சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி_ நினைவேந்தல்
உடுமலை முதற்கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் 6.11.17 திங்கள் மாலை 5.45 மணிக்கு கரிசல் மண்ணின் மக்கள் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு உடுமலை தளிரோடு முதற்கிளை நூலகத்தில் நடைபெறும்.வாசகர்கள் ,,இலக்கிய ஆர்வலர்கள்,, அனைவரும் நிகழ்வில் பங்கேற்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்
எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி ..அவர்களை பற்றி சிறுகுறிப்பு ...
அண்மையில் மறைந்த திரு மேலாண்மை பொன்னுசாமி அவர்கள் ஓர் அருமையான எழுத்தாளர். அவர் பள்ளியில் படித்தது 5 ஆம் வகுப்பு வரைதான். சாகித்ய அகாடமி விருது பெற்ற அவரே சொல்வதைக் கேளுங்கள்.
"வாசிப்பது என்பது எழுத்தாளனுக்கு உணவு மட்டுமல்ல உயிரைப் போன்றதும் ஆகும்.ஐந்தாவது வரை மட்டும் படித்த எனக்கு நூல்களே ஆசிரியர்கள் ஆயின. நான் நூல்களால் கட்டமைக்கப் பட்டவன். படிப்பு என்பது சிலருக்குப் பள்ளியுடன் நின்று விடும் சிலருக்கு கல்லூரியுடன் முடிந்து விடும்.நூல்களுடன் எனது பரிச்சயம் தொடங்கியது எனது 18 ஆவது வயதில். எந்தக் கலவரையறையும் இன்றி வாசிப்பு மூச்சாகத் தொடர்கிறது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.வாசிப்பு உயிரை வளர்ப்பது.மனதை வளர்ப்பது ஞானத்தைச் செழுமைப்படுத்துவது.விடுதலைப் போராளி பகத் சிங் தூக்கிடப்படுவதற்கு முதல் நாள் வரை வாசித்துக்கொண்டிருந்தார். அதுதான் வாசிப்பின் வசீகரம்.
வறுமை என்பது பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஆனால் வாசிப்பு வறுமையின் முற்றுகையைத் தகர்த்துப் பள்ளிப்படிப்பு தராத அனுபவங்களைத் தந்தது, அனுபவங்களை பகிரச் செய்தது."
இந்த மண்வாசனை வீசும் எழுத்துக்களின் சொந்தக்காரர் தனது சிறுகதைகளின் தொகுப்பைத் தனது வாழ்வாதாரமான வீட்டில் இருந்த தான் வளர்த்த ஆடுகளை விற்று அதில் வந்த காசில் வெளியிட்டிருக்கிறார்.
ஜெயகாந்தன் இதே போன்று புத்தகங்கள் உருவாக்கிய மேதை. அவர் வரிசையில் இன்னுமொரு மாணிக்கம். நான் இவரின் எழுத்துக்களை அதிகம் வாசித்ததில்லை அதிகம் போனால் ஒரு 10 -12 சிறுகதைகள் மட்டுமே வாசித்திருக்கிறேன்.
இவர்களையெல்லாம் பார்க்கும் போது நான் இன்னும் கொஞ்சம் Inspire ஆகிறேன்.
இவர்கள்தான் உண்மையான போராளிகள்.
இவர்களின் வாழ்க்கை வரலாறுகளை பள்ளியில் பாடமாக வையுங்கள்.
இல்லாத வீட்டுப் பிள்ளைகளின் நம்பிக்கை நட்சத்திரங்கள் இவர்கள்.
இவர்கள்தான் உண்மையான போராளிகள்.
இவர்களின் வாழ்க்கை வரலாறுகளை பள்ளியில் பாடமாக வையுங்கள்.
இல்லாத வீட்டுப் பிள்ளைகளின் நம்பிக்கை நட்சத்திரங்கள் இவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக