ஞாயிறு, 5 நவம்பர், 2017

வீட்டுக் கடன் தெரியும்.. அது என்ன நிலக்கடன்....(DTCP-approved site மட்டும்) ..?
நம்ம கோயம்புத்தூரைச் சேர்ந்த ஜவுளி வியாபாரியான நம்ம சிவா ..., தன் வீட்டிலிருந்து அலுவலகத்திற்குச் செல்ல தினமும் 40 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். இப்படி அன்றாடம் பயணிப்பதால், பெரிய செலவுகள் ஏற்படுவதோடு மட்டுமல்லாது, வேலையில் மந்தமாகவும் வினைத்திறனற்றவராகவும் செயல்படுகிறார். ஏன் அலுவலகத்தின் அருகிலேயே நான் சிறிய இடம் ஒன்றை வாங்கி அங்கே இரண்டாவது வீட்டை கட்டிக் கொள்ளக் கூடாது என நம்ம சிவா ... யோசித்தார். தன் அலுவலகம் அருகிலேயே ஒரு இடத்தை வாங்க நிலக்கடனை பெற ஒரு வங்கியை அணுகினார் அவர். ஆனால் அந்த நிலம் தொழில்துறை பகுதியில், நகராட்சி எல்லைக்கு வெளியே உள்ளதென்ற காரணத்தைக் காட்டி, நம்ம சிவா ...விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
ஆயிரம் கேள்விகள்:
தன் விண்ணப்பம் வங்கியால் நிராகரிக்கப்பட்ட பிறகு, நம்ம சிவா ...க்குப் பதில்களை விடக் கேள்விகள் தான் அதிகமாகத் தோன்றின. நம்ம சிவா ...போல் நிலக்கடன் வாங்குவதற்காக விண்ணப்பிப்பதற்கு முன்பாக நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய கேள்விகள் ஐந்து உள்ளது.
யார் நிலக்கடனை (DTCP-approved site மட்டும்) பெற முடியும்? 21 வயதைக் கடந்த அனைத்து இந்திய குடிமகன்களுக்கும் வங்கிகளும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களும் நிலக்கடன்களை அளிக்கிறது. வீடு கட்ட நிலம் வாங்கப்பட்டிருந்தால், சில வங்கிகள் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கும் கூட நிலக்கடனை வழங்குகிறது. இந்தியாவில் வசிப்பவர்கள் என்றால், கடனை நல்லபடியாகச் செலுத்தியுள்ள சம்பளம் வாங்கும் தனி நபர்கள் மற்றும் சுய தொழில் ஈடுபட்டுள்ள தனி நபர்களுக்கு நிலக்கடன் வழங்கப்படும்.
கட்டுப்பாடுகள் நிலக் கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றால், நீங்கள் வாங்கும் இடம் குடியிருப்பு இடமாக இருக்க வேண்டுமே தவிர விவசாய இடமாகவோ அல்லது வணிக ரீதியான நிலமாகவோ இருக்கக்கூடாது. அதே போல் அந்த நிலம் மாநகராட்சி / நகராட்சி எல்லைக்குள் இருந்தாக வேண்டும். இந்தியாவில் வசிப்பவர்கள் என்றால், ஒரு இடத்தை வீடு கட்டும் எண்ணத்தில் வாங்கினாலும் சரி, அல்லது வருங்கால முதலீட்டு எண்ணத்தில் வாங்கினாலும் சரி, அவர்களுக்கு நிலக்கடன் அளிக்கப்படும்.
நிலம் வாங்க அதிகப்படியான கடன் எவ்வளவு? கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் அல்லது முழுவதுமாகக் கட்டப்பட்டிருக்கும் வீட்டிற்கு அளிக்கப்படும் மரபு ரீதியான வீட்டுக்கடன்களைப் போல் அல்லாமல், நிலக்கடனுக்கு அதிகப்படியாக நகர்ப்புறத்தில் உள்ள நிலத்தின் மதிப்பின் மீது 70% வரை கடன அளிக்கப்படும். சிறிய நகரங்கள் என்றால், நிலக்கடனுக்கான அதிகப்படியான எல்.டி.வி. வீதம், நிலத்தின் மொத்த மதிப்பில் 50%-60% எனப் பொதுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்பணம் நீங்கள் நிலக்கடன் மூலமாக ஒரு நிலத்தை வாங்க முடிவெடுத்தால், உங்கள் கையில் இருந்து நிலத்தில் மதிப்பில் இருந்து 30%-50% வரை கட்டியாக வேண்டும்.
நிலக்கடன் மூலமாக நான் வரிவிலக்கு நிலக்கடன் என்பது வங்கிகள் வழங்கும் வீட்டுக்கடனில் ஒரு அங்கமாக இருந்தாலும் கூட, நிலம் வாங்குவதற்காக வாங்கப்பட்டுள்ள வீட்டுக்கடனை அடைக்கும் தொகையின் மீது வரி விலக்கு அளிக்கப்பட மாட்டாது. இருப்பினும், நீங்கள் வாங்கிய நிலத்தில் வீடு கட்டும் பணியை நீங்கள் தொடங்கி விட்டால், அந்தக் கடனின் ஒரு பகுதிக்கு நீங்கள் வரி விலக்குகளைப் பெறுவீர்கள். இருப்பினும், கட்டுமான பணிகள் முடிவடைந்த வருடத்தில் தான் இந்த விலக்கு பொருந்தும்.
பிற ஆவணங்கள் மேலும் இடத்தை விற்பவரின் பெயரில் உள்ள நில உரிமை ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட வங்கி அல்லது வங்கியல்லாத நிதி நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். வில்லங்கம் இல்லையென்ற சான்றிதழ்,உடைமை சான்றிதழ், இடம் சான்றிதழ் மற்றும் கடந்த 15 வருடங்களுக்கான ஆவணங்கள் போன்றவை இதில் அடக்கம்.
சிவக்குமார்....நிலகடன்கள்(DTCP-approved site மட்டும் )
Sivakumar.V.K
(Home Loans,Home Loans To NRIs)
Coimbatore,Pollachi, Udamalpet
கைபேசி : 9944066681 whatsapp:...9944066681.....(கோயம்புத்தூர்,பொள்ளாச்சி ,உடுமலைபேட்டை )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக