சனி, 30 செப்டம்பர், 2017

கம்பள விருட்சம் அறக்கட்டளையின் ...செயலாளர் .....வருடம் 2012 திருப்பூர் கீர்த்திவீரர் எத்தலப்பர் வாட்ஸாப்ப்க்குழு ..ஆரம்பித்து ..முதன் முதலாக எப்படி செய்திகள் கொண்டுசொல்லுவது .என்று திட்டமிட்டு .செல்வி .பிரேமா . (பாப்பனூத்து ).அவர்களின் உதவியோடு நம் சமுதாய நிகழ்வுகளை வெளியிட்டு அற்புதமாக நம் இளைய சமுதாய சொந்தங்களுக்கு முன்னோடியாக ...வழி நடத்தி சென்றுகொண்டுஇருக்கிறார்கள் ...இவர்கள் விருட்சத்தின் விழுதுகள் ...கிளைகளை பரப்பிக்கொண்டு வருவது நம் சமுதாயத்துக்கு பெருமையும் கூட ... திருப்பூர் கார்த்தி மாப்பிள்ளைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
நடிப்புக்கு இலக்கணம் கற்றுக்கொடுத்த இந்திய திரை உலகின் சரித்திர நாயகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு இந்த சமர்ப்பணம்!!

  மறைந்த தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் நடிகர் திலகம் சிவாஜிகணேசனை 1967 ம் ஆண்டு பொம்மை ஏடுக்காக நேர்காணல் செய்த வேளையில்
ஜெயலலிதா:சின்ன வயசிலே நீங்க நாடக மேடையில் நடிக்க ஆரம்பிச்சீங்க-இல்லையா?அப்போ ஏதாவது நினைச்சதுண்டா.அதாவது எதிர்காலத்தை பற்றி.இப்படி ஒரு நடிகரா வருவோம்னு நினைச்சதுண்டா?
சிவாஜி:இப்படி ஒரு நடிகனாகிவிடுவேன்னு கனவுகூட கண்டதில்லை.நடிக்க வேண்டும்கிற ஒரே ஆர்வம் தான் என்னை மேடைக்கு துரத்திச்சு தவிர,வருங்காலத்தைப் பற்றியோ,எதிர்காலத்தைப் பற்றியோ நினைக்க முடியாத நிலை.அப்போது அடுத்தவேளை சோத்துக்கே என்ன செய்யறது?எங்கே போறது என்ற நிலையில் எதிர்காலத்தைப் பற்றி நான் நினைக்கலே.அதுக்கு நேரமே கிடைக்கலேன்னு சொல்வேன்.
ஜெயலலிதா:நடிகர்கள் அரசியலில் பங்கெடுத்துக் கொள்ளவேணும்னு நீங்க
நினைக்கிறீங்களா?அப்படி நடந்தால் தங்களது தொழிலுக்கும் அரசியலுக்கும் சமமான வகையில் பணியாற்ற முடியும்னு நினைக்கிறீங்களா?
சிவாஜி:அரசியல் வேறு,நடிப்பு வேறு.நடிகனாக இருப்பவன் நடிப்புக்குத்தான் முதலிடம் தரவேணும். நான் ஒரு அரசியல் கட்சியில் இருப்பதால் நான்
முழுக்க முழுக்க அரசியலிலேயே இருக்க வேண்டும்னு அந்த கட்சியும் விரும்பாது. ஆனால் கட்சியில் இருப்பதாலே சில கடமைகள் அவனுக்கு உண்டு.சில கடமைகளை அவனிடமிருந்து எதிர்பார்க்கவும் கட்சிக்கு உரிமை உண்டு.உதரணமா எனக்கு இரண்டுமாசம் ஓய்வு கிடைக்குதுன்னு வச்சுக்குவோம்.ஒரு மாசம் நான் ஓய்வு எடுத்துக்கலாம்.ஒரு மாசம் கட்சிக்காக உழைக்கலாம். ஆனா கட்சி வற்புறுத்தாது.எப்பவும் வரலாம், போகலாம். அதனால கட்சி,நடிப்பு இரண்டுக்கும் முடிச்சுப் போடக்கூடாது.அது வேறு,இது வேறு.
ஜெயலலிதா:தமிழ் படங்கள் இப்போ முன்னேறியிருப்பதா நினைக்கிறீங்களா?அல்லது தரம் குறைந்து விட்டதாக எண்ணுகிறீர்களா?
சிவாஜி:எல்லாத் துறையிலும் நிச்சயமாக முன்னேற்றம் அடைஞ்சிருக்கு.
அதேசமயம் சில படங்கள் மக்களது ரசனையை குறைச்சிடும் போலிருக்கு.
இந்த மாதிரிப் படங்கள் நூற்றுக்கு இருபத்தஞ்சு இருக்கும்.ஆக நாம் மேலே
ஏறினாள்,இந்தப் படங்கள் கொஞ்சம் நம்மை கிழே இழுத்து விட்டுடுது.
ஜெயலலிதா:மிகுந்த திறமைசாலிகளுக்கும் சிலசமயம் அவங்க மேற்கொண்டு இருக்கும் தொழிலிலேயே சவாலாக சில விசயங்கள் முளைச்சிடும். அதுபோல சிறந்த நடிகரான உங்களுக்கே,சவாலா இருந்த வேஷம் எது?
சிவாஜி:நல்ல கேள்வி.கப்பலோட்டிய தமிழனாக நடிச்சேனே,அதுதான் உண்மையிலேயே எனக்கு சவாலாக இருந்த வேடம்.ஏன்னா கப்பலோட்டிய
அந்த பெருமகனாரை நேரில் பார்த்த பலர் இன்னைக்கும் நம்மோடயே இருந்துக்கிட்டிருக் காங்க. கதைக்குள்ள வரும் பாத்திரங்களை ஏற்று நடிப்பது சுலபமான காரியம்.ஆனால் நமது வாழ்க்கையில் சந்தித்த,அதுவும் சமீப காலம் வரைக்கும் இருந்த ஒரு பெரிய மனிதரைப் போல நடிக்கிறோம் என்று சொல்றபோது,அந்த நடிப்பை எல்லோரும் ஏத்துக்கணும். அதிலே மாறுபாடு எழக்கூடாது.பெரியார் அவங்களைப் போல நடிக்கிறோம் என்றால்,பாக்கிறவங்க 'பெரியாரைப் பார்ப்பதுபோலவே இருந்ததுன்னு சொல்லணும்.அப்போதான் நடிப்பு பூரணத்துவம் பெரும்.அந்த மாதிரியான ஒண்ணுதான் இந்தக் கப்பலோட்டிய தமிழன் வேஷம்.இதில் நான் நடிச்சதை பார்த்துட்டு,அந்தப் பெரியவர் வ.உ.சி.யின் மகன் 'என் அப்பாவை நேரில் பார்த்ததுபோல இருந்தது' என்று சொன்னார்.ஒரு வெற்றியாகத்தான் நான் இதைக் கருதுகிறேன்.
ஜெயலலிதா:சில நாவல்கள் படிக்கிறோம்,கதைகளை கேட்கிறோம்.ஆஹா!
அந்த மாதிரி வேஷம் நமக்கு வரக்கூடாதா?கிடைக்காதா?என்று
நினைக்கிறோம்.அந்த மாதிரி நீங்க எதிர்பார்த்து நடிச்ச வேஷம் ஏதேனும்
இருக்கா?
சிவாஜி:கட்டபொம்மன் வேஷம் அப்படிப்பட்டது.கட்டபொம்மன் கதையை
தெருக்கூத்தா நான் பார்த்தேன்.நான் வீட்டை விட்டு நாடகத்தில் போய்ச்சேர தூண்டுதலாக இருந்ததே இந்த கட்டபொம்மன் கதைதான்.
ஜெயலலிதா:இப்போ புதுசா ஒரு பிரச்சினை தலை தூக்கியிருக்கு.முத்தக்
காட்சிகளை அனுமதிப்பதா இல்லையான்னு?நீங்க என்ன சொல்றீங்க?
சிவாஜி:சே..சே..வெட்கக்கேடு.முத்தம் கொடுக்கிறதை காட்டவே கூடாது.முத்தம் கொடுக்கிறது மாதிரி நடிக்கணும்.மூடிக்காட்டுவதுதான் கலை.
பச்சையா உள்ளதை அப்படியே காட்டினா அது கலையாகாது.அதனால் முத்தம் கொடுப்பதையெல்லாம் திரையிலே காட்டக்கூடாது என்பதுதான் என்னுடைய
தாழ்மையான வேண்டுகோள்.
ஜெயலலிதா:உங்களுக்கு எவ்வளவோ விசிறிகள் இருக்காங்க.நீங்க யாருக்காவது விசிறியாக இருந்ததுண்டா?
சிவாஜி:ஓ!இப்பவும் நான் விசிறியாக இருக்கேன்.பி.ஆர்.பந்துலு மேடையில்
நடிச்சு வந்தபோது,நான் அவருடைய விசிறிகளில் ஒருவன்.ஹிந்தி நடிகை
நர்கீஸின் விசிறி நான்.சார்லஸ் போயர் ரசிகன் நான்.
ஜெயலலிதா:உங்களுக்கு லதாவின் பாட்டு என்றால் ரொம்பவும் பிடிக்கும்
போலிருக்கே?
சிவாஜி:என் தங்கையாச்சே பிடிக்காம இருக்குமா.அது மட்டுமா?சமீபத்திலே
நான் ஒரு நியூஸ் கேள்விபட்டேன்.இண்டர்நேஷனல் லெவல்லே உலகம்
பூராவும் ஒலிபரப்பப்ட்டு பாடகர்களின் வரிசையில் லதாவின் பாட்டுக்கள்
நாள் ஒன்றுக்கு இருபது மணிக்கும் மேலே ஒலி பரப்பாகுதுன்னு சொன்னாங்க.உலகிலேயே எந்தப் பாடகிக்கும் இல்லாத தனி கவுரவம் என் தங்கச்சிக்கு இருக்கு.
ஜெயலலிதா:நீங்க நாடகங்களிலே நடித்து வந்த காலத்தில் சினிமாவுக்கு அடிக்கடி போவதுண்டா?
சிவாஜி:அப்ப மட்டும் என்ன?இப்பவும்ந்தான். மெட்ராஸ் சிட்டியிலே நான் பார்க்காத படமே ஓடாது. நேத்து ராத்திரிகூட ஒரு குப்பை படத்துக்கு நான் போயிட்டு வந்தேன்.
ஜெயலலிதா:அந்த மாதிரியான நாளிலே நீங்க ரொம்ப விரும்பி பலமுறை பார்த்த படம் எது?
சிவாஜி:ருடால்ப் வாலண்டினோ நடித்த 'தி ஷீக்' என்ற படம்.
ஜெயலலிதா:ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் சில சம்பவங்கள் மறக்க
முடியாததாக அமைந்துவிடும்.அந்த மாதிரி உங்க வாழ்க்கையிலே ஏதாவது
நடந்திருக்கா?
சிவாஜி:எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் ஆசிய ஆப்பிரிக்க படவிழாவின்
போது நடந்தது.அன்னிக்கு விழாவுக்கு வந்த படங்களின் ரிசல்ட் சொல்றாங்க.
நான் பின்னாலே உட்கார்ந்திருந்தேன்.அங்கிருந்த வங்க எல்லாம் என்னை
ஏதோ டெக்னீசியனு நினைச்சிருந்தாங்க.அங்கே வந்திருந்தவங்களெல்லாம்
பெரியவங்க,உயரத்திலும் ஏழடி.அங்கே பல பெரிய நாடுகளிலிருந்து பல
கலைஞர்கள் கூடியிருந்தாங்க.நீதிபதிகள் எல்லோரும் வந்தாங்க.
கட்டபொம்மன் தான் சிறந்த படம்.கட்டபொம்மனா நடிச்ச நான்தான் சிறந்த
நடிகன்னு சொன்னாங்க.என் பேரைச் சொல்லி கூப்பிட்டாங்க.நான் எழுந்து
நின்னேன்.வாழ்க்கையில் நான் எதற்கும் சாதாரணமா மசிஞ்சு கொடுக்கா
தவன்.நடுக்காட்டில் புலி துரத்தி வந்தபோதுகூட அசையாமல் இருந்தவன்.
ஆனா அன்னிக்கு கெய்ரோவில் நடந்த அந்த சம்பவம் என்னை அசத்திட்டது.
என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பத்மினி என்னை தாங்கிப் பிடிச்சிட்டாங்க.
இல்லாட்டி நான் நிச்சயம் விழுந்திருப்பேன்.நான் என்னையே மறந்து உணர்ச்சி வசப்பட்டது அந்த ஒரு நாள்தான்.
இன்று நடிகர் திலகத்தின் ஆம் பிறந்த தினம் ....ஒரு வித்தியசமான நினைவு கூறல் ...

வரலாறு சொல்லும் பழங்கால கோவில்; அழகு மிளிரும்









சிலைகளின் ஆச்சரியம் !


உடுமலை அருகே, பழங்கால வரலாற்றையும், தொன்மை வழிபாட்டையும், தாங்கி நிற்கும், கோவிலை தொல்லியல் துறை வழிகாட்டுதலுடன், புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.உடுமலை அருகே கொங்கலக்குறிச்சியில் பழமை வாய்ந்த செல்லாண்டியம்மன் கோவில் அமைந்துள்ளது. அரிய வகை மரங்களை, சுற்றுச்சுவராக கொண்டு, வளாகத்தில், கிணற்றுடன் காணப்படும் இக்கோவில், பல்வேறு வரலாற்று தகவல்களை இன்றும் இளைய தலைமுறையினருக்கு வெளிப்படுத்தி வருகிறது.இதன் பழமையை வெளிப்படுத்த, கருவறை நேராக உள்ள நுழைவாயிலில், பெரிய கற்கள் நடப்பட்டு, அதன் வழியாக பக்தர்கள் உள்ளே வருவது போன்ற பல்வேறு கட்டமைப்புகளை கூறலாம்.சிலிர்க்க வைக்கும் சிலைகள்கோவிலில் உள்ள செல்லாண்டியம்மன் சிலை தொன்மை வாய்ந்ததாகும். அஷ்ட துர்க்கை எனப்படும் வடிவமைப்பில், கருவறையில் அம்மன் சிலை உள்ளது. முன்கோபுரத்தின் மேற்பகுதி முழுவதும் பெரிய கற்களை அடுக்கி, சுண்ணாம்பு காரையால், பூசப்பட்டுள்ளது. கோபுரமும், இத்தகைய கட்டுமான பொருட்களை கொண்டே கட்டப்பட்டுள்ளது. இதனால், கோவிலுக்குள் எப்போதும், ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலையே நிலவும் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.அம்மனுக்கு எதிரில், நந்தியும், அதிக உயரம் கொண்ட, வேலும் காணப்படுகிறது. அம்மன் சிலை வடிவமைப்பை வைத்தே, அது, 600 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதே போல், அம்மன் சன்னதிக்கு இருபுறமும், அப்போதைய ஆட்சியாளர்களின் சிலைகள் உள்ளன. அந்த சிலைகளின் வடிவமைப்பு பார்ப்பவர்களை பரவசப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.ஆபரணங்களும் அழகும் !அங்குள்ள ஆட்சியாளர்கள் சிலை குறித்து விசாரித்த போது, உடுமலை அருகே, பல்வேறு சிறப்புகளுடன், ஆட்சி புரிந்த தளி பாளையக்காரர்கள் குறித்த தகவல்கள் வெளிப்பட்டன. இதில், கிழக்கு நோக்கி, அமைந்துள்ள பாளையக்காரர் எத்தலப்பரின் சிலையில், வாளும், அதை உடலோடு, சேர்த்து பிடிக்கும், கச்சையும், அழகாக செதுக்கப்பட்டுள்ளது. அதே போல், அப்போது ஆண்கள் அணியும், ஆபரணங்களும், தற்போது பார்த்தாலும், பொலிவு மாறாமல், காட்சியளிக்கிறது. கிழக்கு பகுதியிலும், பாளையக்காரர்கள், குடுவை மற்றும் ஆயுதம் தாங்கிய உதவியாளர்களுடன் இருக்கும் சிலை உள்ளது.இந்த கோவில் பராமரிப்புக்கு, சுற்றுப்பகுதியிலுள்ள பல கிராமங்களில், நிலங்களை மானியமாக பாளையக்காரர்கள் வழங்கியுள்ளனர். மானியத்துக்கு நிலங்கள் வழங்கப்பட்ட ஆவணங்களை கொண்டே, இந்த கோவிலின் வரலாறு வெளிப்படுகிறது.செழித்து நிற்கும் மரங்கள்குறிஞ்சேரியிலுள்ள குறிஞ்சேரியம்மன் கோவில், எலையமுத்துார் ஏழூராம்மன் கோவில் உட்பட உடுமலை பகுதியிலுள்ள சில கோவில்கள், தனித்து தெரியும் வகையில் அமைந்துள்ளன. குறிப்பாக, அரிய வகை மரங்கள் வளர்ப்பும், அதற்கான கிணறும் இக்கோவில்களை தனித்து காட்டுகின்றன. இலுப்பை மரமும், பரம்பை மரமும் இக்கோவில்களில், தவறாமல் இடம் பெற்றிருக்கும். இதில், பரம்பை எனப்படும் மரத்தில், பூக்கும் பூக்களை, அப்போதிருந்த ஆட்சியாளர்கள் விரும்பி சூடுவார்கள் என்ற தகவலும் ஆச்சரியமளிக்கிறது. கற்கள் அடுக்கி வைக்கப்பட்ட சுற்றுசுவர் மட்டும் இருந்தாலும், செழித்து வளர்ந்துள்ள மரங்களே கோவிலுக்கான அழகை மெருகூட்டுகின்றன.புதுப்பிக்க வேண்டும் பழமை வாய்ந்த கொங்கலக்குறிச்சி செல்லாண்டியம்மன் கோவிலை, தொல்லியல் துறை வழிகாட்டுதலுடன் புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். தற்போதுள்ள, கற்களை கீழே இறக்கி, மீண்டும், அவற்றை அடுக்கி, பழமையான முறையில், பூச்சு செய்ய வேண்டும். குறிப்பிட்ட நாட்களில் நடக்கும் சிறப்பு பூஜையும், பரம்பரை பூசாரிகளின் பராமரிப்பும் கோவிலை பாதுகாத்து வருகிறது. இக்கோவிலை தற்போதுள்ள கட்டமைப்பு மாறாமல் புதுப்பித்தால், அழியும் வரலாற்று தகவல்களை பாதுகாத்து, இளைய தலைமுறையினருக்கு சமர்ப்பிக்கலாம்.


நன்றி :தினமலர் ...
இன்று உடுமலை புத்தக திருவிழா ...

வரவேட்புரை நிகழ்த்தி திரு .பாலகிருஷ்ணன் அவர்கள் விழாவை தொடங்கிவைத்தார் ..

கருத்துரை .....கவிஞர் .பால்கி அவர்களின் ...வானவில்லாய் கருத்துரையில் வானில் தெரிந்த நட்சத்திரங்களே வானவில்லாய் வர்ணஜாலங்களாய் மின்னியது ..

காரல் மார்க்ஸ் தத்துவங்கள் ,சீனாவில் விவாகரத்து குறைந்ததற்கான காரணங்கள் ,குழந்தைகளின் வாசிப்பு திறன் ,பேரறிவாளனின் அவர்களின் கல்வி பற்றி ,உடுமலை நாராயணக்கவியின் சிறப்புகளையும் ,விழாவில் பேசி காட்டிய மிமிக்கிரி பற்றியும் ,லால் அவர்களின் பெண்குழந்தைச்செல்வங்கள் காமராஜரை போற்றி பேசிவார்த்தைகளையும் ,தமிழ்நாட்டுக்கு காமராஜர் சாத்தனுர் அணையின் திட்டங்கள் ,அணைக்கட்டிய கட்டிட பொறியாளர்களின் திறமையை பற்றியும் ..ஒரு முதலைமச்சர் மும்பை சென்று நேரில் திட்டங்களை பற்றியும் ...வானவில்லயாய் ..வர்ணஜாலங்களாக மின்னியது ...

முன்னிலை வகித்த உடுமலை சு .தண்டபாணி அவர்கள் ,அமிர்தநேயன் அவர்கள் ,பாலகுருசாமி அவர்களுக்கு ,
பேராசிரியர் லெனின் பாரதி , தீக்கதிர் மகாதேவன் ,சுதா சுப்பிரமணியம் அவர்கள் நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார்கள்

நன்றியுரை ,திரு .M .பாலச்சந்திரமூர்த்தி அவர்கள் நன்றியுரை வழங்கி நிறைவு செய்தார் .


இன்று :01.10..2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி


6-ம் ஆண்டு உடுமலை புத்தகத் திருவிழா 2017

செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 8 முடிய ...

தினசரி காலை 11 மணி முதல் இரவு 9.00 மணிவரை

தலைமை :திரு  ,வழக்கறிஞர் .C. சிதம்பரசாமி ,அவர்கள் உடுமலை

முன்னிலை :திரு S சரவணகுமார் அவர்கள் ,நகராட்சி ஆணையாளர் . அவர்கள் ,,உடுமலைப்பேட்டை

Dr .M .தமிழ் மணி அவர்கள் ,இணை இயக்குனர் ,மருத்துவ துறை ,கோவை 

திரு .S சண்முகசுந்தரம் அவர்கள் ,பொருளாளர் ,நூலகர் வாசகர் வட்டம் ,உடுமலைப்பேட்டை .

திரு .N .கிருஷ்ணன்  அவர்கள் ,முன்னாள் தலைமை ஆசிரியர்

திரு .S .பதிஞசலி அவர்கள் ,செயலாளர் ,நாடார் உறவின் முறையார் திருமண மண்டபம் ,உடுமலைப்பேட்டை

வழக்கறிஞர் .S .சாதிக் பாட்சா அவர்கள் ,உடுமலை

வரவேற்புரை :திரு .அ .நடராஜன் அவர்கள் .


கருத்துரை ....திரு .த ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் ,தலைவர் ,மக்கள் சிந்தனை பேரவை ,ஈரோடு
"எங்கெங்கு  காணினும் ..."

நன்றியுரை : திரு .தோழன் .ராசா ..அவர்கள் ...

புத்தக திருவிழா செய்தி தொடர்பாளர் :சிவக்குமார் ...

வெள்ளி, 29 செப்டம்பர், 2017

நம் வரலாறுகளை தேடி ...பொதுநலத்திலும் நம் சமுதாய நலன் ....
Ram Journalist

16 ம் நுாற்றாண்டு கல்வெட்டு... குடிம
ங்கலம்...உடுமலைப்பேட்டை ...
இன்று :30.09.2017 சனிக்கிழமை மாலை 6.00 மணி

6-ம் ஆண்டு உடுமலை புத்தகத் திருவிழா 2017

செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 8 முடிய ...

தினசரி காலை 11 மணி முதல் இரவு 9.00 மணிவரை

தலைமை :திரு U .S .S .ஸ்ரீதர் அவர்கள் ,பரம்பரை அறங்காவலர் ,

முன்னிலை :திரு .தி .ம .பாலகுருசாமி அவர்கள் ,உரிமையாளர் ,செரோ நெட் ,உடுமலைப்பேட்டை
திரு .S சிவசுப்பிரமணியன் அவர்கள் ,ஆதித்தியா கார் அக்சஸரீஸ் அண்ட் பிட்டிங்ஸ் உடுமலைப்பேட்டை
திரு .உடுமலை சு .தண்டபாணி அவர்கள் ,மின்சாரவாரியம் ,உடுமலைப்பேட்டை .
திரு .அமிர்தநேயன் அவர்கள் ,தலைவர் .உடுமலை நாராயணகவி இலக்கிய பேரவை .

வரவேற்புரை :திரு .பாலகிருஷ்ணன் அவர்கள் .

கருத்துரை ....கவிஞர் .பால்கி அவர்கள் ,மாநில குழு , த மு எ க ச
"வானவில்லாய் ...."

நன்றியுரை : திரு .M பாலச்சந்திரமூர்த்தி அவர்கள் ...

உடுமலை புத்தக திருவிழா செய்தி தொடர்பாளர் :சிவக்குமார் ...













இன்று அந்திமயங்கும் மாலைவேலை உடுமலையில் தென்மேற்கு ஈரப்பதமான காற்றுடன் இனிதாக ஆரம்பானது ...புத்தகத் திருவிழா.

6-ம் ஆண்டு உடுமலை புத்தகத் திருவிழா 2017

செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 8 முடிய ...

தினசரி காலை 11 மணி முதல் இரவு 9.00 மணிவரை

 29.09.2017 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி புத்தக ஒருங்கிணைப்பாளர்களுடன் ,திரு .U K .P  முத்துக்குமாரசாமி அவர்களின் புத்தக விழிப்புணர்வு பேரணி பறை இசையுடன் இடிமுழக்கத்துடன்,திரு லால்  அவர்களின் குரலோசையோடு ஆரம்பமமானது ...

திரு.Rtn PHF .S .நாகராஜன் ,அவர்களின் தலைமையில்

மாண்புமிகு அமைச்சர் .உடுமலை கே .ராதாகிருஷ்ணன் அவர்கள் புத்தக
 கண்காட்சி திறந்து  வைத்து சிறப்புரையாற்றினார் .





பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் உயர் திரு .C .மகேந்திரன் அவர்கள்
முதல் விற்பனை துவக்கி வைத்து உடுமலையின் வேகமான  வளர்ச்சிக்கான திட்டங்களையும் ,அடுத்த நகரின் வளர்ச்சிக்கான திட்டங்களை அழகாக எடுத்துரைத்தார் .

சத்தியம் பாபு ,அவர்கள் ,வழக்கறிஞர்  N .சோமசுந்தரம் ,அவர்கள் ,திரு .L .M .பாபு அவர்கள் ,திரு .M .R .இளங்கோவன் அவர்கள் ,புத்தக விழாவிற்கு வருகை புரிந்த பெருமக்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார்கள் ..

புத்தக விழாவில் கலைநிகழ்ச்சிகளை பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலை பள்ளி மாணவியர் பரத நாட்டியம் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது ..

திரு .அம்சராஜ் அவர்கள் ,புத்தக திருவிழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.. :


வியாழன், 28 செப்டம்பர், 2017

உடுமலை புத்தக திருவிழா... செப்.29 முதல் அக்.8 வரை...நகராட்சி திருமண மண்டபம்,தளி ரோடு ,,...அனைவரும் வருக...வாசிப்பை நேசிப்போம்..

29.09.2017 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி

தலைமை :திரு.Rtn PHF .S .நாகராஜன் அவர்கள் .தலைவர் ,வரவேட்புக்குழு &உரிமையாளர் .எஸ் .எம் .ட்ராவல்ஸ் ,உடுமலை .

முன்னிலை :திரு .V சத்தியநாதன் அவர்கள் ,சிறப்பு அழைப்பாளர் ,தாளாளர் ,வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரி ,உடுமலை .

திரு .U K .P  முத்துக்குமாரசாமி அவர்கள் ,சிறப்பு அழைப்பாளர் ,தாளாளர் ,UKPM  மெட்ரிக் பள்ளி ,உடுமலை .

வழக்கறிஞர்  N .சோமசுந்தரம் ,அவர்கள் ,உடுமலை

திரு .S ராஜரத்தினம் அவர்கள் ,வெற்றி ரியல்டர்ஸ் &பில்டர்ஸ் ,உடுமலை

திரு .L .M .பாபு அவர்கள் ,பிங்கி ரெடிமேட்ஸ் ,உடுமலை


வரவேற்புரை :திரு .N .சக்திவேல்  அவர்கள் ,செயலாளர் ,வரவேற்புக்குழு

புத்தக கண்காட்சி திறந்து  வைத்து சிறப்புரை :

மாண்புமிகு.உடுமலை கே .ராதாகிருஷ்ணன் அவர்கள்

அமைச்சர் ,கால்நடை பராமரிப்புத்துறை ,தமிழநாடு அரசு

முதல் விற்பனை துவக்கிவைப்பவர்

உயர் திரு .C .மகேந்திரன் அவர்கள்

நாடாளுமன்ற உறுப்பினர் ,பொள்ளாச்சி

முதல் விற்பனையை பெற்றுக்கொண்டு வாழ்த்துரை

திரு .M .R .இளங்கோவன் அவர்கள் ,

நிர்வாக இயக்குநர் ,ஸ்ரீ வர்ஷினி TVS ,உடுமலை .

நன்றியுரை :திரு .அம்சராஜ் அவர்கள் ,பொருளாளர் ,வரவேற்புக்குழு

கலைநிகழ்ச்சி :பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலை பள்ளி மாணவியர் ,உடுமலை .


நம் குழந்தை செல்வங்களை .....தொழில்நுட்பத்தை விரல் நுனியில் வைத்திருக்கும் தந்தையாக மாறுவதற்கான டிப்ஸ்...
ஷ்யாமுடன் கம்ப்யூட்டரில் முதன் முதலில் பயிற்சி கொடுப்பதற்கு சிரமம் அதிகம் எடுத்துக்கொள்ளவில்லை ..அவருக்கு பிடித்த பொம்மைகள் கூடிய பாடல்கள் யு டியூபில் போட்டு காட்டினேன் ..கொஞ்சம் முதன் முறை பிரமிப்புடன் சிரித்து கொண்டு பார்த்தார்கள் ..தமிழில் அந்த அளவுக்கு குழந்தைகள் பாடல்கள் ,கதைகள் இல்லை ..மலையாள மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு எப்படி சிறு வயதில் கற்றுக்கொடுப்பது அழகாக இணையத்தில் ,சி டீ களாக வெளியிட்டுஇருக்கிறார்கள் ..அதனால் தான் கேரள மக்கள் கல்வியில் அம்மாநிலம் முன்னிலை வகிக்கிறது .. ஷியாம் பாலர் பள்ளியில் சேருவதற்கு முன்னேற கணினியில் ஒரேஅளவு தெரிந்து கொண்டார் ..என்னுடன் என்னுடைய வேலை கணினியில் அதிகம் இருந்ததால் ..ஷியாம் அவர்களுக்கு கற்று கொள்வதில் அதிகம் சிரமம் எடுக்கவில்லை ..பள்ளியில் ஆசிரியர் நடத்தும் கதைகள் ,பாடல்கள் ,வீட்டில் வந்து கேட்பார் ..புத்தகத்தில் ,வகுப்பில் எடுத்த கதைப்பாடல்களை ..யூடியூபில் அதை அழகா பார்த்து படித்து தெரிந்துகொள்வர் ..வேடப்பட்டியில் உள்ள பாரதிய வித்யாபவனில் படிக்கும் பள்ளியில் ஷ்யாமை அழைப்பதற்கு செல்லும் பொழுது அவர் வகுப்பு திருமதி .ராணி ஆசிரியரிடம் ஷியாம் எப்படிங்க படிக்கிறார் என்று கேட்பேன் ..வகுப்பு எடுத்தவுடன் எங்கே சொன்ன பாடலை யாராவது சொல்லுங்கள் ..தலைவர் முதல் ஆளாக எழுந்து நின்று பிசிறு இல்லாமல் பாடலையோ ,கதைகளையே திருப்பி சொல்லுவார் ..


இருந்தாலும் நம் இன்றைய கால கட்டத்தில் நகரத்தில் வாழும் தந்தைமார்கள் தங்கள் குழந்தைகளுடன் பிணைப்பை அதிகரிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர்.

இணையதளத்தில் ஃபார்ம்வில்லே விளையாட்டை உங்கள் மகனுடன் போட்டி போட்டு கொண்டு விளையாடும் தந்தையா நீங்கள்? இரவு உண்ணும் போது சந்தையில் புதிதாக வந்துள்ள ஸ்மார்ட்ஃபோன் பற்றி பேசி கொண்டிருக்கும் தந்தையா நீங்கள்? அப்படியானால் நீங்கள் ஒரு நவீன தந்தை என்ற பட்டத்தை பெறுவீர்கள். இவ்வகை தந்தைகள் தங்கள் குழந்தைகளுடன் மிகவும் உற்சாகத்துடனும், பிணைப்புடனும் திகழ்வார்கள்.
* புதிய காட்ஜெட்ஸ் மற்றும் கிஸ்மொஸ் பற்றிய விவரங்களை வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை இணையதளத்திற்கு சென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
* உங்களுக்கு ஏதாவது தொழில்நுட்ப வார்த்தை புரியவில்லை அல்லது அதில் சந்தேகம் ஏற்பட்டால் தயங்காமல் உங்கள் குழந்தையிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
* உங்கள் குழந்தை வீடியோ கேம்ஸ் அல்லது கைப்பேசி வாங்க கடைக்கு சென்றால் நீங்களும் அவர்களுடன் செல்லுங்கள்.
* உங்கள் குழந்தைகளுடன் உரையாட சமுதாய வலைதளங்களை
பயன்படுத்துங்கள். இருப்பினும் உங்கள் குழந்தைகளின் இணையதள பயன்பாட்டில் நீங்கள் ஓரளவுக்கு மேல் தலையிடக் கூடாது.
*தங்கள் குழந்தைகளுடன் உரையாட, பத்தில் ஏழு பெற்றோர்கள் சமுதாய வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர்.
*இந்த எண்ணிக்கையை இந்தியாவில் எதிர்ப்பார்க்க முடியாவிட்டாலும் கூட, நம் நாட்டு நகரங்களிலும் பல பெற்றோர்கள் இன்று சமுதாய வலைத்தளங்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். சொல்லப் போனால் இன்றைய டீனேஜ் குழந்தைகள் சமுதாய வலைதளங்களில் தங்களுடைய பெற்றோரையும் நண்பர்கள் பட்டியலில் சேர்கின்றனர்.
*இருப்பினும் தங்கள் குழந்தைகளுடன் சமுதாய வலைதளங்களில் உரையாடும் பெற்றோர்கள் அவர்களுக்கான வரைமுறையை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
*தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குழந்தைகளுடன் பிணைப்பை ஏற்படுத்துவது எப்படி?
*குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை விட்டு விலகி பள்ளிக்கு சென்று அது சம்பந்தப்பட்ட செயல்களில் ஈடுபட்டு கொண்டிருப்பார்கள். இருப்பினும் பொது அறிவு மற்றும் விருப்புகள் ஒரு உறவை சிறப்பான முறையில் மேம்படும். அதனால் தொழில் நுட்பத்தை கொண்டு குழந்தைகளுடன் பிணைப்பை உண்டாக்க முற்படும் போது அது குழந்தைகளையும் ஊக்குவிக்கும்.


SHYAM SUDHIR SIVAKUMAR.......

புதன், 27 செப்டம்பர், 2017

Namakkal Raja
6 mins ·

2015 ஆண்டுப்பதிவு!

நாயுடு நாயக்கராய் வாழ்ந்தது போதும
ஒன்று சேரவில்லை என்றால் வருந்த நேரிடும்
போருக்கும் ஏருக்கும் பெயர் போன வம்சம்
ஒரு பொந்தில் சிக்கி தவிக்கலாமா ?

பிரிவினை மறந்து நாயக்கராய் சேரு
பெயர் இருக்கும் ஊருக்குள் பாரு
உள்ளுக்குள் நாம் சண்டை இட்டாலும்
நாயக்கர் என்றால் சேர்ந்திட வேண்டும்

பாரம்பரியம் மறக்கலாமா ?
பழைய பழக்கத்தை கெடுக்கலாமா ?
உண்மையான நாயக்கன் என்றால் அவன் உதிரி பேச்சி பேசமாட்டான்
செயலில் வீரம் கொண்டு வாழு
இல்லை என்றால் இறந்திடு மேலு ..

கல்வி என்பது முக்கியம் சாமி
பொருளாதாரத்தில் வளர்ச்சியை காமி
நாடே போற்றும் வம்சம் நாம் தான்
கிருஷ்ணதேவராயர் குலம் நாம் தான்

இரண்டாயிரம் ஆண்டு காலம் ஆட்சி செய்து வந்த பெருங்கூட்டம் நாம
இன்னிக்கு வாழுற நிலைமையை பாரேன் ?
ராஜாவாக வாழ்ந்த குலம் , ராஜாங்கம் இழந்து வாழலாமா ?
ஆங்கிலேயன் எல்லாம் எழுதி வெச்சான் நம்ம குல பெருமைகளை
நம்ம குலம் அறியாமையில் வாழுதே பாரு நாட்டுக்குள்ளே .

வீரம் தான் டா நமக்கு சொத்து , முறுக்கிக்கிட்டு போரை நடத்து
கம்மவார் கம்பளத்தார் என்று சொல்லி பிரிந்திடாதே ..
பலிஜா என்றும் கவரா என்றும் பிரிந்திருந்தால் பயனா சொல்லு ?
மற்றவன் எல்லாம் எப்படி வாழுறான் நம்ம மக்களை அவன் பிரிச்சே வெய்கிறான்.

தமிழகத்தில் நம்ம குல மக்கள் தொகையை பார்த்தல் ஐயோ
மற்ற சாதி மக்கள் எல்லாம் மூக்கு மேலே கையை வைக்குறான்.
ஆதாரம் இருக்கு நமக்குன்னு கூறு , ஆண்ட குலமே ஒன்றாய் சேரு ..
இளைய மக்கள் சேரணும்னு துடிக்க , பெருசுங்க எல்லாம் அதையும் தடுக்க
இப்படி இருந்தால் எப்படி சொல்லு ? முன்னேற முடியும் என்பதை சொல்லு ?

நடப்பது எல்லாம் சாதி அரசியல் , எங்கும் சாதி எதிலும் சாதி
நாம மட்டும் சேரலனா நாமம் போட்டு அனுபிடுவான்
நாயுடு இனமே நாயக்கர் குலமே , தமிழகம் முழுதும் வாழும் இனமே
திருமலை நாயக்கர் குலத்திலே பிறந்து திக்கு தெரியாமல் வாழலாமா ?

கட்டபொம்மன் பேரே சொன்னாலே போதும் காளை போல வீரம் வரும்
ஊமைத்துரை வாரிசுங்க ஒத்துமையா செரனும்ங்க ...
நாயக்கர் இனம்னு சேர்ந்திட வேண்டும் நம்ம பலத்தை நாட்டுக்கு காட்டிடணும்.
வரலாறு பேசும் சாதி நம் சாதி , தமிழகத்தில் நாம எல்லாம் ஒத்துமையா சேர்ந்திடனும்
இரண்டு கோடிக்கும் மேல வாழும் நாயக்கர் இனமே சேர்ந்திடனும் !

Raja Nayakar அடியேன் எழுதியது என்பதில் பெருமை கொள்ள செய்கிறது. வாழ்க நாயக்கர் குலம்


6-ம் ஆண்டு உடுமலை புத்தகத் திருவிழா 2017
செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 8 முடிய ...
தினசரி காலை 11 மணி முதல் இரவு 9.00 மணிவரை

29.09.2017 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி
தலைமை :திரு.Rtn PHF .S .நாகராஜன் அவர்கள் .தலைவர் ,வரவேட்புக்குழு &உரிமையாளர் .எஸ் .எம் .ட்ராவல்ஸ் ,உடுமலை .
முன்னிலை :திரு .V சத்தியநாதன் அவர்கள் ,சிறப்பு அழைப்பாளர் ,தாளாளர் ,வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரி ,உடுமலை .
திரு .U K .P  முத்துக்குமாரசாமி அவர்கள் ,சிறப்பு அழைப்பாளர் ,தாளாளர் ,UKPM  மெட்ரிக் பள்ளி ,உடுமலை .
வழக்கறிஞர்  N .சோமசுந்தரம் ,அவர்கள் ,உடுமலை
திரு .S ராஜரத்தினம் அவர்கள் ,வெற்றி ரியல்டர்ஸ் &பில்டர்ஸ் ,உடுமலை
திரு .L .M .பாபு அவர்கள் ,பிங்கி ரெடிமேட்ஸ் ,உடுமலை

வரவேற்புரை :திரு .N .சக்திவேல்  அவர்கள் ,செயலாளர் ,வரவேற்புக்குழு
புத்தக கண்காட்சி திறந்து  வைத்து சிறப்புரை :
மாண்புமிகு.உடுமலை கே .ராதாகிருஷ்ணன் அவர்கள்
அமைச்சர் ,கால்நடை பராமரிப்புத்துறை ,தமிழநாடு அரசு
முதல் விற்பனை துவக்கிவைப்பவர்
உயர் திரு .C .மகேந்திரன் அவர்கள்
நாடாளுமன்ற உறுப்பினர் ,பொள்ளாச்சி
முதல் விற்பனையை பெற்றுக்கொண்டு வாழ்த்துரை
திரு .M .R .இளங்கோவன் அவர்கள் ,
நிர்வாக இயக்குநர் ,ஸ்ரீ வர்ஷினி TVS ,உடுமலை .
நன்றியுரை :திரு .அம்சராஜ் அவர்கள் ,பொருளாளர் ,வரவேற்புக்குழு

கலைநிகழ்ச்சி :பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலை பள்ளி மாணவியர் ,உடுமலை .
 













 
நம் கொங்கு பகுதியில் ..கோலார்பட்டி ..(உடுமலை வழி பொள்ளாச்சி )முருக கடவுளின் கந்த சஷ்டி அன்று காவடி எடுக்கும் போது அந்த ஊர் விழாவில் ..சமீபத்திய காலங்களில் தேவராட்டத்தை பயிற்சி எடுத்து இந்த கலையை ஆடுகிறார்கள் ..சமீபத்தில் கொங்கு மாநாடு சிங்கப்பூரில் நடந்தது .அதில் வெகு விமர்சியாக தேவராட்டம்ஆடப்பட்டது ...

செவ்வாய், 26 செப்டம்பர், 2017

நம் சமுதாய சொந்தங்களுக்கு

தொழிலோ வியாபாரமோ தொடங்குபவரா ?
பெரிய வெற்றித்தான் உங்கள் இலக்கா ?
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதில் சில முக்கியமானவை இங்கு உங்களுக்காக
1) நம்பிக்கை – ( CONFIDENCE )
உங்கள் தொழிலில் நீங்கள் வெற்றி பெற மிகவும் முக்கியமான ஒன்று நம்பிக்கை. அதாவது உங்கள் மேலும் உங்கள் தொழிலின் மீதும் இது மிகவும் அவசியம். நம்பிக்கை வையுங்கள் பெரிய வெற்றி ஓரு நாள் உங்களை தேடி வரும்
2) சின்ன சின்ன வெற்றிகளை புறந்தள்ளாதீர்கள். பெரிய வெற்றிகளை அடைவதே நம் லட்சியம் அதற்கான வழியில் சிறிய சிறிய வெற்றிகளும் தோல்விகளும் தேடி வரும் அவற்றை குறைத்து மதிப்பிடாதீர்கள் அவையே உங்களுக்கு வழிகாட்டி
3) தொழிலோ வியாபாரமோ பெரிய பயணம், அதில் கடக்க வேண்டிய தூரம் மிகவும் அதிகம். அதனை ஒரே நாளிலோ தொடங்கிய சில நாட்களிலோ அடைந்து விட முடியாது அதற்கான பொறுமையும் அவசியம்
4) தோல்விகள் நிச்சியம் வரும் அதனை நாம் எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறோம் என்பதே இங்கு முக்கியம் இன்று தோல்விகளை கண்டு நாம் பின்வாங்கினால் 2 அடி தூரத்தில் உள்ள வெற்றியை நாம் இழந்து விடுவோம் அதனால் அஞ்ச வேண்டாம் வெற்றி நிச்சியம் ஒரு நாள் நமக்கு
5) தோல்விக்கான காரணத்தினை ஆராயுங்கள் நாம் செய்த தவறு என்ன அதனை எப்படி மாற்றிக்கொண்டால் வெற்றி என்பதனைப் பற்றி சிந்திப்போம்
6) மதிப்பளிங்கள் – நீங்கள் செய்யும் வேலையை நீங்களே மதிக்கவில்லை என்றால் ? கெளரவக்குறைச்சலாக நீங்களே உங்கள் தொழிலை நினைத்தால் மற்றவர் எப்படி மதிப்பார்கள் உங்களை
7) அதிகம் பேசுவதை தவிருங்கள். அடுத்தவர் பேசுவதனைக் காது கொடுத்து கேளுங்கள் அதில் உங்களுக்கு ஒரு விஷயமிருக்கலாம் அதனை பயன்படுத்தி நீங்கள் முன்னேறலாம்
8) குழப்ப வேண்டாம், திட்டமோ செயல்முறைகளோ எளிதாக இருக்கட்டும். பக்கம் பக்கமாக திட்டம் போட்டால்தான் நமது வேலை பெரிய வேலை என்றும் மற்றவர்கள் மதிப்பார்கள் என்பது சுத்த பேத்தல்
9) எப்போதும் உம்மென்று இறுக்கமாக இருக்கவேண்டாம். சிரித்த முகத்துடன் தொடங்குகள் எல்லாம் வெற்றித் தான்
10) இவற்றை விட மிகவும் முக்கியமானது நிங்கள் செய்யும் தொழிலில் ஞானம், அதில் எதுவும் முடிவடைவது இல்லை. தினம் தினம் புது புது விஷயங்கள் நிறைய வருகிறது அதனை தேடி தேடி கண்டுபிடியுங்கள் உங்கள் வசமாக்குங்கள் வெற்றி உங்கள் வீடு தேடி ஓடி வரும்.

நம் சொந்தங்கள் ,உடுமலை ,பொள்ளாச்சி பகுதியிலும் அதிகம் இருக்கிறார்கள் ..தென்னை மரங்கள் அதிகம் உள்ளதால் ..மொத்த வியாபாரம் செய்யபவர்கள் இருக்கிறார்கள் ..திருப்பூர் என்றால் கார்மெண்ட்ஸ் துறையில் இருப்பவர்களிடம் வாங்கி கொள்ளலாம் ..

ஆல் தி பெஸ்ட் .....!!!
எங்க மாப்பிள ..
கண்ணுக்கு எட்டிய தூரம் ....
மழை மேகங்களேயே
காணமே மாப்பிள ...
மழை மேகங்களை காண
\ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன் மாப்பிள ..

குறிஞ்சசெய்தி
அடி ..
உதை
மிதி
எத்தனை செய்திகள் வந்தாலும்
அடித்த ரப்பர் பந்து திரும்ப வருவது போல்
திரும்ப உங்களிடமே வருவேன் மாப்பிள
கடலில் தூக்கி போட்டாலும்
கட்டுமரமாக வருவேன் மாப்பிள..




.
 நம் உடுமலை பகுதியில் ...இந்திய விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்த ..தளி எத்தலப்ப மன்னர் ..எர்ரவ நாயக்கருக்கு வரலாற்று நிகழ்வுகள்,தொடர்கள்  பற்றி எழுதுவதற்கு எழுத்தாளர்கள் இல்லையா ?
 Muthalankurichi Kamarasu added 3 new photos.
விகடன் பிரசுரத்தில் என்னுடைய “நெல்லை ஜமீன்கள்” நூல் வெளிவந்தவுடன் ஆன்மிக எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வரலாற்று எழுத்தாளர் என பெயர் பெற ஆரம்பித்தேன். இதை பிரபல எழுத்தாளரும், குங்குமம் ஆசிரியருமான சிவராமன் தன்னுடைய ஜமீன்களின் கதைகள் 56 வது தொடரில் எனது பெயரை ஆய்வாளர் முத்தாலங்குறிச்சி காமராசு என்றே குறிப்பிடுகிறார். பெரும் பாலுமே என்னுடைய தலைத்தாமிரபரணி என்னும் நூலை பலர் நகல் எடுத்து, என்னிடமே அவர்கள் எழுதியதாக தருவார்கள். அப்படியிருக்கும் இந்த காலகட்டத்தின் எனது நூலை மேற்கோள் காட்டி, என்னை ஆய்வாளர் முத்தாலங்குறிச்சி காமராசு என குறிப்பிட்ட திருவாளர் கே.என்.சிவராமன் அவர்களின் நற்பண்பை நான் என்னவென்று சொல்வது. இந்த எபிசோட்டில் இரண்டு இடத்தில் எனது பெயரை குறிப்பிட்டுள்ளார்.
மிகப்பெரிய பத்திரிக்கையின் ஆசிரியராக இருக்கும் அவர் எங்களை போன்ற கிராமத்து எழுத்தாளர்களை ஊக்குவிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. திருவாளர் கே.என்.சிவராமன் அவர்களுக்கு எனது நன்றி.
நாம் தன்னிறைவு அடைந்தால் மட்டுமே அருகில் இருப்பவர்களுக்கு உதவ முடியும்.

முதலாவது கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டால் மட்டுமே இது சாதாதியம்.

ஆகவே கல்வித்துறை சார்ந்தவர்கள்  நல்ல கல்வி நிலையங்கள் அது சார்ந்த வேலைவாய்ப்புகள், அரசு பணிவாய்ப்புகள் பற்றி அதிகம் பதிவிடவைம்.

படித்த இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்பு அது சார்ந்த பயிற்சிகள் பற்றி தெரிவிக்கவும்.

பழனி அருகே உள்ள ஆயக்குடியில் அனைத்து  ஞாயிற்றுக்கிழமையன்றும் காலை முதல் மாலை வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

இதில் சேர எவ்வித  சிபாரிசும் தேவையில்.

ஞாயிறு அன்று காலை. 08.00 மணிக்கு வந்தால் போதும் எவ்விதமான கட்டணமும் இல்லை.

இங்கு பயின்று அரசு பதவியில் இருக்கும் தன்னார்வலர்கள் மற்றும் சிறந்த பயிற்சியாளர்கள் பயிற்சியளிக்கின்றனர். பயிற்சிக்கு பின்   வினா விடை கள் அபங்கிய புத்தக தொகுப்பு அங்கேயே கிடைக்கிறது.

ஆர்வமுள்ள இளைஞர் அனைவரும் கலந்துகொள்ளவும்.

தேவைப்படின் என்னை தொடர்பு கொள்ளவும்.

வேலுச்சாமி ஒட்டன்சத்திரம்--தொலைபேசி எண்   83000 02557
                      

திங்கள், 25 செப்டம்பர், 2017

 ஷியாம் .....பிஞ்சு குழந்தையாக இருக்கும்போது செய்த குறும்பு படங்களை பார்க்கும் போது மகிழ்ச்சியான தருணங்கள்.....!!!!!
 
இயற்கையின் நியதிப்படி ஒரு தந்தை தன் குழந்தைகளுக்கு அளிக்கும் பங்களிப்பை தாய் ஈடு செய்யமுடியாது…
ஒரு குழந்தையின் வளர்ச்சியில் தந்தையின் பங்கு கணிசமானது......
வணக்கம்,    
🏡 புதிய மற்றும் பழைய இடம் &வீடு   வாங்க கடன் தொகை
🏣புதிய வீடு கட்ட,
🏣பழைய வீட்டை
      புதுப்பிக்க மற்றும்
      விரிவுப்படுத்த,
 🏤 வீட்டின் மீதான
     அடமான  கடன்
       
🏠விரைவான சேவை 7
       நாட்களில்

மேலும் விவரங்களுக்கு,.....

Sivakumar.V.K
(Home Loans,Home Loans To NRIs) 
Sundaram Finance Ltd.,
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms

சிவக்குமார்
வீட்டு கடன் பிரிவு
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயமுத்தூர்
அழைப்பு எண் 9944066681
யாரையும் ஒருவரையும் குறிப்பாக அழைப்பதில்லை ...கடந்த இரண்டு வருடங்களுக்கு மேல் அறக்கட்டளை கூட்டம் நடந்து வந்துகொண்டுகிறது ...கடந்த ஒரு வருடமாக அறக்கட்டளையை முறைப்படி பதிவு செய்து ..நிரந்தர கணக்கு எண் வாங்கி செயல்பட்டு கொண்டு இருக்கிறது ...இதை யாரையும் வற்புறுத்தி ,சேர்க்கவில்லை ..அறக்கட்டளைக்கு மாத சந்தாவும் ,நன்கொடையும் அவர்களாக விருப்பட்டு கொடுக்கின்றனர் ..நாங்கள் நடத்தும் மாதம் நடைபெறும் ,செயற்குழு கூட்டங்கள் அறக்கட்டளைக்கு அறிவிப்பு செய்து நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன ..உறுப்பினர்கள் 150 மேல் அறக்கட்டளைக்கு உள்ளனர் ..கல்வி உதவி தொகை ,வேலைவாய்ப்பு ,நம் படித்த சொந்தங்களுக்கு வழங்கி இருக்கிறோம் ..கோவை ,திருப்பூர் ,உடுமலை ,தூத்துக்குடி ,கம்பம்பம் ,தேனீ ஓட்டன்ச்சத்திரம் ,திண்டுக்கல் ,கரூர் ,கடவூர் ஆகிய பகுதிகளில் இருந்து கலந்து கொள்கிறார்கள் ...எத்தனைமுறை நீங்கள் கூட்டத்துக்கு வந்து இருக்கிறீர்கள் ..?


நம் சமுதாயத்தின் மேல் ஆர்வம் ,இனப்பற்று ,நம் இளைய சொந்தங்களுடன் சேர்ந்து குழு மனப்பான்மையுடன் பணிபுரிதல் ..தானாக ஆர்வம் வரவேண்டும் ...நீங்கள் இயந்தறிவியல் படித்தவர்கள் ..நீங்கள் நம் சமுதாயத்துக்கு நீங்கள் தான் வழிநடத்த செல்லவேண்டும் ..நீங்களே இப்படி கேள்வி கேற்பது அறியாமையை காட்டுகிறது ...

நம் சமுதாயத்தில் இத்தனை சங்கங்களா ?????இந்த சங்கங்கள் இப்பொழுது செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது ?..தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும் ...

நம் சமுதாயம் ..கல்வி,பொருளாதாரம் ,தொழில் துறை ஏன் வளர்ச்சிபெறமுடியவில்லை ...என தெரிகிறதா ..நம் சமுதாயத்தில் குழு ஒற்றுமை ,உதவும் மனப்பான்மை குறைவே ..ஒருவரையே முக துதிபா டுத்தல் ,,யாராவது கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தால் ...ஏளனம் செய்தல் ,

நம் சமுதாயத்தில் குறை சொல்லுபவர்களை ...ஏறெடுத்து கூட பார்க்கக்கூடாது ..நம் குறிக்கோளை நோக்கி பயணத்தை தொடரவேண்டும் ...அதை தான் நம் படித்த.படிக்காத,இளைய சமுதாயம் தொழில்துறையில் ,கல்வியிலும் ..நாம் இணைந்து உள்ளோம் கண்டிப்பாக எதிர்கால சந்ததிகளுக்கு வழிகாட்டுவோம் அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் ....


ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

உடுமலை நாராயணகவி -முனைவர் க இந்திரசித்து

உடுமலை நாராயணகவி !
நீ
பேருக்கு வாழந்தவன் அல்லன் :
ஊருக்குப் பேர்தந்தவன்
உலகத்தின் உச்சியில்
உடுமலையின் பெயரை
உச்சரிக்க வைத்தவன்
இமயத்தின் உயரத்தில்
உடுமலையின் இதயத்தை
உயர்த்தி வைத்தவன்
நாத்திக  மருந்து ஏந்திவந்த
மருத்துவன் நீ !
ஆனால் அந்த ஆத்திக

நஞ்சு அருந்தி வந்த
அயலவர்கள் உன்னை
அவமதித்தார்கள் .
பகுத்தறிவுச் சோலையில்
பாட்டியசைத்து
அறிவியல் கடலில் துடிப்பசைத்து
திரை வானத்தில்
தீந்தமிழால் நீந்தி வந்தவன் நீ !
காசிக்கும் ஊசிக்கும்
இணைப்பு ஏற்படுத்திய
இலக்கிய நயம்
இன்னும் கூட இதயத்தில்
சிலிர்ப்பேறபடுத்துகிறது.
 குரங்கிலிருந்து பிறந்த குரங்கை
மறுபடியும் மனிதனாக்கிய
உன்
பாட்டுப்பாடி மலர்ச்சிக கொள்கையை
பாராட்டி மகிழ்கின்றேன்

****************








கம்பள விருட்ச்சம் அறக்கட்டளையின் மாதாந்திர செயற்குழு  கூட்டம் :

இன்று காலையில்  ( 24.9.2017 -ஞாயிறு ) பெதப்பம்பட்டி , அருகே சோமவா ரபட்டி  400 ஆண்டுகள்  பழமைவாய்ந்த கண்டியம்மன் கோவிலில் மிக சிறப்பாக நடைபெற்றது ..நம் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களையும் ,தீர்மானங்களையும் ,புது திட்டங்களும் அதை செயல்படுத்தும் முறையும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது .

 கீழ்கண்ட தீர்மானங்கள் ..
1.கம்பள விருட்சம் அறக்கட்டளைக்கு web முகவரி தொடங்கவது
2.அறக்கட்டளைக்கு நிரந்தர கணக்கு எண் (PAN )வாங்கியதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது
3. கம்பள அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கியவர்களுக்கு ரசீது வழங்கப்படும் ..
4. நம் சமுதாய சொந்தங்களுக்கு கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் மாணவ ,மாணவி களுக்கு கல்வி உதவி தொகை வழங்கவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது .வருடத்துக்கு இரண்டு மாணவ ,மாணவிகளுக்கு முடிவுசெய்யப்பட்டது .
5.அறக்கட்டளை சார்பாக நம் சமுதாய புது தொழில்முனைவோரை கண்டறிந்து அதற்கான தொகை வழங்கப்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
6.பொது நிகழச்சிகளுக்கு நம் அறக்கட்டளை லோகோவை முன் அனுமதிபெற்று பயன்படுத்துக்கொள்ளவேண்டும் .
7.அறக்கட்டளை செயற்குழு கூட்டங்கள் காலசூழ்நிலை ,போக்குவரத்து ஆகியவற்றை கருத்தில்கொண்டு .இனி வரும் காலங்களில் உடுமலையிலே நடைபெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
8.செயற்குழு உறுப்பினர்கள் கண்டிப்பாக மூன்று கூட்டங்களில் கலந்துகொள்ளவேண்டும் .மூன்று கூட்டங்களில் கலந்துகொள்ளாதவர்கள் அவருக்கு பதிலாக உறுப்பினராக இருப்பவரை செயற்குழு உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்படுவர் .
9.அறக்கட்டளையில் அறக்கட்டளையின் எதிர்கால நலன் கருதி .தனி ஒரு நபரை யாரையும் முன்னிலை படித்திசெயல்படாது .
 10.அறக்கட்டளையின் வரவு -செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது .

இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ,சிவகுமார் ,கார்த்தி SR ,கார்த்திகேயன் திருப்பூர் ,சிவகுமார் ,ராமலிங்கம் ,காமராஜ் ,மேகானந்தன் ,சீனிதுறை ,அயோத்திராமன் ,திருமலைசாமி ,கார்த்திக் ஸ்மார்ட் -திருப்பூர் ,காளிமுத்து ,நித்தியானந்தம் ,முத்துசாமி திருப்பூர் ,கணேஷ்குமார் ,தமிழரசன்
செயற்குழு கூட்டத்தை உற்சாகத்துடன் ,புது பொழிவுடன் ,முன்னேற்ற கருத்துக்களை அருமையாக விவாதம் செய்து நிகழுச்சியை நடத்தி கொடுத்த அனைத்து உறுப்பினர்களுக்கும் ,செயற்குழு உறுப்பினர்களுக்கும் நன்றிகள் .


இங்ஙனம் --
 அறக்கட்டளை செயலாளர் 🍁
மற்றும் செயல்குழு👍👍🍁🍁


குறிப்பு :இந்த முறை கூட்டம் முடிந்தவுடன் யாரும் வீடு செல்வதற்கு மனம் வரவில்லை ..அந்தளவுக்கு உற்சாகத்துடன் இருந்தனர் ..இந்தமுறை புது உறுப்பினர்கள் வருகை அதிகமாக இருந்தது .புது சொந்தங்களின் விசாரிப்புகள் ,புது வியாபாரம் தொடங்காவது தொடர்பாக ,வேலைவாய்ப்பு ,புதுவரன்கள் பற்றி விசாரிப்புகள்..அதனால் தான் என்னோவோ கூட்டம் முடிந்து செல்ல யாருக்கும் மனம் வரவில்லை .


வெள்ளி, 22 செப்டம்பர், 2017

  கோவை சதாசிவத்தின் உயிர் புதையல்
திரு .கோவை சதாசிவம் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மாநகரங்கள் கம்பீரமாய் கண்முன் காட்சி அளிக்கின்றன. நகரங்கள் விரிவடைந்து கொண்டே இருக்கின்றன. கிராமங்கள் மெல்ல மெல்ல அருகி வருகின்றன. மூன்றும் முன்னொரு காலத்தில் காடுகளாக இருந்தன. தற்போது காடுகளின் பரப்பளவு குறைந்து வருகின்றன.காடுகளின் அளவு குறைவு கேடுகளின் அளவை அதிகரிக்கிறது. காட்டை மட்டுமல்ல இயற்கையின் அனைத்து செல்வங்களையும் மனிதன் அழித்து வருகிறான். அசுத்தப் படுத்துகிறான். அழுக்கு ஆக்குகிறான். இயற்கைக்கு எதிராக மனிதர் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் எதிர்வினையாக மனிதருக்கு எதிராக அமைகின்றன. இயற்கையை அழிக்கும் முயற்சியில் மனிதன் தன்னையே அழித்துக் கொள்கிறான். காட்டைக் காக்க வேண்டும் என்னும் முயற்சியில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் செயலில் இறங்கியுள்ளனர். சிலர் எழுத்தில் இயங்குகின்றனர். இரண்டிலுமே தன்னை அர்ப்பணித்து முன்னுதாரணமாய் இருப்பவர் கோவை சதாசிவம். மண், மயிலு, சிட்டு என்னும் ஆவணப்படங்களின் மூலம் தன்னுணர்வை வெளிப்படுத்தியவர் 'உயிர்ப் புதையல்' என்னும் தொகுப்பை அளித்துள்ளார்.
"காடும்
காடு சார்ந்த உலகமும்
பரந்து கிடக்கின்றன
வாருங்கள்
பயணிப்போம் " என வாசிப்பவரையும் 'காட்டுக்குள்' அழைத்துச் செல்கிறார். காடு குறித்த ஒவ்வொரு கட்டுரையும் காடாகவே விரிகிறது.
'மேற்குமலைத் தொடர்களைப் பார்க்கிற போதெல்லாம் அம்மாவின் அடிவயிற்றுச் சுருக்கங்கள் நினைவிற்கு வருகிறது' என 'அம்மாவின் அம்மா' வில் குறிப்பிட்டுள்ளார். மலைக்குச் செல்ல அமைத்த சாலைகளே 'மழையழிவின் முதல் தொடக்கப்புள்ளி' என்கிறார். இம்மலைத் தொடரே மருத நிலங்களைச் செழிப்பாக்குகிறது என்று அறியச் செய்துள்ளார். மலையை சுற்றுலாவிற்காக பயன்படுத்திக் கொள்வோரைச் சாடியுள்ளார்.
தாய் வழிச் சமூகத்தின் கூட்டு வாழக்கையை இன்றளவும் தொடரும் காட்டு விலங்குதான் யானை என யானையை அறியச் செய்யும் பகுதி 'யானைகள் என்பது காட்டின் ஆதார உயிர்'. யானைகளின் செயல்களைக் கூறியதுடன் அவைகள் காட்டுக்கு எவ்வாறு பயனுள்ளதாக விளங்குகின்றன என கூறியுள்ளார். காட்டு வழிகளை உருவாக்குவதும் ஊற்றுப் பறிப்பதும் யானைகளே என்பன போன்ற செய்திகள் வியப்பளிக்கின்றன. மனிதர்கள் காட்டை ஆக்கிரமித்ததால் நகரத்துககு வந்த யானைகைள காட்டுக்கு திருப்பும் முயற்சியில் தொடர் வண்டியில் சிக்கி பலியானதை விவரித்த விதம் கனக்கச் செய்கிறது.எதிர் காலத்தின் இயற்கைக் காட்சி. இறந்து கிடக்கும் யானைகளின் இரத்தச் சாட்சி் என்னும் வரிகள் இரத்தத்தை உறையச் செய்தது.யானையைத் தொடர்நது 'புலி வளமையின் குறியீடு' என ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.புலிகள் வாழும் காடே வளமையானது எனப்தற்கான ஆதாரங்களைத் திரட்டித் தந்துள்ளார். புலியைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் விளக்கியுள்ளார். இறுதியில் புலி வாழும் என்னும் நம்பிக்கையும் ஏற்படுகிறது என்பது சுட்டத்தக்கது.
குழந்தைகளுக்கு யானை கதைகள் சொல்லி எதிர்கால குழந்தைகளுக்கு இயற்கையை பாதுகாப்பது பற்றி அழகாக அதன் மகத்துவத்தை எளியமுறையில் காடுகளையும் ,பறவைகளையும் பாதுகாப்பவர் ...திரு .கோவை சதாசிவம் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்







R K Elite...Gold...இன்றய தங்கம் தகவலுடன்

தங்கத்தில் முதலீடு செய்வது எப்படி..? முழுமையான வழிகாட்டி..!

நீங்கள் இந்தியாவில் தங்கத்தில் முதலீடு செய்யத் தேடுபவர்களாக இருந்தால் மிக அதிகமானத் தேர்வுகள் உங்களுக்கு இருக்கின்றன.

முதலில், தங்கத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு உங்களுக்குத் தேவையானது என்ன? நீங்கள் இதில் முதலீடு செய்ய தேவையான காரணங்கள் என்ன? வரிவிதிப்பு, பல்வேறு முதலீட்டுத் தேர்வுகள் மற்றும் தங்கத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எல்லா விஷயங்களையும் இப்போது பார்க்கப்போகிறோம்.

தங்கத்தில் முதலீடு செய்ய உங்களுக்குத் தேவையான ஆவணங்கள் என்ன?

நீங்கள் திட வடிவத் தங்கத்தில் முதலீடு செய்வதாக இருந்தால் (தங்கக் கட்டிகள், தங்க நாணயங்கள், தங்க நகைகள்) ரூ. 2 இலட்சத்திற்கும் மேல் மதிப்புடையதாக

இருந்தால் உங்களுக்குத் தேவைப்படும் ஒரு விஷயம் பான் கார்டு ஆகும். எனவே நீங்கள் பான் கார்டு வைத்திருக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஒருவேளை நீங்கள் தங்கப் பரிமாற்றாக வணிக நிதிகளான ஈடிஎஃப் களில் முதலீடு செய்வதாக இருந்தால், ஒரு டீமேட் கணக்குடன் தரகு நிறுவனத்தில் ஒரு கணக்கைத்

திறக்க வேண்டும். நீங்கள் ஏன் தங்க ஈடிஎஃப் கள் வாங்க வேண்டும் மற்றும் தங்க நாணயங்களாக, தங்கக் கட்டிகளாக மற்றும் தங்க நகைகளாக வாங்கக் கூடாது


திடத் தங்கம், தங்க ஈடிஎஃப் கள் மற்றும் சவரன் தங்கப் பத்திரங்களை எப்படி வாங்க வேண்டும்?

திட வடிவத் தங்கம் வாங்குவது மிகவும் எளிதானது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் நகைக் கடைக்குச் சென்று உங்கள் பான் கார்டைக் காட்டி தங்கம் வாங்க வேண்டியது தான். இப்போது இங்கே உங்களுக்கு ஒரு எச்சரிக்கை - நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்வதாக இருந்தால் தங்க நகைகளாக வாங்க வேண்டாம். தங்க நாணயங்களாக வாங்குங்கள்.

இது ஏனென்றால், தங்க நகைகளுக்குச் செய்கூலிகள் உள்ளன.

அந்த நகைகளை நீங்கள் திரும்ப விற்க முயலும் போது அந்தக் கட்டணத்தை மீட்டெடுக்க முடியாது. நீங்கள் வாங்குவதற்குச் சிறந்த தேர்வு தங்க ஈடிஎஃப் ஆகும். ஏனென்றால், இதில் திருட்டுபயம், பத்திரப்படுத்துதல் போன்ற கவலைகள் இல்லை. மேலும் இதை எளிதாக விற்க முடியும். இதில் சிறந்த விஷயம் என்னவென்றால், இது தங்கத்தின் விலை நிலவரங்களைக் கண்காணிக்கிறது. திட வடிவத் தங்கத்தை விற்கும் போது நகைக் கடைக்காரர் அவர் தனது விற்பனைப் பங்கை எடுத்துக் கொள்கிறார்.


தங்க ஈடிஎஃப்

தங்க ஈடிஎஃப் களை வாங்க நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு தங்கத் தரகு மற்றும் வணிகக் கணக்கைத் தொடங்கிய பிறகு, உங்கள் தரகரிடம் தங்கப் பரிமாற்றாக வணிக நிதிப் பத்திரங்களை வாங்கச் சொல்லிக் கேளுங்கள்.

தங்க ஈடிஎஃப் களை வாங்க தங்க வணிகத்தில் மிகப் பெரிய நிறுவனமான கோல்டு மேன் ஸச் தங்க ஈடிஎஃப் கள், கொடாக் தங்க ஈடிஎஃப், எஸ்பிஐ தங்க ஈடிஎஃப் போன்ற பல்வேறு நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும், சவரன் தங்கப் பத்திரங்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. பட்டியலிடப்பட்டுள்ள பங்குகளை வாங்கிய அதே முறையில் நீங்கள் இவற்றையும் வாங்கலாம்.


தங்க ஈடிஎஃப்-கள் மற்றும் சவரன் தங்கப் பத்திரங்களை ஏன் வாங்க வேண்டும்?

திட வடிவத் தங்கத்தை திருட முடியும் அதே சமயம் தங்க ஈடிஎஃப் கள் மற்றும் சவரன் தங்கப் பத்திரங்களைத் திருட முடியாது. தங்க நகைகளில் செய்கூலியும், தங்க ஈடிஎஃப் களில் செலவு விகிதங்களும் இருக்கின்றன. ஆனால், சவரன் தங்கப் பத்திரங்களில் அத்தகைய கட்டணங்கள் எதுவும் இல்லை. சவரன் தங்கப் பத்திரங்களை மீட்கும் போது அவை வரி விதிப்புகளைக் கவருவதில்லை. ஆனால் திட வடிவத் தங்கம் குறியீட்டு முறையில் கணக்கிடப்பட்ட 20 சதவிகித வரிகளை ஈர்க்கிறது.


இது மட்டுமல்ல. சவரன் தங்கப் பத்திரங்கள் அரையாண்டுக்கு ஒரு முறை 2.5 சதவிகிதம் வட்டி விகிதத்தையும் வழங்குகிறது. ஆனால், தங்க ஈடிஎஃப் களும் திட வடிவத் தங்கமும் இவ்வாறு தருவதில்லை. ஏற்கனவே குறிப்பிடப்பட்டதைப் போல தங்க ஈடிஎஃப் கள் அதன் சொந்த அனுகூலங்களைக் கொண்டிருக்கின்றன. ஆனாலும், தங்கப் பத்திரங்கள் அளவுக்கு இல்லை. எனவே நீங்கள் வாங்க வேண்டியது சவரன் தங்கப் பத்திரங்கள் ஆகும்.


நீங்கள் தங்கத்தை ஏன் வாங்க வேண்டும்?

அடிக்கடி கேட்கப்படும் கேள்வி என்னவென்றால், நான் ஏன் தங்கம் வாங்க வேண்டும்? உங்கள் கேள்விக்கு நாங்கள் பதில் சொல்கிறோம் வாருங்கள். தங்கம் ஒரு இறந்த முதலீடு என்று நினைத்து உங்கள் எல்லாப் பணத்தையும் பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

2008 இல் பங்குச் சந்தைக்கு என்ன நடந்தது என்று நம் எல்லோருக்கும் தெரியும். 2008 ஆம் ஆண்டு லேமன் பிரதர்ஸ் நெருக்கடிக்குப் பின்னர் தங்கத்தின் விலை மூன்றாண்டுகளில் இரு மடங்கானது. எனவே, 2008 ஆம் ஆண்டு முதல் தங்கத்தில் செய்யப்படும் முதலீடுகள் கிட்டத்தட்ட மூன்றரை மடங்கு வருவாயை திருப்பியளித்துள்ளது.


உலகப் பொருளாதாரம்

இது ஏனென்றால் உலகப் பொருளாதாரம் சரிந்து முதலீட்டாளர்கள் தங்க முதலீடுகளில் தஞ்சம் தேடினர். எனவே முதலீடுகளின் பன்முகத் தன்மையின் ஒரு அளவீடாக நீங்கள் உங்கள் ஃபோர்ட்ஃபோலியோவில் தங்கத்தை வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.

தங்க முதலீட்டை ஒரு சிறந்த முதலீடு என்று பலர் கருதிய போதிலும் தங்கத்தில் 10 சதவிகித முதலீடாவது இருக்க வேண்டுமென்று ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.


22 காரட் மற்றும் 24 காரட் தங்கம் என்றால் என்ன?

நீங்கள் தங்கத்தில் இப்போது தான் முதலீடு செய்வதாக இருந்தால், 22 காரட் மற்றும் 24 காரட் தங்கத்திற்கு இடையே உள்ள வித்தியாசத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். 24 காரட் தங்கம் பெரும்பாலும் 100 சதவிகிதம் தூய்மையானது. ஆனால் அது வழக்கமாக்க 99.99 சதவிகிதம் தூய்மையானதாகக் கருதப்படுகிறது.

தூய்மையான தங்கம்

அத்தகைய உயர்ந்த தூய்மை கொண்ட தங்கத்தை வைத்து உங்களால் நகைகள் செய்ய முடியாது. ஏனென்றால் தூய தங்கம் நொறுங்கும் தன்மை உடையது. இதில் நகைகள் செய்தால் உடைந்து விடும். எனவே நகைகள் உடையாமலிருப்பதை உறுதி செய்வற்காக தங்கம், செம்பு அல்லது வேறு ஏதேனும் உலோகத்தோடு உலோகக் கலப்புச் செய்யப்படுகிறது.

916 தங்கம்

916 சதவிகிதம் தூய்மை கொண்ட 24 காரட் தங்கத்திற்கும் இதே சாராம்சம் பொருந்தும். பல நாடுகளில் 18 காரட் மற்றும் 12 காரட் குறைந்தத் தூய்மை கொண்ட தங்கத்தை நீங்கள் காணலாம். இது 8 காரட் வரை கூட தூய்மைக் குறைவாகக் கிடைக்கிறது. நீங்கள் நகைகள் வாங்குவதாக இருந்தால், அது 22 காரட் தங்கமாக இருப்பது சிறந்தது.

தங்க நாணயங்கள் மற்றும் கட்டிகள்


மற்றொருபுறம் நீங்கள் தங்க நாணயங்கள் மற்றும் தங்கக் கட்டிகளாக வாங்குவதாக இருந்தால், அது 24 காரட்டாக இருக்க வேண்டும். எனவே, தேர்வு உங்களுடையது.

இந்தியாவில் தங்கத்தின் தரக்குறியீடுகளைப் பற்றி ஒரு வழிகாட்டி

நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை இப்போது தான் தொடங்கியிருப்பவர் என்றால் இந்தியாவில் தர அடையாளமிடப்பட்ட தங்கத்தையே நீங்கள் வாங்க வேண்டும். இது ஏனென்றால் தரக்குறியீட்டு முத்திரையிடப்பட்ட தங்கம் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. மேலும் அதன் மீது தங்கத்தின் தூய்மையின் நம்பகத்தன்மைக்கு ஒரு முத்திரையிடப்பட்டிருக்கும்.

தர அடையாள முத்திரை

தர அடையாள முத்திரையிடுதல் என்றால், தர மதிப்பீட்டுச் சான்றளிக்கும் மையம் தங்கத்தின் தூய்மைக்கு உங்களுக்கு உறுதியளிக்கிறது என்று பொருள். இந்தக் கணத்தில் நாட்டில் தரக்குறியீட்டு முத்திரையிடும் மையங்கள் வெகு சிலவே உள்ளன. இந்த மையங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

நீங்கள் கவனிக்க வேண்டியவை

தங்கத்தின் தர முத்திரையைப் பார்க்கும் போது நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், தர முத்திரையிட்ட மையத்தின் அடையாளச் சின்னம் மற்றும் தர முத்திரையிடப்பட்ட ஆண்டு ஆகியவையாகும். இந்தத் தர முத்திரையிடும் மையங்கள் அனைத்தும் இந்தியத் தர நிர்ணய கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ் வருகின்றன.

இந்தியாவில் தங்கத்தின் விலையைப் பாதிக்கும் காரணிகள் என்ன?

தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியிருப்பவர்கள், இந்தியாவில் தங்கத்தின் விலைகளைப் பாதிக்கும் பல்வேறு காரணிகளைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இவற்றில் மிகப் பெரிய காரணி சர்வதேச விலைகளாகும்.

சர்வதேச சந்தை

இது அமெரிக்க வட்டி விகிதங்கள், புவியியல் சார்ந்த அரசியல் பதற்றங்கள் மற்றும் சர்வதேச சந்தைகளிலுள்ள வாங்கல் விற்றல் மற்றும் தேவை ஆகியவற்றைப் பெருமளவில் சார்ந்துள்ளது. உதாரணமாக அமெரிக்கப் ஃபெடரல் வட்டி விகிதங்களை உயர்த்தும் போது அதற்கு நேர்மாறாக தங்கத்தின் விலைகள் வீழ்ச்சியடைகின்றன.

இந்தியாவில் தங்கம் விலை

இந்திய தங்க விலைகள் சர்வதேச விலைகளிலிருந்து பெறப்படுகின்றன. மேலும் அவை தங்கத்தின் விலையில் பாதிப்பை ஏற்படுத்தும். தங்கத்தின் விலையில் பாதிப்பை ஏற்படுத்தும் மற்றொரு விஷயம் டாலருக்கு எதிராக நாணயத்தின் மதிப்பில் ஏற்படும் நகர்வாகும். டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு உயர்ந்து லாபம் அடையும் போது இந்தியாவில் தங்கத்தின் விலைகள் மலிவாகும். மற்றொருபுறம் டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தால் தங்கத்தின் விலை அதிகரிக்கும்.

உள்ளூர் காப்புவரி

தங்கத்தின் விலையைப் பாதிக்கும் மற்றொரு காரணி தங்கத்தின் மீது விதிக்கப்படும் உள்ளூர் காப்புவரிக் கட்டணங்கள் மற்றும் இறக்குமதி வரிகளாகும். அவை குறைக்கப்படும் போது தங்கத்தின் விலை வீழ்ச்சியடையும். அதிகரிக்கும் போது நேர்மாறாக இருக்கும். மேலும் பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் கூட தங்கத்தின் விலையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், அது நீண்ட காலத்திற்கான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

நாணயத் தங்க விலை

உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கியாளர்களின் கொள்கைகளும் இந்த விலைகளைத் தாங்கி நிற்கின்றன. இது ஏனென்றால், நாணயத் தங்க விலைகள் எளிதாக தளர்த்தப்படும் போது தங்கத்தின் விலைகள் உயர்த்தப்படும். மற்றும் இறுக்கப்படும் போது தங்கத்தின விலைகள் வீழ்ச்சியடையும். இது புரிந்து கொள்வதற்கு மிகவும் சிக்கலானது. இவை தங்கத்தின் விலைகளுக்கு எதிரான பின்னணியாகப் பார்க்கப்பட வேண்டும்.

தங்கத்தின் மீது வரி விதிப்பு

உங்கள் தங்கத்தின் மதிப்பு ரூ 30 லட்சத்திற்கும் அதிகமாயிருந்தால் நீங்கள் ஒவ்வொரு வருடமும் சொத்து வரியைச் செலுத்த வேண்டியிருக்கும். இந்த ஏற்பாட்டைப் பற்றி பல தனிநபர்களும் அறிந்திருக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

1 சதவீத சொத்துவரி

மார்ச் 31, 2017 அன்று தங்கத்தின் மதிப்பு மதிப்பீடு செய்யப்படும். ரூ 30 லட்சத்திற்கும் மேற்பட்ட தங்கத்தின் மதிப்பிற்கு 1 சதவிகித தொகையை சொத்துவரியாக செலுத்தத் தவறினால் நகைகள் பறிமுதல் செய்யப்படுவதற்கு வழிவகுக்கும்.

மூலதன ஆதாய வரி

தங்க ஈடிஎஃப் கள் மற்றும் திடவடிவத் தங்கம் கூட விலை குறியீட்டு இணைப்புடன் 20 சதவிகித மூலதன ஆதாய வரியைக் கவர்கிறது. மேலும் இந்த தங்கம் 36 மாதங்களுக்குப் பிறகு விற்கப்பட்டால், நீண்ட காலத்திற்கான மூலதன ஆதாய வரியைக் கவர்கிறது எனவே தங்கம் நிச்சயமாக வரிவிதிப்புடையது.

வரி செலுத்த வேண்டியது அவசியம்

மேலும் வரிவிதிப்பைப் பொறுத்து நீங்கள் வரி செலுத்த வேண்டியது அவசியமாகும் மூலதன ஆதாய வரி என்பதற்கு நீங்கள் தங்கத்தை வாங்கி லாபத்திற்கு விற்றால் அந்த லாபத்தின் மீது விதிக்கப்படும் வரி என்று பொருள்.

ப்யூச்சர் மார்கெட்

இந்தியாவில் தங்கத்தை எதிர்கால சந்தையில் வாங்குதல் நீங்கள் இந்தியாவில் தங்கத்தை வருங்கால பேரங்களில் வாங்கலாம். வருங்கால தங்க திட்டங்களில் ஒப்பந்தம் காலாவதியாகுவதற்கு முன்பு உங்கள் ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். எனவே நீங்கள் மார்ச் மாத ஒப்பந்தத்தில் ஒரு தங்க வருங்கால திட்டத்தை வாங்குவதாக இருந்தால் மார்ச் மாத இறுதிக்குள் உங்கள் ஒப்பந்தத்தை தீர்த்துக் கொள்ள வேண்டும்.

முழுமையான தொகை

வருங்கால ஒப்பந்தங்களில் நீங்கள் தங்கத்திற்கு ஒட்டுமொத்த தொகையை செலுத்த வேண்டியதில்லை. ஆனால் பணத்தின் எல்லையை மட்டும் தீர்மானிக்கிறீர்கள். எனவே உங்கள் வெளிப்பாடு பலதடவை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். இருந்தாலும் இது உயர் மிக உயர் அபாயமுள்ள விளையாட்டு பொதுவாக இந்த வகை சந்தைகளில் அதிக மதிப்புடைய தனிநபர்கள் மட்டுமே இந்த வகை ஆபத்துக்களை எடுப்பார்கள்.

அட ...இனி தங்கத்தை பத்தி படிச்சாச்சா ...எங்க சொல்லாம கொள்ளமா தங்கம் வாங்க கிளம்பேடீங்கா போல ....

எங்க வீட்டு அம்மிணி எங்கிட்டா சன்னமா கேக்கறாங்க ....(நிதி மந்திரி ,உள்துறைமற்றும் வெளியுறவு துறை அமைச்சர்) ,ஏனுங்க தீபாவளிக்கு முன்னமே தங்கம் வாங்கிறலாம்ங்க ...ராஜா வீதி இருக்கிற கிர்தலால் போகலாமா..கிராஸ்க்கட் ரோடு இருக்கிற ஜாய் ஆலுக்காஸ் போகமலமா ???

ஏங்க உங்களுக்கும் தகவல் இன்னும் வேணுமுங்களா .....?

இன்றய தங்கம் தகவலுடன் சிவக்குமார்

Sivakumar.V.K
Unit Head
(Home Loans,Home Loans To NRIs)
Sundaram Finance Ltd.,
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com
CAR LOANS,MUTUAL FUND,FIXED DEPOSIT,HOME LOANS,INSURENCE
Please be free to communicate at any time and it is our pleasure to serve you always.
சிவக்குமார்........
வீட்டு கடன் பிரிவு
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர்
அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681
Email:siva19732001@gmail.com

 ⁠⁠⁠⁠⁠நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

சென்னையில் மளிகை கடை வைத்திருப்போரின் அன்றாட வாழ்க்கை ஆனது அதிகாலை நான்கு மணி முதல் ஆரம்பித்து விடுகிறது. அந்த பொழுதில் வீட்டில் இருந்து கிளம்பி கோயம்பேடு மார்க்கெட் சென்று அன்றைய காய்கறிகளை வாங்கி கொண்டு காலை 6.30 மணி அளவில் வந்து கடையில் சேர்த்தால் மட்டுமே அவர்களின் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பையும் சீரான வியாபாரத்தையும் பெற முடியும். அன்றைய பொழுது இவர்களுக்கு முடிய சுமார் 11 மணி வரை ஆகும். இடையில் 3  மணி நேரம் மட்டும் உணவு உட்கொள்ளவும் சற்று களைப்பாறவும் கிடைக்கும். இத்தகைய வாழ்கை முறையில்  மட்டுமே அவர்களின்  பெரும்பாலான நாட்கள் கழியும். இதில் சற்றும் தளராமல் எப்போதுமே புன்னகையுடன் இருக்கும் ஒரு நபரின் அறிமுகம் தான் இன்று.

தம்பி சீனிராஜ் .

2000  ஆம் ஆண்டு தனது எட்டாம் வகுப்பு படிப்பை நற்கலைக்கோட்டையில் உள்ள நடுநிலை பள்ளியில்  முடித்த இவர், சென்னையை நோக்கி வந்தார். அவர் குடும்பத்தில்  உள்ள நபர்கள் அதற்க்கு முன்னர் படித்த அதிகபட்ச கல்வியும் 8  வகுப்பு வரை மட்டுமே. சென்னையில் உள்ள ஒரு உறவினர் கடையில் மாதம் ரூபாய் 350 சம்பளத்திற்கு வேலை செய்து வந்தவர். 8  ஆண்டுகள் அதே கடையில் பணி செய்து ரூபாய் 1300 வரை சம்பள உயர்வு பெற்றார். பின்னர் தன்னுடைய 8  வருட   மளிகை கடை வியாபாரத்தில் கிடைத்த அனுபவத்தின் மீது நம்பிக்கை வைத்து தங்கவேலுசாமி மாமா அவர்களின் உதவியோடு சென்னை வேளச்சேரி பகுதியில் "வேல்முருகன் ஸ்டோர்ஸ்" எனும் கடை வைத்து, இன்று அதற்கு அருகில் உள்ள பள்ளிக்கரணை பகுதியில் சொந்தமாக வீடு வாங்கி தனது அண்ணன் தம்பிகள் அனைவரோடும் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.

தனது கல்வியை  8  ஆம் வகுப்பிற்கு மேல்  தொடரா விட்டாலும் தனது தம்பி திரு விஜயகுமார் அவர்களை B .Com ( ஜெயின் காலேஜ்) படிக்க வைத்து கொண்டு இருக்கிறார்.

தன் தந்தையை 1999  ஆம் ஆண்டு இழந்த சீனிராஜ் , தனது தம்பிகளுக்கு தந்தை ஸ்தானத்தில் நின்று அவர்களுக்கு  தேவையான பொருளாதார உதவிகளையும் மற்ற நல்வழியையும் காட்டி வருகிறார்.

திரு சீனிராஜ் அவர்களின் தந்தை பெயர் விஜயராஜ் - தாயார் ராஜேஸ்வரி ஆகியோர். இவர் உடன் பிறந்தோர் திரு சங்காரவேல்ச்சாமி ,திருமதி ரத்தினவேல்த்தாய்,  திரு வேல்முருகன் , திரு ராம்குமார் , திரு விஜயகுமார் ஆகியோர் ஆவர்.

இவர் மனைவியின் பெயர் சுப்புத்தாய் . இவர்களுக்கு திவ்யா, வித்யா, விஜய் எனும் குழந்தைகள் உள்ளனர்.

கடின உழைப்பால் மட்டுமே உயர்ந்த தம்பி  சீனிராஜ்  அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

இவர்களின் வாழ்கை முறையில் பெரும்பாலும் உடல் உழைப்பு அதிகமாக இருந்தாலும் , சீனிராஜ் அவர்களுக்கு  எந்த விதமான மது பழக்கமோ அல்லது புகை பழக்கமோ கிடையாது.

" இதுவே நமது கலாச்சாரத்தின் ஒரு பெரிய அடையாளம்."

தங்கவேலுசாமி மாமா அவர்களின் சிஷ்யர்கள் யாரும் தீய பழக்கதிற்கு அடிமை ஆகாதவர்களே!

அவர் மென்மேலும் உயர்ந்து 16  செல்வங்களையும் பெற்று இன்புற்று வாழ வாழ்த்துவோம்.

அவருடைய தொடர்பு எண்: 9790707003

நன்றி
இப்படிக்கு
செந்தில் அப்பையன்


மதிப்புமிக்க சீனிராஜ் அவர்களுக்கு ..மனப்பூர்வமான வாழ்த்துக்கள்

உழைப்பின் மூலம் மளிகை கடை நாடார் சமுதாயத்தை யம் கர்மவீரர் காமராஜை நினைவு படுத்துகிறார் ...

நான்கு எழுத்து படித்து வேலைவாய்ப்பு பெற்று ...கல்யாணம் செய்து தன் பெற்றோர்களையும் ,கூடப்பிறந்த சகோதர ,சகோதிரிகளை ..தூக்கியெறியாமல் ...தன் கூட பிறந்த தம்பியை தான் படிக்கமுடியாத சூழ்நிலையில் தந்தை இடத்தில இருந்து நன்கு படிக்கவைத்து கொண்டுஇருப்பதற்கு நன்றி சொல்ல வார்தை இல்லை தாயையும் தம்பியையும் கூட்டு குடும்பமாக .வாழக்கையை அழகாக நகர்த்திக்கொண்டு இருக்கும் .. சீனிராஜ் தாய்க்கும் ,மனைவிக்கும் ,குழந்தைகளுக்கும் நன்றிகள் கோடி ...நிகழ்காலத்தில் நம் சமுதாயத்தில் கூட்டுக்குடும்பம் இருப்பதற்கு இவர் ஒரு முன்னுதாரணம் ..படித்த நம் இளைய மக்கள் இவரிடம் கற்கவேண்டிய பாடமும் கூட ..இதை ஐ ஐ ம் இல் சொல்லித்தருவதற்கு லச்சத்தில் தொகை கட்டவேண்டும் ..நமக்கு இலவசமாக கற்றுக்கொடுத்து இருக்கிறார் ..

சீனிராஜ் அவர்களுக்கு  எந்த விதமான மது பழக்கமோ அல்லது புகை பழக்கமோ கிடையாது. இதுவே நமது கலாச்சாரத்தின் ஒரு பெரிய அடையாளம்.".....இதை கண்டிப்பாக நம் சமுதாயம் பின்பற்றவேண்டும் ..இது நம் சொத்தும் கூட ...

இவரை வசந்தம் குழுவில் பார்க்கும்போது செலஃபீ சீனிராஜ் என்றுதான் பார்ப்பேன் ..நடிகர்களை விளம்பரப்படுத்தாமல் ...நானே ரஜினி ,நானே கமல் ,நானே விஜய் ,நானே அஜித் என்று படம் எடுத்து பகிர்வது அருமை ...

நன்றி செந்தில் அப்பையன் அவர்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு

வியாழன், 21 செப்டம்பர், 2017

வருடங்கள் இரண்டு சென்றாலும் ..உடுமலை வரலாற்று நிகழ்வுகள் பசுமையான மனநிறைவுகளை தருகிறது ...மறைந்த தமிழ் முனைவர் .இந்திரஜித் அவர்கள் ,மறைந்த பாவலர் பழனிசாமி அவர்கள் ...நினைவுகள் என்றும் நம்முடன் இருந்து பணியாற்றுவது போல்தான் உள்ளது ...அடுத்த கட்டத்திற்கு வரலாறுகளை தேடி பயணத்திற்கு ஒரு உந்துசகதியாக பயணிக்கவைக்கிறது ...நீதிபதி -தங்கராஜ் அவர்கள் ,முனைவர் .கிருஷ்ணன் அவர்கள் ,திரு .சுபாஷ் கிருஷ்ணசாமி அவர்கள் ,வேல்முருகன் அவர்கள் ,தொல்லியல் துறை திரு.ரவி அவர்கள் ,கொழுமம் ஆதி அவர்கள் ,அருட்செல்வம் அவர்கள் ,பேராசிரியர் கண்டிமுத்து அவர்கள் ,

September 21, 2015
உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவம் நடத்திய...
தளி எத்தலப்ப மன்னர் - உடுமலை நாராயணகவி
இருபெரும் வரலாற்றுத் திருவிழா,வெகு சிறப்பாக இன்றைய தலைமுறையினர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது ... உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவம் சார்பாக விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துகொள்கிறோம்
— in Udumalaippettai.
தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் ...

பொதுகுழுக் கூட்டம்

வரும் ஞாயிறு 24.09.2017 மதுரையில் பொதுகுழுக் கூட்டம்

பொதுக்குழுவில் பூர்வாங்க பணிகள் குறித்து பேசப்படுகிறது

1.கட்டபொம்மன் பண்பாட்டு கழக இதழ் இரண்டின் வளர்ச்சி ..

2.இதழகான நிதி ஆதாரம் திரட்டுவது

3.மாநில அமைப்பு ,மாவட்ட அமைப்புகளுக்கு அடிப்படை நிதி ஆதாரம் இருக்க வேண்டிய அவசியம் ,அதற்கு கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகள் குறித்து பேசுவது .

4.கல்வி வளர்ச்சிக்கு மாநில ,மாவட்ட ,ஒன்றிய கிளை அமைப்புகள்  என்ன நடவடிக்கை எடுத்தது ஆராயப்படுத்தல் .

5.நம் சமுதாய குழந்தைகளுக்கு அதிக மதிப்பெண் பெற்றதுக்கு பரிசளிப்பு விழா எந்தந்த மாவட்டங்களில் நடைபெற்றது என கேட்டறியவேண்டும் .

6.நம் சமுதாய கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக எடுக்கவேண்டிய நிலைப்பாடுகள் என்ன என்று கேட்டறிதல் .

7.தற்போதுள்ள DNC சமுதாயங்கள் எல்லாம் DNT என மாற்றப்படவேண்டியது குறித்து பேசுதல் .

இவ்வளவு எதிர்பார்ப்புகளுடன் வரும் ஞாயிறு  மதுரையில் நடைபெற உள்ள பொது குழு கூட்டத்திற்கு நமது சமுதாயத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள நமது சொந்தங்கள் மாநிலம் ,மாவட்டம் ,ஒன்றியம் ,கிளைகள் ,என எல்லா அமைப்புகளிலிருந்தும் திரண்டு வந்து பங்கு கொண்டு ஒரு முழுமையான அர்த்தமுள்ள பயனுள்ள நம்பிக்கையூட்டுகிற பொதுக்குழு கூட்டமாக நடந்தேற உதவும்படி இந்த அன்பான வேண்டுகோள் விடப்படுகிறது .

இவண் ..
தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் ...
மாநில அமைப்பு ..

மாநில செய்தித்தொடர்பாளர்
டிஜிட்டல் ராஜேந்திரன்

சிவக்குமார் .....
 உடுமலைப்பேட்டை

புதன், 20 செப்டம்பர், 2017

என்னோடு உயிராய் உறவாய் பேசி பயணிப்பவர்களுக்கு தெரியும்..,
என்னுடைய இந்த இனத்திற்கான தேவை குறித்த வேதனை.
எங்கேனும் சிறு வெளிச்ச கீற்று எம் சமூகத்தின் மீது விழுந்து விடாதா என்ற என்னுடைய ஏக்கம்.

இருப்பினும்..,
முரண்பாடுகள் நிறைந்த என் சமூகத்தில் களம் காண்பது அவ்வளவு எளிதல்ல..,

காலத்தின் தேவை கருதி ஒரு நாள் என் சமூகமும் தனது உரிமைகளுக்காக தன் இனக்கொடியாம் ராஜகம்பள மஞ்சள்  கொடியை கையில் ஏந்தி ஒருநாள் போராடும்,அன்று என் சமூகம் இழந்ததையெல்லாம் மீட்டெடுக்கும்,பெற்ற அவமானங்கள், வரலாறு இருட்டடிப்புகளுக்கெல்லாம் சரியான தகவல்களை திரட்டி கல்வி ,பொருளாதாரம் ,பண்பாடு ,கலாச்சாரம் என தன் இனத்தை முன்னேற்றும் நாள் வெகு தொலைவு இல்லை .....