என் அருமை மாமா...சுக்காம்பட்டி ...ராஜபாண்டியன் ..அவர்களின் ஒரு நம் சமுதாய சிந்தனை பதிவு ....
ஒரு மனிதன் தன் முன்னேற்றத்தை தன்முயற்சிகொண்டே அடையமுடியும். அதுதான் அவனுக்கு சிறப்பு! அதேபோன்று ஒரு இனமும் தன் முன்னேற்றத்தை தன் முயற்சி கொண்டுதான் அடையமுடியும். நான் சொல்லவருவது, ஆண்டவரலாறு கொண்டு புத்தகங்கள் போட்டு புத்தி பேதலிக்க வைக்கும் முயற்சியை அல்ல! உழைப்பால் உயர, உங்கள் தியாகத்தால் உயர, இவ்விதம் உயர, உயர, சிறக்கும் உங்கள் இனம்.
நீங்கள் உங்கள் இனத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற உணர்வுடையவரா?
நீங்கள் சில மணிகளை இந்த இனத்திற்கு செலவிட தயாராக இருக்கிறீர்களா?
நீங்கள் இந்த இனத்திற்கான முன்னேற்றத்திற்கு ஏதும் வழிமுறைகளைத் தெரிந்து வைத்திருக்கிறீர்களா?
- மேற்கண்ட உணர்வுடையோர் வாருங்கள் ஒன்றாய் கூடுவோம்! இந்த இனத்தின் நாளைய தலைவிதியை நாமே நிர்மாணிக்கும் சக்தியாக மாறுவோம்!!
"நாமே நமக்கு கேடயம்"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக