ஞாயிறு, 23 மே, 2021

 கேள்வி : திராவிட கட்சிகளின் அங்கிள்கள் ஆட்சிக்கு வந்தால் 90-ஸ் கிட்ஸூக்கு இலவசமாக பெண் பார்த்து திருமணம் செய்து வைப்பார்களா? அப்படி எதாவது தேர்தல் அறிக்கையில் இருக்கிறதா?..தற்பொழுது ஆட்சிக்கு வந்துவிட்டார்கள் ..


என் பதில் : 


அடா-அடாடா, இதுவல்லவோ கேள்வி!! சான்றமை வினா கோருநர் ஆக வரவேண்டியவர் நீங்க, இப்படி அனானியா கேட்டுட்டீங்களே ப்ரோ!!


கிராமத்துல சொல்லுவாங்க ‘கிடக்கறது கிடக்கட்டும் கிழவிய தூக்கி மனையில வையி’ அதுமாதிரி, ‘(தேர்தல்) நடக்கறது நடக்கட்டும், எனக்கு கல்யாணத்த நடத்தி வை’ என்கிற 90ஸ் குழந்தையின் உள்ளக்குமுறல் இது. கேட்குது ப்ரோ!


இப்போ, ரமணா போல புள்ளிவிவரங்கள்-


2001 இல் எடுத்த சென்சஸ் (மக்கள்தொகை) கணக்கு இது. இதன்படி 90களில் தமிழ்நாட்டில் 1000 ஆண்களுக்கு 974 பெண்கள் பிறந்து இருக்காங்க. பற்றாக்குறை 26 (முதல் வரிசை 1991, இரண்டாவது 2001)

பாண்டிச்சேரியிலும்/கேரளாவிலும் உபரியாக பெண்கள் உள்ளனர், என்பதை ஜிமிக்கி கம்மல் ஃபேன்களுக்கு கோடிட்டு காண்பித்துக் கொள்கிறேன். ரோடு போட வேண்டியது உங்கள் வேலை ஆமா! 


சரி 90களில் தான் பெண்கள் குறைவோ, என தேடினால், இல்லை 70,80 களிலும் பாலின விகிதம் குறைவாதான் இருந்து இருக்கு (1970–928 பெண்கள், 1980- 977)

இதனால் தெரிய வருவது என்னவெனில், பெண் சிசுக்கொலையால் தான் பெண்கள் சதம் குறைந்து, ஆண்களுக்கு பெண் கிடைக்கவில்லை என்ற வாதம் உண்மையானது அல்ல, அல்ல அல்ல…

சரி அப்போ, என்னதான் பிரச்சினை? இது உலக அளவில் நடந்து வரும் சமூகமாற்றம். உலகமயமாக்கப்பட்ட இந்தியாவிலும் எதிர் ஒலிக்குது, அவ்வளவுதான்.


Early millieanials என்றால் 30களில் உள்ளவர்கள், late millieanials என்றால் 20கள். இந்த மில்லினியல்களை சர்வே எடுத்ததுல, தெரிய வந்தது இது.


அதிகமா படிச்ச மில்லினியல்கள் இந்திய முறைப்படி நிச்சயம் செய்த திருமணம் செய்வதை வெறுக்கிறாங்க.

நகர்வாழ் பெண்களில் 41% பேர் காதல் திருமணம்தான் சிறந்தது என்று கருத்து வைத்து இருக்கிறார்கள்.


வேறு எந்த தலைமுறையை விட, தற்போது dating செய்வது, live in உறவுகளும் வெளிப்படையாக நடக்கிறதாம்.

நகர்வாழ் மக்களிடம் ‘premarital Sex’ அதாவது திருமணத்திற்கு முன்னான உறவு பற்றிய கருத்து மாறிவிட்டதாம். சகஜமாக நடக்கிறது என்கிறார்கள், அதனால் திருமணம் செய்வது இரண்டாம்பட்சம் என்கிறார்கள். (கிராமத்தில் சர்வே எடுக்கப்படவில்லை, அதனால் நிலவரம் தெரியவில்லை)

60000 க்கு மேல் சம்பாதிக்கும் மில்லினியல்கள் மட்டுமே திருமணத்திற்கு தயார் என்கிறார்களாம். 10000 க்கும் குறைவாக சம்பாதிப்போர், திருமணம் வேண்டாம் என்கிறார்களாம்.


வசதியான மேல்தட்டு வர்க்கத்தினர் இடையே ஜாதி இரண்டாம்பட்சம், அந்தஸ்தே திருமணத்தை முடிவு செய்கிறது. வசதி குறைந்தவர்கள் இடையே ‘ஜாதி’க்கான முக்கியத்துவம் அப்படியே இருக்கிறது.


ரொம்ப நாள் வரன் தேடிய 35% பேர், திருமணம் கசக்கும் என்று வெளியேறிவிட்டார்களாம்.

அதேபோல, பெண்கல்வி சதவீதம் அதிகரிக்க அதிகரிக்க, பெண்கள் திருமணத்தை சார்ந்து இயங்குவது குறைந்து உள்ளதாம் (1960 களில் 20% பெண்கள் 25 வயது வரை திருமணம் ஆகாது இருந்துள்ளனர், இப்போதோ, 43% பேர்)

எனவே, அதிகரிக்கும் ‘பணத்தேவை’, பெண் கல்வியால் ஏற்பட்ட விழிப்புணர்வு, picky ஆன பெற்றோர்கள், பாலின உறவுக்கு திருமணம் தான் செய்ய வேண்டும் என்ற நிலைமை குறைந்தது, டேடிங் கலாசாரம் அனைத்தும் சேர்ந்துதான் இந்த 90s kids திருமணத் தடைகளுக்கு காரணம். இது 2000,2010 gen இல் இன்னும்தான் அதிகரிக்கும். எனவே, இன்றைய பெற்றோர் better get used to it!


சரி திராவிட அங்கிள்ஸ் கல்யாணம் பண்ணிவைப்பாங்களா?


திராவிட அங்கிள்ஸ் பலத்த கைராசி உள்ளவர்கள், பல ‘வீடுகளை’ பார்த்தவர்கள்தான்,திருமண நிகழ்ச்சியிலேயே கூட்டணி பேசுபவர்கள்தாம், but நிலைமை இப்போ changed பிரதர்.


எனவே,90s kids எல்லாம் RSS இல் சேர்ந்து பிரம்மசாரியாகி. தேசநலனுக்கு பாடுபட்டு…


சரிசரி வெந்த புண்ணில் உப்பை தடவாது இதோட எஸ்ஸாகிக் கொள்கிறேன் 😜


நன்றி ....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக