செவ்வாய், 5 ஜூன், 2018

இன்று தம்பி ...ஜமீன் கோடங்கப்பட்டி ..உசிலம்பட்டி கார்த்தி ஸ்மார்ட் ...திருப்பூர் வருங்கால வளரும் கம்பள தொழிலதிபர் திருமணஅழைப்பிதழ் கொடுப்பதற்கு உடுமலை வந்தபோது தேனீர் அருந்தி ..20 நிமிடம் கலந்துரையாடியது மிக்க மகிழ்ச்சி ...வீரபாண்டிய கட்டபொம்மன் ஊரிலிருந்து எத்தலப்ப நாயக்கர் ,எர்ரவ நாயக்கர் பூமிக்கு வருவது மற்றட்ட மகிழ்ச்சி....


அக்காவின் அருமையான பதிவு ...

இன்று கோவிலுக்குப் போய் விட்டு (பள்ளிகள் திறந்து விட்டதால், சுத்தமாய்க் கூட்டம் இல்லை.) வெளியே வந்து படிகளில் ஒரு ஓரமாய் உட்கார இடம் தேடுகையில், கண்ணில் பட்டது ஒரு காட்சி.
இருபத்தைந்திலிருந்து முப்பதுக்குள் இருக்கும் அந்த இளைஞனுக்கு. நல்ல வாட்டசாட்டமான உயரம்.நடை உடை பாவனைகள் நல்ல வசதியான இடத்தை சேர்ந்தவராய்க் காட்டியது. படிக்கட்டுச் சுவரில் சாய்ந்தபடி நின்றவரின் பார்வை எங்கோ வெறித்திருக்க...கண்களில் அருவியாய்க் கண்ணீர்.
மனதை மிகவும் சங்கடப் படுத்துவதாய் இருந்தது அவரின் நிலை. சுற்றம் சூழல் மறந்து, பொது இடம் ஒன்றில் ஒருவன் அப்படிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறான் என்றால், அவனுள் எந்த அளவுக்குத் தாள முடியாத துக்கம் இருந்திருக்கும் !!
கடந்து சென்ற சிலர் அவரவர் பாட்டுக்கு நகர்ந்து கொண்டிருக்க, செய்வதறியாமல் நான்.
அப்போது கோவிலுக்குப் போவதற்காக வந்த ஒரு மூதாட்டி... எண்பது வயது இருக்கலாம். இவரின் நிலையைப் பார்த்து, மனசு பொறுக்காதவராய்.. அருகிலே சென்று.. "கண்ணு...!" என வாஞ்சையாய் அழைக்க... குரல் கேட்டு , தன் கண்ணீரைக் கூடத் துடைக்கத் தோன்றாதவராய்... அந்தம்மாவின் பக்கம் திரும்பினார்.
சட்டென அவரின் கைகளைப் பற்றிய முதியவள்...
மென்மையான ஆனால் உறுதியான தெளிவான குரலில்..
"எல்லாம் சரியாப் போயிடும் சாமி.. இப்படி எதுக்குக் கொழந்தையாட்ட அளுவறே.. நீ கும்புட்ட சாமி மேல பாரத்தப் போட்டுட்டு, நம்பிக்கையோட ஊட்டுக்குப் போ கண்ணு. போ.... " என ஆறுதல் சொல்ல.... இன்னும் உடைந்து போனவராய் "பாட்டீ ..... ! "
எனத் தேம்பி அழ ஆரம்பித்தார்.
சற்று நேரம் வாய்விட்டு அழுத பின் மன பாரம் குறைந்திருக்கும் போல... சற்றே ஆசுவாசமான
அந்த இளைஞனின் கையை தட்டிக் கொடுத்து, "கெளம்பு சாமி.. ஊட்டுக்குப் போ..." எனச் சொல்ல...
குரல் கம்ம... "நன்றிங்க பாட்டீ... !"எனச் சொல்லி விட்டு... படி இறங்கிப் புறப்பட்டார்.
அவரை அனுப்பி விட்டு, கோவிலுக்குள் நுழையப் போனவர்....
நெகிழ்ச்சியில் கலங்கிய முகத்தோடு எதிரில் தென்பட்ட என்னிடம்...
"ஆரு பெத்த புள்ளையோ பாவம்.. என்ன மனசுக் கொறையோ தெரீலெ சாமி... செவத்தப் புடிச்சுக்கிட்டு பொக்குன்னு அளுதுக்கிட்டு இருக்குது. பாத்துட்டு எப்புடியோ போட்டும்னு தாண்டிப் போக முடீல.
இருந்தா எம்பேரன் வயசு இருக்கும். என்ன வெசனமோ என்னமோ...!" என்றவாறே....
"அப்பா முருகா... எல்லாருத்தோட கொறையையுமு தீத்து வையப்பா... சாமீ... !"
எனக் கை கூப்பித் தலைக்கு மேல் உயர்த்திக் கும்பிட்டவாறே கோவிலுள் நுழைந்தார்.
பிரமிப்பாய் இருந்தது எனக்கு. நிறைவான மனதோடு கையெடுத்துக் கும்பிட்டேன் அவரை.
தெய்வங்கள் கோவிலுள் கருவறையில் மட்டும் அமர்ந்திருப்பதில்லை.

எப்பொழுதும் அக்காவின் பதிவுகள் ...மனதை சாந்தப்படுத்தும் ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக