விருப்பாச்சி கோபால் நாயக்கர் நினைவு நாள் விழா -23-11-2017
அருமையான நிகழ்வாக அமைந்தது ...விழாவில் விருப்பாச்சி கோபால் நாயக்கர் சேவா சங்கத்தலைவர் .திரு .செந்தில்குமார் அவர்கள் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார் ..
நமது வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழக மாநில தலைவர் .நீதிபதி .தங்கராஜ் அவர்கள் பேசும் பொழுது ..நம் சமுதாய மக்கள் பொறுமையுடன் ..பொறுப்புடன் ..தற்போது உள்ள சூழ்நிலைகளில் அமைதி காத்து வருகின்றனர் ..திருச்சி சம்பவம் ,தினத்தந்தி செய்தி பற்றி பேசும் போது இதை குறிப்பிட்டு பேசியது மகிழ்ச்சி ..நம் சமுதாயத்தில் அரசியல் பிரவேசத்திற்கு விரைவில் அனைத்து ஏற்பாடுகளும் இனி நடைபெறும் என தெரிவித்தார் ..அதற்கான அடிப்படை கட்டமைப்புகள் நடந்துவருகிறது மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் ..
பண்பாட்டுக்கழக கௌரவ தலைவர் திருப்பூர் ராமகிருஷ்ணன் அவர்கள் ..விருப்பாச்சி ஆளுமை பற்றி விரிவாக எடுத்துரைத்தார் ..
தூத்துக்குடி சிங்கம் ...திரு .ராமலிங்கம் ..தனது கனல் பேச்சால் நம் சமுதாய தலைவர்களின் வீர தீர செயல்களை பற்றி பேசினார் ...
பண்பாட்டுக்கழக மாநில செயல்தலைவர் .திரு .முருகவேல் அவர்கள் நம் சமுதாய மக்களின் நலன்களை பற்றி பேசியது அருமை ..
காந்திகிராமம் பல்கலைகழகம் பேராசிரியர் திரு .முத்தையா அவர்கள் பேசும்போது ..நம் கம்பள சமுதாய உணர்வுகளை அரசு செவிசாய்ப்பதில்லை வருத்தப்பட்டார் ..நம் சமுதாய மக்களும் அதிகம் ஒன்று திரளவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் ..அப்போதுதான் அரசு நமது உரிமைகளுக்கு செவி சாய்க்கும் என்பதை தெரிவித்தது மிக்க மகிழ்ச்சி .பண்பாட்டுக்கழக தலைவர்கள் திரு ..சுப்பிரமணி அவர்கள் .திரு .சங்காரவேல் அவர்கள் ,விழாவில் பேசியது மிக அருமையாக அமைந்தது ...
இந்த விழாவில் ..நம் சமுதாய தலைவர்களுடன் ,புதிய இளைய சொந்தங்களை பார்த்து பேசியது மகிழ்ச்சியான திருநாள் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக