கேள்வி : பணத்தை சேமிக்க உதவும் சிறந்த தந்திரங்கள் எவை?
என் பதில் :
உங்களுக்கு பணத்தின் மீது அதிக விருப்பம் என்றால்…
பணத்தை சேமிக்க சிறந்த வழி..எந்த ஒரு பொருளை வாக்கும்போதும்…பணத்தை ஒரு கையில் வைத்துக்கொள்ளுங்கள்…இன்னொரு கையில் பொருளை வைத்துக்கொள்ளுங்கள்.
சில பொருட்கள் பணத்தை விட மதிப்பு குறைந்ததாக இருக்கும்.
சில பொருட்கள் பணத்தை விட மதிப்பு மிக்கதாக இருக்கும்.
எது வேணும் என்று யோசியுங்கள்…
பணத்தை சம்பாதிக்கும் பல பேர் அதை செலவு செய்கிறார்களே தவிர, பணத்தை வைத்து பணத்தை உருவாக்க முயல்வதில்லை. சேமிக்கத்தான் முயல்கிறார்கள்.
இன்று வங்கிக்கு செல்கிறீர்கள், நீங்கள் 2015 ல் ஒரு வங்கிக்கணக்கில் 50,000 பணத்தை போடுகிறீர்கள்.
ஐந்து வருடங்கள் கழித்து அந்த பணத்தை நீங்கள் மீண்டும் எடுத்தால் ஒரு குறிப்பிட்ட அளவு வட்டியோடு தருவார்கள். ஆனால் பணத்தின் மதிப்போ அதே 50,000 இல்லை..நிச்சயம் அதை விட குறைவு தான்.
அதாவது, பணத்தின் மதிப்பு எப்படி குறைவு என்றால், நீங்கள் ஐந்து வருடத்திற்கு முன்பு வாங்கிய ஒரு பொருளின் விலை, ஐந்து வருடத்திற்கு பிறகு உயர்ந்து இருக்குமே தவிர, குறைந்து இருக்காது. ஆனால், உங்கள் பணத்தின் மதிப்பு நிச்சயம் குறைந்து இருக்கும்.
இன்னும் தெளிவாக சொல்லவேண்டும் என்றால், 2015 ல் ஒரு புத்தகத்தை 50 ரூபாய்க்கு வாங்கியிருக்கிறீர்கள் என்றால், 2020 ல் அந்த புத்தகம் விலை 60 ஆக இருக்குமானால். நீங்கள் 2015 ல் வாங்கிய அதே புத்தகத்தை 2020 ல் அதே ஐம்பது ரூபாய்க்கு வாங்க இயலாது.
ஏன் வாங்க இயலவில்லை, நீங்கள் 2015 வரும், 50 ரூபாய் தான் வைத்திருக்கிறீர்கள்..2020 வரும் அதே 50 ரூபாய் தான் வைத்திருக்கிறீர்கள். ஆனால் பொருளின் விலையோ மாறியுள்ளது. இதைதான் விலைவாசி உயர்வு(Inflation ) என்பார்கள்.
விலைவாசி உயர்வால் தான், உங்கள் பணத்தின் மதிப்பு குறைகிறது. அதே பொருளை 10 ரூபாய் அதிக விலைகொடுத்து வாங்க நேரிடுகிறது. இதை தான் Purchasing Power குறைவது என்று சொல்வார்கள்.
வருடம் ஆக, ஆக நம் சேமிப்பு பணத்தின் மதிப்பு வட்டியோடு சிறிதளவு உயர்ந்தாலும்( அந்த பணத்தின் உண்மை மதிப்பு, ஒரு பொருளை வாங்கும் போது குறைந்துகொண்டே தான் போகிறது)
மிக எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், 2015 ல் ஒரு லிட்டர் பெட்ரோலில் விலை 50 ரூபாய், 2020 ல் அதே ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை, 100 ரூபாய். இப்பொழுது சொல்லுங்கள்…நமக்கு நஷ்டமா? லாபமா? நிச்சயம் நஷ்டம் தான். இதே போல தான் வங்கியில் பணத்தை சேமிப்பதிலும் நமக்கு நஷ்டம் தான்.
பெட்ரோல் விலை எவ்வளவு உயர்ந்தால் என்ன? நான் எப்போதும் ஐம்பது ரூபாய்க்கு தானே பா.. பெட்ரோல் போட போறேன் என்று புத்திசாலி தனமாக போசுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.😂
அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் அவசர தேவைக்கு சேமிப்பு வைத்துக்கொள்கிறார்களே தவிர, பொது சேமிப்பு கணக்குகள் குறைவு தான். அவர்கள் பணத்தை சேமித்து பணத்தின் மதிப்பை இழப்பதில்லை.
அதே பணத்தை உதவிகரமாக, எதிலாவது பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் போன்றவற்றில் முதலீடு செய்கிறார்கள். அந்த முதலீடு அவர்களுக்கு பணத்தை வண்டியை விட அதிகமாக ஈட்டி தருகிறது
நம் நாட்டில் தான், பணத்தை எல்லாம், Jan Dhan account ல் சேமியுங்கள். நாட்டின் வளர்ச்சிக்கு செலவு நான் செய்கிறேன் என்று அரசாங்கம் சேமிப்பு கணக்குகளை தொடங்க ஊக்குவிக்கிறது.
நம்நாட்டில் இதெல்லாம் சாத்தியம் இல்லையப்பா என்றால், நீங்கள் உங்கள் சேமிப்பு கணக்கில் போடும் பணத்தை எதே ஒரு பணக்காரன் வங்கியில் இருந்து உங்கள் பணத்தை கடனாக வாங்கி, அதை முதலீடு செய்து, அதில் வரும் லாபத்தின் ஒரு சிறு பகுதியை தான், வங்கிக்கு வட்டியாக கட்டுகிறான். அதில் வங்கியானது பணக்காரனுக்கு கொடுத்த கடனுக்கு வரும் வட்டிப் பணத்தில் ஒரு சிறு பகுதியை தான், வங்கி..நம் சேமிப்பு கணக்கிற்கு நமக்கு வட்டி தருகிறது.
பணக்காரத்தந்தை மற்றும் ஏழைத்தந்தை என்ற புத்தகத்தில், ராபர்ட் கியோசகி அழகாக ஒரு வாக்கியத்தை சொல்லியிருப்பார்.
ஏழை பணத்திற்காக வேலை செய்கிறான்…
பணம் பணக்காரர்களுக்காக வேலை செய்கிறது…
ஆக, பணத்தை சேமிக்க மிகச்சிறந்த தந்திரம்…பணத்தை சேமிப்பது அல்ல…பணத்தை முதலீடு செய்வதும்...பணத்தை வைத்து பணத்தை பெருக்குவதேயாகும். அதாவது (money multiply) செய்வதேயாகும்.
நன்றி.
சிவக்குமார் . V ,K
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக