ஞாயிறு, 10 ஜூன், 2018

இன்று ஞாயிறு இனிமையான முத்தான மூன்று நிகழ்வுகள் ...
அன்புக்கும் ..மரியாதைக்கும் உரிய மக்கள் விரும்பும் எழுத்தாளரை நண்பராக பெற்றது ..பெருமையே ....நன்றி ..

1.பொதுப்பணிக்கு ....உடுமலை முழுநேர கிளை நூலகம் எண் இரண்டில்  நூலக வாசகர் வட்ட  துணைத்தலைவராக தேர்வு
2.சமூக நல்லுணர்வு ...இன்று இப்பத்தார் நேன்புக்கு சென்று வந்தது ..
3.இன்று நமது கோவில் வரலாற்று நூலுக்கு நம் கம்பளவிருட்சம் அறக்கட்டளையின் மூலம் கலந்துத்தாய்வு செய்து முடிவு எடுக்கப்பட்டது ..

அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681


சிஞ்சுவாடி ..பணிகள் வழக்கறிஞர் முருகராஜ் அவர்கள் ..முழு ஈடுபாட்டுடன் ..முன்னெடுத்து செய்துகொண்டுள்ளார் ..தொலைபேசியில் தொடர்பு கொண்டுகேளுங்கள் ..வாழ்த்துக்கள் ..

ஈஸ்வரன் மாப்பிள ......கேரள தமிழ் பேராசிரியர் கண்டிமுத்து ,பத்திரிகையாளர் எழிலன் ,வரலாற்று பேராசிரியர் .மதியழகன் ,ஆய்வாளர் அருட்செல்வம் ..இதில் இதில் கலந்துகொண்டவர்கள் ..முன்னாள் அமைச்சர் ..சண்முகவேல் அய்யா அவர்களின் நட்பு இன்று கிடைத்தது ..நமது தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலை போரில் நமது தளி எதுலப்ப மன்னருக்கு உற்ற தோழனாக இருந்து ..தன் உயிரை கொடுத்த இஸ்லாமியரின் ஈகை பற்றி வரலாற்று ஆசிரியர் மதியழகன் அவர்கள் பேசியது மிக அருமையான மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது


மதிப்புக்கும் மரியாதைக்குரிய எனது நண்பர் ..குறிச்சிக்கோட்டை ...வருவாய் ஆய்வாளர் ..விஷ்ணு ..அவர்களின் பதிவுரை ..
Intro
திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம், குறிச்சிக்கோட்டை உள்வட்டத்திற்குட்பட்ட தளி கிராமத்தினை மையமாக கொண்டு கி.பி 1750 - 1801 வரை ஆட்சி புரிந்து ,ஆங்கிலேயர்களால் அழித்து ஒழிக்கப்பட்ட தளி எத்தலப்ப நாயக்கர் எனும் சிற்றரசரின்வரலாற்றினை ஆதாரங்களுடன் ஆசிரியர் முன் வைத்துள்ளார். நான் பணிபுரியும் உள் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் என்பதால் பணி நிமித்தமாக நான்செல்லும் பழங்குடி யினர் வாழ்ந்து வரும் மலைப்பகுதிகளிலோ,திருமூர்த்தி அணையை ஒட்டிய பகுதிகளிலோ, வயல்களிலோ கற்சிலைகளாக , கட்டிட எச்சங்களாக ஆயிரம் கதைகளையும், தன்னுள் சோகங்களையும் சொல்லி கொண்டு நின்று கொண்டிருக்கும் , இப்புத்தகம் தளி எத்தலப்பர் எனும் சிற்றரசரின் வளர்ச்சி,ஆட்சி முறை மற்றும் அழிக்கப்பட்ட துயரம் பற்றி பேசுகிறது. வாசிப்பு ஆர்வம் படைத்த வாசகர்கள்8838572584 -அருட்செல்வன் அவர்களை அணுகி பெறலாம்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக