அனைத்து தாய்மார்களுக்கும் அர்ப்பணம்...
ஒரு குட்டி பையன், அவன் அம்மாவிடம் கேட்ட கேள்வி, அவள் கண்களில் கணீரைப்பார்த்தவுடன்"நீ ஏன் அழுகிறாய்.?" "நான் ஒரு பெண் என்பதால்," அம்மா, மகனிடம் சொன்னாள். குழந்தைக்கு புரியவில்லை.
தந்தையிடம் கேட்டபோது கூறினார், "பெண்களுக்கு அழுவதற்கு காரணமே வேண்டாம், என்று..!
சிறுவ்ன், வளர்ந்து, பெரிய மனிதனாக ஆனதும்,பல அறிஞர்களிடம் கேட்டு, தெளிவான விளக்கம் பெற முடியவில்லை.
சிறுவ்ன், வளர்ந்து, பெரிய மனிதனாக ஆனதும்,பல அறிஞர்களிடம் கேட்டு, தெளிவான விளக்கம் பெற முடியவில்லை.
இறுதியாக கடவுளிடம் கேட்டு விடலாம் என நினைத்து, கடவுளை, தொலைபேசியில் அழைத்து, "பெண்கள் ஏன் அழுகிறார்கள்"..? என்று கேட்டார்...!!!
கடவுள் தெரிவித்தது: "நான் பெண்களை படைக்கும் போது,குழந்தைகளைத் தாலாட்ட, வலிமையான தோள்களை அளித்தேன்.
மகப்பேறு காலத்திலும், பின்னரும் இன்னும் ஆறுதல் அளிக்க, உள்ளத்திற்கும், உடலுக்கும் , வலிமை அளித்தேன். .
குடும்ப பாரத்தையும், வழிநடத்தும் பண்பையும், இயல்பான சகிப்புத்தன்மை மூலம் அளித்தேன்.
நீ, சிறுவனாக இருந்த போது, உனது தாயை காயப்படுத்தினாலும், உன்மீது அன்பை மட்டுமே வெளிப்ப்டுத்தும் குணத்தை அளித்தேன்.
கணவனால் துன்பம் அடையும் போதும், மனம் கலங்காத, வலிமையான இதயத்தை, அளித்தேன்.
ஒரு நல்ல கணவன், ஒருபோதும், தனது மனைவியை துன்புறுத்துவது கிடையாது என்று, தனது ஞானத்தின் மூலம் அறியும் திறனை கொடுத்தேன்.
ஆனால் சில நேரங்களில், பெண்கள், மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகும் போது, ஆறுதல் அடைய, கண்ணீரைக் ( அழுகையை) கொடுத்தேன்.
மகனே, பெண்களுக்கு, அழுகை என்பது, அவர்களது, மன வருத்தத்தின் வடிகால் என்பதை, நீ உணர வேண்டும்.
"பெண்களின் அழகு, அவர்களது புற தோற்றத்திலோ, ஆடை, அணிகலன்களிலோ, அவர்களது கூந்தலின் அழகிலோ இல்லை, மகனே.
பெண்ணிகளின் அழகு, அவர்களின் கண்களின் வழியாகப் பார்க்கப்பட வேண்டும்.......
ஏனெனில்,பெண்களின் அன்பு, கண்களின் வழியாக, இதயத்தை ஊடுறுவுகிறது...அது தான் கண்ணீர்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக