கேள்வி : எலக்ட்ரிக்கல் கடை துவங்க எவ்வளவு முதலீடு வேண்டும்? எங்கே எப்படி கொள்முதல் செய்வது?
என் பதில் :
எலெக்ட்ரிக்கல் கடை துவங்கி மாதம் 55,000 சம்பாதிக்கலம்...
லாந்தர் விளக்குகளையும், விறகு அடுப்பு களையும் இன்றைய தலைமுறையினரில் பலர் பார்த்திருக்ககூட வாய்ப்பு இல்லை. காரணம், பகல் வேளைகளில் கூட பல வீடுகளிலும் அலுவலகங்களிலும் மின்சார விளக்குகள் ஒளிர்ந்துகொண்டு இருப்பதை நாம் பார்த்திருப்போம். மேலும் மின்சாரத்தால் இயங்கக்கூடிய பொருட்களைப் பயன்படுத்தி பழக்கப்பட்டுவிட்டோம். எனவே, மின்சாதனங்கள் தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்தநிலையில், எலெக்ட்ரிக்கல் கடை என்பது லாபம் தரும் தொழில்தான்.
’’எலெக்ட்ரிக்கல் கடை வைப்பதில் மூன்று வகை உள்ளது. ஏதாவது ஒரு மின்சார சாதனத்தை மட்டுமே விற்கும் கடைகள். உதாரணம், ஃபேன்களை விற்கும் நிறுவனங்கள். இரண்டாவது வகை, ஒரு குறிப்பிட்ட நிறுவனங்களின் எலெக்ட்ரிக்கல் பொருட்களை மட்டும் விற்கும் டீலர்கள். இவைகூட கொஞ்சம் பெரிய அளவிலேயே செய்வார்கள். மூன்றாவது, எல்லாவிதமான மின்பொருட்களையும் விற்கும் சிறிய கடைகள்’’
ஒரு மெடிக்கல் ஷாப் தொடங்க பி.பார்ம் (B.Pharm) என்னும் கல்வித்தகுதி வேண்டும். அரசு மருத்துவத் துறையிலிருந்து லைசன்ஸ் வாங்க வேண்டும். எலெக்ட்ரிக்கல் ஷாப்பிற்கு இதுபோன்ற கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. நேரடியாகவே ஒருவர் தொடங்கலாம். மார்க்கெட் பகுதியில் கடை போட்டிருப்பவர்கள் பதிவு செய்வதுபோல் ஒரு டிரேடராகப் பதிவு செய்துகொண்டால் போதும்.
எஸ்.டி. இல்லாவிட்டாலும் ஒரு வியாபாரியாகப் பதிவு செய்துகொள்வது அவசியம்.கடை தொடங்க நான்கு முதல் ஐந்து லட்சம் ரூபாய் தேவைப்படும். கடைக்கு அட்வான்ஸ் சுமார் 1 லட்சம் வரை ஆகும். இது கடை இருக்கும் இடத்தைப் பொறுத்து மாறுபடலாம். அடுத்தது ஸ்டாக். பொருட்களை ஸ்டாக் வைத்துக்கொள்ள குறைந்தது ரூ.1 லட்சம், இரண்டு லட்சம் இருந்தால் நல்லது. மின் பொருட்கள் கொஞ்சம் விலை அதிகம். அதனால் இவ்வளவு தேவைப்படுகிறது. மிக முக்கியமானது ஸ்டாக்கை வைக்கும் அலமாரிகள்.
பெரும்பாலும் கண்ணாடிப் பொருட்கள். ஒரு ஹார்டுவேர் ஷாப்பில் இரும்புச் சாமான்களைக் கொட்டி வைப்பதுபோல் இவற்றை வைக்க முடியாது. அந்தந்தப் பொருட்களை எளிதாக வைக்கவும் எடுக்கவும் வசதியான அலமாரிகளில் வகைப்படுத்தி வைக்க வேண்டும். முன்கடையில் இருக்கும் அலமாரி பிறகு உள்ளே மீதியுள்ள ஸ்டாக்கை வைக்க அலமாரி. இந்த உட் ஒர்க் மற்றும் கணினி சேர்ந்து ரூ.1 லட்சம். ஆக மொத்தம் ரூ.4 லட்சம்.
செலவுகள்: செலவுகள் என்று பார்த்தால், பெரும்பாலும் மற்ற கடைகளைப்போல் வாடகை, மின்சாரம் போன்றவைதான். தொடர்ந்து விளம்பரம் செய்வதற்குக் கூடுதல் செலவுகள் உண்டு. புதியதாக உருவாகும் நகர்ப்பகுதிகளில் ஒரு கடை இருந்தாலும் இன்னொன்றைத் தாங்கும். ஆனால் அருகருகே இரண்டு கடைகளைத் தவிர்க்கலாம்.
நன்றி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக