புதன், 20 செப்டம்பர், 2017

என்னோடு உயிராய் உறவாய் பேசி பயணிப்பவர்களுக்கு தெரியும்..,
என்னுடைய இந்த இனத்திற்கான தேவை குறித்த வேதனை.
எங்கேனும் சிறு வெளிச்ச கீற்று எம் சமூகத்தின் மீது விழுந்து விடாதா என்ற என்னுடைய ஏக்கம்.

இருப்பினும்..,
முரண்பாடுகள் நிறைந்த என் சமூகத்தில் களம் காண்பது அவ்வளவு எளிதல்ல..,

காலத்தின் தேவை கருதி ஒரு நாள் என் சமூகமும் தனது உரிமைகளுக்காக தன் இனக்கொடியாம் ராஜகம்பள மஞ்சள்  கொடியை கையில் ஏந்தி ஒருநாள் போராடும்,அன்று என் சமூகம் இழந்ததையெல்லாம் மீட்டெடுக்கும்,பெற்ற அவமானங்கள், வரலாறு இருட்டடிப்புகளுக்கெல்லாம் சரியான தகவல்களை திரட்டி கல்வி ,பொருளாதாரம் ,பண்பாடு ,கலாச்சாரம் என தன் இனத்தை முன்னேற்றும் நாள் வெகு தொலைவு இல்லை .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக