சனி, 1 மே, 2021

 கேள்வி: சொந்த வீடு வாங்க வாழ்க்கையை தொலைப்பது முட்டாள்தனமா இல்லையா?


என் பதில் : 


சொந்த வீடு வேண்டும் என்பதும் , வேண்டாம் என்பதும் அவரவர் விருப்பம்தான்.


என் அனுபவத்தில் நடந்ததைச் சொல்கிறேன்.


முதலில், நாங்கள் வாடகை வீட்டில் தான் இருந்தோம். வருமானம் நன்றாக இருந்தது. அப்போது எல்லாம் ,சொந்த வீடு வேண்டும் என்ற நினைப்பு இருந்தாலும், தீவிரமாக இல்லை.


வந்தது ஏழரை. வாடகை கொடுக்க முடியாமல் சொந்த ஊருக்கே  சென்று விட்டோம். தினமும் பிரச்சினைகள்.


ஒருவழியாக, மறுபடியும் நகரத்திற்கு வந்து , மறுபடியும் வாடகை வீடு.


ஆனால்,வாடகை வீட்டில் வசிக்கும் பொழுது மிகவும் பொறுமை வேண்டும். இல்லையெனில் பட்டியலைத் தூக்கிக் கொண்டு அலைய வேண்டியதுதான்.


ஒருவழியாக, லோன் அரேஞ்ச் செய்து கொடுத்து, வீட்டையும் கட்டித் தரும் ஃபில்டர்ஸ் மூலமாக சொந்த வீட்டில் குடியேறி விட்டோம் வெற்றிகரமாக!!


ஆனால்,முதல் ஒரு வருடத்திற்கு மிகவும் சிரமமாக இருந்தது. இதை நாங்கள் எதிர்பார்த்ததுதான்.


ஏனெனில், வீடு கட்ட ஆரம்பிக்கும் போதே, பட்ஜெட் போட்டு பார்த்தோம். ஒருவரின் சம்பளம் முழுவதும் லோனுக்கு போய்விடும். இன்னொருவரின் சம்பளத்தில் தான் மளிகை, விசேஷம், ஸ்கூல் ஃபீஸ்,காலேஜ் ஃபீஸ், மாதாந்திர சீட்டு பணம் சமாளிக்க வேண்டும்.


குழந்தைகள் கொஞ்சம் பெரியவர்கள் ஆனதால் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, எங்களுக்கு உதவினார்கள், மனரீதியாக.


முதல் ஆறு மாதங்கள்,மிகக் கடுமையாக இருந்தது ‌‌. அவசரத்திற்கு 15,20 நாள் அல்லது ஒருமாதத் தவணைக்கு ( முடிந்த வரையில் வட்டிக்கு வாங்காமல்) கைமாற்று வாங்கி சமாளித்தோம்.


ஒவ்வொரு சீட்டும் முடிய,முடிய( ஏற்கனவே அவைகள் முடிவதற்கு சில மாதங்கள் மட்டுமே இருந்தது. அதை மட்டும் கொஞ்சம் கவனித்து வீட்டு வேலையை ஆரம்பித்தோம்) எங்களைச் சுற்றி இறுக்கியிருந்த கயிறு, இலேசாக இளக ஆரம்பித்தது.


கடைசி சீட்டும் முடிந்ததும் , முற்றிலும் விடுதலையான உணர்வு!! பரவசம்!!


இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால்,இந்த ஆறு மாதங்களில் " திட்டமிடல்" என்னவென்று மேலும் நன்றாகப் புரிந்து கொண்டோம்.


எந்த விஷயம் எதுவென்றாலும், முதலில் ஹவுசிங் லோனுக்கு எடுத்து தனியே வைத்து விட்டுத்தான் மற்ற செலவெல்லாம்.


ஆனால்,ஒரு இரகசியம் தெரியுமா? முதலில் ஏதாவது கைமாற்றாகப் பணம் கேட்டால்,சிறிது தயக்கத்துடன் தருவார்கள்.


ஆனால், இப்பொழுதெல்லாம், கேட்டவுடன் உதவி செய்ய முன்வருகிறார்கள். எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது.


சம்பளம் முழுவதும் கையில் வாங்கியபோது யோசித்தார்கள், இப்பொழுது," பாவம், உங்கள் சம்பளமே லோனுக்குப் போய் விடுகிறது,என்ற செய்வீர்கள்? " என்று இரக்கப்பட்டு உதவுகிறார்கள். ( ஏனெனில்,சொந்த வீட்டை விட்டு எங்கேயும் ஓடிப் போக மாட்டார்கள் என்ற நம்பிக்கை தான்)


ஆனால்,ஒன்று மட்டும் நிச்சயம். எதுவாக இருந்தாலும் ( வீடோ அல்லது வேறு ஏதாவதோ) விரலுக்கு ஏற்ற வீக்கமாக இருக்க வேண்டும் ‌‌


நான் ஜாதகத்தை நம்புகிறேன். உங்களுக்கு விரய காலம் என்றால் ‌‌‌‌‌‌‌‌அதை சுப விரயமாக மாற்றிக் கொள்ளலாம்.தேவையற்றவிரயங்கள் வந்து, உடலும் மனமும் கெட்டு பணமும் விரயமாவதைவிட , பூமியில் அந்த பணத்தை முதலீடு செய்தால், ஆரம்பத்தில் மிகவும் கஷ்டமாக இருக்கும். பின்னர் அதன்மூலமே நாம் பல பயன்களை அடையும் போது தான்,அதன் பலனை அனுபவிக்கும் போதுதான் தெரியும்.


உண்மையில்,சொந்த வீட்டில் இருக்கும் போது ( அது ஃபேங்கில் அடமானத்தில் இருந்தாலும். அடமானத்தில் இருப்பது நமக்குத்தானே தெரியும். இன்று அதுதானே ஃபேஷன்) அதன் மரியாதையும், கௌரவமும் தனி!!


வீண் ஆடம்பரமான பொருட்களை ( மறு முறை விற்க முடியாது) கஷ்டப் பட்டு தவணையில் வாங்குகிறோம். அதன் தவணை முடிந்தவுடன் கொஞ்ச வருடங்களில் , அப்பொருளின் ஆயுள் முடிந்து பழைய பேப்பர்காரனிடம் ஒழித்து விட்டு மீண்டும் புதிதாக ,புதிய விலையில் வாங்க வேண்டும்.


ஆனால் வீடு அப்படிப்பட்டது அல்ல,50 /60 வருடங்கள் ஆனாலும்,கட்டிடத்தை ஆல்டர் செய்யலாம். இல்லை இடித்து விட்டு புதிதாக "காம்ப்ளெக்ஸ்" கட்டி வாடகைக்கு விடலாம்.


இன்னும் யோசித்தால், நிறைய ஐடியா கிடைக்கும். கையில் வெண்ணெய்( நிலம்) இருந்தால் நெய்யிற்கு ( போனுக்கு) அலைய வேண்டியதில்லை அல்லவா?


ஆதலால்,சொந்த வீடு கட்டி, தற்காலிக சுகங்களை இழந்தாலும், நிரந்தரமான "மன நிம்மதியை " தருவது " சொந்தவீடு தான்" என்பது என் கருத்து.


( உண்மையில்,ரிடையர்ட்டு லைஃப் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று எல்லோர் மனதிலும் ஒரு ஆசை இருக்கும். நமக்கு மட்டும் இருக்காதா? எத்தனை நாள் ஓடியிருப்போம். அறுபது ,எழுபது வயதில் " அக்கடாவென்று" கால் நீட்டி உட்கார நமக்கும் ஒரு இடம் வேண்டுமே.)


இல்லாவிட்டால்,நாளை மருமகள் வந்து," உங்கள் தகப்பனார் இவ்வளவு காலம் சம்பாதித்து என்னத்தை மீதம் வைத்தார்?" என்று கேட்பார்கள். இன்று நாம் செய்யும் நம்முடைய அன்றாட தியாகங்கள்(குழந்தைகளுக்காக) அவர்களுக்கு மறந்துவிடும். நமக்கும் தான். ஒன்றா இரண்டா ஞாபகத்தில் வைத்துக் கொள்ள!!!


என் கருத்து பிடித்திருந்தால் ஏற்றுக் கொள்ளவும். பிடிக்கவில்லை என்றால் விட்டு விடுங்கள்., அவ்வளவுதான்.


நன்றி ..


சிவக்குமார் .

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக