கோவையில் பணியாற்றும் போது ..எனது முகநூலில் அறிமுகமாகி ...எனது நண்பராக ச. சரவணன், அவர்களுடன் நட்பாகி ..ஒருமுறை ஷயமுடன் அவிநாசி ரோட்டில் .சுகுணா கல்யாணமண்டபத்தில் நடைபெற்று கொண்டிருந்த .பொருட்காட்சியை பார்க்க சென்றுகொண்டிருந்தோம் ..லட்சுமி மில்ஸ் சிக்னல் அருகில் செல்லும்போது ...நானும் எப்பொழுதும் போல் ஹெல்மெட் அணிந்துசெல்வேன் ..ஷ்யாமுக்கும் சிறிய ஹெல்மெட் அவர் அம்மாவின் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் செல்லும்பொழுது ..லட்சுமி மில் சிக்னல்-காக நின்றுகொண்டிருந்தோம் ..எங்களை பார்த்து மெதுவாக நடந்து வந்து ...ஷியாம் .ஹெல்மெட் அணிந்ததுக்காக .காக சாக்லேட் ..பரிசளித்தார் ...குழந்தைகள் தினம் ..அன்று மறக்க இயலாத நினைவுகள்
ச .சரவணன் அவர்கள் தற்பொழுது சென்னையில் பணியில் இருக்கிறார் ..
காவல் துணை ஆணையர்,
போக்குவரத்து,
சென்னை ..மாநகரம்.
நவம்பர் 14- குழந்தைகள் தின சிறப்பு பதிவு
காணாமல் போன செல்லக் குழந்தைகளும்
தூசி படிந்த ஹெல்மெட்டும்.....
நவம்பர் 14- குழந்தைகள் தின சிறப்பு பதிவு
யார் செல்லக்குழந்தைகள்?
யாருடைய அழைப்பிற்கு நாம் ஒடோடிச் செல்வோம்?
யாரை நம் கைகளில் பிடித்துக் கொள்ள ஆசைப்படுவோம்?
யாரை நாம் வாஞ்சையுடன் தடவிக் கொடுப்போம்?
யாரை உச்சி முகர்ந்து முத்தமிடுவோம்? யாருடைய முகம் வாடினால் உடனடியாக உற்சாகப்படுத்தி சக்தி அளிப்போம்? யாருடன் நம் நேரத்தை செலவிடுவதில் அலாதி மகிழ்ச்சியடைவோம்?
இக்கேள்விக்கெல்லாம் பதில் செல்லக்குழந்தைகள் என்றால் ஒத்துக் கொள்வீர்கள்தானே?
இப்போது சொல்லுங்கள்.
மேற்கூறியவை அதிகம் பொருந்துவது நம் செல்லக்குழந்தைகளுக்கா?
செல்போனுக்கா?
நேர்மையாக யோசித்து பார்த்தால் நம் மனதை சுடும் உண்மை தெரிய வரும்.
நம் செல்போன்கள் செல்லக்குழந்தையாக மாறி வருவது புலனாகும்.
நம் செல்லக்குழந்தைகளின் குழந்தை பருவமென்பது நம் கண் முன்னே தொடங்கி, வளர்ந்து மிக வேகமாக முடியக்கூடிய ஒன்று. ஆண் குழந்தை தோளுக்கு மீறினால் தோழனாகி விடுவான். பெண் குழந்தைகள் சற்றே வளர்ந்தவுடன் அன்னியமாகிவிடுவர்.
அவர்கள் செல்போன் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால் நமக்கு செலவிட அவர்களுக்கு நேரமில்லை.
யோசித்து சொல்லுங்கள்,
கடைசியாக எவ்விதத் தொந்தரவின்றி உங்கள் குழந்தைகளுடன் ஒரு மணிநேரம் செலவிட்டது எப்போது?
அவர்களுக்கு என்ன பிடிக்கும்?
என்ன பிடிக்காது?
எதைக் கண்டு பயம்?
அவர்களின் கனவு என்ன?
அவர்கள் நண்பர்கள் யார்?
என்பதெல்லாம் நமக்கு தெரியுமா என்றால் பதில் சொல்வது சற்று கடினம் தானே?
தரமான பள்ளியில் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவில் படிக்க வைப்பதுடன்
நம் கடமை முடிந்ததா? அவர்களை இந்த போட்டி நிறைந்த சமூகத்தில் அவற்றை எதிர்கொள்வது எப்படி என்று கற்றுக் கொடுத்துள்ளோமா?
எவ்வித சிரமங்களையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை உள்ளவர்களாக்க நாம் செய்தது என்ன?
குறைந்த பட்சம் "Good Touch & Bad Touch" பற்றியாவது சொல்லிக் கொடுத்துள்ளோமா? நீதிக்கதைகள் கேட்டு வளர்ந்த கடைசி தலைமுறையான நாம் குழந்தைகளுக்கு என்ன சொல்லிக் கொடுத்ததுள்ளோம்?
இல்லை என்பதே நம் பெரும்பாலானோர்களின் பதிலாக இருக்ககூடும்.
என்ன செய்யலாம்?
ஒரு நாளின் 24 மணி நேரத்தில்
குறைந்த பட்சம் 1 மணி நேரமாவது
டிவி & செல்போன் தொந்தரவின்றி
நம் குழந்தைகளுக்கு செலவிட வேண்டும். குழந்தைகளுடன் விளையாடி மகிழுங்கள். கதை கூறுங்கள் முடியாது என்றால்
உங்கள் அனுபவங்களை கூறுங்கள்.
எதுவும் முடியாதென்றால் அவர்களை பேசவைத்து ' ம் ' கொட்டுங்கள்.
குழந்தைப் பருவம் மிகக் குறுகியது,
அதை நம் பங்களிப்பால் மிகச் சிறப்பானதாக்க வேண்டியது
ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்.
பின் குறிப்பு:
இப்பதிவின் தலைப்பில் எதற்கு 'ஹெல்மட்' என்று கேட்கலாம். உங்கள் செல்லக்குழந்தைகள் நலனுக்காக வாகனத்தை ஓட்டும் போது ஹெல்மெட் அல்லது சீட்பெல்ட் கட்டாயம் அணிந்து அவர்களுக்கு கவசமாக இருங்கள்.
அனைவருக்கும்
இனிய
குழந்தைகள் தின வாழ்த்துகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக