உடுமலை நாராயணகவி -முனைவர் க இந்திரசித்து
உடுமலை நாராயணகவி !
நீ
பேருக்கு வாழந்தவன் அல்லன் :
ஊருக்குப் பேர்தந்தவன்
உலகத்தின் உச்சியில்
உடுமலையின் பெயரை
உச்சரிக்க வைத்தவன்
இமயத்தின் உயரத்தில்
உடுமலையின் இதயத்தை
உயர்த்தி வைத்தவன்
நாத்திக மருந்து ஏந்திவந்த
மருத்துவன் நீ !
ஆனால் அந்த ஆத்திக
நஞ்சு அருந்தி வந்த
அயலவர்கள் உன்னை
அவமதித்தார்கள் .
பகுத்தறிவுச் சோலையில்
பாட்டியசைத்து
அறிவியல் கடலில் துடிப்பசைத்து
திரை வானத்தில்
தீந்தமிழால் நீந்தி வந்தவன் நீ !
காசிக்கும் ஊசிக்கும்
இணைப்பு ஏற்படுத்திய
இலக்கிய நயம்
இன்னும் கூட இதயத்தில்
சிலிர்ப்பேறபடுத்துகிறது.
குரங்கிலிருந்து பிறந்த குரங்கை
மறுபடியும் மனிதனாக்கிய
உன்
பாட்டுப்பாடி மலர்ச்சிக கொள்கையை
பாராட்டி மகிழ்கின்றேன்
****************
உடுமலை நாராயணகவி !
நீ
பேருக்கு வாழந்தவன் அல்லன் :
ஊருக்குப் பேர்தந்தவன்
உலகத்தின் உச்சியில்
உடுமலையின் பெயரை
உச்சரிக்க வைத்தவன்
இமயத்தின் உயரத்தில்
உடுமலையின் இதயத்தை
உயர்த்தி வைத்தவன்
நாத்திக மருந்து ஏந்திவந்த
மருத்துவன் நீ !
ஆனால் அந்த ஆத்திக
நஞ்சு அருந்தி வந்த
அயலவர்கள் உன்னை
அவமதித்தார்கள் .
பகுத்தறிவுச் சோலையில்
பாட்டியசைத்து
அறிவியல் கடலில் துடிப்பசைத்து
திரை வானத்தில்
தீந்தமிழால் நீந்தி வந்தவன் நீ !
காசிக்கும் ஊசிக்கும்
இணைப்பு ஏற்படுத்திய
இலக்கிய நயம்
இன்னும் கூட இதயத்தில்
சிலிர்ப்பேறபடுத்துகிறது.
குரங்கிலிருந்து பிறந்த குரங்கை
மறுபடியும் மனிதனாக்கிய
உன்
பாட்டுப்பாடி மலர்ச்சிக கொள்கையை
பாராட்டி மகிழ்கின்றேன்
****************


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக