Sivakumar Kumar added 4 new photos — with கோவை சதாசிவம் in Coimbatore, Tamil Nadu.
திரு .கோவை சதாசிவம் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மாநகரங்கள் கம்பீரமாய் கண்முன் காட்சி அளிக்கின்றன. நகரங்கள் விரிவடைந்து கொண்டே இருக்கின்றன. கிராமங்கள் மெல்ல மெல்ல அருகி வருகின்றன. மூன்றும் முன்னொரு காலத்தில் காடுகளாக இருந்தன. தற்போது காடுகளின் பரப்பளவு குறைந்து வருகின்றன.காடுகளின் அளவு குறைவு கேடுகளின் அளவை அதிகரிக்கிறது. காட்டை மட்டுமல்ல இயற்கையின் அனைத்து செல்வங்களையும் மனிதன் அழித்து வருகிறான். அசுத்தப் படுத்துகிறான். அழுக்கு ஆக்குகிறான். இயற்கைக்கு எதிராக மனிதர் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் எதிர்வினையாக மனிதருக்கு எதிராக அமைகின்றன. இயற்கையை அழிக்கும் முயற்சியில் மனிதன் தன்னையே அழித்துக் கொள்கிறான். காட்டைக் காக்க வேண்டும் என்னும் முயற்சியில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் செயலில் இறங்கியுள்ளனர். சிலர் எழுத்தில் இயங்குகின்றனர். இரண்டிலுமே தன்னை அர்ப்பணித்து முன்னுதாரணமாய் இருப்பவர் கோவை சதாசிவம். மண், மயிலு, சிட்டு என்னும் ஆவணப்படங்களின் மூலம் தன்னுணர்வை வெளிப்படுத்தியவர் 'உயிர்ப் புதையல்' என்னும் தொகுப்பை அளித்துள்ளார்.
"காடும்
காடு சார்ந்த உலகமும்
பரந்து கிடக்கின்றன
வாருங்கள்
பயணிப்போம் " என வாசிப்பவரையும் 'காட்டுக்குள்' அழைத்துச் செல்கிறார். காடு குறித்த ஒவ்வொரு கட்டுரையும் காடாகவே விரிகிறது.
'மேற்குமலைத் தொடர்களைப் பார்க்கிற போதெல்லாம் அம்மாவின் அடிவயிற்றுச் சுருக்கங்கள் நினைவிற்கு வருகிறது' என 'அம்மாவின் அம்மா' வில் குறிப்பிட்டுள்ளார். மலைக்குச் செல்ல அமைத்த சாலைகளே 'மழையழிவின் முதல் தொடக்கப்புள்ளி' என்கிறார். இம்மலைத் தொடரே மருத நிலங்களைச் செழிப்பாக்குகிறது என்று அறியச் செய்துள்ளார். மலையை சுற்றுலாவிற்காக பயன்படுத்திக் கொள்வோரைச் சாடியுள்ளார்.
தாய் வழிச் சமூகத்தின் கூட்டு வாழக்கையை இன்றளவும் தொடரும் காட்டு விலங்குதான் யானை என யானையை அறியச் செய்யும் பகுதி 'யானைகள் என்பது காட்டின் ஆதார உயிர்'. யானைகளின் செயல்களைக் கூறியதுடன் அவைகள் காட்டுக்கு எவ்வாறு பயனுள்ளதாக விளங்குகின்றன என கூறியுள்ளார். காட்டு வழிகளை உருவாக்குவதும் ஊற்றுப் பறிப்பதும் யானைகளே என்பன போன்ற செய்திகள் வியப்பளிக்கின்றன. மனிதர்கள் காட்டை ஆக்கிரமித்ததால் நகரத்துககு வந்த யானைகைள காட்டுக்கு திருப்பும் முயற்சியில் தொடர் வண்டியில் சிக்கி பலியானதை விவரித்த விதம் கனக்கச் செய்கிறது.எதிர் காலத்தின் இயற்கைக் காட்சி. இறந்து கிடக்கும் யானைகளின் இரத்தச் சாட்சி் என்னும் வரிகள் இரத்தத்தை உறையச் செய்தது.யானையைத் தொடர்நது 'புலி வளமையின் குறியீடு' என ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.புலிகள் வாழும் காடே வளமையானது எனப்தற்கான ஆதாரங்களைத் திரட்டித் தந்துள்ளார். புலியைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் விளக்கியுள்ளார். இறுதியில் புலி வாழும் என்னும் நம்பிக்கையும் ஏற்படுகிறது என்பது சுட்டத்தக்கது.
குழந்தைகளுக்கு யானை கதைகள் சொல்லி எதிர்கால குழந்தைகளுக்கு இயற்கையை பாதுகாப்பது பற்றி அழகாக அதன் மகத்துவத்தை எளியமுறையில் காடுகளையும் ,பறவைகளையும் பாதுகாப்பவர் ...திரு .கோவை சதாசிவம் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக