கேள்வி : கணவர் மனைவியிடம் அன்பாக இல்லை என்றால், மனைவி இன்னொருவரிடம் அன்பைப் பெற நினைப்பது சரியா இல்லை அது துரோகமா?
என் பதில் :
பெரும்பாலான தம்பதியர் திருமணமாகி இரண்டு மூன்று வருடங்கள் கழித்து மன ஒற்றுமை குறைந்து வாழ்கின்றனர். இதற்கு காரணம் என்னவென்று ஆராய்ச்சி செய்தால்
இந்த பிரச்சனையிலிருந்து வெளிவரலாம்.
கணவர் மனைவியிடம் அன்பாக இல்லை என்றால் ஆரம்ப கட்டத்தில் ஒரு குழந்தைக்காக மட்டுமல்லாமல் குடும்பத்தின் நிலைமை உணர்ந்து பெண் அனுசரித்து வாழ்கிறாள்.
இந்த அன்பு இல்லாமைக்கு காரணம் என்ன என்று முதலில் ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
திருமணத்தின் போது அந்த பெண்ணை இந்த ஆணுக்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம்.
வேறு பெண்ணை இந்த ஆணுக்கு பிடித்திருக்கலாம்.
பெற்றோர் வற்புறுத்தி திருமணம் நடந்திருக்கலாம்.
திருமணத்திற்குப் பின்னர் ஆணுக்கும் பெண்ணுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம்.
இருவருடைய உண்மையான குணாதிசயம் திருமணத்திற்குப்பின் வெளிப்பட்டு அது மற்றவருக்கு பிடிக்காமல் போயிருக்கலாம்.
உடலுறவில் இருவருக்கும் வேறு வேறு உணர்வுகள் ஆசைகள் திருப்பி நிலைகள் இருக்கலாம்.
ச***** படங்களையும் புத்தகங்களையும் சினிமாக்களையும பார்த்து பழக்கமாகி ஆணுக்கு அதில் வரும் பெண்ணை போல் தன் மனைவி இல்லையே என்பது வருத்தத்தை தரலாம். அதை வெளிப்படுத்தி தன்னுடைய மனைவியை காயப்படுத்தியும் இருக்கலாம்.
இத்தனை பிரச்சினைகளில் எது ஒன்று இருந்தாலும் அந்தப் பெண்ணுக்கு தன்னுடைய கணவன் தன்னை வெறுக்கிறான் என்ற உண்மை தெரிந்தால் அதற்குப்பின் யோகி போல வாழ அதிகபட்சமான பெண்களுக்கு விருப்பம் இருக்காது.
பல ஆண்களுக்கு தன்னுடைய மனதில் இருக்கும் ஆசையை அன்பை வார்த்தைகளோ செயலாலோ வெளிப்படுத்த இயலாதவர்களாக இருக்கலாம். இது மற்றவர்களுக்கு அன்பு இல்லாத நிலைமையாக தெரியலாம்.
பெண்கள் எப்போதுமே தன்னுடைய உணர்வுக்கும் அழகுக்கும் திறமைக்கு மதிப்பு அளிக்க கூடிய ஆண்களில் விரும்புகிறார்கள். ஆண்கள் கூட அப்படித்தான்.
சிக்கன் பிரியாணி வாய்க்கு ருசியாக செய்து போட்ட பின்னும் அதை ராகி கஞ்சி போல உண்டுவிட்டு போகும் கணவனை அந்தப் பெண் எப்படி உணர்வாள்?
பல மக்களுக்கு எப்பொழுதும் பிறருடைய குறைகள் மட்டுமே கண்ணுக்குத் தெரியும. அவற்றை அருமையாக வெளிப்படுத்தவும் தெரியும். நிறைகளை சொல்ல வாழ்த்த பெருமைப்படுத்த வார்த்தைகள் தெரியாது.
இப்படிப்பட்ட ஏதோ ஒரு பிரச்சனையால் கணவனுக்கு மனைவியை பிடிக்கவில்லை அல்லது அன்பு காண்பிக்க முடியவில்லை. இந்த நிலையில் இருக்கும் பெண் என்ன செய்ய வேண்டும் என்று நான் ஒரு கேள்வி கேட்க வேண்டும்.
பல பெண்களுக்கு குழந்தை ஆன பின்பு தான் தெரிகிறது இந்த உண்மை. குழந்தை இருப்பதால் அவர்கள் சகித்துக் கொண்டு இந்த வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து வாழ்கிறார்கள். இது ஆணுக்கும் பொருந்தும். இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்பவர்களே நாம் தொந்தரவு செய்யக்கூடாது.
எல்லோர் வாழ்விலும் ஏதோ ஒரு கசப்பு வருத்தம் இருக்கலாம்.அவரவர் எதிர்பார்ப்புக்கு வாழ்க்கை அமையாமல் இருக்கலாம். தன்னைப்பலவே குணாதிசயம் உள்ள வாழ்க்கைத் துணை கிடைப்பது அரிது.
அதனால் நண்பர்களே இதற்கு ஒரு தீர்வு கண்டு பிடிப்போம். பிரச்சனை முற்றுவதற்கு முன், அடுத்த தெரு ஆண் நம் பிள்ளைகளை மயக்கும் முன் நாம் ஒரு விதி செய்வோம்.ஒருவருக்கு ஒருவர் வீட்டில் இருக்கும் பெரியவர் இல்லை உறவினரை கலந்து ஆலோசித்து அந்த பாதிக்கும் நபரை திருத்த முயற்சிக்க வேண்டும். இதையெல்லாம் எப்படி வெளியே சொல்லுவது என்று பொறுத்திருந்து வெந்து சாவதைவிட வாழ்க்கையை நெறிப்படுத்தி ஆனந்தமாக வாழ்வது நல்லது.
இதற்கு மேல் பல கருத்துக்கள் மற்ற பதில்களில் உள்ளன.
ஆணுக்குப் பெண் பிடிக்கவில்லையா இல்லை பெண்ணுக்கு ஆணை பிடிக்கவில்லையா? இரண்டுமே இருக்கிறது.
உறவுகளை சரி செய்ய உறவினர் நண்பர்கள் ஆலோசகர்கள் இருக்கிறார்கள். எதையும் முத்தவிட்டு வெடிக்க வைக்க வேண்டாம்.
நல்லதையே எதிர்பார்ப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக