ஞாயிறு, 3 ஜூன், 2018

அழகான மாலை ....கரப்பாடி அம்மன் தேர்த்திருவிழா ..ஜூன் 2..2018...

அருமையான மாலை வேலை ..நம்ம கார்த்தி ..செந்தில்ராம் மாப்பிள்ளைகளுடன் மாலை நேர பயணம் ..கடந்த வாரம் இயற்கையின் மழைச்சாரல் தூவிய காரணமாக ..பசுமை நிறைந்த கிராமங்களின் தென்னை ,கோதுமை ..பருத்தி ..நிலக்கடலை ...கொத்துமல்லி வாசம் சுவாசித்து பயணம் அற்புதம் ...கரப்பாடி ஊரின் முதலில் நம்மை வரவேற்றது.. கம்பளவிருட்சம் அறக்கட்டளையின் பதாகை ...அருமை நம் உறுப்பினர்களுக்கும் ,கரப்பாடி நம் சொந்தங்களுக்கும் நன்றியை காணிக்கை ஆக்குகிறேன் ..இதமான காற்றுஉடன் ...கோவிலின் நம்ம என் எம் எம் பாய்ஸ் ..நம்ம ராக்ஸ்டார்ஸ் தேவராட்டக்குழு தான் கண்ணில் பட்டது ...அவர்களின் அருமையான தேவராட்டத்தை பார்த்துவிட்டு கோவிலின் நுழையும்போது நமது மனது முழுவதும் இனம் புரியாத பக்தியை கொண்டுவருகிறது ...பழமைவாய்ந்த அம்மனின் சிலை வடிவின் சக்தியை புரிந்துகொள்ளமுடிகிறது ..கையில் விபூதியை வாங்கி கொண்டு முகத்தில் அடித்த தீர்த்தம் முகத்தில் அறைந்தது நரம்புகளுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது ..கோவிலை சுற்றி வந்த கொண்டிருந்தபோது ..நம்ம கெமிஸ்ட்ரி செந்தில் மாப்பிள்ளை நம்முடன் இணைந்துகொண்டார் ..நம் சொந்தங்கள் அதிகம் உள்ள ஊர் ..எங்கு திரும்பினாலும் நம் சொந்தம் தான் ..மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது ...நம்ம கரப்பாடி முடிசூடா மன்னர்கள்  சிவா ,அரவிந்த் ,பிரபா ,இளவரசிகள் ..மஹாலக்ஷ்மி ,நிவேதா .மதுமிதா ...காந்தினி ..மற்றும் பெயர்  தெரிந்துகொள்ளமுடியாத நம் சொந்தங்கள் பார்த்துவிட்டு பேசிவிட்டு தோட்டத்தின் நடுவே கம்பீரமாக நிலைகொண்ட கரப்பாடி தேரின் அருகே சென்றோம் ...வடம் பிடிக்க நகர ஆயுத்தமாக காத்துஇருந்தது ..கோவிலின் அறங்காவலர்கள் வந்தவுடன் ...அம்மனை தரிசித்துவிட்டு ..தேர் நகர ஆரம்பித்தது ..அதற்கு முன் நம்ம வளரும் சின்ன சின்ன குழந்தைகள் ..அவர்களுக்கு என்றே செய்தது போல் ஒரு குட்டி தேர் ...அற்புதமாக இழுத்து நகர்த்திக்கொண்டு இருந்தார்கள் ..அப்பப்ப குழந்தை செல்வங்களுக்கு குட்டி தேரை இழுப்பது பக்திப்பரவசம் ..ஆனந்தம் ..உற்சாகம் ...துள்ளலுடன் ...வடம் பிடித்து இழுத்து வந்தது மிக்க மகிழ்ச்சி ..இந்த காட்சிகளை உலகில் எங்கும் பார்க்கமுடியாது ...தேர் நிலைக்கு வந்தவுடன் கோவிலுக்குள் சென்று கரப்பாடி அம்மனுக்கு ..திருக்கல்யாண மொய் ..நமது கம்பளவிருட்சம் அறக்கட்டளை சார்பாக சமர்க்கப்பட்டது ...மனநிறைவுடன் கிளம்பி கரப்பாடி நம் சொந்தங்கள் திருப்பூர் ரவி அவர்கள் ,திருப்பூர் திவான் கார்த்தி ..அவர்களின் வீட்டுக்கு சென்று சுவையான தேனீர் அருந்திவிட்டு...கிளம்பும்போது மனம் ஏனோ அடுத்த தேர் திருவிழா எப்போது வரும் என்ற ஏக்கத்துடன் ...மனதில் புதுவித உற்சாகத்துடன் வீடு திரும்பியது மகிழ்ச்சி ...என்று அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681....







கவலை வேண்டாம் சார் ... ...நமது செயல்கள் சரியாக போய்கொண்டு உள்ளது ..சிறு ..சிறு தவறுகள் வருவது இயல்பு ...அதையெல்லாம் கடந்து செல்லாம்...கவலை பட ஒன்றும் ...நம் சரியாக செயல்பட்டுக்கொண்டு உள்ளோம் ..வளர்ச்சியை பொறுக்கமுடியாமல் ஒரு சிலர் செய்யும் தவறுகளை , செயல்களை  தகுந்த ஆலோசனை கொடுத்து சரிசெயலாம் ..















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக