கேள்வி : புதிதாக வங்கியில் வேலைக்கு சேருபவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?
என் பதில் :
# நேரம் தவறாமையைக் கடைப்பிடியுங்கள்.
# வாடிக்கையாளர்களிடம் இன்முகத்துடன் பேசுங்கள், அதுவும் வயதானவர்கள், பென்ஷனுக்காக வருபவர்களிடம். அவர்கள் வெறும் அக்கௌன்ட் நம்பர்கள் அல்ல, உயிருள்ள மனிதர்கள், ஏதேனும் பிரச்னையுடன் வந்திருக்கலாம். பொறுமை தேவை. அதுதான் உங்களைத் தங்கள் வங்கியின் நல்லெண்ணெத் தூதர் ஆக்கும்.
# வாடிக்கையாளர்களிடம் வாக்கு வாதம் வேண்டாம். தவறு இருந்தால் சரி செய்து கொடுங்கள். பேச்சை வளர்க்கக்கூடாது.
# எவரையும் காக்க வைத்து விட்டுச் செல்லாதீர்கள். ஆனால் நீங்கள் நல்ல விதமாக, புன்னகையுடன் 10 நிமிடங்கள் பொறுங்கள், என்று கேட்டுக் கொண்டால் அரை மணியானாலும் வாடிக்கையாளர்கள் பொறுப்பார்கள்.வீணாக நீங்களும் டென்ஷன் ஆகி அவர்களையும் டென்ஷன் ஆக்கி விடக்கூடாது.
# அடுத்த கவுண்டர் செல்லுங்கள் என்று கை காட்டி விடாதீர்கள். முடிந்த வரை உதவுங்கள், இல்லையானால் சம்பந்தப்பட்டவரிடம் சொல்லிக் கவனிக்கச் சொல்லுங்கள்.
# உங்கள் வங்கியின் manual of instructions, circulars கம்ப்யூட்டர் நடைமுறைகள் ஆகியவற்றை முழுவதுமாகப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். அதன்படி நடவுங்கள்.வங்கிகளில் நடக்கும் 90% மோசடிகளின் காரணமே வங்கியில் வேலை செய்பவர்களின் கவனக் குறைவும், மேலதிகாரியின் உத்தரவுகள் /sanctions ஆகியவற்றைச் சரியாகக் கடைப்பிடிக்காமல் விதி மீறல்களுக்கு இடம் கொடுப்பதும் தான்.
# ஆபீசராக சேர்ந்தால், உங்களிடம் double லாக் சாவிகள் வந்து விட்டால், அவற்றை மிகக் கவனமாக வைத்துக் கொள்ளவும். Safe ஐ எப்போதும் கூடச் சாவி வைத்திருக்கும் ஆபீசருடன் சேர்ந்து பூட்டியே வைக்கவும்.
# முக்கியமான ஆவணங்களை வெளியே எடுத்தால் திரும்ப வைத்துப் பூட்டவும்.
#. நகைக் கடன்களில் நகைகளை கவனமாக பாதுகாத்து வைக்கவும்.
# காசாளராக இருந்தால் யாரையும் cash cage க்குள் விட வேண்டாம் நீங்களும் அதைத் திறந்து போட்டு விட்டுப் போய் விட வேண்டாம்.
# சாதாரணமாகவே சத்தம் போட்டு பேச வேண்டாம். அதுவும் செக் ட்ரான்ஸாக்ஷன்ஸ், பண remittances போன்றவை பற்றி banking ஹால் முழுவதும் கேட்கும்படி மற்றவரிடம் கத்திப் பேச வேண்டாம்.
# கொடுத்த வேலையில் கவனம் தேவை. வீண் அரட்டைகளைத் தவிர்க்கவும். ஆனால் இப்போதெல்லாம் அதற்கு நேரமேயில்லை எனலாம்.
# மேலும் சிஸ்டம்ஸ்/server அவ்வப்போது தகராறு செய்கின்றன. ரிப்பேர் செய்ய கம்பெனி வருமுன் குறைந்தபட்ச உபயோகம் செய்யுமளவு உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளவும். உங்கள் கம்ப்யூட்டரில் என்னவெல்லாம் செய்ய முடியும், செய்ய வேண்டும் என்று கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
# வாடிக்கையாளர்களிடம் கொடுக்கல் -வாங்கல் obligations ஐ அறவே தவிருங்கள்.
நன்றி .....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக