வெள்ளி, 29 செப்டம்பர், 2017

இன்று அந்திமயங்கும் மாலைவேலை உடுமலையில் தென்மேற்கு ஈரப்பதமான காற்றுடன் இனிதாக ஆரம்பானது ...புத்தகத் திருவிழா.

6-ம் ஆண்டு உடுமலை புத்தகத் திருவிழா 2017

செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 8 முடிய ...

தினசரி காலை 11 மணி முதல் இரவு 9.00 மணிவரை

 29.09.2017 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி புத்தக ஒருங்கிணைப்பாளர்களுடன் ,திரு .U K .P  முத்துக்குமாரசாமி அவர்களின் புத்தக விழிப்புணர்வு பேரணி பறை இசையுடன் இடிமுழக்கத்துடன்,திரு லால்  அவர்களின் குரலோசையோடு ஆரம்பமமானது ...

திரு.Rtn PHF .S .நாகராஜன் ,அவர்களின் தலைமையில்

மாண்புமிகு அமைச்சர் .உடுமலை கே .ராதாகிருஷ்ணன் அவர்கள் புத்தக
 கண்காட்சி திறந்து  வைத்து சிறப்புரையாற்றினார் .





பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் உயர் திரு .C .மகேந்திரன் அவர்கள்
முதல் விற்பனை துவக்கி வைத்து உடுமலையின் வேகமான  வளர்ச்சிக்கான திட்டங்களையும் ,அடுத்த நகரின் வளர்ச்சிக்கான திட்டங்களை அழகாக எடுத்துரைத்தார் .

சத்தியம் பாபு ,அவர்கள் ,வழக்கறிஞர்  N .சோமசுந்தரம் ,அவர்கள் ,திரு .L .M .பாபு அவர்கள் ,திரு .M .R .இளங்கோவன் அவர்கள் ,புத்தக விழாவிற்கு வருகை புரிந்த பெருமக்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார்கள் ..

புத்தக விழாவில் கலைநிகழ்ச்சிகளை பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலை பள்ளி மாணவியர் பரத நாட்டியம் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது ..

திரு .அம்சராஜ் அவர்கள் ,புத்தக திருவிழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.. :


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக