வெள்ளி, 22 செப்டம்பர், 2017

 ⁠⁠⁠⁠⁠நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

சென்னையில் மளிகை கடை வைத்திருப்போரின் அன்றாட வாழ்க்கை ஆனது அதிகாலை நான்கு மணி முதல் ஆரம்பித்து விடுகிறது. அந்த பொழுதில் வீட்டில் இருந்து கிளம்பி கோயம்பேடு மார்க்கெட் சென்று அன்றைய காய்கறிகளை வாங்கி கொண்டு காலை 6.30 மணி அளவில் வந்து கடையில் சேர்த்தால் மட்டுமே அவர்களின் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பையும் சீரான வியாபாரத்தையும் பெற முடியும். அன்றைய பொழுது இவர்களுக்கு முடிய சுமார் 11 மணி வரை ஆகும். இடையில் 3  மணி நேரம் மட்டும் உணவு உட்கொள்ளவும் சற்று களைப்பாறவும் கிடைக்கும். இத்தகைய வாழ்கை முறையில்  மட்டுமே அவர்களின்  பெரும்பாலான நாட்கள் கழியும். இதில் சற்றும் தளராமல் எப்போதுமே புன்னகையுடன் இருக்கும் ஒரு நபரின் அறிமுகம் தான் இன்று.

தம்பி சீனிராஜ் .

2000  ஆம் ஆண்டு தனது எட்டாம் வகுப்பு படிப்பை நற்கலைக்கோட்டையில் உள்ள நடுநிலை பள்ளியில்  முடித்த இவர், சென்னையை நோக்கி வந்தார். அவர் குடும்பத்தில்  உள்ள நபர்கள் அதற்க்கு முன்னர் படித்த அதிகபட்ச கல்வியும் 8  வகுப்பு வரை மட்டுமே. சென்னையில் உள்ள ஒரு உறவினர் கடையில் மாதம் ரூபாய் 350 சம்பளத்திற்கு வேலை செய்து வந்தவர். 8  ஆண்டுகள் அதே கடையில் பணி செய்து ரூபாய் 1300 வரை சம்பள உயர்வு பெற்றார். பின்னர் தன்னுடைய 8  வருட   மளிகை கடை வியாபாரத்தில் கிடைத்த அனுபவத்தின் மீது நம்பிக்கை வைத்து தங்கவேலுசாமி மாமா அவர்களின் உதவியோடு சென்னை வேளச்சேரி பகுதியில் "வேல்முருகன் ஸ்டோர்ஸ்" எனும் கடை வைத்து, இன்று அதற்கு அருகில் உள்ள பள்ளிக்கரணை பகுதியில் சொந்தமாக வீடு வாங்கி தனது அண்ணன் தம்பிகள் அனைவரோடும் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.

தனது கல்வியை  8  ஆம் வகுப்பிற்கு மேல்  தொடரா விட்டாலும் தனது தம்பி திரு விஜயகுமார் அவர்களை B .Com ( ஜெயின் காலேஜ்) படிக்க வைத்து கொண்டு இருக்கிறார்.

தன் தந்தையை 1999  ஆம் ஆண்டு இழந்த சீனிராஜ் , தனது தம்பிகளுக்கு தந்தை ஸ்தானத்தில் நின்று அவர்களுக்கு  தேவையான பொருளாதார உதவிகளையும் மற்ற நல்வழியையும் காட்டி வருகிறார்.

திரு சீனிராஜ் அவர்களின் தந்தை பெயர் விஜயராஜ் - தாயார் ராஜேஸ்வரி ஆகியோர். இவர் உடன் பிறந்தோர் திரு சங்காரவேல்ச்சாமி ,திருமதி ரத்தினவேல்த்தாய்,  திரு வேல்முருகன் , திரு ராம்குமார் , திரு விஜயகுமார் ஆகியோர் ஆவர்.

இவர் மனைவியின் பெயர் சுப்புத்தாய் . இவர்களுக்கு திவ்யா, வித்யா, விஜய் எனும் குழந்தைகள் உள்ளனர்.

கடின உழைப்பால் மட்டுமே உயர்ந்த தம்பி  சீனிராஜ்  அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

இவர்களின் வாழ்கை முறையில் பெரும்பாலும் உடல் உழைப்பு அதிகமாக இருந்தாலும் , சீனிராஜ் அவர்களுக்கு  எந்த விதமான மது பழக்கமோ அல்லது புகை பழக்கமோ கிடையாது.

" இதுவே நமது கலாச்சாரத்தின் ஒரு பெரிய அடையாளம்."

தங்கவேலுசாமி மாமா அவர்களின் சிஷ்யர்கள் யாரும் தீய பழக்கதிற்கு அடிமை ஆகாதவர்களே!

அவர் மென்மேலும் உயர்ந்து 16  செல்வங்களையும் பெற்று இன்புற்று வாழ வாழ்த்துவோம்.

அவருடைய தொடர்பு எண்: 9790707003

நன்றி
இப்படிக்கு
செந்தில் அப்பையன்


மதிப்புமிக்க சீனிராஜ் அவர்களுக்கு ..மனப்பூர்வமான வாழ்த்துக்கள்

உழைப்பின் மூலம் மளிகை கடை நாடார் சமுதாயத்தை யம் கர்மவீரர் காமராஜை நினைவு படுத்துகிறார் ...

நான்கு எழுத்து படித்து வேலைவாய்ப்பு பெற்று ...கல்யாணம் செய்து தன் பெற்றோர்களையும் ,கூடப்பிறந்த சகோதர ,சகோதிரிகளை ..தூக்கியெறியாமல் ...தன் கூட பிறந்த தம்பியை தான் படிக்கமுடியாத சூழ்நிலையில் தந்தை இடத்தில இருந்து நன்கு படிக்கவைத்து கொண்டுஇருப்பதற்கு நன்றி சொல்ல வார்தை இல்லை தாயையும் தம்பியையும் கூட்டு குடும்பமாக .வாழக்கையை அழகாக நகர்த்திக்கொண்டு இருக்கும் .. சீனிராஜ் தாய்க்கும் ,மனைவிக்கும் ,குழந்தைகளுக்கும் நன்றிகள் கோடி ...நிகழ்காலத்தில் நம் சமுதாயத்தில் கூட்டுக்குடும்பம் இருப்பதற்கு இவர் ஒரு முன்னுதாரணம் ..படித்த நம் இளைய மக்கள் இவரிடம் கற்கவேண்டிய பாடமும் கூட ..இதை ஐ ஐ ம் இல் சொல்லித்தருவதற்கு லச்சத்தில் தொகை கட்டவேண்டும் ..நமக்கு இலவசமாக கற்றுக்கொடுத்து இருக்கிறார் ..

சீனிராஜ் அவர்களுக்கு  எந்த விதமான மது பழக்கமோ அல்லது புகை பழக்கமோ கிடையாது. இதுவே நமது கலாச்சாரத்தின் ஒரு பெரிய அடையாளம்.".....இதை கண்டிப்பாக நம் சமுதாயம் பின்பற்றவேண்டும் ..இது நம் சொத்தும் கூட ...

இவரை வசந்தம் குழுவில் பார்க்கும்போது செலஃபீ சீனிராஜ் என்றுதான் பார்ப்பேன் ..நடிகர்களை விளம்பரப்படுத்தாமல் ...நானே ரஜினி ,நானே கமல் ,நானே விஜய் ,நானே அஜித் என்று படம் எடுத்து பகிர்வது அருமை ...

நன்றி செந்தில் அப்பையன் அவர்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக