வியாழன், 30 நவம்பர், 2017

இன்று நடந்த திருமண வரவேற்பு நிகழ்வு
மணமக்கள் -சு.பரமசிவன் -க .கோகிலா ..மணமக்களுக்கு கம்பள விருட்சம் அறக்கட்டளையின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
நம் அறக்கட்டளையின் உறுப்பினர்களும் கலந்துகொண்டு ..மணமக்களுக்கு கேக் வெட்டி இனிப்புடன் சந்தோசத்தை கொண்டாடி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தது இன்றய புதிய தலைமுறையின் திருமணவிழா கொண்டாடியது மிக்க மகிழ்ச்சி ..

மணமக்கள் இன்று அறக்கட்டளைக்கு நம் சமுதாயசொந்தங்கள் பயனடையும் வகையில் தங்களை உறுப்பினர்களாக சேர்த்து கொண்டு ..தங்களின் திருமணத்தின் ஒரு புதிய நிகழ்வாக அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தது அறக்கட்டளையின் உறுப்பினர்களுக்கு ஒரு முன்னோடியாக இருந்தது மற்றட்ட  மகிழ்ச்சி .நம் கம்பள விருட்சத்தின் கிளைகளை படற செய்துள்ளனர்.

நம் அறக்கட்டளையின் உறுப்பினர் நம்ம மாப்பிளை மனோகர் ..நம் சொந்தங்களை இன்று அறிமுகப்படுத்தினார் ..அவர்களுக்கு நம் அறக்கட்டளையின் சார்பில் புதிய தொழில் தொடங்க ஆலோசனையும் வழங்கியது  மனநிறைவை அளித்தது ..நன்றி மனோகர் மாப்பிள ..

இனிவரும் திருமணநிகழ்வுகள் .கோவில் விழாக்களில் இந்த நடைமுறை அறக்கட்டளையின் சார்பில் உறுப்பினர்கள் நம் இளைய சமுதாயத்துக்கு உதவும் வகையில் இனி நிகழ்வுகள் நடைபெறும் ..

திருமண நிகழ்வில் நம் ராஜகம்பள மணமேடை பற்றி செய்திகளை நம் இளைய சொந்தங்களுக்கு தெரிவித்து ராஜகம்பள திருமண தகவல் மையத்தில் பதிய தொடர்பு எண் அளித்து அறக்கட்டளையின் சார்பாக இணைத்ததில் மிக்க மகிழ்ச்சி ...தொடரும் கம்பள விருட்சத்தின் கிளைகளை விரிவடைய செய்யும் ...கம்பள விருட்சம் உறுப்பினர்கள் ,செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டது திருமணவிழா மனதிற்கு ஆத்ம திருப்தி
விழாவாக  அமைந்தது ...













புதன், 29 நவம்பர், 2017

கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் அருணாச்சலம் முருகானந்தம் வாழ்க்கை வரலாறாக உருவாகும் 'பேட் மேன்'
மலிவு விலை நாப்கின்களை கண்டுபிடித்த கோவையைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் வாழ்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் 'பத்மன்' படத்தின் போஸ்டரை பாலிவுட் ஹீரோ அக்‌ஷய் குமார் வெளியிட்டார்.
அருணாச்சலம் முருகானந்தம் கோவை ஊரகப் பகுதியைச் சேர்ந்த ஓர் கண்டுபிடிப்பாளர் ஆவார். சிற்றூர்களில் மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் கடைபிடிக்கும் சுகாதாரமற்ற தூய்மைக்குறைவான செயல்முறைகளைக் களைய மலிவான தீர்வைக் காண வேண்டியத் தேவையை வெளிப்படுத்தியவர். வணிகமுறையில் தயாரிக்கப்படும் விடாய்க்கால அணையாடைகளை விட மூன்றில் ஒரு பங்கு விலையில் தயாரிக்கக்கூடிய இயந்திரத்தைக் கண்டுபிடித்து அதற்கான காப்புரிமை பெற்றவர். ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை நிறுவி அணையாடைகளை தயாரித்து வருகிறார். வணிக நோக்கின்றி சேவை மனப்பான்மையுடன் இந்த இயந்திரத்தை கண்டுபிடித்ததற்காக இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கியுள்ளது
பாலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோவாகத் திகழும் அக்‌ஷய் குமார் தற்போது கோல்டு, மொகல், பேட் மேன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் '2.O' படத்தில் வில்லனாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமாகிறார். இந்நிலையில், அக்‌ஷய் நடித்து வரும் 'பேட் மேன்' படத்தை ஆர். பால்கி இயக்குகிறார். இந்தப் படம் மிலவு விலை நாப்கின்களை கண்டுபிடித்த கோவையைச் சேர்ந்த தொழில் அதிபரான அருணாச்சலம் முருகானந்தம் என்பவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறது.
இப் படத்தில் சோனம் கபூர், ராதிகா ஆப்தே ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். படத்துக்கு ஒளிப்பதிவு - பி.சி.ஸ்ரீராம். இசை - அமித் திரிவேதி.
இதையடுத்து 'பேட் மேன்' படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் அக்‌ஷய் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், 'சூப்பர் ஹீரோ வரும் 2018 ஜனவரி 26-ஆம் தேதி வருகிறார்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் படத்தின் நாயகி சோனம் கபூரும் படத்தின் போஸ்டரை ரீடுவிட் செய்திருக்கிறார். அதில், மகாத்மா காந்தி கூறிய பொன்மொழியான, 'உலகம் உன்னை கவனிக்க வேண்டுமென்றால் நீ ஒரு மாற்று சக்தியாக இரு' என்பதை குறிப்பிட்டு, 'ஒரு எழுச்சியூட்டும் கதையுடன் பேட் மேன் வரும் குடியரசு நாளில் வெளி வருகிறது' என்று தெரிவித்துள்ளார்.
உண்மைக் கதையுடன் காமெடி உள்ளிட்ட ஜனரஞ்சக அம்சங்கள் கலந்து உருவாகி வரும் 'பேட் மேன்' திரைப்படம் வரும் ஜனவரி 26-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.


செவ்வாய், 28 நவம்பர், 2017

வேம்பு சதுக்கம் ..கிருபானந்த வாரியார் ....(உடுமலை -அரசு ஆண்கள்  மேல்நிலை பள்ளி )..
என் சிறு வயதில் நான் பயின்ற அரசு பள்ளியில் முருக பெருமானின் அருளை ..கிருபானந்த வாரியார் அவர்களின் சொற்பொழிவுகள் ஆற்றியது இன்னும் என் மனக்கண்ணில் மலரும் நினைவுகளாக உள்ளது ..முகப்பு படம் அருமை ..

தற்போது பழமையும் ,புதுமையும் சுமந்த கட்டிடங்களாக காட்சியளித்து வருகின்றது ,ஆனால் மிகவும் பழமையான வேம்பு சதுக்கம் என்று அழைக்கப்படுகின்ற அமைப்பு தற்போதும் இருந்துவருகிண்றது.அதில் தான் பல ஆண்டுகளாக  காலையில் பள்ளி ஆரம்பிக்கும்போது  அனைத்து மாணவர்களும் ஆசிரியர் பெருமக்களும் கலந்து கொண்டு வழிபாட்டு கூட்டம் நடைபெற்று வந்தன...வேம்பு சதுக்கத்தில் நடைபெற்ற பல நிகழ்வுகள் எண்ணி என் கண்களை கண்ணீர் மறைகின்றது .வேம்பு சதுக்கத்தில் உரையாற்றிய வர்கள் நீதியரசர் திரு .மோகன் ,ச.ராமலிங்கம் ,முன்னால் சட்டத்துறை அமைச்சர் .திரு சாதிக் பாஷா ,திரு.கே.எ .மதியழகன்..திரு.கிருபானந்த வாரியார் ..ஆகியோர் ஆவார்கள்.  பெருமைக்குரிய தலைமை ஆசிரியர் மரியாதைக்குரிய மறைந்த மேதை ர.கிருஷ்ணசாமி  அவர்கள் பள்ளியை நடத்தி வந்த சிறப்பு எல்லாம் என் மனதில் நிழலாடுகிறது...      
வழக்கறிஞர் முருகராஜ்

ராஜகம்பள மணமேடை....திருமண தகவல் மையம்

ராஜகம்பளம் மேட்ரிமோனி நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி. நிறைய சொந்தங்கள் இணைகிறார்கள். நீங்களும் இணையலாம் மற்ற சொந்தங்களிடம் தெரிவிக்கலாம்
இந்த Rajakambalam Matrimony குரூப் மணமகன் மணமகள் தேவைக்குv ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நல்ல முயற்சிக்கு ஒத்துழைப்பு தாருங்கள். இருவரின்

பெயர்
தந்தை பெயர்
தாயார் பெயர்
பிறந்த தேதி. நேரம்
நிறம், உயரம்.
படிப்பு
வேலை/பணிபுரியும் இடம்
சம்பளம்
குலம்
பிரிவு வார்
குலதெய்வம்
பூர்வீக ஊர்
சொந்த ஊர்
குடும்ப உறுப்பினர் விபரம்
சொத்து/வசதி விபரம்
முகவரி
செல் நம்பர்
Email
எதிர்பார்ப்பு

இதுபோக ஜாதகம்
போட்டோ

ராஜகம்பள மணமேடை....திருமண தகவல் மையம்
அனுப்பவும் contact 9894202111 & rajakambalammatrimony17@gmail.com
செந்தில் அண்ணா ...உங்கள் பணி தொடர்பாக இருந்தாலும் இந்த குழுவில் பதியலாம் ...வெறும் பொழுது போக்கு சம்மந்தமாக இல்லாமல் ..தொழில் தொடர்பாக இருந்தாலும் பதிவிடுங்கள் மகிழ்ச்சி ...இதில் இருப்பவர்கள் எல்லோரும் ..கோவையில் ..வடவள்ளியில்  என் பணிக்கு ..என் வாழ்க்கையில் 20 வருடமாக மேம்ப்படுத்தியவர்கள்.என் மதிப்புமிக்க என் நண்பர்கள்

கோவையில் ..வடவள்ளியில் ..எனக்கு இப்பொழுதும் என் பணி தொடர்பாக எனக்கு தொடர்பில் உள்ளவர்கள் ..
என் குருநாதர் ...S .ஜெய்சங்கர் அவர்கள்
1.RMG  HOMES மூர்த்தி அவர்கள் (வடவள்ளி ,அரணமனைக்காரர் வீடு )
2.GUJAN BUILDERS  -ஆடிட்டர் குமார் அவர்கள் ..வடவள்ளி
3.DHKSHAA BUILDERS -மோகன் அவர்கள் -வடவள்ளி
4.பிரதாப் பில்டர்ஸ் -பிரதாப் அவர்கள் -பீளமேடு
5.அருண் அவர்கள் -அருண் பில்டர்ஸ் -வடவள்ளி
6.திரு .ரவி அவர்கள் -VICE PRESIDENT -டிவிஎஸ் ஹோண்டா -கோவை
7.DR .மோகன் பிரசாத் அவர்கள்  -கோவை (உடுமலைப்பேட்டை -KVB FORMER VICE PRESIDENT .
இந்த குழுவில் எல்லோரும் தன் தொழில் தொடர்பான பதிவுகளை பதிவிடலாம் ...

திங்கள், 27 நவம்பர், 2017

தீயாய் ..வேலை ...
எப்படி சாத்தியம் ஆகிறது ...பதில் ..கேள்விகள் .?

எப்பொழுதுமே கேள்விகள் கேட்கப்படும்போது தானாக வேலை நடக்கிறது ..

முதலில் நம் செந்தில் தினமலர் மாப்பிள்ளையின் கேள்வி கேட்டு..சந்தா தொகை தொய்வு இல்லாமல் வாங்கவேண்டும் என்றார் ...
சந்தா புத்தகம் நாலு செயல்குழு உறுப்பினர்கள் வாங்கினார்கள்
வாங்கியதோடு நில்லாமல் ..

நம்ம தம்பி மேகானந்தன் அன்று மாலையே சந்தா வசூலித்து ...இன்று அறக்கட்டளையின் வங்கி கணக்கில் சேர்த்துவிட்டு அதையும் பகிரளியில் பகிர்ந்து உள்ளார் ..

அப்படியே நம்ம RK எலைட் பக்கம் இருந்து செந்தில் அப்பையன் அவர்கள் கல்வி தொகையை குறித்து கேள்வியும் தன் கருத்துக்களையும் ,சில ஆலோசனைகளை வழங்கினார் ...எலைட் குழுவில் திரு .குணா அவர்களை அறிமுகப்படுவதுதாக கூறியுள்ளார் ..நன்றி

அப்படியே நம்ம தேனீ மாப்பிள சாமி (எங்கள் உடுமலை மருமகன் )அவர்கள் .உற்சாக கொடுக்கும் வகையில் பாராட்டி ..நம் சொந்தங்களில் யாராவது CA படித்த ஆடிட்டர்கள் அறக்கட்டளைக்கு எதிர்காலத்தில் அதிகம் தேவைப்படுவார்கள் என்று கூறியது மிக்க மகிழ்ச்சி ..

அறக்கட்டளையின் கௌரவ ஆலோசாகர் ..முதலில் இருந்தே datebase பற்றி நினைவு கூறியது மிக்க மகிழ்ச்சி ..

இப்படி தான் அறக்கட்டளையின் செயல்பாடுகள் வேகம் அதிகரித்து உள்ளது ...

நம்பிக்கையுடன் ..ஓற்றுமையுடன் ..கம்பள சமுதாயத்தின் முன்னேற்றம் கண்டுகொண்டு உள்ளது .....தீயாய் இப்பொழுது ...



ஞாயிறு, 26 நவம்பர், 2017


வளர்ந்த இன்றைய கோவைக்கு வயது 223...........

நவம்பர் 26 கோவை தினம்!
******************************
தலைநகர் அந்தஸ்தில் இருக்கிறது சென்னை மதுரையைக் கடக்கிறது வைகை நெல்லையை தழுவிச் செல்கிறது தாமிரபரணி தூத்துக்குடியிலே துறைமுகம் இருக்கிறது திருச்சியிலே "பெல்' (பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்) இருக்கிறது என்.ஐ.டி., இருக்கிறது என்னதான் இருக்கிறது இந்த கோவையில்...?.
வற்றாத ஒரு நதியுமில்லை; வானளாவிய ஒரு கோவிலுமில்லை; இதிகாசத்திலே இடமுமில்லை; எந்த அரசும் இந்நகரைக் கவனிப்பதுமில்லை; இன்னும் சொல்வதானால், 1927ம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆவணப்படி, "குடிநீரும், சுகாதாரமும் இல்லாத இந்த ஊரில்', மக்கள் வாழத்தகுதியே இல்லை....அப்புறம் எப்படி இந்த ஊரிலே குடியேறினார்கள் இத்தனை லட்சம் பேர்?.
தலைவர்கள் இருப்பதால், தலைநகருக்குக் கவனிப்பு அதிகம்; மற்ற ஊர்களுக்காக பரிந்து பேச, ஆங்காங்கே ஒரு தலைவர் இருக்கிறார். இந்த கோவை மண்ணுக்காக குரல் கொடுக்க, இன்று வரை ஒரு நல்ல அரசியல் தலைவர் இங்கே இல்லை; ஆனாலும், இந்த நகரம் இத்தனை கம்பீரமாய் வளர்ந்து நிற்கிறதே...எப்படி?
விரக்திகளும், வேதனைக்குரிய கேள்விகளும் நிறைய இருந்தன; இப்போதும் இருக்கின்றன; ஆனால், எல்லாவற்றையும் வெற்றிச்சரித்திரமாக்குவதுதான் இந்த கோவை மண்ணின் மகத்துவம். இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இது ஒரு நகரமில்லை; இன்றைக்கு இந்த நகரைத் தவிர்த்து, தமிழக வரலாறே இல்லை.
சென்னையிலே பிழைப்பது எளிது; வாழ்வது கடினம். மதுரையிலே வாழ்வது எளிது; பிழைப்பது கடினம். கோவையில் எளிதாய்ப் பிழைக்கலாம்; உழைத்தால் செழிக்கலாம். வந்தாரை மட்டுமல்ல; வாழ்வில் நொந்தாரையும் தந்தையாய் அரவணைத்து, வாழ வழி கொடுக்கும் உழைப்பின் பூமி இது. எந்த அரசின் ஆதரவுமின்றி, இந்த நகரம் இத்தனை பெரிதாய் வளர்ந்ததன் ரகசியமும் இதுவே.
பஞ்சாலை நகரம் என்ற பெயரையும் கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து வந்தாலும், இந்த "டெக்ஸ் சிட்டி', சமீபகாலமாய் "ஹை-டெக் சிட்டி'யாய் மாறி வருகிறது என்பதுதான் உண்மை. உயர் கல்விச் சாலைகள், தகவல் தொழில் நுட்பப் பூங்காக்கள், அதிநவீன மருத்துவமனைகள், அகில உலகிற்கும் சவால் விடும் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள்...
அரசு அமைத்து சோபிக்காமல் போன "டைடல் பார்க்' தவிர, இந்த நகருக்கு இத்தனை பெரிய வளர்ச்சியை வாரிக்கொடுத்தது இங்குள்ள தனியார் தொழில் முனைவோர்தான். எத்தனை வேகமாய் வளர்ந்தாலும், இன்னும் கட்டமைப்பு வசதிக்காகப் போராடுகிற நிலைதான் இங்கே. ஆனாலும், சோதனைகளைக் கடந்து சாதனை படைக்கிறது கோயம்புத்தூர் நகரம்.
இடையிலே ஒரு சங்கடம் வந்தாலும், அதிலும் "பீனிக்ஸ்' பறவையாய் மீண்டெழுந்து, இன்று "ஒற்றுமையின் ஊராக' பெயர் பெற்றிருக்கிறது கோவை. ; குளங்களைக் காக்க குரல் கொடுக்கிறது "சிறுதுளி'; மரங்களை வெட்டினால், ஓடோடி வருகிறது "ஓசை'; ரயில் சேவைக்காக போராடுகிறது "ராக்'.
மரியாதைக்குரிய கொங்குத் தமிழ், அத்துப்படியான ஆங்கிலம், இதமான காலநிலை, சுவையான சிறுவாணி, அதிரடியில்லாத அரசியல்... இவற்றையெல்லாம் தாண்டி, அமைதியை விரும்பும் மக்கள் இங்கே இருக்கிறார்கள். சாதி, மதங்களைக் கடந்து, உழைப்பால் ஒன்று பட்டு நிற்கும் கோவையின் மண்ணின் மைந்தர்களே, ஆலமரமாய் எழுந்து நிற்கும் இந்த நகரத்தின் ஆணிவேர்கள்.
புதுப்புது நுட்பங்களால் கண்டு பிடிப்புகளில் கலக்கும் தொழில் முனைவோராலும், சமூக அக்கறையும், சமத்துவ நேசமும் கொண்ட மனிதர்களாலும், கோயம்புத்தூர் நகரம் தினமும் புத்துணர்வோடு புகழின் சிகரம் நோக்கி பீடு நடை போடுகிறது. அதைக்கொண்டாட வேண்டிய அழகான நாள் இன்று...கோயம்புத்தூர் தினம்.

எல்லோரும் சொல்வோம் இறுமாப்பாய்...

என்னை 20 வருசமாக வாழவைத்துக்கொண்டிருக்கும் ஊர் என்பதால் நானும் சொல்லிக்குவேன்
என்ர ஊரு கோயமுத்தூருங்கோ!.

சனி, 25 நவம்பர், 2017

கம்பளவிருட்சம் அறக்கட்டளை ..-மாதாந்திர செயல்கூட்டம் .

நாளை காலை 11.00 மணி அளவில் ..அறக்கட்டளையின் மாதாந்திர செயல்கூட்டம் ...உடுமலையில் குமரன் தட்டச்சு பயிலகம் -எண் 1.வக்கீல் நாகராஜன் வீதி,.உடுமலைப்பேட்டை அலுவுலகத்தில் நடைபெறுகிறது .

அறக்கட்டளையின் செயல்குழு உறுப்பினர்கள் ,உறுப்பினர்கள் கண்டிப்பாக கலந்துகொள்ளவும் ..

கூட்டத்தில் விவாதிக்கப்படும் செய்திகள்

1.கோட்டமங்கலம் வல்ல கொண்டம்மன் கோவிலின் பராமரிப்பு ,கோவிலின் சார்பாக டிரஸ்ட் அமைப்பது தொடர்பாக ..அதன்பின் அரசுக்கு முறைப்படி தெரிவிப்பது குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கபடும்

2.நமது உறுப்பினர்க்கு கல்வி உதவித்தொகை அளிப்பது

3.வரும் 2018 ஜனவரி ,பிப்ரவரி மாதம் வரும் நம் விடுதலை வீரர்கள் கட்டபொம்மன் ,தளி எதுலப்ப மன்னர் ..விழாக்களுக்கு என்ன முறையில் கொண்டாடுவது ..விழாக்களை ஒருங்கிணைப்பது

4.நமது கோவில்களின் வரலாறுகளை எழுதி முடித்து தயாராக உள்ள செய்திகளை நூல்களாக வெளியிடுவது பற்றி விவாதித்தல் ..
5.புதிதாக தொழில் தொடங்க உள்ள நம் உறுப்பினர்களுக்கு தொகையை எப்படி அவர்களுக்கு அளிப்பது .

இவைகள் எல்லாம் அறக்கட்டளையின் செயல்கூட்டத்தில் முடிவுசெய்யப்படும் ...

செயல்குழு உறுப்பினர்கள் ,உறுப்பினர்கள் ,புதிதாக சேரும் உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும் ...













வெள்ளி, 24 நவம்பர், 2017

கோவை மலரும் நினைவுகள்
எங்க ஊரு தங்க ஊரு 
வாழவைக்கும் சிங்கம்ன்னு
இன்று கோயம்புத்தூர் தினம்
கோயம்புத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு
மைசூர் அரசிடம் இருந்த கோயம்புத்தூர், திப்பு சுல்தானின் மறைவுக்குப்பின், ஆங்கிலேயர்களால் மதராஸ் மாகாணத்தில் இணைக்கப்பட்டது.

கோயம்புத்தூரில் இன்றையதினம் “கோயம்புத்தூர் தினம்” ஆக கொண்டாடப்படுகிறது...( 24 நவம்பர் 1804 )

Celebrating Kovai - Nov 24th - Happy Coimbatore Day.
Just have a glance on the below details know about the history of Coimbatore.
Coimbatore is been referred to as the MANCHESTER Of the SOUTH. Coimbatore was elevated as district headquarters on November 24, 1804.
Such a celebration would promote friendliness among the citizens and would be an event for everyone in Coimbatore city. It also depicts the resources and the beauty of Coimbatore.
Coimbatore came under British control in 1799, the first railway service in the region (between Erode and Podanur) began in May 1872, the first textile mill, CS&W Stanes Mill, was started by Robert Stanes in 1888, Bhavani and Dharapuram, were the headquarters of Coimbatore district before 1804. It was shifted to Coimbatore city on November 24, 1804.
Coimbatore, once a dense forest, was formed 1200 years ago. It had four streets on the East-West and six streets on the North-South. The streets were square shaped like the ones during the Chola period.
Covan, a tribal chieftain, ruled Covanpathy, an area that comprised forests when Sundaramurthy Nayanar visited the Patteeswarar temple in Perur. The Chera King who accompanied Nayanar wanted the place to be converted into a town.
Thus, Covanputhur (later known as Coimbatore) came into existence in 9th century A.D. In fact, Perur has been described as `Naatu Covanputhur' in one of the inscriptions.
Hope College (named after Arthur Hope, then Governor of Madras Presidency) is where the first government polytechnic of the region was started in 1945.
The population of Coimbatore declined in 1800 following a series of wars. Dr. Buchanan of the British Raj has documented this.
Veerkeralam (originally Veerakerala Nallur) became the headquarters of Coimbatore for a brief period and gives an account of the irrigation tanks built during the Kongu Chola period. It also has information on Pandya rule in the region, formation of Congress Committee by industrialist
G. Kuppusamy Naidu, history of Kongunadu, its temples, Poolaimedu (Peelamedu), Sulur and the streets of the city and the growth of cinema in Coimbatore.
Our District is Known for Finding Oppurtunity in adversity. Here's a day devoted to taking pride in its history.
Coimbatore was recognised as a gateway to the Nilgiris and Kerala and it used to have just a few thousand families living here with good infrastructure.
The making of a city, although also largely involving humans and their inventions, obviously cannot be encapsulated in such finite terms, as the 'parts' that make it are beyond mere statistics and figures. However, the necessity for a reference point merits the fixing of a date - a pivot for history. For Coimbatore, November 24, 1804 - the day it was declared the district headquarters - is that pivot.
Coimbatore existed as a sleepy village for a very long time, although it was located between three important roads. Coimbatore came under the control of many a dynasty, from the Cheras, Pandyas, Cholas and the Nayakars to the Banas, Chalukyas, Rashtrakutas, Hoysalas, the Vijayanagara empire and the Mysore sultanate. But after the killing of Tipu Sultan, on May 4, 1799, the control of Coimbatore was ceded to the British.
Under them, in 1800, the place was divided into North and South divisions with seperate collectors. It was an administrative move. But as the British realised the plantation potential of the Nilgiris, they found the district a suitable transit point. This led to its industrial development.
As Coimbatore is fully geared up to celebrate its Formation Day(November 24, 1804), its people look back with pride on how this prominent district in the Kongu region developed into an industrial, educational and healthcare centre - almost completely on its own. But, there is also a stock taking of the present and a demand for a roadmap for a good future.
An inscription on the Palakkad Pass speaks of Rajakeseri Peruvazhi, a historical highway that passed through the Kongu region. This speaks of Coimbatore having been a trade and tourism gateway. It remains so. National Highway 47, an important highway that links Kerala with Tamil Nadu and serves as a major transportation route for goods for other States, also passes through Coimbatore.
Industry has been the backbone of Coimbatore's economy. Some of the major industrial groups have not stopped with just their main activity. They have gone beyond this to open a number of educational institutions and healthcare centres. Coimbatore hospitals are renowned across the world for the medical expertise they possess. And this has turned the city into a centre for medical tourism, attracting patients for elective surgeries from countries such as the United States, United Kingdom, European and South East Asian countries.
As the district grew, one factor that helped it most was its cosmopolitan culture. Every segment of the society and people from different cultures have contributed to the modernisation and balanced growth of the district. In the days to come, too, this harmonious existence will help the city soar to even greater heights.

கோவை என்றதும் ..தித்திக்கும் தேனமுது ஷ்யாமுடன் .....

வியாழன், 23 நவம்பர், 2017



விருப்பாச்சி கோபால் நாயக்கர் நினைவு நாள் விழா -23-11-2017

அருமையான நிகழ்வாக அமைந்தது ...விழாவில் விருப்பாச்சி கோபால் நாயக்கர் சேவா சங்கத்தலைவர் .திரு .செந்தில்குமார் அவர்கள் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார் ..

நமது வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழக மாநில தலைவர் .நீதிபதி .தங்கராஜ் அவர்கள் பேசும் பொழுது ..நம் சமுதாய மக்கள் பொறுமையுடன் ..பொறுப்புடன் ..தற்போது உள்ள சூழ்நிலைகளில் அமைதி காத்து வருகின்றனர் ..திருச்சி சம்பவம் ,தினத்தந்தி செய்தி பற்றி பேசும் போது இதை குறிப்பிட்டு பேசியது மகிழ்ச்சி ..நம் சமுதாயத்தில் அரசியல் பிரவேசத்திற்கு விரைவில் அனைத்து ஏற்பாடுகளும் இனி நடைபெறும் என தெரிவித்தார் ..அதற்கான அடிப்படை கட்டமைப்புகள் நடந்துவருகிறது மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் ..
பண்பாட்டுக்கழக கௌரவ தலைவர் திருப்பூர் ராமகிருஷ்ணன் அவர்கள் ..விருப்பாச்சி ஆளுமை பற்றி விரிவாக எடுத்துரைத்தார் ..
தூத்துக்குடி சிங்கம் ...திரு .ராமலிங்கம் ..தனது கனல் பேச்சால் நம் சமுதாய தலைவர்களின் வீர தீர செயல்களை பற்றி பேசினார் ...
பண்பாட்டுக்கழக மாநில செயல்தலைவர் .திரு .முருகவேல் அவர்கள் நம் சமுதாய மக்களின் நலன்களை பற்றி பேசியது அருமை ..
காந்திகிராமம் பல்கலைகழகம் பேராசிரியர் திரு .முத்தையா அவர்கள் பேசும்போது ..நம் கம்பள சமுதாய உணர்வுகளை அரசு செவிசாய்ப்பதில்லை வருத்தப்பட்டார் ..நம் சமுதாய மக்களும் அதிகம் ஒன்று திரளவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் ..அப்போதுதான் அரசு நமது உரிமைகளுக்கு செவி சாய்க்கும் என்பதை தெரிவித்தது மிக்க மகிழ்ச்சி .பண்பாட்டுக்கழக தலைவர்கள் திரு ..சுப்பிரமணி அவர்கள் .திரு .சங்காரவேல் அவர்கள் ,விழாவில் பேசியது மிக அருமையாக அமைந்தது ...

இந்த விழாவில் ..நம் சமுதாய தலைவர்களுடன் ,புதிய இளைய சொந்தங்களை பார்த்து பேசியது மகிழ்ச்சியான திருநாள் ...
















புதன், 22 நவம்பர், 2017

விருப்பாச்சி கோபால் நாயக்கர்-

கோபால் நாயக்கர்

கோபால் நாயக்கர் தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட பதினெட்டாம் நூற்றாண்டில் படை திரட்டி கூட்டமைப்பு செய்து போரிட்ட மன்னர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர். இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள விருப்பாச்சி என்னும் ஊரினை ஆட்சி செய்த குறுநில மன்னர்


ஆங்கிலேயரை எதிர்த்து படை திரட்டி புரட்சி செய்த காரணத்தால் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801-ம் ஆண்டு செப்டம்பரில் இவர் தூக்கில் இடப்பட்டு கொல்லப்பட்டார். இவரது நினைவாலயம் விருப்பாட்சி பகுதியில் அமைந்துள்ளது.

வாழ்க்கை குறிப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு பக்கத்தில் உள்ள விருப்பாச்சி என்னும் ஊரில் கி.பி.1725 இல் ராஜகம்பளம் சமுதாயத்தை சேர்த்த வீரையா நாயக்கருக்கும் , காமாட்சி அம்மாளுக்கும் மகனாக பிறந்தவர் (திருமலை குப்பள சின்னப்ப நாயக்கர்) திருமலை கோபால சின்னப்பா நாயக்கர் . விசுவநாத நாயக்கர் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட பாளையப்பட்டுகளில் ஒன்றான விருப்பாச்சியின், 19 வது பாளையக்காரராக இவர் ஆட்சிக்கு வந்தார்.

விருப்பாச்சி பெயர் காரணம்

நங்காஞ்சிப் பகுதிக்கு வந்த விசய நகரப் பேரரசின் மன்னர் கிருட்டிணத்தேவராயர் அப்பகுதி மக்களின் வீரத்தைப் பாராட்டி தனது மனைவியின் பெயரான ’விருப்பாச்சி’யை அவ்வூரின் பெயராக வைத்தார். அது முதல் நங்காஞ்சி என்ற ஊர் விருப்பாச்சி என மாறியது.

கூட்டமைப்பு

விருப்பாச்சி பாளையக்காரராக விளங்கிய கோபாலநாயக்கர் கண்காணிப்பில், திப்பு சுல்தான் படைத் துணையுடன் புரட்சிக்காரர்கள் ஆங்கில முகாம்களில் பாய்ந்து ஆயுதங்களையும் சேமிப்பு பண்டங்களையும் பறித்தனர். மருதுபாண்டியருடனும் (அண்டை தேசத்து) கன்னட மராட்டிய பகுதி மன்னரான துந்தாசிவாக்குடனும் தொடர்பு கொண்டு ஒரு விரிவான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கினார். இது தீபகற்ப கூட்டமைப்பு என்றழைக்கப்பட்டது, மருதுபாண்டியர்கள் தலைமையில் சிவகங்கைச் சீமையும், கோபால நாயக்கர் தலைமையில் திண்டுக்கல்லும் கூட்டமைப்புடன் சேர்ந்து வலுப்பெற்றன. கன்னட தேசத்தில் தூந்தாசிவாக்கும் கிருட்டிணப்பநாயக்கரும், மலபாரில் கேரளவர்மனும் புரட்சித்தலைவர்களாக உருவாகி கூட்ப்படை மூலம் ஆங்கிலேயரை எதிர்த்தனர். கோயம்புத்தூரிலும் சேலத்திலும் தேசபக்தர்கள் இயங்கினர். ஈரோட்டு மூதார்சின்னனும், கானிசாகனும் தலைவர்களாகத் திகழ்ந்தார்கள். மணப்பாறை லட்சுமி நாயக்கரும் , தேவதானப்பட்டி பூசாரி நாயக்கரும் தங்களது போர் வீரர்களை கோபால நாயக்கருக்கு கொடுத்து உதவி வந்து உள்ளனர் . பழனியில் இத்தலைவர்களின் தூதர்கள் கோபால நாயக்கர் தலைமையில் கூடிப் பேசினார்கள். விருப்பாட்சியில் தெற்கத்திச் சீமையின் சுமார் 3000 கிராமங்களின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி வெள்ளையர்களை விரட்டுவதற்குச் சபதம் எடுத்தார்கள். இந்த அறைகூவல் கிராமங்கள் தோறும் பனையோலை மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. தீபகற்பக் கூட்டமைப்பு தலைமையில் மக்கள் திரளாகப் பங்கேற்ற முதல் சுதந்திரப்போர் தொடங்கியது.

முதல் போர்

கி.பி.1799 மார்ச்சில் கோபால்நாயக்கர் வழி காட்டுதலின் படி மணப்பாறை லட்சுமிநாயக்கர், ஸ்ரீரங்கத்தில் திப்புசுல்தானை சந்தித்து உதவி கேட்டனர். திப்புசுல்தான் தனது தளபதி ஹாஜிகானை நியமித்து ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு நத்தம், மேலூர்,மணப்பாறை ஆகிய பகுதிகளை கைப்பற்றினர்.

ஆங்கிலேயர் எச்சரிக்கை


கி.பி.1799 அக்டோபரில் கட்டபொம்மனைத் தூக்கிலிடப்பட்ட பின் விருப்பாச்சி அரண்மனைக்கு மேஜர் ஐ. ஏ. பானர்மேன் எச்சரிக்கை செப்புப் பட்டயம் ஒன்றை அனுப்பினார். அதில் "கும்பனியருக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டால் கட்டபொம்மனைப் போல் தூக்கிலிட்டு கொள்ளப்படும்" என்ற செய்தி இருந்தது. தற்போது இடையகோட்டை ஜமீன் அரண்மனையில் இச்செப்புப் பட்டயம் உள்ளது.
ஆங்கிலேயரை எதிர்த்தார்

ராணி வேலுநாச்சியாருக்கும், ஊமைத்துரைக்கும் அடைக்கலம் கொடுத்ததால் வெள்ளையர்கள், கோபால நாயக்கர் மீது ஆத்திரம் அடைந்தனர். இந்நிலையில், கி.பி.1800ல் வெள்ளையர்களை எதிர்த்து ஒரு அணி திரட்டி கோவை மீது படையெடுத்துச் சென்றார்.

கோவைத் தாக்குதல்

கி.பி.1800 ஏப்ரலில் கோபால்நாயக்கர் தலைமையில் இறுதிக்கட்டப் போருக்கு திட்டமிட்டனர். இக்கூட்டத்தில் கேரளவர்மா, மைசூர் கிருட்டிணப்பா, சிவகங்கை சின்னமருது, கோவை ஹாஜிஹான், இராமநாதபுரம் கல்யாணித்தேவர், மற்றும் பெருமாள் பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர். கி.பி.1800 சூனில் கோவையிலுள்ள ஆங்கிலேயரின் ராணுவ முகாமை நாலாபுறமும் இருந்து ஒரே சமயத்தில் தாக்குவது என முடிவெடுத்தனர். அதன்படி ஓசூர் புட்டா முகமது, இச்சாபட்டி ராமனுல்லாகான், ஓசூர் முஹமது ஹாசன், பரமத்தி அப்பாவு, சேசையா ஆகியோர் தளபதிகளாக இருப்பது எனவும் முடிவெடுத்தனர். இச்செய்தி ஆங்கிலேயருக்கு எட்டியது. ஆங்கிலேயர் நாலாபுறமும் பீரங்கிப்படையை நிறுத்தி புரட்சிப்படைகளைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். அவர்கள் கொடுமையான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். தளபதி முகமதுஹாசன் சேலம் கலெக்டர் மக்லாய்டு செய்த சித்ரவதையினால் கூட்டணி இரகசியம் போய்விடக்கூடாது என எண்ணித் தனது கழுத்தைத் தானே அறுத்துக்கொண்டார்.

இறுதிப் போர்


கோவை தாக்குதலுக்குப் பின் துணைத் தளபதிகள் சேசையா, புட்டாமுகமது, சேக் முகமது, இமானுல்லாகான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கி.பி.1800 அக்டோபரில், ஆங்கிலப்படை லெப்டினட் கர்னல் இன்னஸ் பெரும் படையுடன் விருப்பாச்சியை முற்றுகையிட்டான். விருப்பாச்சி, இடையகோட்டை, வேலுர், பாளையத்தைச்சேர்ந்த மக்களும் ஏனைய பாளையத்தின் போர் வீரர்களும்,சத்திரப்பட்டி பாளையத்தின் அரண்மனை முன்பு போர் புரிந்தனர். போரில் கோபால்நாயக்கரின் மூத்த மகன் முத்துவெள்ளைய நாயக்கர் கொல்லப்பட்டார். கோபால்நாயக்கர் தப்பிவிட்டார். கர்நாடக, மராட்டிய படைத் தளபதி தூந்தாசிவாக்கை கைது செய்து பீரங்கியின் வாயில் கட்டிவைத்தனர். தொடர்ந்து கோபால் நாயக்கரின் மனைவி பாப்பமாள், இளைய மகன் பொன்னப்ப நாயக்கர் உட்பட 22 பேரை திண்டுக்கல் காசிம்ராவுத்தர் பேட்டையில்(திண்டுக்கல்லில் இன்றும் உள்ளது)கி.பி.1816 வரை சிறைவைத்தனர். கோபால்நாயக்கர் தலைக்கு அந்த காலத்திலேயே 20,000 ரூபாய் என அறிவித்தனர். பணத்திற்காக துரோகிகள் காட்டிக் கொடுத்தனர். கி.பி.1801செப்டம்பர் மாதத்தில் திண்டுக்கல் ஊருக்கு வெளியே குளக்கரையில் புளிய மரத்தில் தூக்கிலிட்டனர். அந்தக் குளம் கோபாலசமுத்திரம் என நகரின் மத்தியில் இன்றுமுள்ளது


கோபால்நாயக்கரின் அரண்மனையையும், அவரது மனைவிக்காக கட்டிய அந்தப்புரத்தையும் இடித்து தரைமட்டமாக்கினர். அரண்மனையின் சுவர்களின் அடித்தளம் 45 அடி நீளமுள்ளது மட்டும் இன்றும் உள்ளது. அரண்மனை முன்பு யானை கட்டும் நடு கல், குதிரைகள் தண்ணீர் குடிக்கும் கருங்கல் தொட்டி, இன்றும் காணமுடிகிறது.
கள ஆய்வு

கோபால நாயக்கர் வாழ்ந்த விருப்பாச்சி பகுதியில் தமிழக அரசின் சார்பில் கள ஆய்வு மேற்கொண்டு, அரண்மனை வளாக அமைவிடம் கண்டறியப்பட்டது. கள ஆய்வில் அரண்மனையின் எச்சங்கள், ஐந்து ஏக்கர் பரப்பளவில் பரவிக் கிடப்பது உறுதி செய்யப்பட்டது. இதில், கோவிலின் சிதிலங்கள், பயன்படுத்திய மண் பாண்டங்கள், பீங்கான்கள், கண்ணாடியால் ஆன பொருட்கள் ஆய்வில் சேகரிக்கப்பட்டன. இரும்பை உருக்கி ஆயுதங்கள் செய்ததற்கான தடயங்களும் சேகரிக்கப்பட்டன. இந்த ஆயுதங்களை வெள்ளையர்களுக்கு எதிரான போராட்டத்தில் பயன்படுத்தி இருக்கலாம் என்பது கள ஆய்வின் மூலம் அறியப்படுகிறது.

மணிமண்டபம்


ஆங்கிலேயர்களை எதிர்க்க திண்டுக்கலில் இருந்து கூட்டமைப்பு திரட்டி , ராணி வேலுநாசியார்க்கும், ஊமைதுரைக்கும் போராட்ட காலத்தில் உதவி வந்தும் படை வீரர்களை அவர்களுக்கு கொடுத்து உதவியும் , கேரளா வர்மா , தூந்தாசிவாக் , திப்பு சுல்தான் என்று பலரிடமும் இணக்கத்தோடு இருந்து ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கில் பாடுபட்ட திருமலை கோபால சின்னப்பா நாயக்கருக்கு தமிழக அரசின் சார்பில் மணிமண்டபம் கட்டி உள்ளனர். திண்டுக்கல் - பழனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த மணிமண்டபம் 69 லட்சம் செலவில் 0.24.00 ஹெக்டேர் பரபளவில் அமைத்துள்ளது





திங்கள், 20 நவம்பர், 2017


Listen Dude if u Say Something wrong about Me..!

இங்க Hero-லாம் உருவாக்கப்பட மாட்டாங்க..! 

நாமலே உருவாயிக்கனும்..!! ♥...என்ற கலக்கும் வார்த்தைக்கோளோடு ..அறிமுகம் ..

நம்ம மாப்பிளைகளில் தனித்துவமாக தனக்கென்று ஒரு பாணி ...செல்லப்பெயரே  பில்லா கிருஷ்ணா ....நம் உடுமலையின் இளைய சமுதாயத்தின் செல்லமாக DJ  என்று அழைக்கப்படுபவர் ..N .கிருஷ்ணகுமார் ...மாப்பிளையின் சொந்த கிராமம் உடுமலை அருகே உள்ள பொன்னேரி ..அழகுதவிலும்  பழமைவாய்ந்த காளியம்மன் குடிகொண்டுள்ள ஊர் ...சுற்றியும் மக்கானியும் ,தென்னையும் சூழந்த ஊர் ..நம்ம மாப்பிளையை முதன் முதலில் சந்தித்தது ..எங்கள் குலதெய்வம்  திருவிழா அன்று நாலுகாட்டி நட்டி தாத்தன் கோவிலில் ..பெயரை கேட்டவுடேனே மாப்பிளையை பிடித்துவிட்டது ..எப்பொழுதும் தீப்பொறி கிளம்பும் வேகமாக செயல்பாடு ..தீர்க்கமான முடிவு ..தான் எடுக்கும் முடிவில் எந்த தோல்வியும் இல்லாமல் வாழ்க்கை சக்கரத்தை சுழலுபவர் ..
இவர் தந்தை பெயர் .திரு நேரு ...அதனால் என்னவோ நேர்கொண்டப்பார்வை ..யாருக்கும் வளைந்துகொடுக்காத செயல்கள் மாப்பிள்ளையிடம் கற்றுக்கொள்ளவேண்டியது ..தாயார் பெயர் :திருமதி .N .மகேஸ்வரி ...கிருஷ்ணா ஒரு தங்கை செல்வி .கீர்த்தி ...இவரும்  அவர் குடும்பத்தில் முதல் இன்ஜினியரிங் பட்டதாரி ...பாலமன்னன் குலம் அழகான குடும்பம் ..நம்ம மாப்பிள படித்தது ..டிப்ளமோ இன்போர்மஷன் டெக்னாலஜி ..அதன்பின் ..கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் ...in Pollachi institute of engineering...முடித்துவிட்டு ..யாருடைய வழிகாட்டுதல் இல்லாமல் ..தன் சொந்த முயற்சியோடு ..தற்பொழுது தனியார் நிறுவனத்தில் KLENEPAKS INDIA PVT LIMITED  நிர்வாக பொறுப்பில் உள்ளார் ..

மாப்பிளைக்கு எப்பொழுதும் நம் சிறு வயதில் இருந்தே சமுதாய அக்கறையுடன் தன் பெற்றோர்கள் வளர்த்துஉள்ளனர் ..கல்வியில் ,பணியில் எந்த உயரத்துக்கு சென்றாலும் ..நம் கலாச்சாரம் ,பண்பாடு ..விட்டுக்கொடுக்காமல் ..தன்னை சுற்றி இருக்கும் சொந்தங்களையும் ..வழிகாட்டி முன்னேற்ற பாதையில் வழிநடத்தி கொண்டவருபவர் ..கோவில் விழா ...கலாச்சாரம் தொடர்பான விழா என்றால்  தன் இளைய பட்டாளங்களுடன் ...தேவராட்டம் ,நிகழ்வுகளை நடத்திக்கொண்டு வருபவர் ..நமது உடுமலை அருகே உள்ள அமராவதி நகர் இந்திய ராணுவப்பள்ளிக்கு சென்று அங்கு இருக்கும் மாணவர்களுக்கு நம் தேவராட்ட கலையை பயிற்சி அளித்து ..அவர்களுக்கு நம் விடுதலை போரில் பங்குபெற்ற கட்டபொம்மன் ,தளி எதுலப்பர் ,விருப்பாச்சி கோபால் நாயக்கர் ஆகியோர் வரலாறுகளை ராணுவப்பள்ளியில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்களுக்கு சொல்லித்தந்து உற்சாக படுத்தி நாட்டு பற்றை அளித்திவருகிறார் ..இந்த சிறுவயதில் ..நம் சமுதாய மக்கள் ..இவரிடம் கற்கவேண்டிய பாடமும் கூட ...

வாழ்க்கையில் முன்னேற ..நம் சமுதாய சொந்தங்களுக்கு இன்றய இளையதலைமுறை குழந்தைகள் வழிகாட்டிககளாக உள்ளனர் என்பது எனக்கு மாற்றட்ட மகிழ்ச்சி .









Krishna Kumar

Father name S.Nehru

Mother name N.Meheswari

Sister name Keerthi

Balamanna kulam

Diploma in Information technology @ N.V poly techninc college Pethappam patti

Studied  Engineering

Computer Engineering in Pollachi institute of engineering


First graduate from my family

Proud to first engineer in my Village,Ponneri😎

Working as system admin of Klenepaks india pvt.ltd Banglore


Transfered 8 th month before to Udumalpet branch as a Branch incharge and System admin

ஞாயிறு, 19 நவம்பர், 2017



செம்மறி ஆடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள ஜல்லிபட்டி தம்புராஜ் 


உடுமலை: பருவமழையால், பசுந்தீவன தட்டுப்பாடு குறைந்துள்ளதால், தளி, ஜல்லிபட்டியில், செம்மறி ஆடு வளர்ப்பு தொழில் அதிகரித்து வருகிறது.
விவசாயத்திற்கு உறு துணையாக, கறவை மாடு, ஆடு வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தளி, ஜல்லிபட்டி பகுதிகளில், ஏராளமான விவசாயிகள் செம்மறி ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு குடும்பத்திலும், 50க்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளது. இரவு நேரங்களில், பட்டிகளிலும், பகல் நேரங்களில் மலைக்கரட்டின் அடிவாரத்தில், ஆடுகளை மேய்த்து வரு
கின்றனர். ஆடுகள் எண்ணிக்கை, எடை அதிகரித்தால் நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக நிலவிய கடும் வறட்சி காரணமாக, தீவனம் மற்றும் குடிநீர் பற்றாக்குறையால், ஆடு வளர்ப்பு தொழில் கடுமையாக பாதித்தது. இதனால், விவசாயிகள் ஆடுகளை விற்க துவங்கினர்.
இந்தாண்டு, கோடை மழை மற்றும் தென்மேற்கு பருவ மழை ஓரளவு பெய்துள்ளதால், மீண்டும் ஆடு வளர்ப்பு தீவிரமடைந்துள்ளது.
செம்மறி ஆடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள ஜல்லிபட்டி தம்புராஜ் கூறுகையில், '' என்னிடம், 50 செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடு உள்ளது. எண்ணிக்கை அதிகரித்தால், பெரிய ஆடுகள் விற்பனை செய்யப்படுகிறது.
நிரந்தரமான விலை கிடைப்பதில்லை. ஜோடி, 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறது. விசேஷ தினங்களில், கூடுதல் விலை கிடைக்கும். கடந்த பல ஆண்டுகளாக கடும் வறட்சி ஏற்பட்டதால், ஆடு வளர்க்க முடியவில்லை. தற்போது, மழை பெய்ததால், பசுமை திரும்பியுள்ளது,'' என்றார்---Thanks Dinamalar....

Note.......
எங்கள் தாத்தா காலத்தில் நிலம் நீச்சைவைத்து எங்களை யாரும் எடை போடவில்லை நாங்கள் வளர்த்த ஆடு மாடுகளை வைத்து தான் எடைபோட்டர்கள் ,எங்களின் ஆடுகளும் பசுக்களும் மற்றும் காளை மாடுகள் தான் வாழவைக்கும் எங்கள் குலதெய்வங்கள் ...புது வீடு கட்டி குடிபுகுந்தாலும் முதலில் நுழைபவன் மனிதனல்ல.பசுக்கள்தான்.அவை லக்ஷ்மிக்கு சமம்..என் தாத்தா பிறந்த மண்ணில்.. பில்லாவ நாயக்கன் சாளையூர் ..எரிசினம்பட்டி Shyam summer Holidays Special...🌿🌿🌿🌿💐💐💐💐 — feeling happy in Udumalaippettai. — feeling happy in Udumalaippettai.
எங்கள் தாத்தா காலத்தில் நிலம் நீச்சைவைத்து எங்களை யாரும் எடை போடவில்லை நாங்கள் வளர்த்த ஆடு மாடுகளை வைத்து தான் எடைபோட்டர்கள் ,எங்களின் ஆடுகளும் பசுக்களும் மற்றும் காளை மாடுகள் தான் வாழவைக்கும் எங்கள் குலதெய்வங்கள் ...புது வீடு கட்டி குடிபுகுந்தாலும் முதலில் நுழைபவன் மனிதனல்ல.பசுக்கள்தான்.அவை லக்ஷ்மிக்கு சமம்..என் தாத்தா பிறந்த மண்ணில்.. பில்லாவ நாயக்கன் சாளையூர் ..எரிசினம்பட்டி Shyam summer Holidays Special...🌿🌿🌿🌿💐💐💐💐 — feeling happy in Udumalaippettai. — feeling happy in Udumalaippettai.

கொடையானி பொம்மு பிறந்த வரலாற்று பாடல்:
தேவ தேவா தா பூமிரன்ன சாமி தேவராயாலு பூமிரன்ன ...
ராயலன்ன தா என்ன வாடு சாகினோடன்ன ராயலன்னா...
கொடையானி பொம்மு தா என்ன வாடுத்த சாமி சாகினோடான்னா ராயலன்னா 
நாடு நகரமுத்த சொல்லு சோகம் சாமி சாகி சேசி தா பெட்டிரன்ன ... சாமி
சொத்து சோகமுத்த நாடு நகரமு சாமி கொடையானி பொம்மு கு சாகி சேசித பெட்டரன்ன ...
மதன காலமு அவ்வின வனக சாமி...
கொடையணி பொம்மு ஏமி ஏமி தா யோசனாலு
தண்டு தலமுத்த பிலிசிகினி சாமி ஏமி ஏமி தா செப்பேடான்னா ..
ஆணுகொண்ட தா அக்கு நானா சாமி கெந்தமு குல்லு தா கத்துரன்ன ... கொடையாணி பொம்மு தா என்னாவாறு சாமி கச்சு ஜோஜுலு சிங்காரிச்ச ..
கச்சு ஜோஜுலு சிங்காரிச்சி சாமி குல்லு கட்ட தா போயரன்ன...
ராயலன்னா தா கன்ன தல்லிட்ட சாமி கொடையிணி பொம்மு மாசுனானதா எண்ணினேமோ...
மனசுனான தா என்னெடேம்மோ சாமி கொடையிணி பொம்மு நிப்பல குண்டானிகு போயெடுமோ..
நிப்பல குண்டானிகி போவாதக்க புவலு தேரு தா சிங்காரிச்ச ..
புவலு ரதமுலு சிங்காரிச்சி சாமி கொடையானி பொம்மு ராயலன்னா தா எத்தி பட்டே ...
ராயலன்னா தா எத்தி பெட்டி கொடையிணி பொம்மு நிப்பலு குண்டாமு சூசி வெல்ல .. நடையா நடையா தான் போயினிமா கொடையணி பொம்மு .. நிப்பிலு குண்டான சூடதக்க ...
நிப்பாலு குண்டமு கண்ணுன காணி கொடையானி பொம்மு ராயலன்னா தா திப்பேடேமோ..
கொடுவு பெட்டினி தேவாதாலு சாமி நிக்கு ஆகு நீலு தா பெட்டரேமோ... வேலம்பாடி தா கொண்டானான சாமி நுவ்வு புட்டி பெரிவீனி கொடையானி பொம்மு ..ஆனு கொண்டா தா அக்கு நானா சாமி புட்டி பெரிவீனி கொடையானி பொம்மு.. பேணு கொண்டா தா ஒப்புனான... சாமி புட்டி பெரிவீனி கொடையனி பொம்மு ..ஆனி கொண்டா தான் கானி பூமி சாமி நீக்கு பேணு கொண்டா தா கனாச்சுலு ..
வேலம்பாடி தா மந்தாரான்ன நிக்கு
பேயாலவுலு புட்டிரன்ன..
வெலம்பாடி தான் மந்தனான நிக்கு பேர்வாடக்கா தா சாமிரன்னா ..
தேவ தேவ தா பூமுலரன்ன .. தேவராயலு பூமிரன்ன ...

இவையே கொடையணி பொம்முவின் பிறப்பு வரலாறு... ஆந்திராவில் உள்ள பேணு கொண்டாவில் பிறந்து வளர்ந்தவர்கள் தான் கோடையானி பொம்மு...
இவர்களின்
மாடுகள் :கப்பிடி கொடளி
குல கடவுள் : பேர்வாடக்க
இவர்களின் மலைகள் :
கொடவுளு கொண்ட கோவாலு மர்ரி...
தொடரும்.......
ஆண்கள் தினம் .....பதிவு 

ஊரில் உறவினர் ஒருவர் இருக்கிறார்.தான் என்ன நிலையில் இருக்கிறார் என்பதைப் பற்றி அவருக்கு என்றும் கவலை இருந்ததில்லை. மற்றவர்களைப் பற்றி விசாரிப்பதிலும் , நக்கல் அடிப்பதிலுமே ஆர்வமுள்ளவர். ஊருக்குச் செல்லும்போது அவ்வப்போது அவரைப் பார்ப்பதுண்டு.
"அப்பறம் மாப்பிள எப்ப வந்தீங்க , ஊட்டுல அல்லாரும் வந்துருக்குறீங்களா" என்று பாசத்தோடு ஆரம்பிப்பார். பிறகுதான் மற்ற முக்கியமான கேள்விகள் எல்லாம் வரிசையாக வரும். "உனக்கு எவ்வுளுவு சம்பளம் , உம்பட ஊட்டுக்காரிக்கு எவ்வுளுவு சம்பளம் , ஒரு காவாசி செலவு பண்ணீட்டு முக்காவாசி மிச்சம்பண்ணலாமா" என்ற கேள்விகள் வரும்போதுதான் என்னை அவர் எதற்கு நலம் விசாரித்தார் என்பதை நான் புரிந்துகொள்வேன்.
மொத்த சம்பளம் எவ்வளவு , அதில் எவ்வளவு செலவாகும் , எவ்வளவு சேமிக்கலாம் என்று தெரிந்துகொண்டு மனதிற்குள்ளேயே பொறாமைப்படுபவர். அவருடைய மனநிலையைப் புரிந்துகொண்டு நாம் அவரை மிகிழ்விக்க வேண்டும்.
"அட ஏனுங் மாமா நீங்க வேற , வர்ற சம்பளத்துல ஊட்டு வாடக குடுத்து , கொழந்தீங்களுக்கு ஸ்கூல் பீஸ் கட்டி , போக வரச் செலவு , கரண்டுக்கு , தண்ணிக்கி , போனு பேசறதுக்கு அப்புடீன்னு அல்லாச் செலவீம்மு செஞ்சுட்டுப் பாத்தா ஒரு அஞ்சாயரமோ , பத்தாயரமோ மிச்சமாவதே பெருசுங்" என்று சீரியசாகச் சொல்ல வேண்டும். மனிதர் உடனே குதூகலமாகிவிடுவார். "அட ஆமாமப்பா , பொட்டாட்ட இந்த பண்ணீத்தையே பாத்துக்கிட்டு நம்மூருலயே இருந்துக்கலாம் போ" என்று அறிவுரை வழங்குவதும் உண்டு. வேலையை விட்டுவிட்டுச் சென்றால் அவருக்கு அது தீபாவளியைப் போன்றிருக்கும்.
நான் கிராமத்தைக் குறை சொல்லவில்லை. என்னைப் பெற்றெடுத்ததும் ஒரு கிராமம்தான். கிராம வாழ்க்கைக்கு இணையான வாழ்க்கையும் இல்லை. ஆனால் அங்கிருக்கும் மனிதர்கள் எல்லோருமே எதார்த்த மனிதர்கள் இல்லை என்பதே என் ஆதங்கம். எவருடைய உதவியும் இல்லாமல் மேலே வந்தாலும் அதை சிலரால் தாங்கிக்கொள்ள முடியாது. எப்படா இவன் கீழே விழுவான் என்று காத்திருக்கும் கூட்டம் எல்லா ஊரிலும் இருக்கும்.
இதை எல்லாம் தாண்டி முன்னேறிய பிறகு வாழ்க்கையை நிதானமாக ஓட்ட வேண்டியதில்தான் இருக்கிறது நமது சாமர்த்தியம். கொஞ்சம் நிதானமின்றி செயல்பட்டு தவறு நடந்துவிட்டால் அதைக் கொண்டாட ஒரு கூட்டமே இருக்கிறது. நம்மோடு இருந்து நமக்கு ஆறுதல் சொல்வது நம்முடைய உறவுகள் மட்டுமே.
ஐந்து வருடங்களுக்கு முன்பு ஆந்திர நண்பன் ஒருவன் அலுவலகத்தில் அறிமுகமானான். நான் மேலே குறிப்பிட்ட அதே கிராமத்துப் பின்னணியோடு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன் . கடும் உழைப்பாளி. ஐ.டி துறையில் ஆந்திரா , தெலங்கானாவைச் சேர்ந்தவர்களின் உழைப்பில் தனித்துவம் இருக்கும். நேரம் , காலம் பார்க்காமல் வேலை செய்பவர்கள். அவர்களுடைய மக்கள் என்றால் தாராளமாக உதவுபவர்கள். இவனும் அப்படித்தான். நல்ல எதார்த்தமானவன்.
அவனுக்கும் திருமணம் நடந்தது. பெண் நகரத்துப் பின்னணி கொண்டவள். சிறிது காலம் சந்தோசமாக இருந்தது அவர்கள் வாழ்க்கை. பிறகு அந்தப் பெண்ணிற்கு அவனோடு கிராமத்திற்குச் செல்வது பிடிக்கவில்லை. அவள் எதிர்பார்த்த வசதி வாய்ப்பில்லை.கோவையில்  வாடகை வீட்டில் இருப்பதை கௌரவக் குறைச்சலாக நினைத்தாள். இத்தனைக்கும் இவன் ஒருவன்தான் வேலைக்குச் செல்கின்றான்.
இரண்டே மாதத்தில் கடன் கொடுக்கும் வங்கிக்காரனெல்லாம் இவனிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிவிட்டு வந்து பார்த்தார்கள். அடுத்த ஒரே மாதத்தில் காரும் , வீடும் வாங்கி அதன் பத்திரங்களை வங்கியிடம் கொடுத்துவிட்டு இவன் பல லட்சங்களுக்குக் கடங்காரனானான். மனைவிக்கு இப்பொழுது இனித்தது. கணவன் அவளால் கௌரவிக்கப்பட்டான். எல்லாம் சில காலம் நன்றாகவே நடந்தது. மாத வருமானம் கடனுக்குப் போக செலவுக்கு பற்றாக்குறையானது.
எதிர்பார்த்த மற்ற ஆடம்பரச் செலவுகளைச் செய்ய முடியவில்லை. இப்பொழுது கணவனுக்கு அடுத்து யோசனையைச் சொல்கிறாள்."ஏங்க , நீங்க ஏன் ஆன்சைட்(வெளிநாடு) செல்லக்கூடாது , உங்க மேனேஜரைக் கேளுங்கள்" என்றவளின் பேச்சைத் தட்டாதவன் அதையும் கேட்டுப் பெற்றான். வெளிநாடும் சென்றான்.இதற்கிடையில் ஒரு குழந்தைக்குப் பெற்றோர்களானார்கள் இருவரும். வெளிநாட்டில் பணம் சம்பாதிக்கும் இயந்திரமானான்.
அலுவலகத்தில் இதை இன்றைக்கு முடித்தே தீர வேண்டும் என்ற கடின இலக்கு வைத்து வேலை செய்திருக்கிறார்கள். மாதக்கணக்கில் இப்படித்தான் வேலை சென்றிருக்கிறது. ரத்த அழுத்தம் எல்லையைத் தாண்டிப் போயிருக்கிறது. மருத்துவரிடம் சென்றிருக்கிறார்கள். எப்பொழுதும் போல் டாக்டர் எச்சரிக்கை விடுத்தாலும் , அதை அப்படியே பின்பற்றுவது ஐ.டி துறையில் அவ்வளவு எளிதல்ல. உதாரணத்திற்கு குறைந்த பட்சம் 7-8 மணி நேரம் ஒரு நாளைக்குத் தூங்க வேண்டும் ; அதுவும் நேரத்திற்குப் படுத்து நேரமாக எழுந்துவிட வேண்டும். இப்படி 7-8 மணி நேரம் உறக்கம் வேண்டும். எனக்குத் தெரிந்தவரை முக்கால்வாசிப் பேருக்கு இதைப் பின்பற்றுவது மிகப் பெரிய சவாலே. இவன் மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல.
அவனுடைய வேலையிலோ , வாழ்க்கை முறையிலோ உடல்நிலை சரியில்லாமல் போனதற்குப் பிறகும் பெரிய மாற்றம் எதுவும் நடந்துவிடவில்லை. அதே டென்ஷனோடுதான் இன்றும் வேலை போய்க்கொண்டிருக்கிறது.இப்பொழுது இந்தியா வந்துவிட்டான். கடந்த முறை கோவை சென்றிருந்தபொழுது சந்தித்தேன். ஐ. டி துறையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மையால் தன் வேலைக்கும் ஏதாவது பிரச்சனை வந்துவிடுமோ என்ற அச்சம் அவனுக்கு. அவனுக்கு மட்டுமில்லை எனக்கும்தான் அந்த அச்சம் இருக்கிறது , ஆனால் எனக்கு பெரிய கவலையுமில்லை , பயமுமில்லை. வேலைக்கு எப்பொழுது என்ன பிரச்சனை வந்தாலும் குடும்பத்தைக் காப்பாற்றி விடும் அளவிற்கு தெளிவிருக்கிறது. காரணம் அவனைப் போல் நான் அளவுக்கு மீறி  லட்சக்கணக்கில் கடன் வாங்கவில்லை. வாடகை வீடே எனக்கு வசதியாக இருக்கிறது. அதுவே இப்போதைக்குப் போதும்.
அவனுடைய மனதில் கடனைத் திரும்பிச் செலுத்த வேண்டும் , குழந்தையைப் படிக்க வைக்க வேண்டும் , அதற்கு இன்னும் பல வருடங்கள் வேலை இருக்க வேண்டும் என்ற பயமிருக்கிறது. அந்த பயம் கொடுமையானது.
கடந்த வாரம் வா. மணிகண்டன் எழுதி நான் பகிர்ந்திருந்த அந்தப் பதிவைப் படித்தபின் இவை அனைத்தும் வந்துபோயின. இந்த நண்பன் மட்டுமல்ல. இவனைப் போன்ற பல அப்பாவிகள் ஐ.டி துறையில் தன் சக்திக்கும் மீறிச் சென்றுவிடுகிறார்கள். நரக வேதனை அனுபவிக்கிறார்கள்.
இங்கே யாரும் யாருக்கும் புத்திமதி சொல்லத் தேவையில்லை. அவரவர் பிரச்சனையே ஆயிரம் இருக்கிறது. நமக்கான வாழ்க்கையை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.நம்மிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்துத் திட்டமிட வேண்டும். கடன் வாங்கலாம் , தன் சம்பாத்தியத்திற்குத் தகுந்தாற்போல் வாங்க வேண்டும். நாளைக்கே வேலைக்கு ஏதாவது பிரச்சனை வந்துவிட்டால் என்ன செய்வது என்று யோசித்து செயல்பட வேண்டும் . சக்தியை மீறி வாங்குவதுதான் இங்கே பலரும் செய்யும் தவறு. அந்தத் தவறை குறைந்தது மூன்று முறையாவது நானும் செய்ய வாய்ப்பு வந்தது. தப்பித்துவிட்டேன்.
நமக்கு முதல் சொத்து நம் குடும்பம்தான். குழந்தைகளே நம் உலகம். அவர்களை ஆளாக்க முதலில் நாம் ஒரு 75 சதவீகிதமாவது ஆரோக்யமாக இருக்க வேண்டும். குடும்பத்திற்கே நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டுமே தவிர அடுக்கு மாடிக்குடியிருப்பிற்கோ , இருபது லட்சம் காருக்கோ அல்ல. இவற்றை வாங்கும் அளவிற்கான சக்தி வரும்போது வாங்கிக்கொள்ளலாம் , இல்லையென்றால் இருப்பதை வைத்துக்கொண்டு வாழ்க்கையை நன்றாகவே ஓட்டலாம்.
ஆனால் இங்கு பிரச்சனை , நம்மைச் சுற்றி உள்ளவர்கள் நம்மை நாமாக இருக்க விடுவதில்லை. "பாத்தீங்களா , அவங்க அம்பது லட்சத்துக்கு வீடு வாங்கிட்டாங்களாம் , இவங்க இன்னோவா கார் வாங்கிட்டாங்களாம்" என்று வீட்டில் இருப்பவர்களே பல நேரங்களில் குழப்பவாதிகளாகிவிடுவார்கள். ஒருவர் ஐம்பது லட்சத்திற்கு வீடு வாங்குகிறார் என்றால் அவருடைய பின்னணி என்ன என்றெல்லாம் பார்ப்பதில்லை. நாமும் அப்படியே ஆக வேண்டும் என்ற ஆசை ; பேராசை. இன்றைக்குப் பல குடும்பங்கள் சீரழியக் காரணம் இந்தப் பேராசைதான். இதையெல்லாம் பார்த்தும் தங்களை மாற்றிக்கொள்ளாத பேராசைக்காரர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். நான் பட்டுத்தான்   திருந்துவேன் என்பவர்களை நாம் தடுக்க முடியாது. ஆனால் பட்ட பிறகு திருந்தி வாழ உயிர் வேண்டும். அதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
மனதில் தைரியமும் , திறமையும் இருந்தால் ஒரு வேலை இல்லை என்றால் மற்றொரு வேலை என்று போய்க்கொண்டிருக்கவேண்டியதுதான். எவரைப் பற்றியும் கவலைப்படத் தேவை இல்லை. "ஊரு என்ன சொல்லுமோ , உறவு என்ன சொல்லுமோ" என்று அஞ்சினால் அழிவிற்கான பாதையை நாமே போட்டுக்கொண்ட கதையாகிவிடும். மேலே குறிப்பிட்ட என் உறவுக்காரரைப் போன்றவர்களை குஷிப்படுத்தவாவது நாம் நீண்ட நாள் ஆரோக்யத்துடன் வாழ வேண்டும் நண்பர்களே. சிங்கம் படத்தில் சூர்யா சொல்வதைப்போல "ஐம்பதாயிரம் இருந்தால் பெட்டிக்கடை வைப்பேன் , அஞ்சு லட்சம் இருந்தால் டிப்பார்ட்மெண்ட் ஸ்டார் வைப்பேன்" என்று வாழ்க்கையை "டேக் இட் ஈஸி" ஆக எடுத்துக்கொண்டும் , ஆசைகளைக் குறைத்துக்கொண்டும் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.
ஊரோ , உறவோ , அலுவலகத்தில் நம்முடைய மேலாளரோ இவர்கள் அனைவரும் நாம் நன்றாக இருக்கும் வரையில்தான் நம்மைக் கொண்டாடுவார்கள். நிலை மாறிய பிறகு அவர்களும் தங்களின் நிலையை மாற்றிக்கொள்வார்கள் .இதுதான் உலகம்.இதுதான்  வாழ்க்கை. ஆனால் நம்மை என்றைக்கும் கொண்டாடுவது நம் குடும்பம்தான்.
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். நாம் அனைவரும் செய்ய வேண்டிய முக்கிய வேலை இந்த சுவரை பத்திரமாகப் பாதுகாத்து வைக்க வேண்டியதுதான். உங்கள் சுவர் உங்கள் கையில். அவ்வளவுதான்.
-
கற்பனை உலகை காண்பிக்கும் கதைகள்!உயிர் மூச்சாக பாதுகாக்கும் மூதாட்டிகற்பனை உலகை காண்பிக்கும் கதைகள்!உயிர் மூச்சாக பாதுகாக்கும் மூதாட்டி


உடுமலை;'ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாரு. அவரோட உயிர் ஏழு கடல், ஏழு மலை தாண்டி பாதுகாப்பாய் இருந்துச்சு,' என குழந்தைகளை கற்பனையும் காவியமும் கலந்த உலகத்துக்கு அழைத்து செல்லும் பாட்டிகள், முற்கால வாழ்வியலின் அடையாளமாக உள்ளனர்.
கதை என்றாலே, குழந்தைகளுக்கு அவ்வளவு பிரியம். அதிலும் பாட்டி சொல்லும் கதைகளில், கேட்பவர்களுக்கும், சொல்பவர்களுக்கும் திகட்டவே திகட்டாது. இப்படிப்பட்ட பாட்டிகளை இனி வரப் போகும், தலைமுறைகள் மிகவும் 'மிஸ்' பண்ணுகின்றனர்.

ஜல்லிபட்டி ஊராட்சியில் உள்ள ஒரு நுாலகத்தில் நடந்த, நுாலக வார விழாவில், குழந்தைகளுக்கு கதை சொல்வதும் ஒரு நிகழ்வாக இருந்தது. பள்ளியின் ஆசிரியர் உடன் இருந்தும், புதிய இடத்தையும், இடம் நிறைய புத்தகங்களையும் பார்த்து, ஆர்வத்தில் இருந்தனர் குழந்தைகள். அங்குமிங்குமாய், அனைத்தையும் வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்த குழந்தைகளை, கதைசொல்லும் நிகழ்ச்சி என்றதும், வரிசையில் வந்து அமர்ந்துகொண்டனர்.
கதைகள் என்றாலே, யானைகளும், பூனைகளுமே நினைவில் வரும் நிலையில்தான் இன்றைய குழந்தைகள் உள்ளனர். யார்தான் யானையையும், பூனையையும் அழைத்துவர போகிறார்கள் என்ற ஆர்வத்தில், இருந்தவர்களின் முன்பு, அமர்ந்தார், 85 வயது, திருமலையம்மாள் பாட்டி.
அடடே, பாட்டி வடை சுட்ட கதையா என குழந்தைகள் கேலிச் சிரிப்புடன் முணுமுணுப்பையும் துவங்கினர். கதைகளம் ஆரம்பமாகியது.

கதை கூறலாம் என பாட்டிக்கு உரக்க சொல்லிய தருணத்தில், புதிர்கதைகளா, வரலாற்று கதைகளா என குழந்தைகளுக்கு 'சாய்ஸ்' கொடுத்தார் பாட்டி.
எள்ளில் பிறந்து, எள்ளில் வளர்ந்த எண்ணெய் செக்கின் மகள், பூவில் பிறந்து பூவில் வளர்ந்த ராஜா என பாட்டி போட்ட புதிருக்கு விடை தெரியாமல் விழித்தனர் குழந்தைகள். அவகாசம் அளித்தும் விடை அறியாமல் தவித்த குழந்தைகளுக்கு புதிரை விடுவித்தார் பாட்டி.
இது, திருமலையம்மாள் ஸ்பெஷல்ஜல்லிபட்டி ஊராட்சியில் நடக்கும், கோவில் விழாக்களில் துவங்கி, ஒரு குழந்தை பிறக்கும் நிகழ்வு வரை, அனைத்திலும் இந்த பாட்டியின் பாட்டு இல்லாமல் இருக்காது.

கதை கேட்டால், மகாராஜா, மகாராணி என்ற கற்பனை கதைகள் மட்டுமில்லாமல், உடுமலையின் உண்மை நிகழ்வுகளாக உள்ள பல வரலாறுகளை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். தளி பாளையக்காரர், எத்தலப்பர் உள்ளிட்டவர்களின் ஆட்சிக்காலத்துக்கே அழைத்து செல்வார். கருப்புசாமி, அம்மன், விநாயகர் என தெய்வங்களை அழைத்து பாடுவதிலும் வல்லவர்தான் இந்த பாட்டி.

புது மண தம்பதியரை, மணம் முடிக்கும், நிகழ்விலிருந்து, மறுவீடு அழைத்து வரும் வரை, பல்வேறு நாட்டுப்புற பாடல்கள் பாடி அழைக்கும், வழக்கம், இன்னும், இக்கிராமத்தில் இருப்பதற்கு, திருமலையம்மாள் பாட்டியும் காரணம்தான்.சடங்கு, தாலாட்டு, ஏறு உழுவது, நடவு செய்வது, திருமணம், என பாட்டியின் கை வசம் பல நாட்டுப்புற பாடல்கள் உள்ளன.
பாட்டிகள் வடை மட்டுமல்ல பல வரலாற்றுகளையும் புதையாமல் கதையாக பாதுகாக்கும் பொக்கிஷங்கள் என்பதற்கு திருமலையம்மாளும் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளார்...

நன்றி :தினமலர் ...

சனி, 18 நவம்பர், 2017

தேவராட்டம் ....ராஜகம்பள தேவதுந்துமி .....உடுமலைப்பேட்டை பெரியகோட்டை ,ராஜாவூர் நம்ம ராஜாக்கள் இவர்கள் ...

தேவதுந்துமி தேவராட்டதற்கு உயிர் கலந்த இசை ஓசை  ..தேவதுந்துமி கருவி எப்படி செய்யப்படுகிறது ...
உருண்டை வடிவமான தோற்றம் கொண்ட பலகை வேங்கை மரத்தில் செய்யப்படுகிறது
இந்த உருண்டை வடிவமான பலகையில் இரண்டுபக்கம் இருக்கும் தோல்பகுதி ..மூன்று மாதம் இருக்கும் வெள்ளாட்டு தோலில் நன்றக காயவைத்து ..வட்டமாக  கத்தரித்து வேங்கைமரபலகையில் கட்டவேண்டும்
கட்டும்போது முறையாக நிதானமாக கட்டவேண்டும் ..கொஞ்சம் இழுத்து கட்டினால் ..தோல்பகுதி சிதிலடைந்துவிடும் ..
உறுமி இசை கருவிக்கு ஒலி வருவதற்கு இரண்டு குச்சிகள் தயாரிப்பதற்கு நொச்சி குச்சி எனும் மரத்தில் செய்யப்படுகிறது

உறுமி இசை ஒலி வருவதற்கு கருவியில் இருக்கும் தோலில் உண்ணங்குடி பால் வரும் பசை சேகரித்து வைத்துக்கொள்ளவேண்டும் ..ஒலி இசை வருவதற்கு இந்த உண்ணங்குடி பால் மிக முக்கியம் ..எப்பேர்ப்பட்ட பனி ,மழை காலங்களில் கூட இந்த உண்ணங்குடி பால் கருவியின் தோலில் தேய்த்தால் ஒலி அதிர்வு பத்து ஊர் பக்கம் கேக்கும் .

வேங்கைமரம் பலகையை சுற்றி இருக்கும் இசை அளவுகளை கொஞ்சம் கூட்ட ,குறைக்க உதவும் கருப்பு கயிறு .. முடியால் செய்யப்படுகிறது ..

இந்த தேவதுந்துமி இசைக்கருவி தயாரிக்க செலவு மதிப்பு மட்டும் தெரியவில்லை .இதன் மகிமை .தெரிந்தவர்கள் கூறலாம் ...தகவலுக்கு தேவை ...ராஜகம்பள தேவதுந்துமி .....
உடுமலைப்பேட்டை பெரியகோட்டை ,ராஜாவூர் நம்ம ராஜாக்கள் இவர்கள் ...


வியாழன், 16 நவம்பர், 2017


RK ELITE- விவசாயமும் வறுமையும்......

தமிழகத்தில் விவசாயத்தின் இன்றய நிலை

இந்தியா ஒரு விவசாய நாடு என்பது நாம் எல்லோரும் அறிந்ததே . எந்த ஒரு நாட்டிற்கும் பாரம்பரிய தொழில் என்று ஒன்று உண்டு . இந்தியாவுக்கு விவசாயத்தைப் போல அந்தந்த நாட்டின் வளர்ச்சியும் அவர்களின் பாரம்பரிய தொழிலைச் சார்ந்தே இருந்தால்தான் அந்த நாடு பொருளாதாரத்தில் திடமான வளர்ச்சி அடைய முடியும் . அதற்காக மற்ற துறைகள அனைத்தையும் ஒதுக்கி விடக்கூடாது, அது மிகவும் தவறு . ஆனால் நம்முடைய பாரம்பரிய தொழிலான விவசாயத்தில் முழுமையான கவனம் செலுத்தாமல் இருந்தோமேயானால் இந்தியா ஒருபோதும் நிரந்தர வளர்ச்சியைக் காண முடியாது.
விவசாயத்தின் உற்பத்தி திறன் குறைந்துகொண்டு வருகிறது . உற்பத்தி திறன் குறைவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன, அதில் ஒன்று விவசாய நிலத்தில் உள்ள மண்ணின் தன்மை முழுவதுமாக கெட்டு போகக்கூடிய நிலையில் உள்ளது . விவசாயிகள் பயன்படுத்துகின்ற செயற்கை உரங்கள் மண்ணின் தன்மையை முற்றிலுமாக மாற்றி விட்டன . இயற்கை உரங்களைப் பயன்படுத்தி பயிர்களை வளர்க்கும் முறை விவசாயிகளிடம் இல்லை . மற்றொன்று அரசின் அலட்சியம்,விவசாய வளர்ச்சிக்கு உண்மையான, தேவையான, முழுமையான பலன் தரக்கூடிய செயல்களை விட்டு விட்டு குறுகிய நோக்கில், அரசியல் ஆதாயம் தேடும் நோக்கிலேயே இன்று வரை அத்தனை அரசுகளும் செயல்பட்டுள்ளன . சமீபத்தில் கூட 72000 கோடி ரூபாய் விவசாய கடனை தள்ளுபடி செய்தார்கள் . நல்ல விஷயம்தான் . அதனால் சில விவசாயிகள் பயன் அடைந்தார்கள் என்பதை விட பெரும் பணமுதலைகள் தான் அதிகமாக பயன் அடைந்தார்கள் . கடன் தள்ளுபடி மற்றும் வட்டி தள்ளுபடி செய்வதனால் விவசாய வளர்ச்சிக்கு முழு பலன் கிடைக்குமா என்று பார்த்தால் இல்லை என்ற பதில்தான் கிடைக்கும்
வேளாண் துறை ஆயிரம் விளக்கங்கள் கூறலாம், பல்வேறு திட்டங்களைப் பட்டியலிடலாம் . ஊருக்கு ஊர் வேளாண்துறையின் அலுவலகங்கள் செயல்படுகின்றன என்று கணக்கு காட்டலாம் . மாதிரிப் பண்ணைகள் , இலவச மின்சாரம் மற்றும் விதைகள் , செயல் பயிற்சிகள் எல்லாம் செயல்படுகிறது என்று கூறலாம் . இத்தனை இருந்தும் விவசாயிகள் ஏன் விவசாயத்தைப் புறக்கணிக்கிறார்கள் என்கிற கேள்விக்கு விடை கண்டுபிடித்துத் தீர்வு காண எந்த அரசும் முன்வரவில்லை .
அடிப்படை பிரச்சனை விவசாயக் கூலி அதிகரித்துவிட்டது என்பதல்ல . விவசாயக் கூலிக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்பதுதான் பிரச்னை . அப்படியே ஆட்கள் கிடைத்தால் , அங்கே போதிய தண்ணீர் வசதி கிடையாது . தடையில்லாத மின்சாரம் கிடையாது . இதெல்லாம் இருந்து பயிரிட்டு, உரமிட்டு, அறுவடைசெய்தால் விளைபொருளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை. தமிழ்நாட்டில் உழுதவன் கணக்கு பார்த்தால் உழவுக் கோல் இருக்காது என்று ஒரு வாசகம் உண்டு.
விவசாயிகளின் வாழ்வில் முன்னேற்றமும் ஏற்படாதற்கு காரணம் விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களின் விலையேற்றம் முழுமையாக தடுத்து நிறுத்தப்பட்டதுதான் எடுத்துக்காட்டாக 1970 ஆம் ஆண்டில் ஒரு டிராக்டரின் விலை இருபதாயிரம் ரூபாய் . அப்போது ஒரு மூட்டை நெல் 35 முதல் 40 ரூபாய் வரை விற்றது கிட்டத்தட்ட 400 மூட்டை நெல் விற்று ஒரு டிராக்டர் வாங்க முடிந்தது. ஆனால் அதே டிராக்டரின் விலை இன்று சுமார் 5 லட்சம் ரூபாய். ஆனால் ஒரு மூட்டை நெல்லின் விலை 500 முதல் 600 ரூபாய்தான் .கிட்டத்தட்ட ஆயிரம் மூட்டை நெல் விற்றால்தான் இன்று டிராக்டர் வாங்க முடியும், அதாவது நெல்லின் பண்டமாற்று சக்தி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது 1970 ல் ஒரு மாட்டின் விலை ஆயிரம் ரூபாய். அதே மாடு இன்று இருபதாயிரம் ரூபாய் .அன்று தினக்கூலி வெறும் 2.50 இன்று முன்னூறு ரூபாய். அன்று மண்வெட்டியின் விலை இரண்டு ரூபாய்.இன்று ஒரு மண்வெட்டியின் விலை 410 ரூபாய். அன்று ஒரு மூட்டை நெல் விற்று ஒரு சவரன் வாங்க முடிந்தது. இன்று 25 மூட்டை விற்றால் தான் ஒரு சவரன் வாங்கமுடியும். 1975 முதல் 2008 வரை தொழிற்சாலைப் பொருட்களின் விலை 40 முதல் 45 மடங்கு வரை அதிகரித்துள்ளது.
சட்டமன்ற.நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளமும் பன் மடங்கு அதிகரித்துள்ளது.கடந்த 60 ஆண்டுகளில் அரசில் உள்ளவர்கள் ஆறு ஊதிய கமிஷன் அமைத்து தங்கள் ஊதியங்களை பல மடங்கு உயர்த்திக்கொண்டார்கள். ஆனால் விவசாய பொருட்களுக்கு 8முதல் 10 மடங்கு வரை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது
நம் நாட்டில் விவசாயப் பொருள் சந்தைக்கு வரும் போது விலை மிகவும் குறைந்து விடுகிறது, அறுவடை முடிந்ததும உடனேயே காசாக்கி விடுவோம் என்று ஒவ்வோரு விவசாயியும் நினைப்பதால் தங்கள் விளைபொருளை அனைவரும் விற்க ஆசைப்படுகின்றனர், இவர்களின் நிலைமையை பயன் படுத்தி வியாபாரிகள் மிகவும் குறைந்த விலைக்கே அப்பொருளை கேட்கின்றனர், செலவழித்ததை விட குறைவாக கிடைத்தாலும் கையில் காசு வருகிறது என்று விவசாயிகள் விற்று விடுகின்றனர். சில காலம் கழிந்து எல்லாவற்றையும் வாங்கிப் பதுக்கிக் கொண்ட வியாபாரிகள் கொள்ளை லாபம் பார்க்கிறார்கள்.

நம் விவசாயிகளுக்கு இப்போது ஏற்பட்டுள்ள நிலைமை வெளிநாட்டில் உள்ள விவசாயிகளுக்கு எப்போதோ ஏற்பட்டது, 1939 ஆம் ஆண்டு அமெரிக்கா அரசு நான்கு முக்கியமான சட்டங்களைக் கொண்டுவந்தது .1.விவசாயிகளுக்கு நிவாரணச் சங்கம். 2, நில நிர்வாகச் சட்டம். 3.விலை நிர்ணைய சட்டம் . 4. விவசாய உற்பத்தியாளர் அங்காடிச் சட்டம் , இந்த சட்டங்களின் படி அனைத்து விவசாயிகளின் கடனும் ரத்து செய்யப்பட்டது. எல்லாத் துறைகளிலும் விளை உயர்ந்துள்ளது போல விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது , அந்த விலை பின்பு அதிகம் ஏறவும் இறங்கவும் முடியாத படி உற்பத்தியாளர் சந்தை வாரந்தோறும் அமைக்கப்பட்டது. இதனால் விவசாய பொருட்களின் விலை நிர்ணையம் செய்யப்பட்டது ஆனால் நம் நாட்டில் அவ்வாறு இல்லை . மானியங்கள் அதிகரித்தாலும் விவசாயம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
இந்தியாவின் சிறு விவசாயிகளின் எண்ணிக்கை 16 சதவீகிதத்தில் இருந்து 11 சதவீகிதமாக குறைந்துள்ளது தற்போது நாட்டில் 40 சதவீகிதத்தினர் மட்டுமே விவசாயம் செய்ய விரும்புகின்றனர். அவர்களின் சந்ததியினர் வேறு தொழிலுக்கு செல்கின்றனர். இதனால் விவசாயம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது . இந்த நிலை மாறுவதற்கு, விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச ஊதியம் கிடைப்பதற்கு அரசு வழிசெய்தாக வேண்டும் . மத்திய அரசின் சம்பளக் கமிஷன் போல , திட்டக் கமிஷன்போல வேளாண்மைக்கு ஒரு கமிஷன் ஏற்படுத்தி விவசாயிகளின் நலன் பேணப்பட்டால் மட்டும்தான் இந்தியாவில் உணவு உற்பத்தி தன்னிறைவு என்பது உறுதி செய்யப்படும்.
கல்விச்சுற்றுலா .....

சில நேரங்களில் அப்படித்தான் நடக்கும்.. அப்படி ஏன் நடந்தது என்றோ…?? ஏன் அப்படி நடக்ககவில்லை என்றோ கேள்விகேட்கவே முடியாது… வாழ்க்கை அப்படித்தான்…. ஆறு விரலோடு ஏன் பிறந்தான் என்ற கேள்விக்கு எப்படி விடையில்லையோ??? அது போலத்தான் சில விஷயங்கள் அப்படி நடந்து விடும்...வாழ்க்கையில சில விஷயங்களை கேள்வி கேட்காமத்தான் நாம ஏத்துக்கனும்…
யோசித்து பாருங்கள்….12 வருட பள்ளி வாழ்க்கையில் நான் ஒரே ஒரு முறைத்தான் பள்ளி சுற்றுலா சென்று வந்தேன்…
இன்றைக்கு படிக்கும் பிள்ளைகள்.. ஒவ்வோரு ஊராக சுற்றுலா சென்று செல்பியில் போட்டோ பிடித்து போடும் போது அவர்கள் சந்தோஷத்தை பார்க்கும் போது கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கும்… ஆனால் அவர்கள் வாங்கி வந்த வரம் அப்படி…!!!
அதன் பின் அப்பா மற்றும் வீட்டு குடும்ப கஷ்டம் அறிந்து நான்சுற்றுலா செல்லவேயில்லை.. அவ்வளவு ஏன்… கல்லூரியில் மூன்று  ஆண்டுகள் படித்த போது வருடா வருடம் டிப்பார்ட்மென்ட் மாணவர்களோடு கல்வி சுற்றுலா செல்வார்கள்.. நான் ஒரு வருடம் கூட சென்றது இல்லை… அது அப்படித்தான்.. ஆனால் எனது நண்பர்கள்  உடன் சேர்ந்து ஊட்டி, கொடைக்கானல், போன்ற இடங்களுக்கு சென்றாலும்… நண்பர்களோடு நினைத்தவுடன் சுற்றுலா செல்லும் வாய்ப்பை நான் உருவாக்கி கொண்டதே இல்லை எனலாம்..
நான் முதன் முதலாக பள்ளியில் சுற்றுலா செல்ல நான் கொடுத்த தொகை 25 ரூபாய் ….
நான் படித்தது அரசு  மேல்நிலை பள்ளியில் தான் நான் 12 ஆம் வகுப்புவரை பயின்றேன்…
உடுமலையில்  புகழ் பெற்ற அரசு பள்ளி . திரு வெங்கட்ராமன் உதவி தலமை ஆசிரியர் ...
முதன் முதலாக கல்வி சுற்றுலா அழைத்து செல்வதாக அறிவித்தார்கள்… ஏதோ தூரமான இடத்துக்கு அழைத்து செல்கின்றார்கள் என்று ஆர்வமாக அறிவிப்பை எதிர்பார்த்து இருக்க… அருகில உள்ள மலம்புழா டேம்  அழைத்து செல்ல போகின்றோம் என்று அறிவித்ததும் மனது உடைந்து போனாலும்.. சரி பள்ளி சுற்றுலா.. வகுப்பறையைவிட்டு நண்பர்களோடு வெளியோ போகப்போகின்றோம் என்பதே சந்தோஷத்தில் திக்கு முக்காட வைத்து…
1985 ஆம் கால கட்டம்… சுற்றுலா பேருந்த கட்டணமாக 25 ரூபாய் அறிவித்தார்கள்…
அம்மாகையில் 25 ரூபாய் பணத்தை கொடுத்தார்கள்…
இப்போது போல குடும்பமே போய் ஓட்டலில் மொக்குவது போல அப்போது எல்லாம் மொக்க முடியாது…புளியோதரையோ… இட்லியோ நான் சுட்டுத்தரேன்னுசொல்லி.. புளியோதரை மூட்டையை கட்டிகொடுத்துச்சி…
ஆனால் எல்லாத்தைவிட கொடுமை… எங்க வீட்டுல இருந்து 75 கிலோமீட்டர் தொலைவில்தான் மலம்புழா  இருந்தது…
பள்ளிக்கு சென்று அங்கே இருந்து பேருந்தில் சென்று மலம்புழா டேம் ,பார்க் பார்வையிட்டு  விளையாடி விட்டு புளிய மர நிழலில் உட்கார்ந்து கட்டி சென்ற புளியோதரை பொட்டலங்களை சாப்பிட்டு விட்டு பேருந்தில் மறுபடியும் உடுமலையில்  எங்களை உதிர்த்து விட்டு செல்ல.. இதுதான் என்னுடைய வாழ்வில் நடைபெற்ற கல்வி சுற்றுலா…!!!
வீட்டில் இருந்து 75 கிலோமீட்டர் இடத்துக்கு சுற்றுலா சென்று விட்டு வந்தேன் என்றால் சுற்றுலாவே நம்மை பார்த்து  சிரிக்கும்… இருந்தாலும் நிதர்சனம் என்பது இதுதான்.
சரி எதுக்கு இந்த சுற்றுலா கதை இப்போது வந்தது என்று கேட்கலாம்… காரணம் இல்லாமல் கதை இல்லை…
கடந்த மாதம் நம்ம நண்பர்  அமெரிக்காவின் போஸ்டன் ...massasuesets மாநகருக்கு அவருடைய பணி நிமித்தமாக சென்றார்… அவரை வழியனுப்ப குடும்பத்தினரோடு கோவை  விமான நிலையம் சென்று இருந்தேன்.
200 ரூபாய் டிக்கெட் வாங்கி விமானநிலையத்தின் உள்ளே சென்றோம்..
எடை செக்கின் மற்றும் டிக்கெட் செக் செய்து முடிந்த உடன் இமிக்கிரியேஷன் செல்லும் முன் எங்களோடு தடுப்புக்கு அந்த பக்கம் நின்று விடைபெற்ற தருணத்தின் போது சில சின்ன சின்ன பசங்களை பார்த்தேன்…
10 அல்லது 12 வயது இருக்கலாம்… முகம் நிறைய சந்தோஷம்… அப்பா அம்மாவிடம் விடைபெற்றார்கள்… விசாரித்து பார்த்தேன்..
கோவையில் தனியார்  பள்ளி மாணவ மாணவிகளாம்… கல்வி சுற்றுலாவாம்.. அமெரிக்கா செல்கின்றார்களாம்…. ஒரு மாணவிக்கு இரண்டரை லட்சமாம்….
எனக்கு கண்ணை கட்டியது… இதுதானே வாழ்க்கை.. இதுதானே பள்ளி..??? கல்வி சுற்றுலாவுக்கு அமெரிக்கா அனுப்பும் பெற்றோர்…இதுவும் ஒரு வாழ்க்கைதான் இல்லை என்று நினைத்துக்கொண்டேன்.
எனக்கு மலம்புழா விற்கு  பேருந்தில்சென்று  புளியோதரை சாப்பிட்ட ஏப்பத்தோடு 25 ருபா சுற்றுலா நியாபகத்துக்கு வந்தது…
அந்த டூர் மட்டும் நான் செல்லவில்லை என்றால் … உங்கள் வாழ்க்கையில் கல்வி சுற்றுலா சென்று இருக்கின்றீர்களா? என்ற கேள்விக்கு இல்லை என்று பதிலாக நான் சொல்லி இருக்க வேண்டும்…
அந்த டூருக்காவது அரேன்ஜ் பண்ணிய  .உதவி தலமை ஆசிரியர் வெங்கடராமன் ...ஆகியோருக்கு நன்றி சொல்ல கடமை பட்டு உள்ளேன் ...
ஒரு 25 ரூபா சுற்றுலா இப்படி நிறைவு பெற்றது ......




பல கணங்கள் சிரித்து
பல கணங்கள் ரசித்து
ஒவ்வொரு நொடியும்
வாழ்ந்து பாருங்கள் 
வாழ்க்கை சுகமானது....

செவ்வாய், 14 நவம்பர், 2017

விருப்பாச்சி (virupatchi) - பதிவு -20.
.
மதுரை சுல்தான்களை விரட்ட வந்தது விஜநகர அரசு .. அதன் வழி -வரி வாசூலிக்க வந்தது நாயக்க அரசு .. அதன் வழி -வரி வசூலிக்க ஏற்படுத்தப்பட்டது பாளையப்பட்டுக்கள். அப்படி உருவாக்கப்பட்ட விருப்பாச்சி பாளையபட்டின் முதல் பாளையக்காரர் திருமலை சின்னப்ப நாயக்கர். அவர் வழி தொட்டு விருப்பாச்சியின் 19-வது பாளையக்காரர் கோபால் நாயக்கர் ... இவரோடு விருப்பாச்சி பாளையப்பட்டு அழிக்கப்பட்டு மண்ணோடு மண்ணாக ஆக்கப்பட்டது. அப்படி இறுதியில் ஆங்கிலேயர்களால் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்ட பின்னர் நிலங்கள் பங்கு போடப்பட்டன .. ஆங்கிலேயர்கள் பங்குபோட்ட நிலங்களை செல்லும்போது விற்றுவிட்டு சென்றனர். தற்போது, அரண்மனை இருந்ததாக சொல்லப்படும் நிலத்தில் விவசாயம் செய்து வருவோர்களுக்கு, கடந்த 60 ஆண்டுகளாக உரிமை உடையதாய் இந்த நிலம் உள்ளது. இதோ வரலாற்று சுவடுகள் சில
1988களில் அந்த செருப்பின் விலை… பத்து ரூபாய்… அந்த செருப்புதான் நடுத்தர மற்றும் உழைக்கும் மக்களின் பாதங்களை ஒரு காலத்தில் காத்தன என்றால் அது மிகையில்லை.
வெள்ளை மற்றும் நீல கலர் வார் செருப்பு வாங்கி ஒரு பதினைந்து நாள் கூட தாண்டாது…. செருப்பு அறுந்து விடும்…
கால்ல என்ன அருவாமனையா வச்சி இருக்கே என்று அப்பாவிடம் வாங்கிக்கொண்டு பிஞ்ச செருப்பை கோவத்தோடு பார்த்துக்கொண்டு இருப்போம்…
தரமற்ற செருப்பு… அப்படித்தான் அறுத்துக்கும்..
ஏவனாவது வேணும்ன்னு கால்ல போட்டுக்கிட்டு போற புது செருப்பை பிளேடு வச்சி அறுப்பானா? என்று அப்பாவை பார்த்து கேள்வி கேட்க வேண்டும் என்று தோன்றும்… ஆனால் வாயில் இருந்து எந்த வார்த்தையும் வெளிவே வரவே வராது…
அடுத்து ஒரு ஒன்றரை மாதத்துக்கு நரக வேதனை தான்…. செருப்பு தைப்பவரிடன் 50 பைசா கொடுத்தால் தைத்து கொடுப்பார்… ஆனால் எப்போது வேண்டுமானலும் செருப்பு அறுத்துக்கொள்ளும் என்பதால் அரைஞான் கயிற்றில் இரண்டு மூனு சேப்ட்டி பின்னு வச்சிக்கிட்டுதான் சுத்துவோம்…
சேப்ட்டி பின் வார்ல போட்டுக்கிட்டு நடக்கறது போல கொடுமை வேற எதுவும் இல்லை…. இந்த பக்கம் நடந்த ...அது அந்த பக்கம் இழுத்துக்கிட்டு திரியும்…
அவசரமா பஸ் புடிக்க ஓடும் போது சரியா படிக்கட்டு கிட்ட போய் பஸ் கைப்புடி கம்பி புடிக்கும் போது… சேப்ட்டி பின் வாய் திறந்து சிரிக்க…. தடுமாறி பேலன்ஸ் செஞ்சி நிக்கறதுக்குள்ள போதும் போதும்ன்னு போயிடும்…
மிக முக்கியமா பொண்ணுங்களை பார்த்துக்கிட்டு ஸ்டைலா நடக்கும் போது வைக்கும் பாருங்க வேட்டு... அது கொடுமையிலும் கொடுமை.
சைடுல பக்கில்ஸ் வச்ச லேதர் செருப்பு அப்போது அது காஸ்ட்லி… ரேட்… 150 இல் இருந்து 200 வரை இருக்கும்…
ஹயர் செகன்ட்ரி படிக்கற வரைக்கும் எனக்கு அந்த வெள்ளை நீலக்கலர் செருப்புதான்… பத்து ரூபாயில் இருந்து 27 ரூபாய் விலையேற்றம் வரை வாங்கி போட்டு நடந்தது எனக்கு நன்றாக நியாபகம் இருக்கின்றது…
அதன் பிறகு மியாமி குஷன் காலனிகள்..விளம்பரம் நம்மை படுத்தி எடுத்து...
பாரு பாரு மியாமி குஷன் பாரு... காலுக்கு நல்ல செருப்பு பாரு... என்று விளம்பரத்தில் அஜித் புலுட் வாசித்துக்கொண்டு வருவார். அதன்பின் அதில் நிறைய கலர்கள் வர ஆரம்பித்தன...
அதன் பின் பாராகன் செருப்புகள் வந்தன...
1998 இல் கோவையில்  PN  புதூரில் பெருமாள் கோவில் ஸ்டாப்பில் உள்ள வாடகை வீட்டில் .குடிருந்தேன் ..அவர் ஒரு விவசாய பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் விவசாய அறிஞர் ..பெரியார் மாதிரி இருப்பார் ...ஜப்பான்  குட்டை மரங்களை மாடியில் வளர்த்து வந்தவர் வீட்டின் அருகில் மாடியில் குடியிருந்தோம் ...இயற்கையான வீடு ..அவர் பெயர் மனதில் நினைவில்லை  .. நிரந்தமாக தங்கி வேலை பார்த்துக்கொண்டு இருந்த போது.. ஒரு பிரபலத்தின் வடவள்ளி வீட்டில் படப்பிடிப்பு… பெட்ரூமின் அட்டாச்டு பாத்ரூம் வாயில் என்னோடு பலகாலம் பயணித்த வெள்ளை நீல கலர் வார் செருப்பு இருந்தது…
பிரேமில்முந்திரிக்கொட்டை போல நீட்டிக்கொண்டு இருக்க… இயக்குனர் … அந்த பாத்ரூம் செப்பலை காலால கட்டிலுக்கு கீழ தள்ளி விடுங்க என்றார்.
அந்த செப்பல்கள் என்னோடு காடு கழனி, கடல் , மலை என்று பயணித்த நாட்களை நினைத்துக்கொண்டேன்…
ஒரு காலத்தில் பெரும்பாலான நடுத்தர மக்களின் கால்களை அலங்கரித்த செருப்பு…தற்போது கோவையில்  கூலி வேலை செய்யும் பீகாரிகள் கால்களில் மட்டும் அதனை காண முடிகின்றது…
கோவை கிராஸ்க்கட் ரோட்டில்  பிரமாண்டமாய செருப்பு எடுக்க சென்ற போது… செருப்பு 450 ரூபாய் என்று முன் வைத்து பர்சை காலி செய்ய கலர் கலராய் பல ரகங்களில் செருப்புகள் வியாபித்து இருந்தன… எனக்கு தலைசுற்றியது…
ஆனாலும் கடையில் நான் சேப்ட்டி பின் போட்டு சபித்துக்கொண்டு நடந்த செருப்பினை பல வருடங்கள் கழித்து பார்த்தேன்…
கோவையில்  பணக்காரர்களால் பாத்ரூம் செப்பல் என்று நாமகரணம் சூட்டப்பட்ட அந்த செருப்பின் விலை தற்போது 99 ஒன்பது ரூபாய்…
இது எப்படி இருக்கு ...அக்காங் ...!!!