரை, மெழுகு என்பன சிற்பம் வடிக்க ஏற்றவை என பிங்கல நிகண்டு கூறும். கல்லில், கருங்கல், மாக்கல், பளிங்குக்கல், சலவைக்கல் என்பனவும் உலோகங்களில் பொன், வெள்ளி, வெண்கலம், செம்பும் ஏற்றனவாகக் கருதப்பட்டன.

வடிவம் முழுவதையும்-முன்புறம் பின்புறம் இரண்டையும்-காட்டும் சிற்பங்களை “முழுவடிவச் சிற்பங்கள்” என்றும் வடிவத்தின் ஒருபுறம் மட்டும் காட்டும் சிற்பங்களைச் “புடைப்புச் சிற்பங்கள்” என்றும் வகைப்படுத்துவர். கோயில்களில் காணப்படும் முதன்மைத் தெய்வத் திருமேனிகளும் உற்சவச் திருமேனிகளும் முழுவடிவச் சிற்பங்கள் ஆகும்.

தமிழ்நாட்டுச் சிற்பங்களின் சிறப்பியல்புகளில் ஒன்று ஆடற்கலை இலக்கணங்கள் அவற்றில் அளவாய் அமைந்துள்ள நிலையாகும். இவ்விரு கலைகளுமே கோயில்களால் வளர்க்கப்பட்டமையால், இவை எளிதாக கைவரப்பெற்றன. சிற்ப வடிவங்கள் நின்றாலும் அமர்ந்தாலும் கிடந்தாலும் வேறெந்த அமைதியில் தோன்றினாலும், அவை பெரும்பாலும் ஆடற்கலை இலக்கணத்தையொட்டி அமைந்திருப்பதைக் காணலாம். சிற்பிகள் ஆடற்கலை இலக்கணத்தை நன்கறிந்து தம் கலைஉணர்வு, கற்பனைத் திறன் கலந்து அமைப்பதால், தெய்வத் திருமேனிகள் நிறுவப்படும் இடத்துக்குத் தக்கவாறு கலையழகை மட்டுமன்றி அவ்வடிவ அமைப்புகளின் உட்கருத்தையும் உணர்த்தும் வகையில் உள்ளன.

தமிழகத்தில் பல்லவர்களின் மாமல்லக் குகைக் கோயில் சிற்பங்கள் வரலாற்றுப் புகழ் பெற்றவை. பாண்டியர் கால சிற்பங்களும் தமிழகச் சிற்பங்களின் கலைத்திறனுக்குச் சான்றாய் விளங்குகின்றன. தமிழகத்தில் சோழர்காலக் குடந்தை நாகேசுவரர் கோயில், தஞ்சைப் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழீச்சுரம், தராசுரத்து ஐராவதேசுவரர் திருக்கோயில் ஆகியவற்றிலுள்ள சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவை. இவை சிற்பக் கலை வளர்ச்சியையும், அக்கலையில் தமிழகச் சிற்பிகள் பெற்றிருந்த பெருந்திறனையும் உலகுக்கு உணர்த்துவன.

இரண்டாம் இராசராசனின் கலைப்படைப்பாய் எழுந்த ஐராவதேசுவரர் திருக்கோயில், சிற்பக்கலைச் சாதனைகளின் உச்சம் என்பர். அழகிலும் நுணுக்கத்திலும் ஆற்றலிலும் மிக உன்னத நிலையிலிருந்தே இச்சிற்பக் கலையின் எச்சமாக கம்போடியாவின் ‘அங்கோர் வாட்’ கோயில்களிலும் நம் நாட்டு ‘லெம்பா பந்தாய்’ பள்ளத்தாக்கிலும் சிதைவுற்றிருக்கும் சிற்பங்களே சீரிய எடுத்துக்காட்டுகள்.
[19:13, 10/18/2017] Karthi sr: Karthic SR கம்பள விருட்சக் குழுமம்:

ஆடல் கலை

அறிவு வளர்ச்சியும் நாகரீகமும் முதிர்ச்சிப் பெறுவதற்குப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதன் ஆடலிலும் பாடலிலும் ஈடுபட்டு வந்தான். நாகரிகம் வளர்ச்சி அடைய அடைய இசை, ஆடல் முதலியவை முன்னேற்றம் கண்டு கலை வடிவங்களாக முகிழ்ந்தன. இந்தியாவில் மிகத் தொன்மையான கூத்து நூல் எனக் கருதப்பெறும் நாட்டிய சாத்திரத்தை இயற்றிய பரத முனிவர் (கி.பி 2-ஆம் நூற்றாண்டு) நாட்டியம் எனும் சொல்லுக்குப் பாடல், ஆடல், அபிநயம், உரையாடல், ஒப்பனை, காட்சித் திரைகள் ஆகியவை ஒருங்கமைந்த நாடகம் என்றே பொருள் கூறினார். அவருடைய காலத்திலிருந்து ஆடல், தாண்டவம் (ஆண்களுக்குரியகூத்து) இலாசியம்(பெண்களுக்குரியகூத்து) நிருத்தம்(சுத்த நடனம்) என வகுக்கப்பட்டது. பின்னர் நிருத்தமும் அபிநயமும் கலந்த நிருத்தியம் எனும் வகையும் தோன்றியது.

சிவபெருமான் ஆடிய ஆடல் தாண்டவம் என்றும், பார்வதி ஆடிய ஆடல் இலாசியம் என்றும் சொல்லப்பெறுகிறது. பிற்கால ஆடல் இலக்கண நூல்களில் எண்ணற்ற ஆடல் வகைகள் குறிக்கப்பெறுகின்றன. பாரத முனிவர் தம் நூலில், தென்னாட்டில் தமிழகத்தில் வாழ்ந்த மக்கள் இசையிலும் நடனத்திலும் சிறபுற்று விளங்கினர் எனப் புகழ்ந்துரைக்கின்றார்.

தமிழ் நாட்டில் வழங்கி வந்த ஆடல் வகைகளை விவரிக்கும் ஐந்து நூல்கள், சிகண்டியின் “இசை நுணுக்கம்” சியாமளேந்திர்ரின் “இந்திரகாளியம்” அறிவனாரின் “பஞ்ச மரபு” ஆதிவாயிலாரின் “பரத சேனாபதீயம்” மதிவாணரின் “நாடகத் தமிழ் நூல்” என சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார். தென்னாட்டில் வழங்கி வந்த இசையும் ஆடலையும் விவரிக்கும் கருவூலம் போன்ற நூல் சிலப்பதிகாரம் ஆகும். இதன் உரைகளையும் கலித்தொகை முதலாய சங்க இலக்கியங்களையும் ஆராய்ந்தால், அக்காலத்தில் ஆடல் கலை, கூத்து, குனிப்பு, என்றும் வழங்கி வந்தமையையும், அகக்கூத்து புறக்கூத்து என்ற பிரிவுகளைக் கொண்டிருந்தமையையும் அறியலாம். இவற்றைத் தவிர்த்து, கடவுலர் ஆடிய அல்லியம், கொடுகொட்டி, குடை, குடம், பேடி, கடையம், பாண்டரங்கம், மல், துடி, மரக்கால், பாவை எனப் பதினொரு வகைக் கூத்துகளையும், மக்கள் வழக்கிலிருந்த குரவை, கலிநடம், நோக்கு ஆகிய கூத்துகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

தென்னிந்திய நடனவகைகளுள் மிகத் தொன்மை வாய்ந்ததும் உலகப் புகழ் பெற்றதுமான ஆடல் வகை பரத நாட்டியம் ஆகும். இதனை நம் முன்னோர் தாசியாட்டம், சின்ன மேலம், சதிர் என்ற பெயர்களில் அழைத்தனர். தமிழ் நாட்டில் உருவான மற்றொரு வகை நாட்டியம் குறவஞ்சி ஆகும். இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழின் வடிவம் குறவஞ்சியில் அழகுடன் அமைந்துள்ளது. தமிழ் நாட்டுக்கே உரிய குறி சொல்லும் குறவன் , குறத்தி ( சிங்கன், சிங்கி) முதலிய பாத்திரங்கள் தோன்றும் இந்நாடகம் நகைச்சுவைக் கலையுடன் அமைக்கப்பட்டிருக்கும்.
ஆடல் கலை நம் முன்னோரின் ஊனோடும் உணர்வோடும் கலந்த கலையாகும்.
[19:17, 10/18/2017] Karthi sr: Karthic SR கம்பள விருட்சக் குழுமம்:

கூத்துக்கலை

தமிழ் முத்தமிழ் என வழங்கப்பெறும். இயல்,இசை, கூத்து என்பன முத்தமிழின் கூறுகள்.வரி வடிவத்தில் இதயத்துக்கு இன்பம் பயப்பது “இயல்” என்றும், ஒலி நயத்துடன் பாடப்பெறும் பொழுது இசையுடன் இயைந்தது “இசை” என்றும் மெய்ப்பாடுகளினால் வெளிப்படுத்தப் பெறுவது “கூத்து” என்றும் வழங்கப்பெறும்.ஆடற்கலையும் நடிப்புக் கலையும் ஒருங்கே வளர்ந்தவை.‘பாவ, ராக, தாள வகை கொண்டு பதத்தால் பாட்டுக்கு இயைய நடிப்பது கூத்து என்று அபிதான சிந்தாமணி விளக்கும். கூத்து என்பதை இளங்கோ அடிகளார்தாம் நாடகம் என முதன் முதலில் குறிப்பிட்டவர் என்பர்.
சங்க கால மக்கள் வாழ்வில் வழிபாடு முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. அவர்கள் ஆடியும் பாடியும் இறைவனை வழிபட்டனர்.இறைவனைக் கூத்தாடும் நிலையில் கண்டு மகிழ்ந்தனர். சங்க காலத்தில், வழிபாட்டு நிலையில் மட்டுமன்றிப் பொழுதுபோக்கு நிலையிலும், தொழில் அடிப்படையிலும் கூத்துகள் நிகழ்த்தப் பெற்றன.குரவைக்கூத்து, துணங்கைக்கூத்து,வெறியாட்டு, ஆரியக்கூத்து, பாவைக்கூத்து, வள்ளிக் கூத்து போன்ற பல்வகைக் கூத்துகள் நடத்தப்பெற்றன என்பதை சங்க நூல்களில் பரவலாகக் காணலாம். கூத்தர், பொருநர் போன்ற சொற்கள் தொழில் அடிப்படையில் கூத்துகள் நடைப்பெற்றன என்பதைக் குறிக்கும்.இடைக்காலத்தில் இறைவன் முன்பும் அரசர் முன்பும் சிலவிடங்களில் பொழுது போக்குக்காகவும் கூத்து நிகழ்த்தப்பெற்றது. இன்று, நாட்டுப்புற இலக்கிய வகைகளுள் ஒன்றாகக் கூத்து கருதப்பெறுகின்றது.

இந்தக் கவினுறு கலை அருகி வரினும் அதன் சிறப்பு இன்னும் குறையவில்லை எனலாம்.இக்காலத்தில் காணப்பெறும் கூத்து வகைகளுள் பாவைக்கூத்து, தெருக்கூத்து, கணியான் கூத்து ஆகியன கதை சார்ந்தவை என்றும் புரவியாட்டம், சாமியாட்டம், கழியாட்டம், காவடியாட்டம், கரகாட்டம், குறவன் – குறத்தி ஆட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்றவை கதை சாராதவை என்றும் பாகுபடுத்துவர்.போருக்குப் புறப்படும்பொழுது வெறிக்குரவையும், போரில் வெற்றிக்காகக் துணங்கைக் கூத்தும் ஆடுவர் எனச் சங்க இலக்கியம் கூறும்.

கூத்து எனும் சொல் முதலில் நடனத்தையும், பின்னர் கதை தழுவி வரும் கூத்தாகிய நாடகத்தையும் குறித்தது. அக்காலத்தில் இயற்றமிழைப் புலவர்களும், இசைத் தமிழ்ப்பாணர்களும் வளர்த்தமை போன்றே நாடகத்தமிழாகிய கூத்தையும் நாடகத்தையும் கூத்தர் என்போர் வளர்த்தனர். இயல், இசை, ஆகிய இரண்டும் கேட்போருக்கு இன்பம் தருவன. கூத்து, கேள்வி இன்பத்தோடு காட்சி இன்பத்தையும் தரவல்லது.கூத்து பெரிதும் விரும்பப்பட்டதால் கூத்தர் பெருகினர்; கூத்து வகைகளும் பெருகின. போட்டிகள் உருவாகின. அதன் விளைவுதான் இன்றைய நாடகங்களும் திரைப்படங்களும் ஆகும். சுருங்கக் கூறின், தமிழர் வாழ்வில் கூத்துக் கலை இரண்டறக் கலந்துவிட்டதென்றே கொள்ளலாம்.
[19:20, 10/18/2017] Karthi sr: Karthic SR கம்பள விருட்சக் குழுமம்:

கோலக்கலை


பழங்கால மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ்க்கை நடத்திய போது இயற்கையிடம் மனிதன் தானாகக் கற்றது அல்லது தெரிந்து கொண்டது ஏராளம். அவ்வகையில் வந்ததுதான் கோலக்கலை.கோலம் என்றால் அழகு,ஒப்பனை எனப் பொருள்படுகிறது. எழுத்துகள் வருவதற்கு முன்னரே கோடுகள், குறியீடுகள் இருந்தன என வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர். தொடக்கத்தில் மனிதன் வெறும் கோடுகளைப் போட்டிருக்கின்றான்.பிறகுதான் அவற்றை வளைத்துக் கோலமாக இட்டிருக்கின்றான்.தொடக்கத்தில் மாட்டு தொழுவத்தில் சாணத்தால் மெழுகிய பகுதிகளில் பூச்சிப்பொட்டுகள் வராமலிருப்பதையும் கவனித்தவர்கள் வீட்டினுள்ளே இம்முறையைப் பயன்படுத்தினர். பின்னர் அதுவே கோலமாக மாறியிருக்கிறது. இயற்கையிடம் இருந்து பலவற்றை அறியும் அறிவைக்கொண்ட மனிதனின் கலை உணர்வின் வெளிப்பாடுதான் கோலம். அது தொடக்கத்தில் வாசல் கோலமாக தொடங்கியிருக்கிறது. மேலும் மண்ணில் ஊறும் உயிரினங்களுக்கு உணவாக ஆகும் என்பதால் அரிசிப் பொடியில் கோலம் போடப்பட்டிருக்கிறது.

புள்ளிகளையும்,கோடுகளையும் கொண்டு உருவாக்கப்படும் கோலங்கள் நம்பிக்கையின் வெளிப்பாடாக பண்பாட்டின் அடையாளமாக தமிழர் வாழ்க்கையில் திகழ்ந்தன. அவை அரங்கக் கோலம், மணல் கோலம், புனல் கோலம், அனல் கோலம் எனப் பல்வகைப்படும். அக்காலங்களில் நடன அரங்கில் அரங்கக்கோலம் போடப்பட்டது. அரங்கம்+கோலம்= அரங்கக்கோலம். அது ரங்கோலம் என மருவி ரங்கோலி எனப் பெயர் மாறி வடநாடுகளில் பரவின என்பது வரலாற்று உண்மையாகும். ஆண்டுதோறும் அமங்கல நாட்கள் தவிர ஏனைய நாட்களில் வாசலில் கோலம் போட்டாலும் மார்கழி மாதத்தில் போடுகிற கோலம் சிறப்பானவை. மாதங்களில் மார்கழி என ஆன்மீக ரீதியில் சொன்னாலும் அறிவியல் ரீதியாகவும் தை மாதத்தை எதிர்நோக்குகிற மிகச்சிறந்த மாதமாகும். மார்கழி மாதம் என்பதனால் விவசாயப் பொருட்களைச் சேகரிக்கிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. எனவே, அம்மாதத்தில் திருமணம் செய்யாமல் தைமாதத்தை எதிர்நோக்கிய சிந்தனையோடு நிலத்தை உழுதுண்டு வாழ்ந்தவர்கள் இருந்தார்கள். எனவே, நிலம் சார்ந்த மரபுவழிச் சிந்தனை அவர்களுக்கு இருந்தது. மார்கழி மாதம் பனிமழை பெய்யும் மாதமானதால் அக்காலத்தில் பசியில் தவிக்கக்கூடாதென்று, சிற்றுயிர்கள் குறிப்பாக எறும்புகளுக்கு உணவிடுவது போல் அரிசிப்பொடியில் வாசல்கோலம் இட்டனர். அவ்வாறு இடுகிற உணவை எறும்புகள் உண்ணுவது உண்மையாகும்.

கோலம் வரைகிற பண்பாட்டு நடைமுறையில் கூட நுண்ணுயிர்களின் பசிப்போக்குகின்ற உயர்ந்த பண்பாட்டை அக்காலத்தமிழர் கொண்டிருந்தனர் என்பது வியப்பானதுதான்? ஆனால், இன்று நாகரிகம் என்ற உணர்வில் உண்பதற்கு உதவாத வேறுவகை(கற்களின்) பொடிகளில் கோலம் இடுதல், பழந்தமிழர் கோலப் பண்பாட்டை உள்வாங்கவில்லை என்று பொருள்படுகிறது.

இன்றைய தமிழர்கள் சிந்தித்துத் தெளிவு பெறுவார்களாக!
















கார்த்தி மாப்பிளை ..போர்க்கலைகள் பற்றி  ...குதிரை படை ,யானை படை ..நம் பாளையக்காரர்களின் போர்குணம் ..இதில் அடங்கும் ...அருமையாக உங்களின் பதிவுகள் அருமை ..

இசைக்கலை வெகு அருமை ....நம் கம்பள சமுதாயமே ..இசையை வளர்த்த பெருமை நமக்கு உண்டு ..உறுமி மேளம் ,புல்லாங்குழல் இசை ..இப்பொழுதும் நம் கோவில் விழாக்களில் பயன்படுத்தி கொண்டுதானே ...இருக்கிறோம் ...நம் சமுதாய வருங்கால துளிர்கள் ..கொஞ்சம் ஆர்வத்துடன் பயின்று வருவது கொஞ்சம் பெருமையாக இருக்கிறது ...சேர்த்து வைக்கும் சொத்து கூட அழிந்துபோகும் ...நம் கலைகள் அழியாது என்ற நம்பிக்கை கொஞ்சம் மனதில் இருக்கிறது ...பார்ப்போம்

நமது சிற்பக்கலைகள் பற்றி ..உலகமெங்கும் பரவிதான் இருக்கிறது ...தமிழ் மண்ணில் இருந்துதான் பரவியிருக்கின்றது ...தஞ்சை ,மதுரை ..போல் ...நம் சமுதாயகோவில்கள் ,இருக்கிறது ..நம் சமுதாய மக்களின் விழுப்புணர்வு இல்லாததால் ,ஆவணப்படுத்ததனால் ,வெளிக்கொண்டு வரமுடியவில்லை ...இப்பொழுதும் ...நம் முன்னோர்களின் சிலைகள் சிதிலடைந்து ...அனாதைகளாக கிடக்கிறது ...நம் காலத்திலாவது ஏதோ சிறுமுயற்சி எடுப்போம் ...

மாப்பிள ஆடல்கலையை ...சொன்ன மாதிரி ...நாம் ஆடாத பயிலாத கலைகள் இல்லயென்று சொல்லலாம் ...அனைத்திலும் கால்பதித்துள்ளோம்..ஆனால் இன்று கொஞ்சம் கொஞ்சமாக ...ஆர்வம் குறைகிறது ...வளர்ச்சி என்றபெயரில் .இந்த குழந்தைகளின் ஆர்வம் ,சில பெற்றோர்களின் ஆர்வத்தால் ...அழியாமல் உள்ளது ...பாதுகாக்கவேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது ...நேரம் ஒதுக்கவேண்டும் ...


கூத்து கலைகள் ...நம் சமுதாய கோவில்களில் விழாக்களில் ,தை மாதங்களில் ,நம் மக்கள் ஆடியும் உள்ளனர் ...இப்பொழுதும் கூட ...என் சிறு வயதில் கம்பாலப்பட்டி யில் கூட நடைபெரும் விழாக்களில்,காளாஞ்சி பட்டி ,வத்தலகுண்டு சென்றாயப்பெருமாள் கோவில்களில் வேஷம் கட்டி ஆடிய நிகழ்வு மலரும் நினைவுகளாக உள்ளது ..இனி வரும் காலங்களில் இனி பார்ப்போமா என்று தெரியவில்லை ...

கோலகலைகள்....இன்று படித்து பட்டம் பெற்று ...பெருநகரங்களில் வசிக்கும் நம் மக்கள் ...கதவை திறந்தால் ...போக்குவரத்து மிகுந்த சாலையில் தான் கோலம்போடவேண்டும் ...நம் தங்க பெண்மணிகள் நன்றாக கோலகலையை கற்றுஇருந்தாலும்...தங்களின் திறமையை வெளிகொண்டவரமுடியவில்லை வருத்தம் தான் ..ஏதோ நம் மாதிரி சிறு நகரங்கள் ,சிறு கிராமங்களில் வசிக்கும் தங்கபெண்மணி சொந்தங்கள, கொஞ்சமேனும் திறமையை காட்டுகிறார்கள்.
என்னதான் படித்து ..கம்ப்யூட்டர் ,பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் பெண் செல்வங்கள் ..பணிபுரிபவதற்கு இந்த கோல கலை அவர்களுக்கு மனதிற்கு புத்தாக்கத்தை தருவது சிறப்பானது ...எனக்கு தெரிந்து தைமாதம் மட்டும் தான் கோலம் போடுகிறார்கள் .....இனி வரப்போகும் தலைமுறையினர் கோலம் என்றால் என்ன கேட்கக்கூடிய நிலைமை வரலாம் ...


என் அன்பு மாப்பிள ...அன்பு மருமகனுக்கு ..கார்த்தி மாப்பிளை க்கு .வாழ்த்துக்கள் ...64 கலைகளையும் ..நீங்களே பதிவிட்டு விடுவீர்கள் என்று நினைக்கிறன் ..எதோ என்னால் பின்னுட்டம் இடுவதற்கு ...இடம் கிடைத்ததற்கு நன்றி ...வாழ்த்துக்கள்  செந்தில் ..சார் ...மறுபடியும் பதிவிடுங்கள் ..இரண்டு நாளுக்கு ஒருமுறை தலைப்புகளை ..சரவணகுமார் மாப்பிள ..ஸ்லைடில் .பதிவிடுங்கள் ...