சனி, 2 செப்டம்பர், 2017

 மும் மூர்த்திகளில் ஒருவரின் பெயரை  முற் பாதியிலும், ரஞ்சனியை பிற் பாதியாகவும் பெயர் கொண்ட என்  தங்கையை அறிமுகபடுத்த வேண்டிய அவசியம் இருக்காது இன்னும் சில வருடங்களில்.......

நீதிக்கு அரசியாகவோ, அரசு தலைமை வழக்குரைஞராகவோ இருப்பதை நாம் தான் அடுத்த தலைமுறைக்கு சொல்ல வேண்டி வரும்.

அன்பழகன் மற்றும் அன்புச்செல்வி தம்பதியினரின் முதல் பெண்ணாக 26 .03 . 1991 இல் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள மரிக்கந்தை கிராமத்தில், சில்லன்னா குலத்தின் பெண் சிங்கமாய் பிறந்தார். ஆரம்ப பள்ளி படிப்பை சோமவார்பட்டியில் தொடங்கி இளங்கலை பட்டத்தை உடுமலையில் உள்ள அரசு கலை கல்லூரியில் முடித்து , இளங்கலை சட்டம் கோவையில் உள்ள அரசு சட்ட கல்லூரியில் முடித்தார்.

இந்த மீன் குட்டிக்கு யாரும் நீந்த கற்று கொடுக்கவில்லை, ஏழ்மையிலும் மனம் தளராது படிக்க வைத்த தன் அப்பா சட்ட படிப்பை முடிக்கும் முன்னரே 2014 இல் இறைவனடி சேர்ந்த போது, தாங்க முடியாத வேதனையோடு படிப்பை முடித்து, பார் கவுன்சிலில் பதிவு செய்து, கோயம்புத்தூரில் உள்ள மிக பிரபலமான வழக்குரைஞரிடம் ஜூனியர் ஆக சேர்ந்து, இன்று கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளை வெற்றிகளாக மாற்றும் திறமையை பெற்று இருக்கிறார்.

உடன் பிறந்த தம்பி சிவகுமாருக்கு மற்றும் இல்லை, தன் கிராமத்தில் உள்ள படிக்கும் குழந்தைகளுக்கு ஒரு கலங்கரை விளக்கமாகத்தான் தெரிகிறார்

தராசில் உள்ள முல்லை போல, தவறுகளை தவறு என துணிவுடன் சொல்ல கூடிய, துணிச்சலான, ஆடம்பரம் இல்லாத, விளம்பரம் எதிர் பார்க்காத, சகிப்பு தன்மையின் மொத்த உருவமாய் சமூக பனி ஆற்றி வருகிறார்....

எல்லாரையும் எனக்கு பிடிக்கும், என்னை பிடிக்காதவர்களையும் சேர்த்து என்று சொன்ன போது கொஞ்சம் அதிசயமான பெண்ணாகத்தான் தெரிந்தார்.

கோவையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குரைஞராக வெற்றிகளை குவித்து, ராஜகம்பளத்தாரின் பெருமையை வரலாறாக பதிவு செய்கிறார்.

நமது  சமூக முன்னேற்றத்திற்கு சத்தம் இல்லாமல் தன் பங்களிப்பை சுத்தம் ஆக செய்து கொண்டு இருக்கிறார்.

வாழ்த்துகிறேன் சகோதரியே..... நீ உலகின் மிக சிறந்த வழக்குரைஞராகவோ அல்லது நீதி அரசராகவோ வர வாழ்த்துகிறேன்...

உன்னை அறிமுக படுத்திய பெருமை கிடைத்ததும் ஒரு வரலாறாக இருக்கும்....

நன்றி ...

நீங்களும் தொடர்பு கொள்ளலாம் ......

சிவரஞ்சனி,பி.எஸ்சி, பி எல்
கிரிமினல் மற்றும் சிவில் வழக்குரைஞர்,
மாவட்ட நீதி மன்றம்
கோயம்பத்தூர்

வழக்கறிஞர் ...செல்வி .சிவரஞ்சனி .....நம் கம்பள சமுதாயத்தில் ..பெண் செல்வங்களின் வளர்ச்சி நம் சமுதாயத்தின் வளர்ச்சி ....எங்களின் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் துணை தலைவர் என்பது எங்களுக்கு பெருமையே ... இன்னும் கூடுதல் தகவல் ...கோவை மாவட்ட ம .திமுக ...வழக்கறிஞர் பிரிவுளும் ,பெரியார் சித்தாந்தங்களில் பெரும் பற்றுகொண்டவர் ...எங்களின் சிவரஞ்சனி ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக