கேள்வி : எதுபோன்ற நபர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதே நல்லது?
என் பதில் :
முதலில் சில நடைமுறை உதாரணங்களை பார்த்துவிட்டு தொடரலாம்.
1. திரு. ராகுல்காந்தி அவர்களுக்கு வயது சுமார் 45 வருடங்கள் இருக்கக்கூடும். தமிழக தேர்தல் சுற்றுப் பயணத்தின்போது ஒரே கையில் தண்டால், கடல் நீச்சல் . . . அந்தளவு உடல் தகுதி, ஆரோக்கியம் உள்ளவர். அந்தஸ்துக்கோ, செல்வ செழிப்பிற்கோ, அறிவிற்கோ, கவர்ச்சிக்கோ, பெண்கள் விரும்பும் நிறத்திற்கோ ஒரு குறைவும் இல்லை. ஆனால் அவர் சிங்கிளாகத்தான் இருக்கின்றார். அவரது தாயார் ஐரோப்பிய நாட்டில் வளர்ந்தவராதலால் மகனின் சொந்த விசயங்களில் மூக்கை நுழைக்காமல் நாகரிகம் பேணுகிறார். (இந்திய தாய்மார்கள், சகோதரிகள் சும்மா எரிச்சலூட்டாமல் சோனியா, பிரியங்கா போன்று அமைதி காக்கவும்).
2. சல்மான்கான் தோற்றதில் அழகான வடிவமைப்புடன் கட்டுமஸ்தான ஆணழகன். ஒரு படத்துக்கு 100 கோடிக்கும் மேல் வாங்குகின்றார். சிங்கிளாகத்தான் உள்ளார். அது அவரது விருப்பம்.
எனவே
வட்டம் போட்டு வாழ்வதற்கு வாழ்க்கை என்ன கணிதமா?
கணிதம் என்று நினைப்பவர்கள் அதற்கான விலையை கொடுத்துவிட்டு வாழப் பழகவும்.
இல்லையென்று நினைப்பவர்கள் அவரவர் வழியில் பயணிக்கவும்.
நிற்க!
உடல் ஆரோக்கியம் அற்ற ஆண்கள் திருமணம் செய்யாதிருப்பது கட்டாயம். கருப்பை இன்றியே சில பெண்கள் பிறப்பதாகவும், அதை மறைத்து திருமணம் செய்வதாகவும், வெகு நாளாகியும் குழந்தை பிறக்காமல் போகும் போதுதான் தெரிய வந்ததாகவும் ஒரு பத்திரிகைச் செய்தி படித்ததுண்டு. இவர்கள் செய்வதும் நல்லதல்ல.
கடந்த வருடம் நீலகிரி தோடர் பழங்குடி வகுப்பினருள் நடந்த திருமணத்தின்போது தாலி கட்டும் நேரத்தில் என் காதலர் வந்து கொண்டிருக்கிறார். இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்துவிடுவார் என்று மணமேடையில் இருந்து எழுந்த மணமகளைப் போல அக்கப்போர், அபத்தம் நடக்காதிருப்பது நலம்.
நிரந்தர வேலையில் இல்லாதவர்கள் சிங்கிளாக இருக்கும்போதே ஜான் ஏறினால் முழம் சறுக்கும் வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்கள், சொற்ப வருமானம் உள்ளவர்கள் அகலக் கால் வைக்க வேண்டாம். எங்கோயோ போகிற 'பிரச்சனை' யில் வலிய சென்று 2 மீட்டர் துணி வாங்கி சட்டை தைத்து போட்டுக்கொள்ள வேண்டாம். வாழ்க்கை நரகமாகிவிடும்.
பூனாவில் கொரானாவினால் சுமார் 4000 நிறுவனங்கள் P.F. பங்குத் தொகை செலுத்த முடியவில்லை. வேலையே இல்லை. ஊழியர்களும் இல்லை என்று ஏதேதோ சொல்வதாக பத்திரிகை செய்தி சொல்கின்றது. இந்தியா முழுதும் டீ கடை காரன் அப்படித்தான் வைத்துள்ளார். 8 ஆயிரம் கோடியில் நாடாளுமன்ற கட்டடம் எப்படித்தான் கட்டுவானோ! மாநில அரசுகளிடமிருந்து சகல வருமானத்தையும் பிடுங்கிக் கொண்டு . . .
தமிழகத்தில் ஆட்சி மாறி இருக்கின்றது. காட்சியும் மாறும், ஒரளவாவது அனைவருக்கும் விடியும் என்று உளமாற நம்புவோம்.
இப்போது இல்லத்தரசிகள் குறைவு. அனைவரும் வேலைக்குச் செல்கின்றார்கள். ஆண்கள் சமைக்க தெரியாவிடில் பாத்திரமாவது கழுவி வைக்க வேண்டும். சமைப்பது, வீட்டை பெறுக்குவது, துவைப்பது . . . பெண்கள் வேலை என்று அவர்களை ஏமாற்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அந்த காமடி பீசுங்களும் அதையே நம்பிக்கொண்டு முகஞ்சுழிக்காமல் இது நம்முடைய வேலைதான், பாட்டி செய்தார்கள், அம்மா செய்தார்கள், நாமும் செய்யவேண்டும் என்று . . . படம் ரொம்ப நாளைக்கு ஓடாது.
குடிப்பழக்கம் உள்ளவர்கள் என்றாவது ஒருநாள் நிச்சயம் குடிநோயாளியாக மாறுவார்கள். பண்டிகை நாட்களில், வார இறுதி நாட்களில் டாஸ்மாக் வியாபாரம் அப்படித்தான் சொல்கின்றது. இல்லையென்றாலும் லட்சக்கணக்கான மருத்துவச் செலவு வெகுசீக்கிரம் வைக்கும்.
அவர்கள் சிங்கிளாகவே இருத்தலே நலம்.
இந்த Pre Flight செக் லிஸ்ட் டிக்கடித்துவிட்டால் தாராளமாக குடும்பஸ்தராக . . .
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக