நம் உடுமலை பகுதியில் ...இந்திய விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்த ..தளி எத்தலப்ப மன்னர் ..எர்ரவ நாயக்கருக்கு வரலாற்று நிகழ்வுகள்,தொடர்கள் பற்றி எழுதுவதற்கு எழுத்தாளர்கள் இல்லையா ?
விகடன்
பிரசுரத்தில் என்னுடைய “நெல்லை ஜமீன்கள்” நூல் வெளிவந்தவுடன் ஆன்மிக
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வரலாற்று எழுத்தாளர் என பெயர் பெற
ஆரம்பித்தேன். இதை பிரபல எழுத்தாளரும், குங்குமம் ஆசிரியருமான சிவராமன்
தன்னுடைய ஜமீன்களின் கதைகள் 56 வது தொடரில் எனது பெயரை ஆய்வாளர்
முத்தாலங்குறிச்சி காமராசு என்றே குறிப்பிடுகிறார். பெரும் பாலுமே
என்னுடைய தலைத்தாமிரபரணி என்னும் நூலை பலர் நகல் எடுத்து, என்னிடமே
அவர்கள் எழுதியதாக தருவார்கள். அப்படியிருக்கும் இந்த காலகட்டத்தின் எனது
நூலை மேற்கோள் காட்டி, என்னை ஆய்வாளர் முத்தாலங்குறிச்சி காமராசு என
குறிப்பிட்ட திருவாளர் கே.என்.சிவராமன் அவர்களின் நற்பண்பை நான்
என்னவென்று சொல்வது. இந்த எபிசோட்டில் இரண்டு இடத்தில் எனது பெயரை
குறிப்பிட்டுள்ளார்.
மிகப்பெரிய பத்திரிக்கையின் ஆசிரியராக இருக்கும் அவர் எங்களை போன்ற
கிராமத்து எழுத்தாளர்களை ஊக்குவிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
திருவாளர் கே.என்.சிவராமன் அவர்களுக்கு எனது நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக