திங்கள், 18 செப்டம்பர், 2017

நேற்று ..விருகல்பட்டி ,மரிக்கந்தை வழியாக அணிகடவு ராமச்சந்திரபுரம் மேல்நிலைப்பள்ளியில்  . பணியாற்றி ஒய்வு பெற்ற முனைவர் திருவேங்கடசாமி ..அவர்களை சந்திக்க ,கொழுமும் ஆதி ,அருட்செல்வம் ,பேராசிரியர் கண்டிமுத்து ,நானும் நேர்காணல் நிகழ்வு சென்றிருந்தோம் ..நம் சல்லூர் அம்மன் கோவில் பற்றி தகவல் அளித்து உள்ளார் ..இவர்கூட பெரியார் சிந்தனைவாதி இவர் வீட்டின் பின்புறம் தான் சல்லூர் அம்மன் கோவில் உள்ளது .பெரியாரை படித்தவர்கள்தான் ..கோவில் தகவல்களை அதிகம் தெரிந்து வைத்துள்ளார்கள் .நம் சமுதாயத்தை பற்றி வரலாறு படைத்தவர்கள் ..நமது எதுலப்ப மன்னரின் நூல்களைக்கூட இலவசமாக ராமச்சந்திரபுரம் மக்களிடம் கொடுத்துக்கொண்டு உள்ளார் ..இவர் உடுமலை நாராயணகவி பற்றி ,விருகல்பட்டி ,மரிக்கந்தை ,பெதப்பம்பட்டி ,நெகமம் ,கரப்பாடி , நம் உடுமலை நாராயணகவி திரைப்பட துறைக்கு வருவதற்கு முன்னால் கதர் துணி வியாபாரம் கால்நடையாக சென்று நம் சொந்தங்கள் இருக்கும் இடங்களில் வியாபாரம் செய்ததை பற்றி தகவல் அளித்தார் ..நேற்று ஒரு அருமையான மழை ....மாலை


.... சந்திப்புடன் விடைபெற்றோம் ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக