புதன், 8 நவம்பர், 2017

திரு சிவகுமார் பற்றிய அறிமுகம்

இன்று உடுமலைப்பேட்டை என்றாலே நம் குழுவில் நினைவிற்கு வரும் திரு  சிவகுமார் அவர்கள் , பிறந்த ஊரும் அதே.

அவருடைய தந்தை பெயர் திரு கிருஷ்ணசாமி .
தாயார் பெயர் திருமதி கொண்டம்மாள் .

கோவையில் உள்ள வித்யா சாகர் கல்லூரியில் BBA படிப்பை 1996 ஆம் ஆண்டு படித்து முடித்த இவர் ,STERLING  TREE MAGNUM எனும் கம்பெனியில் தனது முதல் பணியில் சேர்ந்து 1  ஆண்டு நிர்வாக பணியில் இருந்து உள்ளார்.

பின்னர் கோவையில் உள்ள சௌடாம்பிகா கல்லூரியில் பணியில் சேர்ந்து 1  ஆண்டு நிர்வாக பணியில் இருந்து உள்ளார்.

இதற்கு பின்னரே அவர் சுந்தரம் பைனான்ஸ் கம்பெனியில் 1999  முதல் இன்று வரை பணி செய்து வருகிறார்.

இவர் உடன் பிறந்தவர்கள் ஒருமூத்த  சகோதிரியும்( பெயர் - திருமதி  கார்த்திகேயினி) மற்றும் இளைய சகோதரர் (திரு நாகராஜ் ). ஆவர்.

தன்னுடைய மாமன் மகளான சத்தியா ( கல்வி - M com  & LLB) அவர்களை  திருமணம் செய்து கொண்டு உள்ளார். இவர்களுக்கு ஷியாம் என்ற ஒரு மகன் உள்ளார் . இவர் 4 வகுப்பு படித்து கொண்டு உள்ளார்.

அவரிடம் பேசும் வரையில் அவரை பற்றிய பரிமாணம் வேறாக இருந்தது.
ஆனால் பேசிய பின் அவருடைய மொழி, இன ஆர்வம் மற்றும் சேவைகள் உண்மையில் ஒருவரை ஆச்சிரிய படுத்தும் வகையில் இருந்தது.

தமிழ் ஆர்வமும் மற்றும் நம்முடைய வரலாறுகளையும் அவற்றை  பாதுகாக்கவும், அடுத்த தலைமுறை மக்களுக்கு எடுத்து செல்லவும் இவர் செய்த செயல்கள் என்றென்றும் பாராட்டுக்குரியது.

இதை விட என்னை கவர்ந்த ஒரு விஷயம் என்ன வென்றால் , தன்னுடைய 80 வயதுள்ள தாய் தந்தையரை இன்றளவும் பேணி காத்து அவர்களின் வாழ்க்கையில் ஒரு வித நிறைவை கொடுத்து உள்ளார்.

அவர் தாயும் தந்தையும் கல்வி கற்காதவர்கள். சாதாரண பொருளாதார நிலையில் இருந்து தம் மக்களை சீர் மக்களாக மாற்றி உள்ளனர்.

இந்த சமுதாயத்திற்கு ஒரு நல்ல மக்கள் செல்வங்களை அளித்த பெருமை அவர்களை தொடரும்.

தொழில்ரீதியாக திரு சிவகுமார் அவர்களுக்கு பல வெளிநாட்டு நண்பர்கள் உள்ளனர். ஸ்ரீலங்கா மற்றும் பாகிஸ்தானை தவிர்த்து மற்ற மேலை நாடுகள் மற்றும் ஆசியா நாடுகளில் இவர் நட்பு வட்டாரம் விரிந்து உள்ளது.

இந்த தொடர்புகள் நம் சமுதாய மக்கள் வெளி நாட்டிற்கு கல்வி கற்க அல்லது பணிக்கு செல்லும் போது பெரிதும் உதவ வாய்ப்பு உள்ளது.

இவருடைய அனுபவம்  அனைத்தும் வீட்டு கடன் மற்றும் முதலீடுகள் பற்றிய துறையில் இருப்பதால் , இவரது உதவி மற்றும் அனுபவத்தை நம் மக்கள் உபோயக படுத்தி கொள்ளலாம்.

நன்றி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக