கேள்வி : உண்டியலானது எதற்காக பன்றியின் வடிவத்தில் செய்யப்படுகிறது?
என் பதில் : உண்டியல்கள் பன்றி வடிவிற் செய்யப்படுவதன் காரணம் அவற்றின் பெயரே PIGGY BANK என்பதால் தான்.
600ஆண்டுகளுக்கு மனிதர்கள் தமது சில்லறைகளை சமையற்கட்டில் இருந்த சீல் பண்ணிய ஒரு மூடியிடப்பட்ட களீமண் சாடியிற் சேர்த்து வைத்தனர். இந்தச்சாடி இறுதியில் உடைக்கப்பட வேண்டியதென்பதால் அது PYGG என்னும் மஞ்சள் நிறமான தரம் குறைந்த களிமண்ணாற் செய்யப்பட்டது PYGG களிமண்ணாற் செய்யப்பட்ட சாடி PYGGY JAR ஆகிற்று
PYGGY JAR என்பதே பின்னாளில் PIGGY BANK என்றானது. பெயரின் காரணத்தையே மறந்துவிட்ட உண்டியல் செய்வோர் அதனைப் பன்றியுருவிலேயே செய்யலாயினர். சேமிப்புப் பழக்கமும் வளர்ந்தோர் கையிலிருந்து இளையோர் கைக்கு மாறிவிட்டதனால் பன்றி வடிவம் உட்பட எல்லா மாற்றமுமே வெகு SMOOTH ஆக நடந்து முடிந்து விட்டன..
நன்றி ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக