வியாழன், 16 நவம்பர், 2017

கல்விச்சுற்றுலா .....

சில நேரங்களில் அப்படித்தான் நடக்கும்.. அப்படி ஏன் நடந்தது என்றோ…?? ஏன் அப்படி நடக்ககவில்லை என்றோ கேள்விகேட்கவே முடியாது… வாழ்க்கை அப்படித்தான்…. ஆறு விரலோடு ஏன் பிறந்தான் என்ற கேள்விக்கு எப்படி விடையில்லையோ??? அது போலத்தான் சில விஷயங்கள் அப்படி நடந்து விடும்...வாழ்க்கையில சில விஷயங்களை கேள்வி கேட்காமத்தான் நாம ஏத்துக்கனும்…
யோசித்து பாருங்கள்….12 வருட பள்ளி வாழ்க்கையில் நான் ஒரே ஒரு முறைத்தான் பள்ளி சுற்றுலா சென்று வந்தேன்…
இன்றைக்கு படிக்கும் பிள்ளைகள்.. ஒவ்வோரு ஊராக சுற்றுலா சென்று செல்பியில் போட்டோ பிடித்து போடும் போது அவர்கள் சந்தோஷத்தை பார்க்கும் போது கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கும்… ஆனால் அவர்கள் வாங்கி வந்த வரம் அப்படி…!!!
அதன் பின் அப்பா மற்றும் வீட்டு குடும்ப கஷ்டம் அறிந்து நான்சுற்றுலா செல்லவேயில்லை.. அவ்வளவு ஏன்… கல்லூரியில் மூன்று  ஆண்டுகள் படித்த போது வருடா வருடம் டிப்பார்ட்மென்ட் மாணவர்களோடு கல்வி சுற்றுலா செல்வார்கள்.. நான் ஒரு வருடம் கூட சென்றது இல்லை… அது அப்படித்தான்.. ஆனால் எனது நண்பர்கள்  உடன் சேர்ந்து ஊட்டி, கொடைக்கானல், போன்ற இடங்களுக்கு சென்றாலும்… நண்பர்களோடு நினைத்தவுடன் சுற்றுலா செல்லும் வாய்ப்பை நான் உருவாக்கி கொண்டதே இல்லை எனலாம்..
நான் முதன் முதலாக பள்ளியில் சுற்றுலா செல்ல நான் கொடுத்த தொகை 25 ரூபாய் ….
நான் படித்தது அரசு  மேல்நிலை பள்ளியில் தான் நான் 12 ஆம் வகுப்புவரை பயின்றேன்…
உடுமலையில்  புகழ் பெற்ற அரசு பள்ளி . திரு வெங்கட்ராமன் உதவி தலமை ஆசிரியர் ...
முதன் முதலாக கல்வி சுற்றுலா அழைத்து செல்வதாக அறிவித்தார்கள்… ஏதோ தூரமான இடத்துக்கு அழைத்து செல்கின்றார்கள் என்று ஆர்வமாக அறிவிப்பை எதிர்பார்த்து இருக்க… அருகில உள்ள மலம்புழா டேம்  அழைத்து செல்ல போகின்றோம் என்று அறிவித்ததும் மனது உடைந்து போனாலும்.. சரி பள்ளி சுற்றுலா.. வகுப்பறையைவிட்டு நண்பர்களோடு வெளியோ போகப்போகின்றோம் என்பதே சந்தோஷத்தில் திக்கு முக்காட வைத்து…
1985 ஆம் கால கட்டம்… சுற்றுலா பேருந்த கட்டணமாக 25 ரூபாய் அறிவித்தார்கள்…
அம்மாகையில் 25 ரூபாய் பணத்தை கொடுத்தார்கள்…
இப்போது போல குடும்பமே போய் ஓட்டலில் மொக்குவது போல அப்போது எல்லாம் மொக்க முடியாது…புளியோதரையோ… இட்லியோ நான் சுட்டுத்தரேன்னுசொல்லி.. புளியோதரை மூட்டையை கட்டிகொடுத்துச்சி…
ஆனால் எல்லாத்தைவிட கொடுமை… எங்க வீட்டுல இருந்து 75 கிலோமீட்டர் தொலைவில்தான் மலம்புழா  இருந்தது…
பள்ளிக்கு சென்று அங்கே இருந்து பேருந்தில் சென்று மலம்புழா டேம் ,பார்க் பார்வையிட்டு  விளையாடி விட்டு புளிய மர நிழலில் உட்கார்ந்து கட்டி சென்ற புளியோதரை பொட்டலங்களை சாப்பிட்டு விட்டு பேருந்தில் மறுபடியும் உடுமலையில்  எங்களை உதிர்த்து விட்டு செல்ல.. இதுதான் என்னுடைய வாழ்வில் நடைபெற்ற கல்வி சுற்றுலா…!!!
வீட்டில் இருந்து 75 கிலோமீட்டர் இடத்துக்கு சுற்றுலா சென்று விட்டு வந்தேன் என்றால் சுற்றுலாவே நம்மை பார்த்து  சிரிக்கும்… இருந்தாலும் நிதர்சனம் என்பது இதுதான்.
சரி எதுக்கு இந்த சுற்றுலா கதை இப்போது வந்தது என்று கேட்கலாம்… காரணம் இல்லாமல் கதை இல்லை…
கடந்த மாதம் நம்ம நண்பர்  அமெரிக்காவின் போஸ்டன் ...massasuesets மாநகருக்கு அவருடைய பணி நிமித்தமாக சென்றார்… அவரை வழியனுப்ப குடும்பத்தினரோடு கோவை  விமான நிலையம் சென்று இருந்தேன்.
200 ரூபாய் டிக்கெட் வாங்கி விமானநிலையத்தின் உள்ளே சென்றோம்..
எடை செக்கின் மற்றும் டிக்கெட் செக் செய்து முடிந்த உடன் இமிக்கிரியேஷன் செல்லும் முன் எங்களோடு தடுப்புக்கு அந்த பக்கம் நின்று விடைபெற்ற தருணத்தின் போது சில சின்ன சின்ன பசங்களை பார்த்தேன்…
10 அல்லது 12 வயது இருக்கலாம்… முகம் நிறைய சந்தோஷம்… அப்பா அம்மாவிடம் விடைபெற்றார்கள்… விசாரித்து பார்த்தேன்..
கோவையில் தனியார்  பள்ளி மாணவ மாணவிகளாம்… கல்வி சுற்றுலாவாம்.. அமெரிக்கா செல்கின்றார்களாம்…. ஒரு மாணவிக்கு இரண்டரை லட்சமாம்….
எனக்கு கண்ணை கட்டியது… இதுதானே வாழ்க்கை.. இதுதானே பள்ளி..??? கல்வி சுற்றுலாவுக்கு அமெரிக்கா அனுப்பும் பெற்றோர்…இதுவும் ஒரு வாழ்க்கைதான் இல்லை என்று நினைத்துக்கொண்டேன்.
எனக்கு மலம்புழா விற்கு  பேருந்தில்சென்று  புளியோதரை சாப்பிட்ட ஏப்பத்தோடு 25 ருபா சுற்றுலா நியாபகத்துக்கு வந்தது…
அந்த டூர் மட்டும் நான் செல்லவில்லை என்றால் … உங்கள் வாழ்க்கையில் கல்வி சுற்றுலா சென்று இருக்கின்றீர்களா? என்ற கேள்விக்கு இல்லை என்று பதிலாக நான் சொல்லி இருக்க வேண்டும்…
அந்த டூருக்காவது அரேன்ஜ் பண்ணிய  .உதவி தலமை ஆசிரியர் வெங்கடராமன் ...ஆகியோருக்கு நன்றி சொல்ல கடமை பட்டு உள்ளேன் ...
ஒரு 25 ரூபா சுற்றுலா இப்படி நிறைவு பெற்றது ......




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக