புதன், 8 நவம்பர், 2017


பெயரை மட்டும் சொல்லுகிறேன் ..நீங்கள் புகைப்படத்தை பார்த்து யார் மணிகண்டன் என்பதை தெரிந்துகொள்வீர்கள் ....இதில் யாராக இருக்கும் ..நெல்லைமணிகண்டன் ..?

பெயர் : நெல்லை மணிகண்டன்
வயது : 43
கல்வி : பட்டயப்படிப்பு நாட்டுப்புறக்கலைகள் - சென்னை இசைக்கல்லூரி
குழுவின் பெயர் : ஸ்ரீ சக்கதேவி கலைக்குழு
முதன்மை கலை வடிவம் : தேவராட்டம்
துணை கலை வடிவம் : ஒயிலாட்டம்,பறையாட்டம், ஒயிலிசை கும்மியாட்டம் மற்றும் சிலம்பம்
ஊர் : ஜமீன் கோடாங்கிப்பட்டி தூத்துக்குடி மாவட்டம்
தொடர்புக்கு : 9841917739
நிகழ்த்து அனுபவம் : 25,ஆண்டுகளாய் எண்ணிலடங்கா நிகழ்வுகள்.
பயிற்சி அனுபவம் : ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளதாய் மகிழ்வோடு குறிப்பிடுகின்றார்.
தற்போது : 1996லிருந்து சென்னை மாம்பலத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா ஹிந்து வித்யாலயா பள்ளியில் சிலம்பம் உள்ளிட்ட கிராமியக்கலை பயிற்றுனராக உள்ளார்.

ஆசான்கள் : கிராமியக்கலை மணி மு.கண்ணன் குமார் அவர்கள் (தந்தை)
கலைமாமணி குமாரராமன் அவர்கள் (பெரியப்பா)
கலை முதுமணி ரங்கராஜன் அவர்கள்

விருதுகள் : கிராமியக்கலைமணி - இசைக்கல்லூரி - சென்னை
இளம் கலைஞன் - சங்கீத நாடக அகாடமி - டில்லி
வௌிநாடு : பிரான்ஸ்

தேவராட்டக்கலைஞர் நெல்லை மணிகண்டன் அவர்கள் தமிழகம் அறிந்த சிறந்தக்கலைஞர். மனநிலை குன்றிய குழந்தைகளிடம் நாட்டுப்புற இசையின் - அடவுகளின் வழியே நல்ல மாறுதலை உடல் - மனரீதியாக நல்ல முன்னேற்றத்தை கொண்டு வர கடந்த பதினைந்து ஆண்டுகளாய் முயன்றும் வெற்றியும் அடைந்து வருவதாக பெறுமையோடு கூறுகின்றார். மத்திய அரசின் நிறுவனமான சங்கீத நாடக அகடாமி வழங்கிய இளம் கலைஞன் (யுவப்புரஸ்கார் விருது) தனக்கு முன்பும் பின்பும் நாட்டுப்புறக்கலைகளில் வேறு யாரும் பெற்றதில்லை என்றும் தகவல் பகிர்ந்தார். தமிழகத்தின் பல நாடக ஆளுமைகளின் படைப்பாக்கத்தில் உடன் பணியாற்றும் வாய்ப்பை பெற்றவர் என்பது கூடுதல் சிறப்பாகும்.

கலைகளை வளர்ப்போம்
கலைஞர்களை வாழ்விப்போம்.
பயிற்சி மற்றும் நிகழ்ச்சி வேண்டுவோர் இவரை அனுகவும் நன்றி
# புத்தர் கலைக்குழு


நம் சமுதாயத்தில் போற்றப்படவேண்டிய நல்ல மனிதர் ...எனக்கு முகநூலில் தான் அறிமுகம் ..4 வருடங்கள் இருக்கும் ...என் மதிப்பிற்கும் ,மரியாதைக்குரிய ..நேரில் பார்த்திடாத நம் நெருங்கிய சொந்தம் ...

நமது கம்பளவிருட்சம் அறக்கட்டளையில் இணைந்து இருப்பது நமக்கு பெருமை ....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக