கேள்வி : ஒரு மனிதன் வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஐந்து விஷயங்கள் யாவை?
என் பதில் :
தொடர்ந்து 20 வருடங்களுக்கு மேலாக ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வது சாத்தியமே இல்லை. இந்திய கலாச்சாரத்தில் வாழ்க்கைத் துணையோடு மட்டுமே சாத்தியம் :))
ஆணோ/பெண்ணோ எவ்வயதில் வேண்டுமானாலும் பெற்றோரை/உடன்பிறப்பை, கல்வி/வேலை/திருமணம் முன்னிட்டு பிரிந்து விடுவோம்.
வாழ்க்கை துணையுடன் மட்டுமே குறைந்தபட்சம் 40-50+ வருடங்கள் வாழ்கிறோம்.
வாழ்நாள் இறுதியில் ஒருவருக்கு மிகவும் விருப்பமான நபர் என்றால் அவருடைய வாழ்க்கை துணையே. ஆதலினால் காதல் செய்வீர் :))
மனிதர்கள் அன்பு, கோபம் இரண்டு குணங்களையும் ஒருங்கே கொண்டவர்கள்.
நம்மிடம் தொடர்ந்து ஏதோவொரு குணத்தை மட்டுமே ஒருவர் வெளிப்படுத்துகிறார் என்றால், தவறு நம்மிடமா அல்லது அவரிடமா என்று யோசிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
உறவு மற்றும் நட்பு வட்டத்தை கழித்துவிட்டு பார்த்தால் வாழ்க்கையில் எதுவுமே இல்லை.
அவர்களால் சிலநேரங்களில் தொல்லையே என்றாலும், சிறந்த, உறுதியான வாழ்க்கைக்கான உந்துதலை அளிக்கிறார்கள்.
இன்னும் 10 வருடங்கள் கழித்து, இன்றய தேதியில் நடந்ததில் 1% கூட நமக்கு ஞாபகத்தில் இருக்காது.
யாரோ உடனான மனவருத்தத்தை இன்றே மறந்து விடலாமே.
இன்று தீய்ந்து போன உப்புமா/ பிரியாணி வைத்துக்கொண்டு கவலைப்பட்டு என்ன பிரயோஜனம்?அப்புறப்படுத்திவிட்டு புதிதாக சமைத்து சாப்பிட்டால் போச்சு.
எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி யாருடனும் நட்பு கூட பாராட்ட இயலாது. எங்கேயும் நிரந்தர நட்பு/பகை இல்லை. Whatsapp,facebook,instagram..-விலும் கூட.
சில நொடி மகிழ்ச்சிக்காக…இன்றைய என்னுடைய பதிவுகள் பிடிக்கலாம். இன்னும் சில மாதங்களில் நிதி/தத்துவம்/ஆன்மீகம் சார்ந்த பதிவுகளுக்கு நகரலாம்.
தொடர்ந்து ஒரு வருடத்திற்கும் மேலாக சிலர் என் பதிவுகளை படித்ததில் எனக்கே ஆச்சரியம் தான்:))
நன்றி!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக