சனி, 16 செப்டம்பர், 2017

Thiruppathi devarajan :

மனிதர்களின் சிந்தைக்கு  ஞானம் வெளிப்படும் ஒரு   உன்னதாமான  சிறந்த இடம் எனில் எது  எனில் அது  ஆலயங்கள் மட்டுமே  இருக்க முடியும் அப்படி ஒரு பெரும் பழமை வாய்ந்த ஒரு  இடம் தான் கம்பளத்தார்க்களின்  பழைமையை  உணர்த்தும் ஒரு அறிய இடம்  யாரும் அறிந்திராத ஒரு வரலாற்று புதைவிடம்  கம்பளத்தார்களின்  வட துரவத்தில் இருந்து தென் துருவம் நோக்கி நடை பயணத்தில் நகர்ந்து வந்த ஒரு  பூர்வீ்க ஆலயம்  

திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டை வட்டம்  கோட்ட மங்கலம் என்னும்  இடத்தில் குடி கொண்டு உள்ள
அருள் மிகு ஸ்ரீ பல்லகொண்டம்மாள் ஆலயம் இந்த ஆலயமானது
 கம்பளத்தர்களில் ஒரு பிரிவான வேகிளிவார்களுக்கு   சொந்தமான     ஆலயமாகும் இந்த ஆலாயமமைந்து  கிட்ட தட்ட ஐந்து  நூற்றாண்டுகளுக்கு மேல்  இருக்கும் இங்கு குடி கொண்டுள்ள ஸ்ரீ பல்லகொண்டம்மாள் ஆலயமானாது   வரலாறு அறிய முடியாத புதைவிடத்தில் இருந்து அகன்று வெளி உலகத்திற்கு மீண்டு வந்துள்ளது இப்பொழுது ... இதன் வரலாறு பின் வருமாறு...
  ஆலயத்தின் நடுவே ... அமைய பெற்றள்ளது    சப்த கன்னிகள்  இந்த சப்த கன்னிகலானது ஏழு திரு உருவங்கள் கொண்ட ஏழு கன்னிமார்கள் அமைய பெற்றுள்ளன ..

இந்த ஏழு கன்னிளை ரட்ஷ கன்னிகள் என்றும் அழைப்பதுண்டு   கன்னிகள் பிறப்பிடம்  ஆதி ஜக்கு  இந்த அகிலத்தை ஆளும் அண்ட  சாரா ஒளி விளக்கு ஆதி  சக்தியினால் உருவெடுத்த  கன்னிகளாம் சப்த கன்னிகள் இந்த கன்னி்களானது தேவ லோகத்தை விட்டு பூலோகம் நோக்கி  வரும் போது  தெலுங்கில்
(காடாம கொண்ட )
 தமிழில் மருவி  பல்லேரி
  மலைபிரதேசங்களில்  குடி கொண்டனவாம்
 அதற்கான முன்னோர்கள் மொழிந்த வரலாற்று பாடல் வரிகள் சில ..

"பயிலு சீமா மந்தலான
பல்ல கொண்டு தா குல்லு பூட்ட ..

  குல்லு பூட்டான குல்லு  பெரிக ..
 குல்லுகி முந்தாகி புட்ட   பூட்ட ....

 புட்ட  பூட்டன புட்ட பேரிக புட்டக கண்ணுன எதுரு பூட்ட ....

 எதுரு பூட்டன எதுரு
 பேரிக எதுருகேமிகி அவ்வூரான ...
இப்படியான வரிகளில் 

மலைகளில் வாழ்ந்த தேவகன்னிகளை  பற்றியும் அங்கே ஆலயத்திற்கான ( தெலுங்கில் சிந்தாலு- சிந்தங்கள்) என்பன சொல்லப்பட்டு  உள்ளது இது மட்டும் இல்லாமல்     பூலோகம் நோக்கி வரும் போது  சிவனும் பார்வதியும்  பார்த்து விட்டு செல்வது வழக்கமாக கொண்டு இருந்துள்ளனர்  பின் காலம்  செல்ல செல்ல தங்களுக்கு பூஜைகள் செய்ய வேண்டும் என்று அந்த  சப்த கன்னிகள் சிவன் பார்வதியிடம்  வேண்டியதால்  அவர்களும் வரம் அளித்து  உங்களுக்கு பூஜிக்க  இந்த பூலோகத்தில்   அவதரிப்பான் என்று சொல்லி மறைந்தார்களாம் ..
 அதன் பின்    உருவடுத்த   அம்பூதன்ன எனபவர் பிறப்பிடம் கண்டு அவரை பூஜைக்க அனுப்பி வைக்க அவரும் அந்த ஆலயத்திற்கு வந்து சேர்ந்து விடுகிறார் அங்கு இருள் சூழ்ந்த நிலையில் இருந்த கோவிலை கண்டு அவருக்கு எப்படி  பூஜிப்பது என்று தெரியாமல் ...
 பூஜைக்கு பாலும் இல்லை  வெளிச்சத்திற்கு தீபமும்  இல்லை
 தீபாராதனை காட்ட நெய்யும்  இல்லை என்று மனமுறுகி
 திரும்பவும் கிழக்கு முகமாக சென்று சிவனை நோக்கி தவம் கொண்டாராம் .. அவரின் கடுமையான தவத்தினால் சிவனார் முன் தோன்ற நிலையை விளக்கவே  அப்பொழுது சிவனார் அவருக்கு பாலிருக்கு வேண்டி மாடுகளை வரமாய் அளித்து  நடக்க  நடக்க மாடுகள்  அவதரிக்கும் என்று எல்லா மாடுகள் அவதரித்த கொண்டே பின்னால் வரும் நீர்  சுற்றும் முற்றும் திரும்பாமல் நடப்பாயாக என்று சொல்லி மறைந்தாராம் .. அதன் படி அம்புதன்னவும் நடக்கலானர்
 மாடுகளும் பிறக்கலாயிற்று இறுதி மாடு பிறக்கும் போது திரும்பி பார்த்தமையால்  அவை பூலோகத்தை  இருட்டி கொண்டு உள்ளே சென்றாலாயிற்று   அவற்றை பிடிக்க முயற்சித்து  அதன் கொம்புகள் மட்டும் கையில் சிக்கியது.. அதை கொண்டு கோவில் முன் உள்ள காய்ந்த மரத்தடியில் வைக்கவும் அம்மரம் தலை பிடித்து  பால மரமானது  
 அம்பூதன்ன அனுதினமும் அந்த மாடுகளை பராமரிப்பதும்  சப்த கன்னிகளுக்கு  பூஜைகள் செய்தும் வந்து உள்ளார்  அப்பொழுது
  அந்த மலை குன்று இடுக்குகளில்  தெலுங்கில் (குறி) மரங்கள் இருந்தனவாம் அந்த மரங்களில் தினமும் பாலும் சிரிப்பு சத்தங்கள் கேட்டு கொண்டு இருந்தனவாம் இவற்றை பார்க்க அம்புதன்ன  என்பவர் அருகில் செல்லவே அதில் சிறு குழந்தை  உருவெடுத்த வண்ணம் இருந்ததாம்  அவற்றை பார்த்தும் அந்த மரமானது இரண்டாக விரிந்து அதில்  பாலகன்கள்  காடாரா பொம்மு, கோராஜுக்கள் அண்ணன் தம்பிகளும் இரண்டு பேர் பிறப்பிளானார்களாம்

பிறகு அந்த சிறு பாலகன்கள்  கன்னிகளுக்கு பூஜைகள் செய்ய அவதரித்தார்கள் என்று உணர்ந்த அம்பூதன்ன  தான் வரத்தால் பெற்ற மாடுகளையும் கோவிலையும்   அவர்களிடம்  கொடுத்து விட்டு தேவலோகம் சென்று விட்டாராம்  பிறகு  காடாரா பொம்மு, கோராஜுக்கள்
 பூஜைகள் செய்து வந்து உள்ளார்கள் வாலிப பருவத்தை எட்டவும்
திருமண  வயது வந்து விட்டது என்று எண்ணி இருந்தார்கள்   பெண் எங்கு தேடி மனமுடிப்பது என்று தெரியாமல் இருக்கும் சூல் நிலையில் அந்த மலைகுன்றுகளில் வளையல் செட்டி ஒருவர் நடை பயணத்தில் இவர்களை கண்டு  யார் என்று அறிய  வந்தமையால் தாங்கள் நிலை கண்டு வணங்கி 
 உங்கள் கம்பளத்தார்  (கப்பளம்) ஒருவர்  வீட்டில் பெண் பிள்ளைகள் இரண்டு இருப்பதாக தகவலும் சொல்லி அவர்களை அழைத்து கொண்டு போவளானர்  போகும்  வழியில் அவர் 
 சிலவற்றை இவர்களிடம் கூறியது
அந்த கப்பளாமானவர்   தேவ கன்னிகள் 
தேவலோகம்  விட்டு பூலோகம் வந்து  அக்கினி குண்டங்கள் வளர்த்தும்  தேவர்களை வணங்கும் போது  அந்த அக்கினி குண்டங்களில் இருந்து பிறந்து  வெள்ளை குதிரையுடன்  ஆகாயத்தில் பறந்தமையால்  அவருக்கு வல்ல குஜ்ஜ பொம்மு என்று பெயர் மறுவு  (தெலுங்கில் கத்தி ஆகுலு கவல முடுக்கு)  என்ற குஜ்ஜு பொம்மு கோட்டை உருவாகியது என்றும் கூறலானர்  நடவு பயணமாக போய் சேர்ந்தார்கள் அங்கு இருந்த பெண்டியரை பார்த்து காடாரா பொம்முவுக்கு ஒரு சாலியை குஜ்ஜ பொம்மு  வைக்க சொன்னாராம் அவை காவடி( உத்தலு ) பச்சை மண் பாண்டங்களில்  இருபுறமும் வைத்து ஒரு பானையில் பாலும் ஒரு பானையிள் நீரும் சரி சமமாக வைத்து பாலானது தயிராகவும்  நீரானது நிரம்பளவும்  மாறாமல் தலும்பாமல் இருந்தால்  திருமண  நிச்சியக்கலாம் என்ற சாலி அவை .. அது கணமே அவ்வாறே ஆனதென்றும்  முதன் முதலில் காடாரா பொம்மு குஜ்ஜு பொம்மு திருமண உறவானது  என்றும் ஒரு கூற்று உண்டு... பின் அவர்கள் இருவருக்கும் திருமனம் முடிந்தது இருவருக்கும் பனிரெண்டு பிள்ளைகள் பெற்றமையால்  அங்கு வறட்சி ஏற்படவே அங்கு இருந்து தெற்கில் நோக்கி வந்துள்ளர்கள்  கம்பலத்தார்களாகிய வேகிளிவார்கள் அவர்கிளில் ஒன்பது பிரிவு  குலங்கள்  குஜ்ஜபோம்மு,கப்பராஜூ,எரமாசி சின்ன பொம்மு காடாரா பொம்மு...
காடாரா பெம்மானாது நாளடைவில் பாலமண்ணாவாக மறுவி தற்போது பாலமண்ணா ஆனது  அதில் பல பிரிவுகள் உள்ளடிக்கியது
 அவர்களுக்கு குல தெய்வாமனது
 சப்த கன்னிகளும்
 பல்லகொண்டம்மை

 தெற்கு முக நோக்கி வந்து

தெலுங்கில்

( "ஆனமல சோனா சீமை")
 தமிழில் மறுவி
 ஆணை மலை தூறல் பகுதிகளுக்கு   வந்துள்ளார்கள்  அங்கு இருந்து  வறட்சி நீங்கவே கிழக்கு முகமாக ஒரு பகுதியினரும் தெற்கில் ஒரு பகுதியினரும்
சென்று விட்டமையால்
இந்த ஆலயத்தை இங்கு  வாழ்ந்த
கம்பளத்துமார்கள் (கப்பளம்)
பராமரித்து  வணங்கி கொண்டு வந்துள்ளனர்  பிறகு  பாண்டியர்கள்,பாளையக்கார்கள்  ஜமீன் ஆட்சி  முறை நடை முறையில் .. இப்பகுதி ஜமின்கள்
இவ்வாலயத்தினை வழிநடத்தி வந்துள்ளார்கள் ...
இங்கு  ஒன்பது  குலங்களுக்கும்  ஒரே ஆலயத்தில்    சிலைகள் உண்டு இவை பாண்டியர் காலத்தில் கட்ட பட்டவையாக கருத படுகிறது...  வல்லகொண்டாம்மாள்  ஆலயமானது சுமார் 103 ஏக்கர் நஞ்சை புஞ்சை அடங்கிய நிலம் புலன்கள் உள்ளடக்கியது  இது அனைத்தும்  இவ்வாலயத்திற்கு  சொந்தமானவை
இதில் உள்ள நிலம் பொது மக்கள் ஆகிய கொட்ட மங்கலத்தில் உள்ள சுற்று வட்டார பகுதி மக்கள் வைத்து வாழ்ந்து வந்து இருக்கிறார்கள் இப்பொழுது அரசிற்கு சொந்தாமாயிற்று  இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றவை மாசிமகம் சிவன்ராத்திரி அன்று இங்கு விசேசமான பூஜைகள் நடைபெறுவது வழக்கம் 
அதில்
சப்த  கன்னிகள் ஆகிய பாலமநாகு குல தெய்வமும் ,குஜ்ஜுபோம்மு விற்கு அக்னி குதிரை வாகனத்தில் அருள் பாலிக்கிறார்
 வல்ல குஜ்ஜ பொம்மு,மாமுலு பொம்மு
வல்ல கொண்டவ நாயக்கர் ,போகராஜூலு,கப்பராஜுலு ,ஆதி ஜக்கதேவி ,  போன்ற  சுவாமிகள் குடி கொண்டு உள்ளன .

 இங்கு சிவன் வித்தியாசமாகா காட்சி அளிக்கிறார் சிவ லிங்கம் எதிர் புறத்தில் அமைந்து உள்ளது பசுவாகிய நந்தி
அருகில் விநாயகர்  அருள் பலிக்கிறார்கள்.
இங்கு திருவிழாக்களும் நடந்தும் தான் உள்ளது
  மாலை தாண்டும் விழாக்கள்   தெலுங்கில் (தேவர மொக்குலு ) சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் வரை நடந்து  கொண்டு தான் இருந்து உள்ளதாக எங்கள் பகுதி மூதட்டிகள்   சுமார் பல்லாயிரம் மக்கள் கூடி நடந்த ஒரு திருவிழா என்று கூறியதுண்டு

அதனுள் ஒரு பழமையான நாகம் ஒன்று குடி கொண்டு உள்ளதாகவும் நீதி நேர்மைக்கு புறம்பாக நடந்து இருந்தாலோ அல்லது கம்பளத்தார்கள்  நீதி நெறியினை மீறி இருந்தால் அந்த நாகம் கண்ணில்
புல படுகிறது.
கோவிலின் புகழ் இன்னும் உயர்ந்து அங்கு நமது கம்பளத்தார்கள் அனைவரும் ஒன்று கூடி ஒரு மாலை தாண்டும் விழா வை நடத்தினால் இன்னும் கோவில் வெகு சிறப்பு பெற்று அமையும்  கருத்துக்கள்.

 அங்கு நிறைய வரலாறு மிக்கவை உள்ளன கற்கள் மற்றும் மரத்தில் உருவங்கள் செதுக்க பட்டு உள்ளன பார்க்கவே ஒரு வித்தியாசமாக காட்சி அளிக்கிறது அங்கு கம்பம் என்று சொல்ல கூடிய கற்களில் போர்கள் நடந்தமைக்கான ஆதாரமும் கற்களில் தமிழ் எழுத்துக்களும் பொறிக்க பட்டு உள்ளவை அந்த கோவில் வாசலில் மீன் சின்னம் பொறிக்க  பட்டும் உள்ளது வெகுவாக மனதையும் கவர்ந்த ஒரு அற்புத  கோவிலாக கட்சியளிக்கின்றது

  இதன் சிறப்புகள் :
 ஆலயத்தில் உள்ள  சப்த கன்னிகள் மக்களுடன்  கூப்பிட்ட குரலுக்கு  எதிர் பதில் குடுத்தது உண்டு ..   மக்களோடு மக்களாகா வாழ்ந்ததும்  உண்டு இன்னும் பல அதசியங்கள் நடந்தும் இருக்கின்றது...
 இக்கோவிலில் ...
நமது ஏனைய கம்பளத்தார்களில் பலர்
 இந்த கோவில் ஒன்று இருப்பதை அறிந்ததும் இல்லை
 இப்பொழுதும்  அம்மையை நாடி வருப்பவர்குளுக்கு நற்செயல் செய்தும் காத்து கொண்டும் உள்ளது ... இனி வரும் காலங்களிலாவது ... வேகிளிவார்கள்  ஒன்றிணைந்து  கரம் கூப்பி வணங்கி வந்தால் நற்செயல் கிட்டும்..

ஒரு ஆலய தரிசனம்   ஆண்டு பல காக்குமாம்...

 ஒன்றினைந்து உண்டாக்குவோம் பழமையான கோவிலின்
 பாதுபாகப்புடன்  வரலாற்று புதைவிடங்களை  எடுத்து வெளிக்காட்டவோம் இவ்வுலகிற்கு

1 கருத்து: