சனி, 23 ஜூன், 2018

வேலையில்லா திண்டாட்டம் ..

கம்பள விருட்சம் கார்த்தி ...சரியான தலைப்புகளை அழகாக தொகுத்து சிந்தனைகளை தூண்டும் தலைப்புகள் ...இப்போது உள்ள சூழ்நிலைக்கு ஏற்ற தலைப்புகளை தந்து ...தகவல்களை தருவது மிக சிறப்பு ...

பெருகி வரும் வேலையில்லா திண்டாட்டம்,அளவுக்கு அதிகமான வேலைப் பளு ,உடல் மன உளைச்சலை ஏற்படுத்தும் வேலையின் தன்மை,அடிமை வாழ்க்கையிலிருந்து விடுதலை,தற்சார்பான வாழ்வியல் என பல கோணங்களிலும் இன்று இயற்கை வழி விவசாயத்தை நோக்கி இளைஞர்கள் திரும்பியுள்ளனர்.
நடைமுறை சாத்தியம் சற்று சிக்கலாகதான் உள்ளது.இந்த வழியில் சென்று ஓரளவு பலன் பார்பதற்குள்ளே, குடும்பமும் சுற்றமும் வசை பாட ஆரம்பித்து விடுகிறது.பார்த்து கொண்டு இருக்கும் மனதுக்கு ஓப்பாத வேலையை விட்டு விட்டு விவசாயத்தை நோக்கி திரும்பிய இளைஞர்களுக்கு ஒன்று சொந்த நிலம் இல்லை,அப்பிடி இருந்தாலும் குடும்பத்தின் ஆதரவு மிகக் குறைவு .பெரும்பாலும் அப்பாக்களின் அதிகார வரம்பிற்கு உட்பட்டு பரிசோதனை முயற்சிகளை செய்வதற்கு வாய்ப்பு மிக குறைவு. நிலம் குத்தைக்கு எடுப்பது ,வேலி அடைப்பது(உயிர் வேலி வளரும் வரை) என முதலீட்டின் அளவு சற்று மலைக்க வைக்கிறது.எல்லாவற்றிலும் அவசரம் தொனி தான் உள்ளது.பருவ சூழ்நிலை,நிலத்தின் தன்மை ,பக்கத்து நில விவசாயிகளின் ஆதரவு பங்களிப்பு ,இயற்கை வழி விவசாயத்தை கற்று கொடுபவர்களின் தன்மை ,இயற்கையை பற்றிய நமது புரிந்துணர்வு ,காத்திருப்பு,சந்தைபடுத்துதல் என எத்தனையோ காரணிகள் சவாலாக உள்ளன.
உண்மையில் இயற்கை வழி விவசாயதிற்கு கூட்டமான ஒரு மனநிலை தேவை உள்ளது.புர்ந்துணர்வு மிக்க நண்பர்கள்,கணவன் மனைவு இணைந்து நல்ல சூழலை உருவாக்க முடியும்.நம்மை பெருதும் நிர்பந்ததிற்கு உள்ளாக்கும் பணம்,தண்ணீர் பற்றாக்குறை,பாதுகாப்பு போன்ற புறக் காரணிகளின் பாதிப்பு குறையும் போது இயற்கை வழி விவசாயம் இளைஞர்களுக்கு சாத்தியமாகும்.
ஆரோக்கியத்தை இழந்து தவிக்கும் முந்திய தலைமுறை,அதனை தக்க வைக்க தலைகீழாய் முயற்சி பண்ணும் இன்றைய தலைமுறை அடுத்த தலைமுறையின் ஆரோக்கியமும் நமது கைகளில் தான் உள்ளது .நமது தோளில் கடினமான பணி சுமத்தபட்டுள்ளது.
சிறுதானியங்களும் அதன் உணவு வகைகளும் நடுத்தர குடும்பங்களின் கையை விட்டு நழுவி பெரு நிறுவனங்கள் நடத்தும் உணவு திருவிழாக்களிலும் ,அரசு சார்ந்து நிறுவனங்களின் விளம்பர பேணர்களிலும் தான் குடிகொண்டு உள்ளன.இயற்கை வழி விவசாயம் பயிற்றிவிக்கும் இடங்களும் ஆசிரம மனநிலைக்கு மாறி விட்டது.நல்ல உணவு எல்லோருக்கும் பொதுவானதாய் அமைய வேண்டும் மைய படுத்துதல் வேண்டாம் பரவலாக்கல் தான் நமக்கு வேண்டும்.இந்த ஏக போக சந்தையை,வழி பாட்டு மன நிலையை நிச்சயம் நம்மாழ்வார் ஐயா விரும்பவில்லை.அவர் விரும்பியது வாழும் கிராமங்களை தான்.சிறுதானியங்களும் அதன் உணவு வகைகளும் ரேசன் கடையையோ,பள்ளி மதிய உணவிலோ ,அங்கன் வாடி மையத்திலோ போய் சேர்ந்து இருந்தால் நாம் நிம்மதி கொள்ளலாம் ஆனால் பிஸ்கட் கம்பெனிகளிலும்,பெரு முதலாளி கைகளிலும் அவர்கள் கம்பெனி கேன்டின்களிலும் மட்டுமே போய் சேர்வது தான் கொடுமை .
இயற்கை வழி விவசாயத்தின் முக்கிய தேவையான நிலத்தை நிர்பந்தங்கள் ஏதுவும் இன்றி குத்தகைக்கு வழங்க சேலத்தில் உள்ள கூப் பாரஸ்ட் தற்பொழுது தயாராக உள்ளது .2 எக்கர் நிலம் வரை பெற்றுக் கொண்டு விவசாய பணியை துவங்கலாம் .மின்சாரம் தண்ணீர் நிலப் பயன்பாடு போன்ற செலவினை பகிர்ந்து கொள்ளலாம்.கால நெருக்கடி இல்லாத் காரணத்தால் பரிசோதனை முயற்சிகள் உழாத வேளாண்மை என சுதந்திரமாய் செயல்படலாம்.
நம்மாழ்வார் ஐயாவின் கூற்றுப்படி இயற்கை வழி விவசாயம்,மாற்று வழி மருத்துவம்,மாற்று அரசியல் என அத்தனையும் அடித்தட்டு மக்களையும் சென்று சேர வேண்டும்.ஆனால் அத்தனை மாற்றான விஷயங்களும் மேல் தட்டு மக்களிடையே தான் சிக்கியுள்ளன.மாற்று வழி மருத்துவம் அலோபதியிலிருந்து விடுதலை பெறவே எழுந்thaது .இன்று முழுக்க வணிக மயமாகி உள்ளது.கிராமங்களை நோக்கி யாரும் மாற்றங்களை எடுத்த செல்ல வில்லை .
விடுதலையை நோக்கி நாம் கை கோர்த்து நடப்போம்...

வானகத்தில்... அன்று..
ஒரே.. நம்மாழ்வார்தான்...
ஆனால்... இன்று..
தினம் ..தினம்....
நுாறு ..நம்மாழ்வார்கள்..

என்று அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக