வெள்ளி, 28 மே, 2021

இன்று சர்வதேச தம்பதியர் தினம் ( மே - 29 )


 *அம்மி மிதித்து , அருந்ததி பார்த்து , மங்கல வாத்தியம் முழங்க பெற்றோர்கள்,  பெரியோர்கள் மற்றும் உற்றார்,உறவினர், நண்பர்கள் முன்னிலையில் திருமண பந்தத்தில் இணையும் இரு மனங்கள் காலகாலமாக இணை பிரியாமல் வாழ்ந்து ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து , 

அவர்களின் குறைகளை பெரிதுபடுத்தாமல் ஏற்றுக் கொண்டு , வாழ்வில் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து மக்கட் செல்வங்களை பெற்று அவர்களை வளர்த்து ஆளாக்கி அவர்களுக்கு நல்* *வாழ்கையை அமைத்துக் கொடுத்து , தன் இருவீட்டு குடும்பத்தாரையும் அனுசரித்து அரவணைத்து நடந்து எல்லா சுக- துக்க நிகழ்வுகளிலும் பங்கேற்று இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் நல்ல மன நிறைவான வாழ்கையை வாழ்ந்து ஊருக்கே* 

*முன்னுதாரணமாக வாழும் தம்பதிகள் என்றென்றும் நினைவு கூறத் தகுந்த வர்கள் மற்றும் வணங்கி மகிழப்பட வேண்டியவர்கள் . வாழ்த்துக்கள் தம்பதியரே . வேற்றுமையில் ஒற்றுமையை காணும் தம்பதியர் ஆகச் சிறந்தவர்கள்* . 


 *ஆழம் விழுதுகள் போல்* 

 *உறவு ஆயிரம் வந்தும் என்ன* 

 *வேர் என நீ இருந்தாய்* 

 *அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன் !* 


 *பேருக்கு பிள்ளை உண்டு* 

 *பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு* 

 *என் தேவையை யார்* *அறிவார்* *உன்னை போல்*

*தெய்வம் ஒன்றே அறியும் !* 

         

                   ஃஃஃஃஃ


( *சற்று விபரம் அறியாதவர்கள் , தன் குடும்ப சூழ்நிலையை உணராமல்  அடுத்தவரை போல் வாழ ஆசைப்படுபவர்கள் , வாழ்க்கைத் துணையின் முக்கியத்துவத்தை உணராதவர்கள் , சகிப்புத்தன்மை குறைவானவர்கள் , குணத்தை விட பணத்திற்கும் பதவிக்கும் தோற்றத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள் ,  சரியான வழிகாட்டுதல் இன்றி வளர்க்கப் பட்டவர்கள் இக்காலத்தில் திருமணமான வெகு விரைவில் பிரியும் நிலை உருவாகியுள்ளது சற்று வேதனையான ஒன்று , இந்நிலை மாற வேண்டும் , அதற்கு ஒவ்வொரு குடும்பமும் ஒத்துழைக்க வேண்டும்* )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக