புதன், 6 செப்டம்பர், 2017


 சக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

இன்றைய நமது அறிமுகம் திரு முருகராஜ் அவர்கள்.

1966 ஆம் ஆண்டு திரு சண்முகம் ( பூர்விக ஊர் - எட்டமநாயக்கன்புதூர்) அவர்களுக்கும் திருமதி ராஜபாக்கியம் (பூர்விக ஊர் -வாரப்பூர்- புதுக்கோட்டை மாவட்டம்)  அவர்களுக்கும் மகனாக பிறந்தவர். இவருடைய தந்தை திரு சண்முகம்  அவர்கள் பழனி முருகன் கோவிலில் 30  வருடங்கள் பராமரிப்பு பணியில் இருந்து உள்ளார். திரு முருகராஜ் அவர்களுக்கு உடன் பிறந்தோர் 3 சகோதிரிகள் ( திருமதி பத்மாவதி ,  திருமதி மகேஸ்வரி,திருமதி ஜெயந்தி) மற்றும் 1 இளைய சகோதரர் (திரு முத்துகிருஷ்ணராஜா) உள்ளனர்.

திரு முருகராஜ் அவர்களுடைய மனைவி பெயர் திருமதி கார்த்திகேயனி . இவர் நமது சிவகுமார் அவர்களின் உடன் பிறந்த தமக்கை ஆவர். இந்த தம்பதியருக்கு  இரண்டு பெண் குழந்தைகள் ஒருவர் செல்வி சொர்ணமாலா (பல் மருத்துவம் - 2 ஆம் ஆண்டு மாணவி ) மற்றொருவர்  செல்வி சுபாஷினி ( +2  மாணவி).

பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து விட்டு இவர் பெட்டிக்கடை,லாட்டரி கடை ஆகியவற்றில் வேலைபார்த்து கொண்டு தட்டச்சு பயின்று பின்னர் அதே
தட்டச்சு துறையில் ஆசிரியராக பட்டமும் பெற்று உள்ளார். தொலைதூரக் கல்வியில் இளம்கலை பொருளாதாரம் மற்றும் பெங்களூரில்  சட்டப்  படிப்பை (LLB) படித்து முடித்து உள்ளார். பல வேலைகளை பார்த்து கொண்டே இருந்தாலும் இவருடைய கல்வி ஆர்வம் குறையாமல் இருந்தது இன்றைய நமது இளைய சமுதாயத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவே உள்ளது.
இவருடைய சொந்த திறனால் இன்று திருப்பூரில் உள்ள பிரபல நிறுவனத்தில் சட்ட அலுவலராக பணியாற்றி வருகிறார்.அதை தவிர்த்து வழக்கறிஞராக இருந்து பல சிவில்&கிரிமினல் இரண்டிலும் வழக்காடி வருகிறார்.

இவருடைய வாழ்க்கையில் பல தொழில் துறைகளில் நுழைந்து (கூல் டிரிங்க்ஸ் பேக்டரி, பைனான்ஸ், சோப்பு பேக்டரி,ரியல் எஸ்டேட், தட்டச்சு இன்ஸ்டியூட் ஜாப் ஒர்க்ஸ் செண்டர்  ) பலவற்றில் வெற்றியும் சிலவற்றில் சிறந்த  அனுபவத்தையும் பெற்று உள்ளார்.

இதை தவிர்த்து இடைப்பட்ட காலங்களில் தனது தட்டச்சு திறன் மூலம் பொது பணித்துறையிலும் (PWD) மற்றும் LIC அலுவலகங்களில் பணி புரிந்து உள்ளார்.
1987ல் இருந்து வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தில் உறுப்பினராக இருந்து வந்த இவர், இன்று நமது கொங்கு மாவட்ட வாழ் இளைய சமுதாய மக்கள் ஒருகிணைத்து இருக்கும் கம்பள விருட்சம் அறக்கட்டளை அமைப்பில் தனது 51 வயதிலும் ஆர்வம் குறையாமல்  நல்ல  ஆலோசனைகளை வழங்கி வழிகாட்டி வருவது பாராட்டுக்குரியது.

இதை தவிர்த்து National OBC Federationல் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவராகவும், வங்கிகளில் பேனல் வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார்.

கல்வியின் பெருமையை நன்கு அறிந்த இவர் , தனது இருமகள்களையும் நன்றாக படிக்கச் வைத்து ஒருவரை மருத்துவர் ஆக உருவாக்கியதில் சிறந்த தந்தை ஆகவும் நல்ல முன் உதாரணம் உள்ள மனிதராக ஆகவும் திகழ்கிறார்.

இவருடைய குடும்பத்தினர் மென்மேலும் வளர நம்முடைய வாழ்த்துக்கள்.

இவருடைய தாயார் (திருமதி ராஜபாக்கியம்) அவர்கள் குடும்பத்தினரை பற்றி ஒரு வரலாற்று கதை உள்ளது.

வாரப்பூர் நிலக்கிழார் குடும்பத்தை சார்ந்த இவர்கள் , போராட்ட வீரர் கட்டபொம்மனுக்கு உதவிய காரணத்தினால் ஆங்கிலேயர்களால் தேட பட்டு வந்தனர். இவர்கள் ஆங்கிலேயர்களிடம் சிக்கினால் மரண தண்டனை உறுதி என்று இருந்த காலம் அது.   இதனால் 
பூர்விக இடத்தை விட்டு பெயர்ந்த திருமதி ராஜபாக்கியம் அவர்களின் தாத்தா திண்டுக்கல்லில் உள்ள ஒரு சிற்பியிடம் தஞ்சம் புகுந்தனர்.தங்களது சுய அடையாளத்தை மறைத்து, கற்சிலை சிற்பியாக பயிற்சி பெற்றனர். சிற்ப கலையில் சிறந்து விளங்கி பல  கடவுள் சிலைகளை சிற்பமாக வடித்தனர். சென்னையில் உள்ள வடபழனி கோவிலில் உள்ள முருகன் சிலையும் இவர்கள் வடித்த ஒரு சிலை என்பதை செவி வழி செய்தியாக அறிந்து கொள்ளலாம். இதற்கான சில சாத்திய கூறுகளையும் நாம் அந்த தள வரலாற்றில் அறிய வாய்ப்பு உள்ளது.

நம்முடைய சிறு சிறு வரலாறுகள் உண்மையிலே பிரமிக்க வைப்பதாகவும், இறைவனே நமது குல மக்களுக்கு அருகில் இருப்பது போன்ற உணர்வும் இது போன்ற சம்பவங்களால் உணர முடிகின்றது.

திரு முருகராஜ் அவர்கிளின் அலைபேசி எண் - 9894202111 .

நன்றி
இப்படிக்கு
செந்தில் அப்பையன்









முருகராஜ் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ..அவர் எங்களின் அறக்கட்டளையின் கௌரவ தலைவர் என்ற முறையில் ஒரு அறக்கட்டளையை எப்படி உருவாக்கவேண்டும் ..அதன் சட்டதிட்டங்கள் ஆராய்ந்து சட்டப்படி பதியவைத்து ..நம் சமுதாய மக்களுக்கு அறக்கட்டளை தனி நபர் சாராது ..எப்படி இயங்கவேண்டும் ..அறக்கட்டளைக்கு நிதி ஆதாரங்கள் எப்படி திரட்டுவது ,மாதம் கூட்டங்களில் எங்கள் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும் ..வழி நடத்துபவராகவும் ..அறக்கட்டளைக்கு புது திட்டங்களை உருவாக்கி எங்களை செயல்படவைத்துக்கொண்டு உள்ளார் ...இந்த 51 வயது எல்லாம் ஒரு வயதா என தன் வேகமான செயல்பட்டால் .அரசு துறை ,தனியார் துறை ,உள்ள திட்டங்கள் என்ன ,அதை நம் சமுதாய மக்கள் எப்படி அணுகவேண்டும் ,இலவசமாக ,நம் சமுதாய மக்களுக்கு சட்ட நுணுக்கங்களை தெரிவித்து ,நம் சமுதாய மக்களின் வளர்ச்சிக்கு ,உறுதுணையாக உள்ளார் ..எங்கள் அறக்கட்டளையின் கௌரவ தலைவராக இருப்பது ..எங்களுக்கு கௌரவமே ......செந்தில் அப்பையன் அவர்களுக்கும் எங்களுக்கு தெரியாத தகவல்கள் கேட்டு தெரிவித்திருப்பது எங்களின் கோவை ,திருப்பூர் மாவட்ட நம் சமுதாய மக்களுக்கு மகிழ்ச்சி ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக